BREAKING NEWS
Search

தீருவில் சதுக்க நினைவுத் தூணை அழித்த சிங்களப் படை!

தீருவில் சதுக்க நினைவுத் தூணை அழித்த சிங்களப் படை!

மைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கையில் சிங்கள ராணுவத்தோடு சேர்ந்து இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் என்றும் மறக்கக் கூடாது என்பதற்காக வல்வெட்டித்துறையின் தீருவில் சதுக்கம் அருகே தமிழர்களால் எழுப்பப்பட்ட பெரிய நினைவுத் தூணை அழித்துள்ளது சிங்களப் படை.

1989-ல் வட இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படை, ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்தது.

2.8.1989-ல் ஊரிக்காடு மற்றும் புலிகண்டி முகாம்களிலிருந்த இந்திய ராணுவம் பிரிகேடியர் சங்கர் பிரசாத் தலைமையில் வல்வெட்டித்துறையின் மக்கள் வசிப்பிடங்களைச் சூழ்ந்தது. அப்போது ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தது. தமிழ் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். வல்வைக்குள் கால்வைத்த அமைதிப்படை, தமிழர் வீடுகளுக்குள் புகுந்து ஆண், பெண், குழந்தை என்ற பேதம் பாராமல் சுட்டுக் கொன்றது. இந்தப் படுகொலையை உடன் சேர்ந்து நடத்தியவர்கள் கேப்டன் மேனன் மற்றும் கேப்டன் கபூர் ஆகியோர்.

இந்தக் கொடிய நிகழ்வை தமிழினம் என்றும் மறக்கக் கூடாது என்ற நோக்கில், புலிகளின் ஆட்சியின்போது தீருவில் சதுக்கம் அருகே எழுப்பப்பட்டது இந்த நினைவுத் தூண். அழகிய தாமரை வடிவில் மக்களே இதை அமைத்திருந்தனர்.

ஆனால், போருக்குப் பின் வட இலங்கையில் எங்குமே தமிழரின் பண்பாட்டு, கலாச்சார அடையாளம் இருக்கக்கூடாது என திட்டமிட்டு செயல்பட்டு வரும் இலங்கை ராணுவம், இந்த நினைவுத் தூணையும், அருகிலிருந்த திலீபன் நினைவுச் சின்னத்தையும் அடியோடு அழித்துள்ளது.

தீருவில் சதுக்கத்தில்தான் கேணல் கிட்டு, குமரப்பா, புலேவந்திரன் உள்ளிட்ட 10 முக்கிய தளபதிகளின் நினைவுச் சின்னங்கள், தமிழீழ மக்களால் எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘ஒரு வேளை இந்த நினைவுச் சின்னம் சிங்களர்களை விட இந்தியாவுக்கு உறுத்தலாக இருந்திருக்கும். அதன் விளைவுதான் இந்த அழிப்பு நடவடிக்கை’ என்று சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

-என்வழி

படங்கள்: தமிழ்நெட்




5 thoughts on “தீருவில் சதுக்க நினைவுத் தூணை அழித்த சிங்களப் படை!

  1. palPalani

    /*
    ஒரு வேளை இந்த நினைவுச் சின்னம் சிங்களர்களை விட இந்தியாவுக்கு உறுத்தலாக இருந்திருக்கும். அதன் விளைவுதான் இந்த அழிப்பு நடவடிக்கை
    */
    நெருப்பில்லாமல் புகையாது!

  2. sakthivel

    நினைவுதூன்களை அழிக்கலாம்….. நினைவுகளை….?????

    அழிந்தவை தழைக்கும், மௌனித்தது கலையும்போது சிங்களம் தெறித்தோடும், அதைக் காண கண்கோடி வேண்டும்…..

  3. குமரன்

    குட்டிமணி ஜெகன் தங்கதுரை ஆகியோரைக் கொன்றபின்னர் அவர்களின் கண்களைத் தானம் செய்யச்சொன்ன காரணத்தால் கண்களை நொண்டி எடுத்த கயவர்கள் …

    பிணத்தையும் புணர்ந்த கயவர்கள் …

    வெறும் நினைவுச் சின்னங்களையா விட்டு வைப்பார்கள்.

    பம்யான் புத்தர் சிலைகளை குண்டு வைத்துத் தகர்த்த தாலிபான்கள் போல இவர்களும் வெறியர்களே.

  4. thinnu

    why all tamils keep silent still, make a team n go there fight again, who will lead this team form TN

  5. குமரன்

    ///why all tamils keep silent still, make a team n go there fight again, who will lead this team form தன்///

    ஆதி காலம என்றால் என்றோ போருக்குப் போயிருப்போம். இன்றைய உலகில், நாடு எல்லை, இந்திய சட்டம் சர்வதேச சட்டம், கட்டுப்பாடு, என்று எத்தனையோ உள்ளன. இவற்றுக்கு உட்பட்டு வெறுமனே எழுதவும் பேசவும் பொதுக் கருத்தை உருவாக்கவும் சட்டத்துக்கு உட்பட்ட எதிர்ப்பைப் பதிவு செய்யவும் மட்டுமே முடியும். ஆனால் சர்வதேச சட்டம், மணித் உரிமை எதையும் மதிக்காமல் இலங்கை அரசு நடந்துகொள்கிறது. சர்வதேசக கட்டுப்பாட்டை செய்யவேண்டிய ஐ. நா வும் இலங்கையின் ஆதரவு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுதான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *