BREAKING NEWS
Search

‘துரோகப் புலிகள்’ – அடையாளம் காட்டும் விடுதலைப் புலிகள்!

சிங்கள ராணுவத்துக்கு துணைபோகும் சில முன்னாள் தளபதிகள்! – எல்டிடிஇ எச்சரிக்கை

leaderடந்த சில மாதங்களாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்த முன்னாள் தளபதிகள் பற்றி செய்திகளை வெளியிட்டு வருகிறது ஆய்வு  வலைதளம். ‘இன்னும் சில தினங்களில் இப்படியும் நடக்கக் கூடும்’ என அந்த வலைப்பூவில் தெரிவிக்கிற விஷயம் கிட்டத்தட்ட நடந்தே விடுகிறது.

கடந்த ஜூலை மாதத்திய பதிவொன்றில் இந்த தளத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளனர்:

“ஜெகத் கஸ்பர் அடிகள் தற்போதய தனது எழுத்துக்களால் மக்களின் மனங்களில் இடத்தைப் பிடித்து, பின்னாளில் பெரும் விஷக்கருத்தை விதைக்கப் போகின்றார். இது திட்டமிட்ட ஒரு செயல். இதற்கு பின்னணிகள் இருக்கின்றன. அதாவது சர்வதேசம் எங்கும் தமிழீழப் போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், கொளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்…”

கிட்டத்தட்ட இது நடந்தே விட்டது. மேலே குறிப்பிடப்பட்ட ஈழ ஆதரவாளர்களை மிகமிகக் கடுமையாக சாடி வரும் கஸ்பர், புலிகளையும் சுய விமர்சனம் செய்வதாக அடிக்கடி குறை கூறுகிறார் (எந்த உரிமை அல்லது அதிகாரத்தில்?) . மத்திய – மாநில அரசுகளை விமர்சிப்போரையும் மிகக் கடுமையாக திட்டுகிறார்.

அடுத்து, புலிகளின் கிழக்கு மாவட்ட தளபதி ராம், தயா மோகன், நகுலன் எப்படி சிங்கள ராணுவத்துக்கு விலைபோனார்கள் என்று இந்த தளத்தில் முன்கூட்டியே குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக ராம் மற்றும் நகுலன் போன்றோர் இலங்கை ராணுவத்தின் பனகொட சிறப்பு முகாமில் ராஜ வசதிகளை அனுபவித்தபடி, புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பை, சர்வதேச நெட்வொர்க்கை உடைக்கும் முயற்சியில் ராணுவத்துக்கு பேருதவி செய்து வருகிறார்களாம். தொடர்ந்து இயக்கத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களின் போராட்டத்தை இல்லாமல் செய்வதில் குறியாக உள்ளார்களாம்.

இந்த செய்திகளை உறுதிப் படுத்தியுள்ளது  இப்போது புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை.

‘இலங்கை இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர் இயக்கத்தின் பெயரில் குழப்பங்களை விளைவிப்பார்கள். எச்சரிக்கையாக இருக்கவும்ட என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்துப் பத்திரிகைகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, புலிகளின் ஊடகப் பிரிவு மூலம்.

அந்த அறிக்கை:

“அன்புள்ள ஊடக ஆசிரியருக்கு

எமது இயக்கத்தின் அம்பாறை மாவட்டத் தளபதியாக திரு.ராம் அவர்கள் செயற்பட்டு வந்தாரென்பது நீங்கள் அறிந்ததே. அண்மைக் காலத்தில் அவரும் வேறு சில தளபதிகளும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தற்போது இராணுவத்தின் பிடிக்குள் இருந்துகொண்டு இலங்கை அரசின் திட்டத்திற்கு அமைவாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியும் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் துணைத் தளபதியாகவும் இருந்த நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான தவேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இந்த நிலையில் ஊடகங்களை நிர்வகிக்கும் எமது அன்பானவர்களிடம் நாம் வேண்டுகோள் ஒன்றை விடுகின்றோம். எமது செயற்குழு சார்பில் வெளிவரும் அறிவித்தல்களையும், அறிக்கைகளையும் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வெளியீடுகளாகக் கருதிக்கொள்ள வேண்டும் எனவும், இது தவிர்ந்த வேறு வழிகளில் வரும் வெளியீடுகள் எமது வெளியீடுகளாகக் கருதி குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது அறிக்கைகள் வழமைபோல் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவினரிடம் இருந்து வெளிவரும் என்பதையும் அறியத்தருகின்றோம்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

media_release_tamil201109
One thought on “‘துரோகப் புலிகள்’ – அடையாளம் காட்டும் விடுதலைப் புலிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *