BREAKING NEWS
Search

தீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்!

தீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்!

சென்னை : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முதல்வர் கருணாநிதியும் கலந்து கொள்ளும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் சென்னை தீவுத் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.sonia-karu

ஏற்கெனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட சோனியாவின் தமிழக பயணம் இம்முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுகட்ட வாக்குப் பதிவுக்கான பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது.

எனவே தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் அக்னி வெயிலுக்குப் போட்டியாக அனல் பறக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளர் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் முடித்துவிட்டு இப்போது சென்னையில் முகாமிட்டுள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி உடல் நிலை சரியில்லாததால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சென்னை தவிர்த்து அவர் மேற்கொண்ட ஒரே வெளியூர் பிரச்சாரப் பயணம் திருச்சி மட்டுமே. அங்கு வைத்தே 7 வேட்பாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு அவரும் சோனியா காந்தியும் கூட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் சோனியாவின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் அளித்த பேட்டி ஒன்றில், ‘அ.தி.மு.க.,வும், காங்கிரசும் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள்’ எனக் கூறினார். இந்தப் பதில் முதல்வர் கருணாநிதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் அன்று நடக்க இருந்த பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக ஒரு சாராரும், தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்பால் அவர் வரவில்லை என்று மற்றொரு தரப்பும் கூறிவந்தது.

நேற்று மன்மோகன் சிங் சென்னைக்கு வந்து முதல்வரை நலம் விசாரித்தார். அவர் பிரச்சாரம் எதிலும் பங்கேற்கவில்லை. முதல்வரைப் பார்த்து நலம் விசாரிக்கவே சென்னை வந்ததாகத் தெரிவித்தவர், சோனியாவின் இன்றைய தமிழக விசிட்டை உறுதிப்படுத்தி விட்டுச் சென்றார்.

சென்னை தீவுத் திடலில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடை அகற்றப்படவில்லை. இன்று மாலை 4 மணிக்கு அதே மேடையில் பொதுக் கூட்டம் நடக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்திருந்தனர். இன்று மாலை சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார். தீவுத்திடல் பொதுக் கூட்டத்தில் அவருடன், முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சோனியா சென்னை வருகை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சோனியா நிகழ்ச்சி விவரம்: மாலை 4.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படை தளத்திற்கு வருகிறார். 4.30 மணிக்கு, தீவுத்திடலில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை 5.15 மணிக்கு தீவுத்திடலில் இருந்து கிளம்பி, ஹெலிகாப்டர் மூலம் மீனம்பாக்கம் செல்கிறார். 5.45 மணிக்கு விமானம் மூலம் டில்லிக்கு கிளம்புகிறார்.

சோனியாவின் பாதுகாப்பிற்காக, இரண்டு கூடுதல் கமிஷனர்கள், மூன்று இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், 25 உதவி கமிஷனர்கள் தலைமையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுக் கூட்டம் நடக்கவிருக்கும் தீவுத்திடல் முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஐந்து நுழை வாயில்களிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சாரக் கூட்டம் பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனி ஈழம், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து சோனியா மற்றும் கருணாநிதி இருவருமேஇந்தக் கூட்டத்தில் சில முக்கிய வாக்குறுதிகள் தரக்கூடும் எனத் தெரிகிறது.

வீடு திரும்பினார் கருணாநிதி:

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதியை பிரதமர் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு, முழுமையான சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார் கருணாநிதி. வீட்டிலும் பூரண ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
4 thoughts on “தீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்!

 1. pathi

  தலப்ப கட்டு சொல்கிரான்:சில உபகரணங்கல் இலங்கைக்கு கொடுத்தானாம்:அது என்ன?
  1)முள் வாங்கி
  2)தேங்காஇ துருவி
  3)பேனா கத்தி
  தமிழனை காக்க மறந்த மஞசல் துண்டுக்கு இதுவும் வேண்டும்!
  இன்னமும் வேண்டும்:
  சோனிஅவுக்கு காவடி தூக்கியவன்,தமிழனால் ஒதுக்கபடுவது உறுதி!

  3

 2. Kumaran

  மரத்துப்போன தமிழனுக்காக இனிமையான செய்தியோடு வரும் எங்கள் தலைவியே வருக, இன்னும் மிச்சமிருப்பவர்களையும் என் இன்னும் வைத்துரிக்கிறீர்கள்?

  நாங்கள் இந்தமுறையும் சிதம்பரம், தங்கபாலு மற்றும் உங்கள் அடிவுருவிகளை வெற்றி பெரச்செய்கிறோம்!

  http://puthinam.com/full.php?2b34OO44b33g6Df04dctVo0da0eA4AA24d3SSmA3e0dU0MtFce03f1eW2cc4OcY4be

  http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29311

 3. This is real

  தீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிச்சை எடுக்கிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *