BREAKING NEWS
Search

தீபாவளிக்கு மக்களின் விருப்பம் எந்திரனே! – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

தீபாவளிக்கு மக்களின் விருப்பம் எந்திரனே! – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

தீபாவளிக்கு 1 மாதம் முன்பு வெளியானது ரஜினியின் எந்திரன். தமிழ் சினிமா, இந்திய சினிமா என்றில்லை… உலக சினிமாவில் சாதனை படைத்த ஸ்பைடர்மேன், அவதார் போன்ற படங்களுக்கு அடுத்து அதிக திரையரங்குகளில் (3000 ப்ளஸ்) வெளியானது.

அன்றைக்கு பலரும், பலவிதமாக எழுதினார்கள், பேசினார்கள். தீபாவளியோடு இந்தப் படம் அவ்வளவுதான் என்றெல்லாம் சிலர் எழுதியது நினைவிருக்கலாம்.

இதோ, தீபாவளி கடந்துவிட்டது. இந்த தீபாவளிக்கு 4 புதிய படங்கள் வேறு வெளியாகின. ஆனாலும், மக்களின் தீபாவளி திரைவிருப்பம் எந்திரனே!

சென்னை நகரை கணக்கிலெடுக்காமல் புறநகர் மற்றும் வெளியூர்களைக் கணக்கில் கொண்டாலும், அங்கெல்லாம்கூட எந்திரனுக்கு இன்னும் அமோக வரவேற்பு.

கடந்த மூன்று தினங்களில் வேலூர், சேலம், திருச்சி, கோவை, ஈரோடு என கிட்டத்தட்ட தமிழகத்தின் பாதிப் பகுதியை சுற்றி வந்துவிட்டோம். நாம் பயணித்த அத்தனை ஊர்களிலும் எந்திரன் சிறப்பாக ஓடிக் கொண்டுள்ளது. 300 முதல் 500 சீட்கள் கொண்ட மல்டிப்ளெக்ஸ்களில் எந்திரன் ஓடுவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால், ஆயிரத்துக்கும் மேல் (எக்ஸ்ட்ரா சேர் கணக்கில் இல்லை!) இருக்கைகள் கொண்ட வெளியூர் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக எந்திரன் ஓடுவது சாதாரண விஷயமா என்ன!

வேலூர் அலங்காரில் ஞாயிற்றுக்கிழமையன்று எந்திரனின் எந்த ஷோவுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை!

திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்கில் நவம்பர் மூன்றாம் தேதி 80 சதவீத பார்வையாளர்கள் எந்திரனுக்கு. ஆனால் தீபாவளி தினமான நவம்பர் 5-ம் தேதி டிக்கெட் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அன்றிலிருந்து தொடர்ந்து 5 காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறது!

ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் போன்ற நகரங்களிலும் 35 வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது எந்திரன்.

செய்யாறு, வந்தாவசி, கலவை, கேவி குப்பம், சோளிங்கர், செங்கம் போன்ற சின்ன ஊர்களிலும் கூட எந்திரன் இன்னும் அட்டகாசமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகளிலெல்லாம் ஒரு படம் நான்கு வாரங்களைத் தாண்டுவதே பெரும்பாடு. கடைசியாக இந்தப் பகுதிகளில் ஓஹோவென்று ஓடிய படம் சிவாஜி – தி பாஸ்!

கிருஷ்ணகிரி ராஜாவில் இன்றும் முதல்நாளுக்கு குறையாத கலகலப்புடன் வசூலும் ரசிகர்களின் ஆதரவும் தொடர்வதாகத் தெரிவித்தனர் தியேட்டர் நிர்வாகிகள். ஊத்தங்கரை திருமகளில் நவம்பர் 5-ம் தேதி கொட்டும் மழையிலும் எந்திரன் டிக்கெட்டுக்காக வரிசையில் காத்திருந்தது ரசிகர் கூட்டம்!

ஒசூர், தர்மபுரி, நாமக்கல், எடப்பாடி, காரிமங்களம், திருச்செங்கோடு, ஆத்தூர் என கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் எந்திர ஜாலம் தொடர்கிறது.

சேலம் நகரவாசிகள் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத வகையில் 9 திரையரங்குகளில் வெளியானது எந்திரன். படத்தின் ரிலீஸ் தேதியன்று, நகரையே திருவிழாக் கோலம் பூண வைத்தனர் சேலம் ரசிகர்கள். இன்று 35 நாட்கள் கடந்த நிலையில் ஏஆர்ஆர்எஸ், பிக் சினிமாஸ் உள்ளிட்ட 3 திரையரங்குகளில் எந்திரன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திருச்சி, தஞ்சை, கரூர், நாகை மாவட்டங்களில்...

திருச்சி ரம்பாவில் இன்றும் ரிசர்வேஷனில் போகிறது எந்திரன். தாமதமாக வெளியான கரூரில் இப்போதும் வெற்றி, ஏ ஒன் என இரு திரையரங்குகளில் எந்திரன் ஓடுகிறது.

கோவையில் மூன்று பெரிய திரைகளிலும், திருப்பூரில் நான்கு பெரிய திரைகளிலும் (டைமண்ட், சிவன், சீனிவாசா, கஜலட்சுமி) எந்திரன் நல்ல வசூலுடன் தொடர்கிறது.

ஊட்டியில் முதலில் லிபர்டி, அலங்கார் என இரு திரையரங்குகளில் எந்திரன் வெளியானது. இப்போது லிபர்டியில் எந்திரன் ராஜ்யம் தொடர்கிறது.

ஈரோடு, கோபி, பெருந்துறை, காங்கேயம், உடுமலை, பொள்ளாச்சி என கொங்கு மண்டலத்தின் அனைத்து சிறிய – பெரிய நகரங்களிலும் தீபாவளிக்கு எந்திரன்தான் ஸ்பெஷல்.

நாம் பார்த்த பல ஊர் திரையரங்குகளில், தீபாவளிக்கு வெளியாகியுள்ள புதிய படங்களுக்கு கூட்டமே இல்லை என்ற நிலை. ஆனால் எந்திரன் டிக்கெட்டுக்கு க்யூ!

குறிப்பாக குழந்தைகள், குடும்பத்தினருடன் கொட்டும் மழையிலும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

‘தீபாவளிக்கு நல்ல படம் பார்க்கணுமா… ரஜினியோட எந்திரனுக்குப் போகலாம்!’ -தீவிர ரசிகர்களாக இல்லாத நடுநிலைப் பார்வையாளர்களின் கருத்து இதுதான்!

‘எந்திரன் படத்தை இந்த திரையரங்கில் எடுத்துவிட்டார்கள், அங்கே தூக்கிவிட்டார்கள்’ என்றெல்லாம் சிலர் கமெண்ட் அடிப்பதாக ரசிகர்கள் வருத்தப்பட்டிருந்தனர். அதற்கு அவசியமே இல்லை.

கொங்கு மண்டலத்தில்...

கொங்கு மண்டலம்..

எந்திரன் போன்ற பெரிய படம், கிட்டத்தட்ட தமிழகத்தின் முக்கால்வாசித் திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. வெளியான அத்தனை திரையரங்குகளிலும் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது எந்திரன். அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதன் நோக்கமும் அதுதான். உதாரணத்துக்கு செங்கம் கணேசர். இந்தத் திரையரங்குக்குதான் மிகக் குறைந்த விலைக்கு எந்திரன் தரப்பட்டது. இப்போது, வாங்கியதை விட பல மடங்கு லாபம் பார்த்துவிட்டது அந்த திரையரங்கம். இதுபோல லாபம் பார்த்த சில திரையரங்குகள், ஒரு மாதத்துக்குப் பிறகு, படத்தை மாற்றியுள்ளன. அது இயல்பான ஒன்றுதான்.

ஆனால், இன்றும் கூட, ஒரு பெரிய பட்ஜெட் படம் ரிலீஸாகும் திரையரங்குகளை விட மூன்று மடங்கு அதிகமான அரங்குகளில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது எந்திரன். திருட்டு விசிடி, இணையத்தில் திருட்டுத்தனமாக ஒளிபரப்புவது போன்ற பல தொல்லைகளுக்கு நடுவில், ரஜினியின் எந்திரன் படைத்திருப்பது சாதாரண சாதனையல்ல… நிஜமாகவே உலக சாதனை… ஹாலிவுட் படங்களுக்குக் கூட வாய்க்காதது!

-என்வழி ஸ்பெஷல்
13 thoughts on “தீபாவளிக்கு மக்களின் விருப்பம் எந்திரனே! – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

 1. R O S H A N

  thanks vino……for the wonderful writeup……it shows the effort u had put in to collect all these information……thalaivar always rocks…..here in coimbatore i was not able to get the ticket for all the three days not even in one theatre…..u won’t believe it…..in black the ticket rate was 150 for 10 rs ticket……see the power of our thalaivar……

 2. prasanna

  Thanks for the post Vino……….Thalaivar padamna chumma va.!!!!
  By the way from which theatre (place) cut out is this vino??? It Looks awesome……..
  ____________
  Trichy Ramba!
  -Vino

 3. Raja

  சன்டே திருச்சி காவெரியில் 6 மணி ஷோ ஹவுஸ் புல். இத்தனைக்கும் விடுமுறை நாட்களில் டிக்கெட் விலை 150.

 4. M.MARIAPPAN

  நன்றி mr வினோ தமிழகம் முழுவதும உள்ள reportai மிகவும் விளக்கமாக தந்து உள்ளீர்கள் தீபாவளிக்கு அப்புறம் உள்ள வசூல் நிலவரத்தையும் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

 5. Rajmohan.K

  Dear Vino,

  I am giving this report from Gurgaon. NCR Newdelhi.
  Here, they have taken tamil version within two weeks in almost all the theatres in NCR and Newdelhi, as like , many got upset by this move. May be Hindi version is running in many theatres. Hindi version has occupied the Tamil version slot here.
  Even i have expected Tamil version during Diwali.
  But none of the Tamil films not got released this time all over Delhi, may be this first time among last four years.

 6. எப்பூடி

  நேற்று காலை காட்சியில் எந்திரனை யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் பார்த்தேன், முதலாவது திரையில் போடப்பட்டிருந்த உத்தம புத்திரனுக்கு குறைவில்லாமல் கூட்டம் வரிசையில் நின்றது. சுமார் 120 பேர்வரை என்னோடு பார்த்திருப்பார்கள்.

  படம் வெளியாகி 39 நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு திரைப்படத்தை பார்ப்பதானால் 7 பேர் திரையரங்கிற்கு வந்தாலே சாத்தியம், இல்லாவிட்டால் படத்தை திரையிட மாட்டார்கள். இதுவரை 30 நாட்களுக்கு பின்னர் ஒரு காலை காட்சிக்கு 100 பேரைவிட அதிகமாக இல்லையில்லை 50 பேரைவிட அதிகமாக மக்கள் பார்த்த திரைப்படங்கள் என்றால் இரண்டுதான் ஒன்று சந்திரமுகி, அடுத்தது இப்போது எந்திரன்.

 7. நாஞ்சில் மகன்

  3000 தியேட்டர்களில் ரிலிஸ் என்பது உன்மைதான். இப்போது எத்தனை தியேட்டர்களில் ஒடுகிறது. எத்தனை தியேட்டர்களில் எடுத்து விட்டார்கள் என்ற செய்தியையும் நடுநிலைமையோடு எழுதுங்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தியேட்டர்களில் எந்திரன் ரிலிஸ். இப்போது 2 தியேட்டர்களில் மட்டும்தான் . ஒன்று நாகர்கோவில் கார்த்திகை இன்னொன்று குழித்துறை லெட்சுமி. தீபாவளி அன்று இரண்டு தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகவில்லை என்பதுதான் உன்மை. இன்னொன்று அவரது மருமகன் நடித்த உத்தமபுத்திரனும் நாகர்கோவில் ராஜாஸில் ஹவுஸ்புல் ஆகவில்லை என்பதும் உன்மை. நான் முன்பே கூறியது போல் இது வரை ஆன கலெக்ஷன் 318 கோடியும் ரஜினி ரசிகர்களின் உழைப்புதான். எல்லா படத்தையும் பார்க்கிற ரசிகன் இரண்டுக்கு முன்று தடவை அதிக விலை கொடுத்து எந்திரன் படம் பார்க்க கேனயன் ஒன்றும் இல்லை அல்லது தமிழ்நாடு அவ்வளவு பெரிய பணக்கார நாடும் கிடையாது. தீபாவளி வந்தால் படம் அவ்வளவுதான் என்றது உன்மைதான். ஆனால் சன் டிவியின் நெருக்கடியால் புதுப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவிலை என்ற செய்தியை அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியிருந்தன.

  வினோ சார் எந்திரன் படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த படத்தையும் பின் தள்ள ஒரு படம் வரும் .ஒரு வேளை அது ரஜினியாகவும் இருக்கலாம் . யாருக்கு தெரியும்.
  _____________

  நாஞ்சில் மகன்-

  நாஞ்சில் நாட்டு நிலவரம் பற்றி இங்கே எழுதவே இல்லை. கடந்த மூன்று தினங்களில் நான் பார்த்த தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் கோவை ஆகிய ஊர்களின் நிலவரம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது.

  நிச்சயம் எந்திரன் தனது Ultimate படம் இல்லை என்று தலைவரே சொல்லிவிட்டார். இந்த சாதனையையும் அவரே முறியடிப்பார்!
  -வினோ

 8. M.MARIAPPAN

  MR வினோ நாஞ்சில் மகன் தவறான தகவலை கூறியுள்ளார் ,கன்யாகுமரி மாவட்டத்தில் மொத்தம் மூன்றே பிரிண்ட் தான் அது 1 .பணிச்சமூடு 2 .நாகர்கோயில் 3 .குழித்துறை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *