BREAKING NEWS
Search

தியேட்டர்களில் ‘பார்’…. உரிமையாளர்களுக்குள் ‘போர்’!

தியேட்டர்களில் ‘பார்’…?  உரிமையாளர்களுக்குள் ‘போர்’!

சென்னை: குசேலன் படத்தை ஓடவிடாமல் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ எத்தனையோ அத்தனை pittbaஅழிச்சாட்டியங்களையும் செய்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இன்று பிளவுபட்டு நிற்கிறது, ஒரு முக்கியமான காரணத்துக்காக.

குசேலன் பிரச்சினையின் போது, தியேட்டர்களில் பார் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கொஞ்சமும் வெட்கமின்றி கோரிக்கை விடுத்தனர் அந்த அமைப்பின் தலைவரும் செயலாளரும்.

இது முட்டாள்தனமான, ஆபத்தான கோரிக்கை என்பது தெரிந்தும் அதில் அவர்கள் பிடிவாதமாக இருக்க, பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பி மற்றும் சி சென்டர்களில் இன்றும் குடும்பத்துடன் போய் சினிமா பார்க்கும் பழக்கும் முன்பு மாதிரி இல்லாவிட்டாலும், இன்றும் தொடரவே செய்கிறது.

இந்த நிலையில் திடேட்டர்கள் டாஸ்மாக் பார்களாகிவிட்டால் குடும்பத்துடன் படம் பார்க்க முடியுமா… பெண்கள் திரையரங்குக்கு வர முடியுமா? என்று திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்குள்ளேயே பெரும் அதிருப்தி கிளம்பியது. அதுவே இன்று அறிக்கையாக வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் பார் வைக்க அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் துணைத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

திரையரங்கு சங்க துணைத் தலைவர் ஜெயகுமார், கூடுதல் செயலாளர் எம்.வி.ராமு, பொருளாளர் பழனியப்ப செட்டியார் ஆகியோர் முதல்வர் கருணாநிதிக்கு இதுகுறித்து எழுதியுள்ள கடிதம்:

எங்கள் சங்கத்தில் இருந்து சிலர் தியேட்டர்களில் பார் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வருக்கு வைத்திருப்பதாக செய்தி அறிந்தோம். எந்த கோரிக்கையும் பொது மகாசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும். தனி நபர் கருத்தாக இருக்கக்கூடாது.

தியேட்டர்களில் பார் வைக்கவேண்டும் என்பது குறித்து பொதுக்கருத்து எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதுகுறித்து அனைவரிடமும் பேசப்படவுமில்லை. உண்மையில் பெரும்பாலான திரையரங்குகள் அருகில் கூட பார்கள் இருக்க கூடாது என்றே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே பார் வைக்க அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கக் கூடாது, என்று அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

குடும்பங்கள் வருவதே நின்றுவிடும்! – அபிராமி ராமநாதன்

இதற்கிடையே, தியேட்டர்களில் பார்களை அனுமதித்தால் குடும்பத்துடன் யாரும் தியேட்டருக்கு வருவே மாட்டார்கள். இந்நிலை உருவாக அனுமதிக்கக் கூடாது என சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டம் அபிராமி ராமநாதன் தலைமையில் நேற்று நடந்தது.

இக் கூட்டத்தில், தியேட்டர்களில் பார் வைக்க அனுமதித்தால் குடும்பங்களாக வருபவர்கள் தியேட்டர்களுக்கு வருவதையே நிறுத்தி விடுவார்கள். குடித்து விட்டு வருபவர்கள் தியேட்டர் உள்ளே இருக்கைகளையும் கெடுத்து விடுவார்கள்.

எனவே தியேட்டர்களுக்கு உள்ளே பார் வைக்க அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

திரையரங்கு அருகில் பார்கள் இருக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். பொது இடங்களில் குடிப்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், பார் வேண்டும் என வலியுறுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்தாலும் தவறில்லை, போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *