BREAKING NEWS
Search

திருந்தாத ஜென்மங்கள்!

திருந்தாத ஜென்மங்கள்!

accidentவ்வொரு குழந்தையும் ஒரு அழகிய பூவுக்கு சமம். பள்ளிக் கூடம் நடத்துகிறோம் எனும் பெயரில் அந்தப் பூக்களை காலில் போட்டு நசுக்கும் காவாலித்தனத்தை சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தனியார் பள்ளியின் கூரை சரிவது, தீப் பிடிப்பது, பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவது என பல்வேறு வழிகளில் இந்தப் பூக்கள் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன. இந்த சம்பவங்கல் நடப்பது தவிர்க்கமுடியாத காரணங்களால் அல்ல. அலட்சியம் காரணமாகவே என்ற உண்மை ஆத்திரத்தைக் கூட்டுகிறது.

இதோ இன்று வேதாரண்யம் மற்றும் ஆத்தூரில் நடந்த இரு விபத்துகளில் 10 குழந்தைகள் துர்மரணத்தைச் சந்தித்துள்ளன.

ஒரு குழந்தையின் அழுகையையே தாங்க முடியாத மனதுக்கு 10 குழந்தைகளின் மரணம் சவுக்காலடித்த வேதனையைத் தருகின்றன. இது தவிர 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த இரு விபத்துக்களிலும் காயமடைந்துள்ளனர்.

இந்த மரணங்களுக்கான காரணம் தெளிவானது… அது பள்ளிகளின் பணம் சம்பாதிக்கும் பேராசை. ஒவ்வொரு தனியார் பள்ளியும் கட்டணம் என்ற பெயரில் அடிக்கிற கொள்ளை போதாதென்று, குட்டி குட்டியாக போக்குவரத்துக் கழகங்களை  வேறு ஆரம்பித்து வைத்துள்ளன.

03acciசரியான பயிற்சி இல்லாத, குழந்தைகளுக்காக வேலை பார்க்கிறோம் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாதவர்கள்தான் இந்த ‘குட்டி போக்குவரத்துக் கழகங்க’ளில் பணியாற்றுகிறார்கள். ஏலத்தில் எடுத்த அடாசு வண்டிகளையெல்லாம், ‘கவனிக்க வேண்டிய இடத்தில் கவனித்து’ எஃப்சி பண்ணி பயன்படுத்துவது இவர்கள் டெக்னிக்.

குழந்தைகளின் வசதியை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை.

‘எத்தனை ட்ரிப் அடிக்கிறது… ஏத்துடா மொத்தத்தையும் ஒரே ட்ரிப்புல’ என்று பொதி மூட்டைகள் மாதிரி இந்த மழலைச் செல்வங்களை ஏற்றிக் கொண்டு செல்வதுதான் பல விபத்துக்களுக்குக் காரணமாகிறது.

Childrenஇன்று நடந்த விபத்துக்கும் இதுதான் காரணமாகியுள்ளது. கூடவே, இந்த செல்போன் சனியனும் சேர்ந்து கொண்டது. அப்படி என்னதான் பேசுவார்களோ… காதில் வைத்தால் கருமத்தை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். இந்த பள்ளிக் குழந்தைகள் பேருந்தை இயக்கிய ஓட்டுநரும் முக்கிய வளைவு ஒன்றை நெருங்கும்போது செல்போன் பேச ஆரம்பித்து, பேலன்ஸ் தடுமாறி குளத்தில் விட்டிருக்கிறான் பேருந்தை.

பழைய தகர டப்பா வேன் வேறு. இதனால் குழந்தைகள் 10 பேர் அந்த இடத்திலேயே இறந்து போக, மீதியுள்ளவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறை பெரும் விபத்து நேரும் போது மட்டும் ஆளாளுக்கு கண்ணீர் சிந்துவதும், தற்காலிக சபதங்கள் எடுப்பதும் ஓரிரு நாளில் அந்த சபதத்துக்கும் சேர்த்து பாலூற்றிவிட்டு, மீண்டும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பிப்பதும்தான் அனைத்து தவறுகளுக்கும் காரணம். பெற்றோர்களுக்கும் இந்த பாவத்தில் பங்கிருக்கிறது.

இறந்தபோன குழந்தைகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் இழப்பீடு கொடுத்துவிட்டு, அடுத்த நஷ்ட ஈட்டை யாருக்குத் தரலாம் என்று தேடிக் கொண்டிருப்பது அரசுக்கு அழகல்ல.

நல்ல தனியார் பள்ளிகளைத் தட்டிக் கொடுத்தும், மோசமான உள்கட்டமைப்பு உள்ள தனியார் பள்ளிகளை ஒழிப்பதற்கும் சரியான திட்டம் ஒன்றை என்றைக்குத்தான் செயல்படுத்தப்போகிறார்களோ?

-என்வழி
14 thoughts on “திருந்தாத ஜென்மங்கள்!

 1. கிரி

  //ஒவ்வொரு முறை பெரும் விபத்து நேரும் போது மட்டும் ஆளாளுக்கு கண்ணீர் சிந்துவதும், தற்காலிக சபதங்கள் எடுப்பதும் ஓரிரு நாளில் அந்த சபதத்துக்கும் சேர்த்து பாலூற்றிவிட்டு, மீண்டும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பிப்பதும்தான் அனைத்து தவறுகளுக்கும் காரணம்//

  மறுக்க முடியாத உண்மை 🙁

 2. sekar

  இறந்தபோன குழந்தைகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் இழப்பீடு கொடுத்துவிட்டு, அடுத்த நஷ்ட ஈட்டை யாருக்குத் தரலாம் என்று தேடிக் கொண்டிருப்பது அரசுக்கு அழகல்ல.

  vathaikal illai

 3. T.Subramaniam

  ஈன தனமான பத்திரிகைகள் நு சொன்ன கோவம் பொத்துகிட்டு வருதே ,இன்னைக்கு கோவை தினமலர் பாக்கணும் ஒன்பது கொளந்தை பலி மேலயும் கிலயும் உனினர் விளம்பரம்…காசு குடுத்த தான் குடும்பத்தையும் குடுபகாங்க நு அந்த பத்திரிக்கை பத்தி சொனது தப்பே இல்ல …..
  தமிழ்நாட்டுல நாலாவது தூண் இடிஞ்சு விழுந்து பல நாள் ஆயிருச்சு

  நல்ல வேலை வினோ நீங்களாவது அந்த பிஞ்சு நெஞ்சங்கள் பத்தி மட்டும் போட்டிங்க !!!!!

 4. BaijuaBalakrishnan/Coimbatore

  “ஒரு குழந்தையின் அழுகையையே தாங்க மனதுக்கு ”
  “தாங்காத”என்று நினைக்கிறேன் சரியா வினோ..?
  நன்றி
  பா.பைஜூ

 5. BaijuaBalakrishnan/Coimbatore

  “நல்ல தனியார் பள்ளிகளைத் தட்டிக் கொடுத்தும், மோசமான உள்கட்டமைப்பு உள்ள தனியார் பள்ளிகளை ஒழிப்பதற்கும் சரியான திட்டம் ஒன்றை என்றைக்குத்தான் செயல்படுத்தப்போகிறார்களோ?”

  இனிமெலும் இந்தியாவில் இதை எதிர்பார்தோமேயானால் முட்டாள்கள் நாமின்றி வேறாருமில்லை……….!

  எல்லோரும் இந்தியாவின் தலைச்சிறந்த கோடீஸ்வர படியலை நோக்கி முண்டியடிக்கும் வேளையில்

  குழந்தைகளாவது …..குட்டிகளாவது போங்க சார் போய் வேலைவெட்டிய பாருங்க……..

  அடிதட்டு மக்களாகிய நாம்தான் இதைப்பற்றியெல்லாம் நினைத்து வெம்பிக்கொள்ள வேண்டும்.

  பாதிப்புகள் என்றென்றும் நமக்கே…….நமக்குமட்டும்தான்…..

  நன்றி
  பா.பைஜூ

 6. r.v.saravanan

  குழந்தைகளின் வசதியை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை.

  ippodhu mattumillai eppodhumey கவனத்தில் கொள்வதே இல்லை. indha ulagam

 7. r.v.saravanan

  இந்த செல்போன் சனியனும் சேர்ந்து கொண்டது. அப்படி என்னதான் பேசுவார்களோ… காதில் வைத்தால் கருமத்தை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். இந்த பள்ளிக் குழந்தைகள் பேருந்தை இயக்கிய ஓட்டுநரும் முக்கிய வளைவு ஒன்றை நெருங்கும்போது செல்போன் பேச ஆரம்பித்து, பேலன்ஸ் தடுமாறி குளத்தில் விட்டிருக்கிறான் பேருந்தை.

  அடப்பாவி

 8. r.v.saravanan

  நல்ல தனியார் பள்ளிகளைத் தட்டிக் கொடுத்தும், மோசமான உள்கட்டமைப்பு உள்ள தனியார் பள்ளிகளை ஒழிப்பதற்கும் சரியான திட்டம் ஒன்றை என்றைக்குத்தான் செயல்படுத்தப்போகிறார்களோ?

  ???????????????????????????????????????????????????????????

 9. r.v.saravanan

  ஒரு குழந்தையின் அழுகையையே தாங்க முடியாத மனதுக்கு 10 குழந்தைகளின் மரணம் சவுக்காலடித்த வேதனையைத் தருகின்றன.

  பள்ளிகளின் பணம் சம்பாதிக்கும் பேராசை. kku pali குழந்தைகளின் மரணம்
  indha பணம் சம்பாதிக்கும் பள்ளிகளின் family kku பாதிப்பு varanum……….

 10. r.v.saravanan

  indha பணம் சம்பாதிக்கும் பள்ளிகளின் family kku பாதிப்பு varanum……….

  sorry vino very sorry emotional agiten

 11. nilaamathy

  திருந்தா ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்………..? அவனவன் பணம் தான் பெரிசு என்று வாழ்வதால்கொஞ்சம் உயிர் களையும் பற்றி சிந்திக்கனும் தரமான சமுதாய நோக்குள்ள் பதிவு. பாராடுக்கள்.

 12. kudimagan

  டியர் வினோ,

  நீங்கள் இன்னும் ஒரு தலைப்பை எடுத்து இங்க எழுத நான் விரும்புகிறேன்……திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து சிறுசேரி வரை செல்லும் ஆபத்தான ஷேர் ஆட்டோ பயணம் தான்………மிக அலட்சியமாக பல படித்த மக்கள் செய்யும் தவறு, கவனிக்காத காவல் துறை இது பற்றி அவசியம் பேச வேண்டும். ஆட்டோ டிரைவர் அருகில் வள்ளி தெய்வானை போல் இருவர் அமர்ந்து பின்னல் முழு லோடு லாரி போல எட்டு பேர் இருக்க சவாரி ஆரம்பிகிறது…………ஒரு மோசமான பயணம்……நகரத்தில் வேறு எங்கும் இல்லாத அளவு இங்கே பல மடங்கு பயண கட்டணம். கேட்டல் தொல் கேட் என கரணம் காட்டுவது. அனால் தொல் கேட் கட்டணம் ஒரு நாள் முழுக்க எதனை முறை வேண்டுமானாலும் போயி வர இருபது ருபாய் விட குறைவு. இருந்தும் அநியாய வசூல்…….அதை விட ஆபத்தான் பயணம்……………..இத பார்டி அவசியம் புகை படத்துடன் நீங்கள் வெளியிட வேண்டும். இது எனது நீண்ட நாள் ஆதங்கம்.

  _______________

  நானும் பார்த்திருக்கிறேன்… நிச்சயம் எழுதுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *