BREAKING NEWS
Search

தினமினி ஆகிப்போன தினமணி!

தினமினி ஆகிப்போன தினமணி!

தினமணி என்பது சமூகத்தின் கண்ணாடி போல இருந்தது ஒரு காலம்… ஒரு பத்தாண்டு காலம் அப்படி இருந்திருக்கும். அதன் பிறகு… மணி, மினியாகி இப்போது மைக்ரோ லெவலுக்குப் போய்க்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வந்திருக்கிறது.

எந்திரன் பற்றி எழுதிவிட்டதால் வந்த கோபமா இது? என்ற ரெடிமேட் கேள்வியை சிலர் உடனே வைக்கக் கூடும் (ஆனால் முழுவதும் படித்த பிறகு அதைக் கேளுங்கள்). அதுவும் ஒரு காரணம்தான்… உடனடிக் காரணம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்கும் முன்பே, செம்மொழி மாநாட்டின்போது தினமணியின் பச்சை சந்தர்ப்பவாதம் புரிந்துவிட்டதால், அந்தப் பத்திரிகை மீதிருந்த மதிப்பே பலருக்கும் போய்விட்டது. பணியாற்றும் சிலர்தான் இதற்குக் காரணம் எனும்போது பாரம்பரியமிக்க ஒரு பத்திரிகையை மொத்தமாய் நொந்துகொள்வது நியாயமில்லைதான். ஆனால் வேறு வழியில்லை.

செம்மொழி மாநாடு என முதல்வர் கருணாநிதி அறிவித்தபோது, இதே தினமணி ஆயிரம் ஆட்சேபங்களுடன் தலையங்கமாய் தீட்டித் தள்ளியது. ஈழத் தமிழர்களுக்காக போலிக் கண்ணீர் வடித்தது.

ஆனால் செம்மொழி மாநாட்டு மலர் தயாரிப்பு பொறுப்புடன் வேறு சில ‘பணிகளையும்’ மொத்தமாய் தினமணிக்கு தந்து வாயடைத்தார் முதல்வர். அன்று முதல் செம்மொழி மாநாட்டுக்கு அறிவுரை சொல்வது போல பாராட்டி தொடர் தலையங்கங்கள் தீட்டியவர்கள்தான், இப்போது எந்திரன் வெளியாகும் தருணம் குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறார்கள். எந்திரன் ஏகாதிபத்தியம் என ஒப்பாரி வைக்கிறார்கள். இதை பிளாக்கில் காப்பி பேஸ்ட் பண்ணும் கைப்புள்ளைகள் தொல்லை வேறு தாங்கவில்லை!

இவர்கள் குற்றச்சாட்டுதான் என்ன?

இத்தனை பிரமாண்டமாய் ஒரு படம், உலகின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒருங்கிணைகிறார்கள்… அதில் நாயகனாய் ரஜினி! – இதையே இவர்களால் தாங்க முடியவில்லை.

இவர்களைப் பொறுத்தவரை, இந்த மாதிரி ‘ஹைடெக்’ பாத்திரங்களில் நடிக்க வேறு சில நடிகர்களை வரித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் வாயுத் தொல்லையில் அவதிப்படுவதுபோல் பாவம் காட்டினாலும் அது ஆஹா ஓஹோ ரகம்தான். இந்த பிரமாண்ட படத்தில், அதுவும் விஞ்ஞானியாக, ‘ஆட்டோக்காரர், படிக்காதவன், கூலி’ வேடம் போடும் ரஜினி நடித்திருப்பதே மகா எரிச்சலாகத்தானே இருக்கும்!

“ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு படைக்கிறது எந்திரன்…” என்பது தினமணியின் ஆதங்கம்.

எது ஏகாதிபத்தியம்?

சினிமா என்பது சோஷலிஸம் அல்ல… அது திறமைசாலிகள் ஏகாதிபத்தியம் செலுத்தும் இடம்தான் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாத கைப்புள்ளைகள் மாதிரி தினமணி கட்டுரை / தலையங்கம் எழுதுவதை நினைக்கும்போதே வேடிக்கையாக உள்ளது.

சினிமாவில் ரிசர்வேஷன் கிடையாது. திறமையுள்ளவன் ஜெயிப்பான். திறமையையும் பிரமாண்டத்தையும் சரியாக கூட்டு சேர்த்து, புத்திசாலித்தனமாக மார்க்கெட் செய்யத் தெரிந்தவன் நிலைப்பான். அதை செய்யத் தெரியாதவன் கலையுலகத்தில் கால் வைக்கக் கூடத் தகுதியில்லாதவனே! முடிந்தால் அப்படிப்பட்ட யாரையாவது வைத்து தினமணிக்காரர்களும் அவர்களை காப்பி பேஸ்ட் செய்யும் அதிமேதாவிகளும் படம் எடுத்துப் பார்க்கட்டும்.

கொஞ்சம் விட்டால், தங்களை விட அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களையும் குறை சொல்வார்கள் போலிருக்கிறதே. உங்களால் முடிந்தால் ஜெயித்துக் காட்டுங்கள், சட்டம் அனுமதிக்கிற அத்தனை வழிகளையும் பயன்படுத்தி. அதுதானே இந்த நாட்டின் அரசியல் – பொருளாதார கட்டமைப்பாக இருக்கிறது? முடிந்தால் கட்டமைப்பை மாற்றிவிட்டு, இப்படிக் கட்டுரைகள் மூலம் புத்திமதி சொல்லுங்கள்.

சிவாஜி இருக்கும் வரை நடிப்பில் அவர்தான் ஏகாதிபத்தியம் செலுத்தினார். எம்ஜிஆர் இருக்கும் வரை நடிப்பு மட்டுமல்ல, புகழிலும் செல்வாக்கிலும் கூட அவரே ஏகாதிபத்தியம் செலுத்தினார். இவர்கள் தங்களின் திறமையையும் புகழையும் அனைவருக்கும் சமமாகப் பிரித்து தர வேண்டும் என்று சொல்லியிருக்க முடியுமா!

உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் எடுத்த காலகட்டத்தில், அதுதான் எந்திரன் மாதிரி. அன்றைக்கு திமுக அரசு முற்று முழுதாக எம்ஜிஆருக்கு எதிராக இருந்தது. ஆனாலும் தமிழகம் முழுவதும் அந்தப் படமே ஆதிக்கம் செலுத்தி வெள்ளி விழா கண்டது வரலாறு.

ஆனால் அந்தப் படத்தை குறை சொல்லவில்லை தினமணி. ஏன்? அன்று தினந்தந்தியுடன் பிணக்கிலிருந்த எம்ஜிஆர், தினமணிக்கு முழுப்பக்க அளவில் விளம்பரமாய் கொடுத்துத் தள்ளினார். தினமணி தன் ஆயுளில் பெற்ற முதலும் கடைசியுமான முழுபக்க சினிமா விளம்பரம் உலகம் சுற்றும் வாலிபன்தான். அன்றைக்கு எதுவுமே ஏகாதிபத்தியமாகத் தெரியவில்லை தினமணிக்கு. பாவம், ஏகாதிபத்தியக் கட்டுரை எழுதிய மேதாவிகளுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. தினமணி லைப்ரரிக்கு ஒரு நடை போய் வந்தாவது எழுதித் தொலைத்திருக்கலாம்!

ரூ 160 கோடி செலவில் ஒரு திரைப்படம் எடுக்கிறார்கள். ஆபாசம், வன்முறை, அறுவருப்பு ஏதுமின்றி, அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு கலைப் படைப்பைத்தான் அவர்கள் தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை, போட்டிகளும், மாற்றுப் பொழுது போக்குகளும் நிறைந்த இந்த உலகில் அதற்குரிய முனைப்பும் வேகமும் கொண்ட முயற்சிகளோடுதானே கொண்டு போக முடியும்?

ஒரு வேளை மார்க்கெட்டிங் சரியில்லாமல், உரிய விளம்பரமும் இல்லாமல் இதே படம் பெட்டியில் சுருண்டிருந்தால், ‘படம் எடுக்கத் தெரிந்தவர்களுக்கு அதை உரிய முறையில் மக்களிடம் சேர்க்கத் தெரியவில்லையே’ என வெண்ணெய் வெட்டி நியாயம் பேசியிருப்பார்கள் இதே கட்டுரையாளர்கள்!

இலங்கைக்கு போகவே கூடாது என்று தமிழுணர்வாளர்கள் கூப்பாடு போட்டுக் கொண்டும் கொடிபிடித்துக் கொண்டுமிருக்கிற காலகட்டத்தில், கொழும்புவுக்கு விமான சேவையே ஆரம்பித்துவிட்ட கலாநிதிமாறனின் சன் குழுமத்தின் மீது நமக்கு பெரிய அபிப்பிராயமில்லைதான். இப்போதும் இந்த கட்டுரையை ரஜினி என்ற மனிதர் / யாரோடும் ஒப்பிட முடியாத அரிய கலைஞர் மீது வைத்துள்ள அபிமானத்துக்காகவே எழுதுகிறோம்.

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், சன் குழுமம் இன்று நாட்டின் பெரும் ஊடகக் குழுமம் ஆகிவிட்டது. இதை யாராலாவது தடுக்க முடியுமா… அப்படித் தடுக்க ஏதாவது சட்டவிரோதமாக அவர்கள் செய்திருக்கிறார்களா? சட்டப்படி இந்த குழுமத்துக்கு எதிராக எதையாவது செய்ய முடியுமா? அப்படி ஏதேனும் ஓட்டைகள் இருந்தால், அதை சட்டப்பூர்வமாகவே செய்யலாமே… எதற்கு வெட்டிப் புலம்பல் கட்டுரை?

அரசின் ஆசியோடு சன் குழுமம் எந்திரனை சந்தைப்படுத்துகிறது என்கிறார்கள். இதற்கு முன் ரஜினியின் சிவாஜி படத்தை ஏவிஎம்தான் எடுத்தது. படத்தின் ப்ரமோஷனுக்காக அந்த நிறுவனம் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஆனால் சிவாஜிக்கு தானாகவே வந்தது பப்ளிசிட்டி. சொல்லப் போனால், எந்திரனை விட அதிகமான பப்ளிசிட்டி சிவாஜிக்குதான் கிடைத்தது. ஒரு பிரபல இணையதளம் சிவாஜி படம் ஆரம்பித்த நாளிலிருந்து அந்தப் படம் குறித்து 700 செய்திகளை வெளியிட்டுள்ளது. காரணம் ரஜினி. அரசாங்க ஆதரவல்ல!

ஆனால் எந்திரனுக்கு அப்படி வரவில்லை. காரணம் சன் குழும படம் என்பதால். வேறு வழியில்லை… தினத்தந்தி உள்ளிட்ட பல நாளிதழ்கள் எந்திரன் செய்தி வெளிவராமல் கவனத்துடன் பார்த்துக் கொண்டது நினைவில்லையா தினமணிக்கு?

அப்படி ஒரு சூழலில் சன் குழுமம், தன்னிடமுள்ள மீடியா பலத்தைக் காட்டியதில் தவறென்ன? தினமணிக்கு ஏன் எரிகிறது? இதில் என்ன அரசு சலுகையைக் கண்டார்கள்? தியேட்டர் கொளுத்தப்பட வேண்டும், பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும். அப்போதுதான் அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்வோம் என்கிறதா தினமணி?

டிக்கெட் விலை தாறுமாறாக விற்கப்படுகிறது என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ரஜினியின் படங்களை தொடர்ந்து முதல் நாள் பார்க்கும் ஆர்வத்துடன் செல்லும் ரசிகர்களுக்குத் தெரியும், அவர் படத்துக்கு டிக்கெட் கட்டணம் எந்த அளவுக்கு உயரும் என்பது.

அரசின் கட்டுப்பாடு இருந்த காலத்தில், ரஜினியின் படங்களுக்கு 40 – 50 நாட்கள் வரை பிளாக்கில் டிக்கெட் விற்கப்பட்டது தினமணிக்கு தெரியுமோ தெரியாதோ.. எண்பதுகளிலேயே ரூ 300 முதல் 500 வரை டிக்கெட் வி்ற்கப்பட்டது ரஜினி படங்களுக்குத்தான். மற்றவர்களின் படங்களுக்கான டிக்கெட்டுகளை கூவிக்கூவி விற்க வேண்டிய நிலைதான் அன்றுமுதல் இன்றுவரை.

ரஜினியின் படம் வெளியாகிறது என்றால் நல்லபடியாக டிக்கெட் விற்கும் தியேட்டர்காரனிலிருந்து கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பவன் வரை, முறுக்கு, சோடா விற்கும் கடைகாரனிலிருந்து மல்டிப்ளெக்ஸ் பீட்ஸா கடைக்காரன் வரை அத்தனை பேருக்கும் அமோக பிஸினஸ்தான். மக்கள் கொள்ளையடிக்கப் படுகிறார்களே என்று கேட்கலாம். எப்போதாவது ஒரு முறை சந்தோஷமாக இதை மக்களே அனுமதிக்கிறார்கள். விருப்பமில்லாத யாரையும் கட்டாயப்படுத்தி படம் பார்க்கவோ, அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கச் சொல்லியோ யாரும் கட்டாயப்படுத்தவில்லையே.

சரி, இந்தியாவில், அட தமிழ்நாட்டில்தான் இப்படி என்று புலம்புகிறீர்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் 40 டாலர் வரை கொடுத்துப் படம் பார்க்கிறார்கள். அவர்களை யாராவது கூப்பிட்டு வைத்து பணத்தைப் பிடுங்கினார்களா… ஆக தினமணி கூறும் குற்றச்சாட்டு மொத்தமும் எங்கே வந்து நிற்கும் தெரியுமா… ரசிகனிடம்தான்!

ஒரு ரசிகனை, அவனுக்குப் பிடித்த படம், பொழுதுபோக்கை அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது என்ற கருத்தைத்தான் தினமணி தூக்கிப் பிடிக்கிறது. பிக்காசோவின் ஓவியம் புரியாவிட்டாலும் கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கலாம். தப்பில்லை. காரணம் அது கலைப்படைப்பு என்று கூறும் இந்த மாதிரி அறிவுஜீவிகள், சாதாரணர்களுக்கான சினிமாவுக்கு எதிராக இவ்வளவு மல்லுக்கட்டுவது ஏன்?

தசாவதாரம் என்றொரு படம் வெளியானது தினமணிக்குத் தெரியுமா… சிவாஜியின் வெற்றியைப் பார்த்த ஜூரத்தில், அந்தப் படத்தை பிரமாண்டமாய்க் காட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கிசானை வரவழைத்ததிலிருந்து என்னவெல்லாம் செய்தார் என்பதாவது இந்த அறிவுஜீவிகளுக்கு நினைவிருக்கிறதா?

சினிமாவை நோக்கி மக்களை ஈர்க்கும் அந்த உத்தியில் எந்த சட்ட மீறலும், நியாய மீறலும் இல்லை எனும்போது, எந்திரனுக்கு மட்டும் ஏன் இப்படி கட்டுரைகள் எழுதுகிறார்கள்?

இதே தினமணி, கடந்த இரு தினங்களாக செய்து வரும் ஒரு விஷமப் பிரச்சாரத்தை என்னவென்பது…

எந்திரன் படத்தை ஏதோ ஒரு இணையத்தில் வெளியிட்டுள்ளார்களாம். இவர்கள் வேலைமெனக்கெட்டு அந்த தளத்தின் முகவரியை கொட்டை எழுத்துக்களில், அதுவும் தனி நிறத்தில் லிங்காக கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் பத்திரிகை தர்மத்தில் கொள்ளியை வைக்க.

உண்மையான அக்கறை கொண்டவர்களென்றால், அந்த லிங்கை தயாரிப்பாளர்களுக்கல்லவா அனுப்பியிருக்க வேண்டும்? மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் பெயரைக் கூட வெளியிடக் கூடாது என்பது பத்திரிகை மரபு. அவள் ஏழையா, பணக்காரியா என்று பார்ப்பதில்லை இந்த விஷயத்தில்.

திருட்டு வீடியோவாக ஒரு படம் வெளியாகும்போது கிட்டத்தட்ட மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் நிலைதான் அந்தப் படத்துக்கும். தினமணி இப்போது செய்திருப்பது, மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் துணியை மீண்டும் உருவிப்பார்க்கும் செயலே. சமூக அக்கறையுமில்லை, வேறு ஒரு மண்ணுமில்லை.

இவ்வளவெல்லாம் செய்த பிறகும் தினமணியின் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை. இன்றைக்கு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார்கள், எந்திரனுக்கு வரிவிலக்கு தந்திருக்கக் கூடாது என்று. காரணம், அது பெரிய பட்ஜெட் படமாம். வசூலைக் குவித்துவிட்டதாம்.

தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்பது விதி. அந்த விதிமுறையை மீறாமல் வந்திருக்கிற படம் எந்திரன். அழகான, புத்தம் புதிய, சுத்தமான ஒரு சொல்லை தமிழுக்குத் தந்திருக்கிறது இந்தப் படம். தமிழை வளர்க்கத்தானே கருணாநிதி அரசு இந்த சலுகையை அறிவித்தது… அதை சரியாகத்தானே எந்திரன் செய்திருக்கிறது!

ஒருவேளை குவார்ட்டர் கட்டிங், ராஸ்கல், ஓடுகாலி (இதெல்லாம் சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ள தலைப்புகள் சாமி!) போன்ற தூய தமிழ்ப் பெயர் கொண்ட படங்களுக்குத்தான் வரிவிலக்கு தரலாம் என்கிறார்களோ… அதிலும் பாருங்கள் இத்தனை நாட்களாக இவர்களுக்கு இந்த அக்கறையே இல்லை. எந்திரன் வெளியான நேரம் பார்த்து கட்டுரை வெளியிட்டு, ஓநாய் அழுத கதையை நமக்கு நினைவுபடுத்துகிறார்கள்!

படத்தைப் பாருங்கள். படைப்பில் நேர்மையும் உழைப்பும் இருக்கிறதா என்று கவனியுங்கள். அந்தப் படைப்புக்கு சொந்தக்காரர்களால் இந்த சமூகத்துக்கு பாதிப்பிருக்கிறதா.. பெருமை சேர்கிறதா என்று பாருங்கள். இவையெல்லாம் சரியாக இருந்தால் பாராட்டிவிட்டுப் போவதுதான் ஒரு பத்திரிகையாளனுக்கு அழகு. அதைவிட்டுவிட்டு, உள்ளுக்குள் இருக்கும் அழுக்கை யாருக்கும் கெடுதல் நினைக்காத ரஜினி போன்றவர்கள் மீது கொட்டக் கூடாது. இதே கோடம்பாக்கத்தில் வேண்டாத விஷப்பூச்சிகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை நசுக்கப் பாருங்கள்!

நாடே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பை, அந்தப் படம் தயாரான மாநிலத்துக்காரன் பழிக்க நினைப்பது எத்தனை பெரிய மூடத்தனம்!

கிரானிக்கிளின் கிறுக்குத்தனம்!

தினமணியின் கருத்தைக் கூட ஒரு கட்டுரை.. கருத்துக்கு மறு கருத்து என்ற வகையில் எதிர் கொள்ளலாம், வாதிடலாம். ஆனால் டெக்கன் கிரானிக்கிள் என்ற அரைவேக்காட்டு ஆங்கில நாளிதழ் செய்திருக்கும் சொதப்பல், மகா தமாஷ்.

எந்திரன் வெளியான மூன்றாவது நாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை, கோயம்பேடு ரோகிணியில் 3 திரையரங்குகளில் எடுத்துவிட்டார்கள் என்று செய்தி வெளியிட்டது, யாரோ ஒரு மூன்றாம்தர தரகரை மேற்கோள்காட்டி!

எந்திரன் விளம்பரங்களில் ரோகிணி காம்ப்ளக்ஸ் என்றுதான் போட்டுள்ளது. என்னென்ன திரையரங்குகள் என்று வெளியிடப்படவில்லை. ஆனால் அபிராமியில் பாருங்கள்… திரையரங்குகள் பெயர் தெளிவாக இருக்கும். பிவிஆரில் 5 ஸ்க்ரீன்களின் பெயர்களும் இருக்கும். ஆனால் ரோகிணி என்ற ஒரு தியேட்டருக்கு பிரிண்ட் எடுத்து 5 தியேட்டர்களில் ஓட்டியிருக்கிறார்கள். அதுவே குற்றம்தான். இதில் மூன்று திரையரங்குகளில் படத்தை மூன்றாம் நாள் தூக்கிவிட்டதாக செய்தி. ஞாயிற்றுக்கிழமை எந்திரனுக்கு டிக்கெட் கிடைக்காமல், புறநகர்களை நோக்கிப் படையெடுத்த ரசிகர்களின் எண்ணிக்கையாவது தெரியுமா இந்த கிறுக்கர்களுக்கு!

இதையெல்லாம் விட முக்கியம், இந்த திரையரங்கம் பன்னீர் செல்வத்துக்கு சொந்தமானது. எந்தப் பன்னீர்செல்வம் தெரியுமா… குசேலன் படத்தை ஓடவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, இதே சன் டிவியின் துணையோடு அழிச்சாட்டியம் செய்த அதே பன்னீர் செல்வம். இவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

குறைந்தபட்சம் இதையெல்லாம் கூட யோசிக்காமல், அதை ஒரு பெரிய செய்தியாக போட்டிருந்தார்கள் அந்த கிரானிக்கிள் கிறுக்கர்கள். ரஜினி பிறந்த நாள், எந்திரன் ரிலீஸ் நாளுக்கெல்லாம், இணைய தளங்களிலிருந்து பக்கம் பக்கமாக சுட்டுப்போட்டவர்களுக்கு, ஆராய்ந்து செய்தி எழுதத் தெரியாதுதான். ஆனால் ஆங்கிலப் பத்திரிகை என்பதால் எதை எழுதினாலும் அம்பலத்தில் ஏறுகிறது. என்ன செய்வது! முதலில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் செய்தி போடுவது எப்படி என்று கற்றுக் கொண்டு, இந்த மாதிரி ஸ்கூப்களுக்கு வரட்டும் இந்த அதிமேதாவிகள்!

இந்த இரண்டு பத்திரிகைகளும் ஒன்றே ஒன்றைத்தான்  எந்திரன் விஷயத்தில் சாதித்தன… அது எந்திரனை குறை சொல்ல முடியவில்லையே என்ற காய்ச்சலில் கிடந்த ரஜினி விமர்சகர்களைச் சொறிந்துகொடுத்த அல்ப சந்தோஷம் மட்டும்தான்!

-வினோ

என்வழி.காம்
43 thoughts on “தினமினி ஆகிப்போன தினமணி!

 1. Devraj

  Fabulous write up Vino, Thanks a million.
  A true reflection of our feelings.
  But I am sure TRUTH will prevail.
  cheers.

 2. Muthu Kumar

  அட்டகாசம் தலைவா . இந்த ஜென்மங்கள் அப்படியும் தப்பி விட்டனவே, யாரும் கண்டுகொண்டு வழக்கு தொடரவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது…
  தினமணி மிகவும் மோசம் ….

 3. Nanda

  Good one Vino. I am in the US and I have paid $41 for watching Endhiran in Imax , Indianapolis. Many ppl watched it by paying $41. Many are willing to pay $100 for Thalaivar’s movie. I am watching the movie again tomorrow. No one compelled us to watch it.We watch it for one and only S-U-P-E-R S-T-A-R RAJNI

 4. Nanda

  good!!! I hate dinamalar..they are not writing any article about endhiran or rajini related news in their website…. Rajini pictutres also removed in their tamil actors gallery page… They are not geniun tamil magazine…They have some personl revange with our thalaivar… better, we ignore their comments…

 5. prakash

  Vino super article. Neengae sonnathu 100% correct, ithu anthae opposite gang santhosam paduthae matum mae uthavum. Anthae rajini (Pongada neengalau..)image suits well for this article :-). Is that true they removed Endhiran from rohini complex? Whatsoever Endhiran is rocking..pls write us box office in tamilnadu. Thanks

 6. kicha

  ‘Dinamani’kum cinemavukum dhan sampandhame illaye? Ivanunga eduku gudhikaranunga?

  Ivangalukellam rajini padam varumbodhu mattum engirundhudhan samuga vizhipunarvu vandhu aadumo?

 7. Endhiran

  அண்ணா இந்த படத்தை சன் பிச்சர்ஸ் எடுக்காம வேற நிறுவனம் எடுத்திருந்தா தெருஞ்சுருக்கும் உங்க சங்கதி. உண்மைய சொன்னா உங்களுக்கு கோவம் வரத்தானே செய்யுது வினோ.

 8. Hari hara krishnan

  திருட்டு வீடியோவாக ஒரு படம் வெளியாகும்போது கிட்டத்தட்ட மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் நிலைதான் அந்தப் படத்துக்கும். தினமணி இப்போது செய்திருப்பது, மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் துணியை மீண்டும் உருவிப்பார்க்கும் செயலே. சமூக அக்கறையுமில்லை, வேறு ஒரு மண்ணுமில்லை

  சரியான சாட்டையடி! தினமணிக்கு மானம் இருந்தால் மன்னிப்புகேட்கட்டும் அல்லது மௌனமாவது இருக்கட்டும்.

  இந்திய டுடே முன்பொரு சமயம் சச்சினை எதிர்த்தால் இந்தியாவையே எதிர்க்கிறோம் என்று அர்த்தம் என்று எழுதியது.

  அதே போல் இன்று ரஜினியை எதிர்த்தால் உலகையே எதிரி ஆக்கி கொள்கிறீர்கள் என்று அர்த்தம்

 9. venkat

  என்னவோ ஏதோன்னு வந்தா, செம காமெடி. அதுக்கு இவ்ளோ சப்போர்ட் வேற… ஆண்டவா தமிழ்நாட்டையும், தமிழர்களையும் காப்பாத்துப்பா..

 10. Sathish

  I should have read “Dinamani” before watching this movie. Without the hype I am sure it will not get any audience. Total waste of money and awful movie…Garbage..I think Rajni deserves much better movie, script…

 11. Suryakumar

  தினமணியின் அந்த லிங்குடன் கூடிய தலையங்கத்தை பார்த்தவுடன் அந்த நாளிதழ் மேலிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது. அதெப்படி, தியேட்டரில் கூட்டமில்லை – பல நகரங்களில் படத்தை தூக்கிவிட்டார்கள் என்று எழுதிவிட்டு இப்போது வசூலை வாரிக்குவித்து விட்டது என்று சொல்கிறார்கள். இவர்களின் புளுகு எட்டு நாள் கூட வரவில்லையே… தினமணி சன் குழுமத்தை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு அதன் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருந்த ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.
  வெங்கட், எங்களை ஆண்டவன் காப்பாற்றாவிட்டால் ஒன்றும் பிரச்சினையில்லை… இங்கு யாரும் உம்போன்றவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை. பிடிக்காத செய்தி என்றால் மூடி வைத்துவிட்டு போ…

 12. Anand

  Papers like Dinamani is moving towards extinction so they need to do such stupid act to show they are still alive. In today’s world market determines the worth of the product / services ( may be that is the reason for dinamani’s extinction) the demand for endhiran is mind boggling and with positive reports from all the mainstream media. Surprisingly why Sun group is quite? no official news about Endhiran record breaking collection? hope we are not seeing a repeat of AVM act?

 13. கிரி

  ” இதை பிளாக்கில் காப்பி பேஸ்ட் பண்ணும் கைப்புள்ளைகள் தொல்லை வேறு தாங்கவில்லை!”

  😀

  வினோ கட்டுரை செம! நறுக்குன்னு கேட்டு இருக்கீங்க.

 14. simple fan of superstar!

  வினோ-

  இந்த இலங்கை தமிழர்கள் சிலரும்கூட தலைவரின் எந்திரனுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். எல்லாளன் என்ற ஒரு இலங்கைத் தமிழர் தனது தளத்தில் எந்திரன் படத்தையே வெளியிட்டுள்ளார்.

  இலங்கை தமிழர்களின் போராட்டத்தை எப்போதும் ஆதரித்தவர் – ஆதரிப்பவர் தலைவர். இப்போதும், பிஃபா விழாவை பிசுபபிசுக்க வைத்து ராஜபக்சே அரசை தலைகுனிய வைத்தவர் தலைவர்.

  ஆனால் அதையெல்லாம் இவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களா? அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, சன்னை நினைத்து இவர்கள் தலைவரை தாக்குகிறார்கள். இதைப் பொறுக்க முடியவில்லை. இதுபற்றியும் நீங்கள் எழுத வேண்டும். ஈழத்து சகோதரர்கள் உண்மையிலேயே நன்றி உணர்வு மிக்கவர்களாக இருந்தால் தலைவர் பற்றி சிறு வார்த்தை கூட அவதூறாகப் பேசக்கூடாது. இதை விரிவாக தாங்கள் எழுதவேணும்.

 15. murugan

  சூப்பர் வினோ – நெத்தியடி – உண்மையிலேயே மனசாட்சி என்று ஒன்று உள்ளவர்களானால் தாங்கள் செய்தது சரிதானா என்று சற்றே பொறுமையாக சிந்தித்துப்பார்க்கட்டும் – இனியும் இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் இவர்களை நாம் வேறு இனமாகத்தான் எண்ண வேண்டி இருக்கும்

 16. mathan

  i am an ealam tamil.like in tamilnadu some people against thalaivar.like that in ealam tamimils also can be some muthalaikal.for that reason you cannot tell everyone against.that also they might be against sun picture and karunanithy that they could have done a better job to save people.thats why they are against enthiran.but as far as i am concerned everyone like our thalaivar.but there can be exceptions.

 17. சுரேஷ்குமார்

  இந்தக் கட்டுரை உண்மையிலேயே வாசிக்க அற்புதமாக இருந்தது. நல்ல வேகம். ரஜினி படம் மாதிரி.

  தினமணி ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். என்னதான் சன் பிக்சர்ஸ் ஏகாதிபத்தியம், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும், Content பலமாக இல்லாவிட்டால் படம் ஊத்திக் கொள்ளும். சுறா, புறாவுக்கெல்லாம் அதானே நேர்ந்தது.

  ஆனால் எந்திரன் அப்படியல்ல. எதிரியையும் வசீகரித்தவன். So the parameters not applicable to Enthiran. Dinamani must be helped to promote Enthiran.

  பொதுவாக ரஜினி ரசிகர்களுக்கு விகடன், தினமலர், குமுதம் குரூப் மீதுதான் செம கடுப்பு. இந்தப் பத்திரிகைகள்தான் ரஜினியை அண்டிப் பிழைத்து, அவருக்கே குழி வெட்டியவர்கள். ஆனால் தினமணி அப்படியில்லை. நியாயத்தையே பேசும் என்ற நம்பிக்கை என்னைப் போன்றவ்ரகளுக்கு உண்டு. அதைக் கெடுத்துக் கொண்டீர்களே!

 18. சுரேஷ்குமார்

  சாமி படத்தில் பாலாசிங்கிடம் விக்ரம் ஒரு வசனம் சொல்வார்: “நீ என் லிஸ்ட்லயே இல்லையே. நீயா வந்து ஏன் மாட்டிக்கிறே’ என்று.

  கிரானிக்கிள் கிறுக்கர்களுக்கு இது நூறு பர்சன்ட் பொருந்தும் 🙂

 19. santhosh

  முதலில் வினோ அருமையான சாட்டை அடி தினமணிக்கு…. நிச்சியமாக உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும். அதற்காக ரஜினி ரசிகனாய் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்…..

  சாட்டை அடி 1 : செம்மொழி மாநாட்டு மலர் தயாரிப்பு பொறுப்புடன் வேறு சில ‘பணிகளையும்’ மொத்தமாய் தினமணிக்கு தந்து வாயடைத்தார் முதல்வர். அன்று முதல் செம்மொழி மாநாட்டுக்கு அறிவுரை சொல்வது போல பாராட்டி தொடர் தலையங்கங்கள் தீட்டியவர்கள்தான்,
  சாட்டை அடி 2 : அன்று தினந்தந்தியுடன் பிணக்கிலிருந்த எம்ஜிஆர், தினமணிக்கு முழுப்பக்க அளவில் விளம்பரமாய் கொடுத்துத் தள்ளினார். தினமணி தன் ஆயுளில் பெற்ற முதலும் கடைசியுமான முழுபக்க சினிமா விளம்பரம் உலகம் சுற்றும் வாலிபன்தான்.
  சாட்டை அடி 3 : தினமணி லைப்ரரிக்கு ஒரு நடை போய் வந்தாவது எழுதித் தொலைத்திருக்கலாம்!
  சாட்டை அடி 4 : மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் பெயரைக் கூட வெளியிடக் கூடாது என்பது பத்திரிகை மரபு. அவள் ஏழையா, பணக்காரியா என்று பார்ப்பதில்லை இந்த விஷயத்தில்.
  சாட்டை அடி 5 : நாடே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பை, அந்தப் படம் தயாரான மாநிலத்துக்காரன் பழிக்க நினைப்பது எத்தனை பெரிய மூடத்தனம்!

  நெத்தி அடி: இப்போதும் இந்த கட்டுரையை ரஜினி என்ற மனிதர் / யாரோடும் ஒப்பிட முடியாத அரிய கலைஞர் மீது வைத்துள்ள அபிமானத்துக்காகவே எழுதுகிறோம்

  @வெங்கட்: கடவுள் கிட்ட நான் வேண்டுகிறேன். உன்னை போன்ற பைத்திய நண்பர்களை காபத்த வேண்டும்……………

 20. jawahar

  முதலில் வினோ அருமையான சாட்டை அடி தினமணிக்கு…. நிச்சியமாக உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும். அதற்காக ரஜினி ரசிகனாய் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்…..

 21. Nathan

  Dear Mr.Editor,
  i am also a fan of Thalaivar, but not brainless mad of anyone , everybody have their right to support or oppose, not a single media in tamilnadu or in india is doing their job of real journalism, very very specially the sun group,i myself regretted many times because of thalivar they r getting more money and name,as u r a real thalivar fan be democratic and welcome the critics,nobody can stop him, because i believe he is a real human being and kind heart ted, which god expecting from all of his creations,
  more over try publish more gross root problems of poor’s in our motherland then these kind of funny things, c the following link its more more important then dinamani or endhiran, http://thatstamil.oneindia.in/news/2010/10/10/indian-maid-dies-muscat-airport.html , thanking you

 22. saravana

  சன் டி.வி.க்கு வால் பிடிக்காதீர் நண்பரே.
  அது இந்தியாவைக் கொள்ளையடித்த கஜினி முகமதுவைக் காட்டிலும் கொள்ளைக்காரக் குடும்பம்.
  இது ஏகாதிபத்தியம் தான். ரஜினி மீது அன்பு எனக்கும் உண்டு.
  ஒரே ஒரு வார்த்தை தான்…
  அது
  ஒரு குடும்பம்… ஓஹோன்னு வாழ்க்கை…

 23. LAx

  cant we do சம்திங் அபௌட் திஸ்
  http://tamildigitalcinema.com/?p=4887

  _____________________

  அது கருத்து சுதந்திரமாச்சே. இந்த மாதிரி தனிப்பட்ட தாக்குதல்களைக் கூட சிலர் நியாயப்படுத்தக்கூடும். பொறாமை, வயிற்றெரிச்சலில் வெந்து சாகும் இவர்களின் பத்திரிகையைப் படிப்பதுதான் இப்போதைக்கு மனநலத்துக்குக் கேடு என்பது நமது கருத்து.
  -வினோ

 24. NAREN

  “shankar’s imagination recognized by all over the world with influence of “RAJINI” “- this is true statement. I think as a director he proved his excellence and as a hero he proved his mass.

 25. LAx

  very true but this is more like character assassination – tagging one individual’s movies as such – which shows this once respected magazine ‘s newly attained lowest level of yellow journalism

 26. Simple fan of Superstar!

  வினோ,
  மறு நாள் அவர்களின் கார்ட்டன் என்பது கரத்து சுதந்திரத்தை அல்ல அவர்களின் ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சியை தெயல்வாக காட்டுகிறது அத்சு கருத்து சுதந்திரம் என்றால் கூட நாட்டிலுள்ள எல்லோரும் மனநிலை சரி இல்லாதவர்கள் என்று முழங்குவது பைத்தியம் அடுதவங்கழலி thaane எப்பவும் பைதித்யம்ன்னு சொலும்

 27. Vivek

  எந்திரன் தயாரிப்பு நிறுவனம் என்பதற்காக நீங்க சன் குழுமத்திற்கு ஓவர் சப்போர்ட் செய்கிறீர்கள்.. இதுவே சூர்யா நடித்த ஒரு படத்தை அணைத்து திரை அரங்குகளிலும் திரைட்டு இருந்தால் … நீங்க மற்ற தயாரிப்பாளர்கள் நஷ்மடைவார்கள் குஷ்டமடைவார்கள் என்று கண்டிப்பா இதைவிட நீளமா கட்டுரை எழுதி இருப்பீர்கள்.. தலைவர் படம் அவர்கள் தயாரிப்பில் வந்ததில் எனக்கும வருத்தம் தான்….

 28. Manoharan

  தினமணியின் இந்த செய்திகள் பதில் சொல்லக் கூட தகுதியற்றவை. உருப்படியான ஆதார்வபூர்வமான செய்திகளுக்கு பதில் சொல்லலாம். பைத்தியக்காரன் மாதிரி உளருபவனுக்கு பதில் எதற்கு ? சிவாஜி படம் வந்த போது வலைதளத்தில் திருடி ஒரு கார்டூனை வெளியிட்ட மட்டமான பத்திரிக்கைதான் தினமணி. ஒரு பிட் நோட்டிசை விட குறைவாக சர்குலேட்டாகும் தினமணிக்கு விளம்பரம் தேட எந்திரன் தேவைப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். இல்லையென்றால் தினமணியை பற்றியெல்லாம் யார் பேசப் போகிறார்கள் ?

 29. Nathan

  s, i agree with Mr.Vivek and Mr.Saravana for the comments about sun group,we are all fans of Thalivar but not brainless,why should we support sun group,as a fans we saw the picture and promoting too,as the producer go and just count the notes dont try to tap Thalivar fans,see the following link, so all can understand how they r promoting them self with the fame of Thalivar,
  http://65.175.77.34/makkalosai/showtext.aspx?parentid=8257&boxid=203719375&issue=1110201

  just just waiting for Mr.Vino’s comment,
  any how i am thanking for his great effort for thalivar and endhiran,

 30. r.v.saravanan

  இரண்டு பத்திரிகைகளும் ஒன்றே ஒன்றைத்தான் எந்திரன் விஷயத்தில் சாதித்தன… அது எந்திரனை குறை சொல்ல முடியவில்லையே என்ற காய்ச்சலில் கிடந்த ரஜினி விமர்சகர்களைச் சொறிந்துகொடுத்த அல்ப சந்தோஷம் மட்டும்தான்

  ஹா ஹா கரெக்டா சொன்னீங்க வினோ நல்ல சாட்டையடி இடுகை

 31. bala

  வினோ தினமணி பேப்பர் அ பாத்து பல நாள் ஆச்சு இவனுக என்ன எழுதினல்லும் படிக்க ஆள் இல்ல பாவம் ரஜினிய பத்தி எழுதி பொழைக்க பாக்கறாங்க விட்ருங்க . தினகரனால இவங்க சேல்ஸ் படுத்துருச்சு அத நிமிர்த்த தினமணி ******************************

 32. srini

  //”செம்மொழி மாநாட்டின்போது தினமணியின் பச்சை சந்தர்ப்பவாதம் புரிந்துவிட்டதால், அந்தப் பத்திரிகை மீதிருந்த மதிப்பே பலருக்கும் போய்விட்டது.”//

  செம்மொழி — செல்லும் இடமெல்லாம் செருப்படி வாங்கி சிவப்பாய் குருதி வழியும் உதடுகளால் பேசப் படுவதால்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *