BREAKING NEWS
Search

திருச்சியில் தங்கி சிகிச்சை பெற அனுமதி கோரி முதல்வருக்கு பார்வதி அம்மாள் கடிதம்!

திருச்சியில் தங்கி சிகிச்சை பெற அனுமதி கோரி முதல்வருக்கு பார்வதி அம்மாள் கடிதம்!

சென்னை: தமிழகத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று கோரி பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் கடிதம் எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் சென்னை வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஈவு, இரக்கமற்ற சிங்கள ராணுவம் கூட அவர் சிகிச்சை பெறட்டும் என்று இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல அனுமதித்த நிலையில், தமிழ்நாட்டில், பார்வதியம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்காதது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில் பாஜக தலைவர் அத்வானியே, இது வெட்கக் கேடான, மனித நேயமற்ற செயல் என்று கண்டித்தார்.

பார்வதி அம்மாளை மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது பற்றி சட்ட சபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி, பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற விரும்பினால் கடிதம் எழுதலாம். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து பார்வதி அம்மாள் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டமாய் மருத்துவமனையில் இருந்து அவர் கைரேகை பதித்து அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சென்னையில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு இந்த கடிதம் வந்துள்ளது.

அதில் அவர் கூறி இருப்பதாவது:

நான் நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும், கையும் செயலற்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழகத்தில் இருந்த காலத்தில், முசிறியில் உள்ள டாக்டர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன்.

ஆனால், 2003ம் ஆண்டு மே மாதம் இலங்கை சென்றதால், தொடர்ந்து வைத்தியம் செய்ய முடியாமல் போய்விட்டது. வன்னியிலும், ராணுவ முகாமிலும் சரியான மருத்துவ வசதிகள் இல்லாதபடியால், எனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் எளிதில் விசா எடுக்க முடியாத சூழ்நிலையில், எனது மகள் வினோதினி ராஜேந்திரன் என்னை மலேசியாவிற்கு வரவழைத்து, அங்கு இந்திய விசா பெற்று, என்னை சென்னைக்கு ஒரு பெண்ணின் உதவியுடன் அனுப்பி வைத்தார்.

எனது வைத்தியத்திற்கு டாக்டர் ராஜேந்திரன் வேறு தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் ஏற்பாடு செய்வார் என்பதால், தயவு செய்து நான் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடித்தின் கீழ் பகுதியில், ‘நன்றியுடன் தங்கள் உடன்பிறப்பு’ எனக் குறிப்பிட்டு, பார்வதியின் கைரேகை பதிக்கப்பட்டுள்ளது.

மனிதம் அறக்கட்டளை அக்னி சுப்பிரமணியனுக்கு இந்த கடிதம் வந்துள்ளது. அவர் அந்த கடிதத்தை நேற்று முதல்வர் கருணாநிதியிடம் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வக்கீலும், மத்திய அரசு வக்கீலும் பார்வதி அம்மாவுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த வழக்கில் ஆஜராகி கூறுகையில், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார் என்று உறுதியளித்தது நினைவிருக்கலாம்.

முதல்வர் கருணாநிதியும் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க முறைப்படி உதவிகள் செய்யப்படும் என்று ஏற்கெனவே சட்டசபையில் உறுதி அளித்துள்ளார்.

எனவே பார்வதி அம்மாளை தமிழகம் அழைத்து வர முதல்வர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
8 thoughts on “திருச்சியில் தங்கி சிகிச்சை பெற அனுமதி கோரி முதல்வருக்கு பார்வதி அம்மாள் கடிதம்!

 1. patrick

  வெளி நாட்டில் நல்ல மருத்துவர் இல்லையா ? நீங்கள் மறுபடியும் தமிழகம் வந்து அவமான படவேண்டாம் .

 2. sks

  இந்த மாதிரி முன்கூட்டியே ஒரு கடிதம் அனுப்பியிருக்கலாம். தங்கள் மகன் இந்திய அரசுக்கு வேண்டாதவர் என்று தெரிந்திருக்கும் போது, அதிக பட்ச முன் யோசனையுடன் அவரும், கூட இருப்பவர்களும் நடந்திருக்க வேண்டும்.

  அந்த தாயார் நலமுடன் நீண்ட நாள் வாழ ஆண்டவன் அருள் புரியட்டும்.

 3. palPalani

  @sks: தன் சுய நினைவே இல்லாத ஒருவரிடம், கடிதம் எழுதுனாதான் அனுமதிப்போம் என்பது, உலகின் மிக கொடூரமான செயல்.

 4. sathish

  நான் முசிறி ஐ சேர்ந்தவன்.ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் பார்வதி அம்மையார் இங்குதான் தங்கி இருந்தார்.அவர் மீண்டும் இங்கு வருவார் என இங்குள்ள மக்கள் அனைவரும் எதிர்பார்கிறார்கள்.

 5. kiri

  கருணாநிதி என்னும் கொஞ்ச நாள் தான் உன் மனித வழக்கை , அப்புறம் நரகத்தில் அனுபவிக்போகிறது நிறைய இருக்கு,

 6. குமரன்

  சிலைஜர் நீண்டநாள் வாழ வேண்டும். 120 வருடம் வாழ்ந்தால்தான் நன்றாக இருக்கும். சொர்க்கம் நரகம் எல்லாம் இங்கேதான். அது தனியாக எதுவும் இல்லை. ௧௨௦ வயது வரை இருந்து தனது மகன், மகள் மனைவி, துணைவி இவர்களுக்குள் பஞ்சாயத்து பண்ணி வைத்தாலே போதும். வாழ்க்கை வலமாக இருக்கும்.

 7. kavirimainthan

  பார்வதி அம்மாளுக்கு மருத்துவ சிகித்சையா
  அல்லது வீட்டுக் காவலா ?

  இன்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்
  முதல்வர் கலைஞர் –

  அப்போது பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்காமல்
  திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக
  கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு முதல்வர், ‘’ பிரபாகரன் தாயாருக்கு தமிழகத்தில்
  சிகிச்சை அளிக்க கடும் நிபந்தனைகள் எதுவும்
  விதிக்கப்படவில்லை.
  தமிழக அரசின் கண்காணிப்பில் அரசு மருத்துவமனையில்
  பார்வதி அம்மாளுக்கு அரசு செலவில் சிகிச்சை
  அளிக்கப்படும்’’ என்று கூறி இருக்கிறார் !.

  அந்த அம்மையார் அனுமதி கோரியது கரூரில்
  தான் முன்பே மருத்துவம் செய்துகொண்ட மருத்துவரிடமும்,
  தேவைப்பட்டால் அவர் மூலமாக வேறு சிறப்பு மருத்துவரிடமும்
  மீண்டும் சிகிட்சையை தொடரத்தான்.

  ஆனால் அவரை கட்டாயமாக அரசு மருத்துவமனையில்,
  அரசின் கண்காணிப்பில் சிகிச்சை பெற அனுமதிக்கப்போவதாக
  கூறுவதை விட வெளிப்படையாடவே அவரை வீட்டுக்காவலில்
  ( அல்லது மருத்துவமனைக்காவலில் )
  வைக்கப்படுவார் என்றே சொல்லி இருக்கலாம். .

  வாழ்க உலக தமிழினத் தலைவரும் அவரது
  கருணை உள்ளமும் ! உலகம் முழுதும் உள்ள தமிழர்கள்
  அவரது பண்பையும் அரசாளும் திறனையும்
  (தந்திரத்தையும்) போற்றி புகழ வார்த்தைகள் இன்றி
  தவிக்கிறார்கள் –

  – காவிரிமைந்தன்
  http://www,vimarisanam.wordpress.com

 8. palPalani

  இன்னும் டெல்லிலையா இருக்கீங்க???
  ஜி, அப்படியே ஒரு எட்டு PM ஆபீஸ் போயிட்டு வாங்க, லெட்டர் இன்னும் வரலன்னா அடுத்த் லெட்டர் எழுததான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *