BREAKING NEWS
Search

துரோகியின் கருணை மறுத்த தன்மான அன்னையின் பாதம் தொட்டு வணங்குகிறேன்! – சீமான்

பார்வதி அம்மாள் முடிவு அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சவுக்கடி! – சீமான்

சென்னை: துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது…என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன், என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:

ஆறு மாத விசா பெற்று சென்னை வந்த தமிழீழ தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் தாயார் பெருமாட்டி பார்வதியம்மாள் அவர்களை மாநில போலீசின் துணையோடு மத்திய அதிகாரிகள் கடந்த மாதம் திருப்பி அனுப்பி தீராக் களங்கத்தை உருவாக்கினர்

ஈவிரக்கமில்லாத இந்தப் போக்கு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த, இப்போது பார்வதியம்மாளுக்கு அரசு செலவில் அரசு சொல்கிற மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சைக்காலம் முடிந்ததும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விட வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்களோ, அரசியல் வாதிகளையோ சந்திக்கக் கூடாது… என்கிற நிபந்தனைகளின் பேரில் விசா வழங்க இந்தியா முன் வந்திருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளனர்.

சிகிச்சைக்கு உரிய அனுமதியுடன் வந்தவரை அவமரியாதை செய்து திருப்பி அனுப்பியவர்கள் இப்போது கடுமையான நிபந்தனைகளை விதித்து தமிழ்த் தாயை அவமதித்து விட்டார்கள். மனிதாபிமானத்தையும் கொச்சைப்படுத்திவிட்டார்கள்.

மனிதாபிமானம் என்பது விதிகளுக்கோ, விதிமுறைகளுக்கோ அப்பாற்பட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டும் அதைச் செய்யலாம் என்கிற நிலையில், எண்பது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நிலையான நினைவுகள் இன்றி இருக்கும் தாயை ஒரு பயங்கரவாதி போல சித்தரித்து ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையுமே ஏனைய இனங்கள் எள்ளி நகையாடும் விதமாக நடந்து கொண்டன மத்திய மாநில அரசுகள்.

சிகிச்சைக்கு வந்த எம் தாயாரை, வயதான முதியவர் என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பி அலைக்கழித்த மத்திய மாநில அரசுகள் இன்று ஒரு மாதம் கழித்து அவரைக் கொலைக் குற்றவாளியைப் போல் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி என்ற பெயரில் அழைத்து சிறைக் கைதியாக நடத்த முயற்சிக்கின்றன.

ஆனால் எம் தாயோ, இவர்களைப் போன்று அதிகாரத்திற்கும்,காசுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்களை நன்குஅறிந்தவர். அவர் கணைக்கால் இரும்பொறை வந்த இனத்தின் பெருமை பேசுகிற மாவீரனைப் பெற்ற தாய். அவர் இவர்களை நன்கு அறிந்ததால்தான், துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது… என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப சிகிச்சைக்கு இந்தியா வரமறுத்துள்ளார். அவரது தாய் மண் இன்று எதிரியான சிங்களனின் ஆதிக்கத்தில் இருந்தாலும் அது குறித்து கவலைப்படாமல் சென்றுள்ளார்.

அன்னையின் இந்த முடிவு அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக் கறையை மாற்றி விடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும். துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது…என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன்…”, என்று கூறியுள்ளார்.
14 thoughts on “துரோகியின் கருணை மறுத்த தன்மான அன்னையின் பாதம் தொட்டு வணங்குகிறேன்! – சீமான்

 1. MANATHIL IRUNTHU varugirathu

  ஒரு முட்டாள் முதல்வரை துணிந்து திட்டியுள்ள ,,சீமான் அவர்களே ,வருங்காலம் உன் தாயையும் மாவீரனை பெற்ற தாய் என்று புகழும் ,, வாழ்த்துகள் ,,தொடரட்டும் புரட்சி

 2. devraj

  karunanidhi has acted in the interest of parvathiammal and went by rules, but unfortunately she has declined this probably due to the preconditions laid in front of her.But seeman is wrong if she had the so called thanmanam she should not have pleaded to the govt. of INDIA to let her in.

 3. Chozhan

  நம் தமிழ் தாய்க்கு வணக்கம் மேலும் சீமான் அவர்களுக்கு என் மனமார்ந்த/உளமார்ந்த நன்றிகள் உங்களின் தமிழ் பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது. திரு வினோ அவர்களே இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து எழுத வேண்டும் எதற்கும் அஞ்சாமல் உங்களின் தொலைபேசி எண் கொடுத்தால் நலம். நன்றி சோழன்

 4. Chozhan

  மிக்க நன்று. குள்ள நரிகளுக்கு நடுவில் துணிந்து தமிழருக்காக பேசிய சீமான் அவர்களை பாராட்டுகின்றேன் . தமிழருக்காக வை கோ போல் இன்னொருவர் வந்திருப்பதை வரவேற்கிறேன். இவர் போன்ற நல்ல மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவருக்காக ஓட்டு போட காத்திருக்கிறேன் .

 5. eelam tamilan

  See we have people among us such as devraj and nhsundar… So, no point on talking on this.. Next time also CM goes to this old karuna family and get color TV with cable connection for election vote. Enjoy tamilla enjoy… You will realize some latter come out of the wall which you are now. That time every thing will past and no use it all. God only can help tamils…

 6. eelam tamilan

  some update for you guys:
  She looks going move to Jaffna and stay with us..
  http://www.dailymirror.lk/index.php/news/images/3702-tiger-mom-in-town.html
  devraj, nhsudar and similar mind peoples. see this old woman is the one you all guys commenting… just understand you also have a mother and think just as human being.. Jaffna tamils were supported indian cricket than SL, cried when Indra and MGR died. Listen and Watch Indian TV and Radio and always feel as you all are our brothers and sisters and India’s our base and support for us.. We lost all those hopes now…

 7. sakthivel

  தன் தாய்மண்ணுக்கு சென்றுள்ள அன்னைக்கு தெய்வமே துணை.

 8. palPalani

  கிடைச்சவரை லாபம் என்ற மனம் எப்போது மாறுதோ அப்போதுதான் நம்ம உருப்படுவோம்! இப்ப பிரியாணி நல்லாத்தான் இருக்கும், ஆனா, நம்ம பிள்ளைகளுக்கு அதையாவது இவனுக மிச்சம் வைப்பாங்கலான்னு தெரியல!

  /*
  தடை செய்யப்பட இயக்க உறுப்பினர்களோடு பேசக்கூடாது?
  */
  அப்படீன்னா, தடை செய்யப்பட இயக்கம் எல்லாம் இங்கே இயங்குகின்றனவா? சரி அந்த கிழவி அவுகளுக்கிட்ட குண்ட வாங்கி வெடிக்க வச்சுடுமா?

  North Indian சேனல்ஸ்ல இவனுக பொழப்பு நாறுது, அதை இந்த பிரியாணி மன்னர்களிடமிருந்து மறைக்க, கிழட்டு நரி கண்டிபிடிச்ச அருமையான் அவள்.

 9. palPalani

  http://www.dailymirror.lk/index.php/news/images/3702-tiger-mom-in-town.html இங்கே உள்ள போட்டோக்களை பாத்தா, தாத்தா செஞ்சது சரிதான், இல்லாட்டி இந்த தீவிரவாதி, சாரி!!! அரசியல் வாதி மைக் பிடிச்சு அரசியல் பேசியிரிப்பாக! அப்பறம் தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுடும்!

 10. mullaimainthan

  சீமான் அண்ணா வெல்க உங்கள் பயணம்

 11. Sudha

  துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது…என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன்,

 12. Siva

  துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது…என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன்,

 13. raj.s

  கலைஞர் அவர்களின் மட்டமான அரசியல் நாளுக்கு நாள் நாரி கொண்டு உள்ளது. நல்ல வேலை பார்வதி அம்மாள் வரவில்லை. இல்லை என்றால் இதற்கும் கலைஞர் தான் காரணம் என்று பாராட்டு விழா எடுத்து இருப்பார்கள் ,அவரது ஜால்ராக்கள் . சீமான் அவர்கள் அவரது நம்பகத்தன்மை எப்போதும் காப்ற்றவேண்டும் .இல்லையில் அவரும் ஒரு அரசியல் வாதி என்று ஆகி விடுவர் .நமக்கு தேவை அரசியல் கட்சி அல்ல . ஒரு இயக்கம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *