BREAKING NEWS
Search

‘திருவள்ளுவரையும் சர்வக்ஞரையும் அசிங்கப்படுத்தி விடாதீர்கள்!’

திருவள்ளுவரையும் சர்வக்ஞரையும் அசிங்கப்படுத்தி விடாதீர்கள்!

பெங்களூரு: திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி ‘பெங்களூர் பந்த்’ நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.valluvar

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் கன்னட சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடந்தது.

சலுவாளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கன்னட சேனை, கர்நாடக ரக்ஷணாவேதிகே (பிரவீண்ஷெட்டி பிரிவு), மற்றும் கன்னட வேதிகே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டsarvjna2ம் முடிந்ததும் நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:

பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய நகரங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கும்படியோ, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவுங்கள் என்றோ தமிழக முதல்வர் கருணாநிதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.

ஆனால் எடியூரப்பா தானாகவே முன்வந்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில் மிகப் பெரிய திட்டம் உள்ளது. சர்வக்ஞர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறு சென்னையில் சர்வக்ஞர் சிலை நிறுவப்பட்டால் காவிரிப் பிரச்னை ஏற்படும்போது அச்சிலையை தமிழர்கள் அடித்து உடைக்கலாம், கல்வீசித் தாக்கலாம். இவ்வாறு ஏற்பட்டால் அது சர்வக்ஞருக்கு அவமதிப்பு ஏற்படுத்துவது ஆகும். அதற்கு நாம் ஏன் அவகாசமளிக்க வேண்டும்?

சர்வக்ஞர் சிலையை நிறுவ அரசு விரும்பினால் பெங்களூரில் விதானசௌதா முன்னால் நிறுவட்டுமே?,” என்றார்.

இதே தினத்தில் பந்த் நடத்த நாராயண கெளடா தலைமையிலான இன்னொரு கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பும் பந்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிலை திறப்பையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வெடிக்கலாம் என்ற அச்சம் தமிழர்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையே வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, அதாவது நாளை மறுநாளே முதல்வர் கருணாநிதி பெங்களூருக்குப் பயணமாவார் எனக் கூறப்பட்டுள்ளது. கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு இந்தப் பயணத்தில் இறுதி நேர மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

சமாதான முயற்சி!

பெங்களூரில் சிலை வைத்துதான் திருவள்ளுவப் பெருமானின் புகழைப் பரப்ப வேண்டும் என்ற நிலை இன்றைக்கு இல்லை.

அதேபோல கன்னட மகாகவி சர்வக்ஞருக்கு சிலை வைத்தால்தான் அவர் மதிப்பு உயரும் என்ற நிலையும் இல்லை.

திருவள்ளுவர் தமிழர்களின் மிகச்சிறந்த பகுத்தறிவாளர் என்றால், சர்வக்ஞர் மானுட குலத்தின் மூடத்தனங்களை வேரோடு அறுக்க தனது இலக்கிய அறிவைப் பயன்படுத்தியவர்.

தேவையற்ற இனப் பிரச்சினையைக் கிளறி, திராவிட இனத்தின் மிக உன்னதமான அறிஞர்களை அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும். இரு மாநில மக்களின் இணக்கம், நல்லுறவை வலியுறுத்தி வைக்கப்படுகிற இந்த சிலைகள் பண்பாட்டின் சின்னமாகத் திகழ வேண்டும் என கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
5 thoughts on “‘திருவள்ளுவரையும் சர்வக்ஞரையும் அசிங்கப்படுத்தி விடாதீர்கள்!’

 1. mukesh

  திராவிட இனத்தின் அசிங்கங்கள் வாட்டாள் நாகராசும் நாராயண கெளடாவும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சுயநலவாதிகள். அனைத்து தரப்பு மக்களும் இவர்களை ஒதுக்க வேண்டும்.

 2. SenthilMohan K Appaji

  //*
  சென்னையில் சர்வக்ஞர் சிலை நிறுவப்பட்டால் காவிரிப் பிரச்னை ஏற்படும்போது அச்சிலையை தமிழர்கள் அடித்து உடைக்கலாம், கல்வீசித் தாக்கலாம்.
  **/

  இதன் மூலம், மறுபடியும் காவேரி பிரச்சினை வரும் பொழுது திருவள்ளுவரின் சிலை உடைக்கப்படும் என்பதனை மறைமுகமாக வாட்டால் அவர்கள் எச்சரித்துள்ளார்.

  எப்படியும் உடைபடப் போகும் சிலையினை ஏன் திறக்க வேண்டும்?

 3. prakash

  Is it really important to open thiruvalluvar statue in bangalore? Ithunal oru problem varuthu enral appidi oru statue thevai illae. Let Bangalore tamilans live peacefully. Tamilnathula irukurae statue vae olunga maintain pannungappa.

 4. Manoharan

  Unneccesary problems. Here nobody is oppossed to keep their statue. Becoz there is no votes in this issue. But in karnataka people like Vattaal needs to be in news, so they are using this as a chance. The truth is people like Vattaal and all is not at all a matter over there. Only we people are giving importance to them. He has no importance at all there.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *