Breaking News

தென்கொரிய திரைப்பட விழாவில் எந்திரன்… ஒரு ரசிகரின் அனுபவம்!

Tuesday, July 26, 2011 at 1:05 am | 1,563 views

பூச்சொன் திரைப்பட விழாவில் எந்திரன்…  & தென்கொரியாவில் 50 திரையரங்குகளில் விரைவில் வெளியாகிறது !

 

டந்த வாரம் தென்கொரியாவின் பூச்சொன் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று ரசிகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய  எந்திரன் படம் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. வசூலில் இந்தப் படம் புதிய சாதனை படைத்தது. இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் எந்திரன்தான்.

இந்தப் படத்தை ஜூலை 16, 21 மற்றும் 23- என மூன்று நாட்கள் திரையிட்டனர். எந்திரனுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால், பல இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்த விழாவில் எந்திரன் பார்க்க ஏராளமான கொரிய ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு படம், குறிப்பாக ரஜினியின் மேனரிஸங்கள், வசனம் பேசும் அழகு ரொம்பவே பிடித்துப் போனது.

இதுகுறித்து தென்கொரியாவில் வசிக்கும் ரஜினி ரசிகரும்  என்வழி வாசகருமான சுவாமிராஜன் கூறுகையில், “எந்திரனுக்கு இங்கு நல்ல ரெஸ்பான்ஸ். தலைவர் படத்தை பெஸ்டிவலில் பார்க்கும் ஆவலில் இரண்டு மணிநேரம் பயணித்து பூச்சொன் நகருக்கு நண்பர்கள் 10 பேர் வந்திருந்தோம்.  எங்களுடன் நண்பரின் 5 வயது மகளும் வந்திருந்தாள். ஆனால் அங்கே 12வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தப் படம் பார்க்க அனுமதியில்லை என்று கூறிவிட்டனர்.

இதனால் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று. அடுத்த இரு தினங்கள் கழித்து சனிக்கிழமை 3 மணி நேரம் முன்பாகவே எந்திரன் பார்க்க தியேட்டருக்குப் போனோம்.  ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை… ஹவுஸ் புல்! நம்ப முடியாமல் மீண்டும் டிக்கெட் தரும் பெண்ணிடம் கேட்டேன். அவர் டிக்கெட் சார்ட்டையே எடுத்துக் காண்பித்தார். உண்மைதான். டிக்கெட் இல்லை!

வேறு வழியில்லாமல், தியேட்டருக்கு வெளியில் நின்றபடி, படம் பார்க்க வருகிற இந்தியர்களிடம் எந்திரன் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தோம். 120 பேர் கொண்ட அந்த தியேட்டரில் ஒரு ஆச்சர்யம், மொத்தமே 12 இந்தியர்கள்தான் இந்தப் படத்துக்கு வந்திருந்தனர். மீதி 100 பேருக்கும் மேல் கொரிய நாட்டுக்காரர்கள்தான்.

படம் மிகப் பிரமாதமாக இருந்ததாகவும் ரசித்துப் பார்த்ததாகவும் அவர்களில் பலரும் தெரிவித்தனர். எங்களால் அவர்களுடன் சேர்ந்து படம் பார்க்க முடியாதது வருத்தமாக இருந்தது,” என்றார்.

தென்கொரியாவில் 50 திரையரங்குகளில் ‘எந்திரனை’ வெளியிடும் ஈராஸ்!

இதற்கிடையே தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது எந்திரன்.

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது எந்திரன். இதுவரை வெளியாகாத நாடுகளில் மறுவெளியீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமையை ஈராஸ்தான் பெற்றுள்ளது.

முதல்கட்டமாக தென் கொரியாவில் மட்டும் 50 திரையரங்குகளில் எந்திரனை வெளியிடப் போவதாக ஈராஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் குமார் அகுஜா கூறுகையில், “இதுவரை நாங்கள் கால் பதிக்காத புதிய பகுதிகளில் இந்தியப் படங்களை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இந்தியப் படங்களே வெளியாகாத தைவானில் முதல் முறையாக ஷாரூக்கான் நடித்த ‘ரா ஒன்’ படத்தை வெளியிடுகிறோம்.

அடுத்து தென் கொரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை 50 திரையரங்குகளில் வெளியிடுகிறோம். எந்திரனின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகள் இந்த அரங்குகளில் வெளியாகும்,” என்றார்.

தென் கொரிய மக்களுக்கு ரஜினி படம் புதிதல்ல. அங்கு ஏற்கெனவே ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி தி பாஸ் படங்கள் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றுள்ளன!

-என்வழி
தகவல்: சுவாமிராஜன், தென்கொரியா

 

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

5 Responses to “தென்கொரிய திரைப்பட விழாவில் எந்திரன்… ஒரு ரசிகரின் அனுபவம்!”
 1. Ramarajan.R-Madurai says:

  ENTHIRAN attracts all language peoples if it release in another planet aliens also like it…

 2. MICSON says:

  அன்று” உலக சூப்பர் ஸ்டார்” ரஜினி என்று போஸ்டர் அடிச்ச போது எள்ளி நகையாடியவர் பலர் ! இன்று அது எவ்வளவு நிதர்சமான உண்மை என்று அனைவருக்கும் தெரியும். அது போல் தான் “வருங்கால தமிழக முதல்வர்” என்கிற அடை மொழியும்.பின்னால் நடப்பதை முன்னரே தீர்க்கதரிசனமாக பறைசாற்றும் தன்மை,உணர்வு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே உண்டு.

 3. r.v.saravanan says:

  தகவலுக்கு நன்றி வினோ

 4. swami says:

  என்னோட அனுபவத்தை பதிவாவே போடுவீங்க என்று எதிர் பாக்கவில்லை…செப்டம்பர் மாதத்துகாக இப்போ இருந்தே காத்து இருக்க ஆரம்பித்துவிட்டேன் :) ரொம்ப நன்றி வினோ சார்…சுவாமிராஜன்

 5. Rajmohan.K says:

  Dear Mr. Vino,

  Please highlight in this NEWS in big way for our Superstar

  ZOOM TV has shortlisted film personalities as “ZOOM Supernova 2010:Top 50″

  and stated, “Rajinikanth who is a demigod unto himself”

  check it out, http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Zoom-Supernova-2010-Top-50/articleshow/9382854.cms

  Regards,

  Rajmohan.K

  NewDelhi.
  __________________

  Thanks Rajmohan
  -Vino

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)