BREAKING NEWS
Search

தினமணி படிப்பது மனநலத்துக்குக் கேடு!

‘தினமணி படிப்பது மனநலத்துக்குக் கேடு!’

தினமினி ஆகிப்போன தினமணி’ என்ற தலைப்பில் நேற்று வெளியான கட்டுரையைப் படித்த சில நண்பர்கள், ‘தினமணிக்கும் சன் பிக்சர்ஸுக்கும்தான் பிரச்சினை போலிருக்கிறது. அவர்கள் ரஜினியை விமர்சிக்கவில்லை. எதற்காக தினமணியை இந்த அளவு கடுமையாக நாம் விமர்சிக்க வேண்டும்?’ என்று மெயில்கள் அனுப்பியிருந்தனர்.

அவர்கள் அந்த நாளிதழை சமீப காலமாக தொடர்ந்து படிக்கவில்லை என்பது தெளிவாகப் புரிந்து, மீண்டும் படிக்கச் சொன்னேன். படித்துவிட்டு, சில மணிநேரம் கழித்து மீண்டும் பேசினார்கள். அப்போது தினமணிக்கு அவர்கள் பண்ண ‘அர்ச்சனை’யின் 1 சதவீதத்தைக் கூட இப்போது வெளியிட முடியாது. அத்தனை கடுமையாகப் பேசி ஓய்ந்தார்கள்.

உண்மையில் ஒரு மனநிலை பிறழ்ந்தவனின் தன்மையுடன்தான் ரஜினி மற்றும் எந்திரன் குறித்த தினமணியின் விமர்சனங்கள் அமைந்துள்ளன.

‘ரஜினி படம் பார்ப்பது மன நலத்துக்குக் கேடு’ என்ற தலைப்பில் அவர்கள் நேற்று வெளியிட்ட கார்ட்டூன், ரஜினி என்ற கலைஞன் / தனி மனிதன் மீது அவர்களின் காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும் எந்த அளவு மிதமிஞ்சிப் போய் உள்ளது என்பதைக் காட்டும் ஒரு குறியீடு.

எந்திரன் வெளியான தினத்திலிருந்தே தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் அந்தப் படத்துக்கு எதிரான கொடூரமான விமர்சனங்களில் இறங்கிவிட்டதை, நடுநிலையாளர்கள் அறிவார்கள்.

எக்ஸ்பிரஸ் நாளிதழில் நேற்று அதன் மூத்த நிருபர் ஒருவர் எழுதியிருந்த கட்டுரைக்கு தலைப்பு: “நான் ஏன் எந்திரன் பார்க்கவில்லை?” ஆனால் அவர் எந்திரனைப் பார்க்காததற்கான காரணங்களை விட்டுவிட்டு, கிட்டத்தட்ட எந்திரனுக்கு விமர்சனமே எழுதியிருந்தார். அதாவது படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம்…. வெளங்கீரும்!

ஆராய்ந்தறிதல் என்பது ஒவ்வொரு செய்தியாளனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை குணம். அது தினமணியில் பணியாற்றுபவர்களுக்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தைக் எழுப்பியுள்ளது அவர்களின் நேற்றைய கார்ட்டூன்.

இந்த கார்ட்டூனுக்கு அடிப்படை, ஒரு செய்தி.

‘எந்திரன் படம் பார்க்க மனைவி வர மறுக்க, அதன் தொடர்ச்சியாக எழுந்த சண்டையின் முடிவில் கணவன் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சித்தான்’ என்று ஒரு செய்தி நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. ஆனால் இந்தச் செய்தியை காவல் துறை தரவில்லை. காற்றுவழியாக வந்த ஒரு செய்தி இது. சில இணையதளங்கள் கண்காது மூக்கு வைத்து எந்திரன் தொடர்பான செய்தியாக்கினார்கள். அதை அடிப்படையாக வைத்து தினமணி கார்ட்டூன் வரைந்துள்ளது, ரஜினி படம் பார்ப்பது மனநலத்துக்குக் கேடு என்று!

உண்மையில் அந்த இளைஞன் தற்கொலைக்கு முயன்றது எந்திரனுக்காகவா… இல்லை. கோவை சரவணம்பட்டி போலீசாரிடம் நாம் விசாரித்ததில், “கணவன் மனைவிக்கிடையே தகராறு. மனைவி மதிக்காமல் கேவலமாகப் பேசியதில் அந்த இளைஞன் தூக்குமாட்டிக் கொள்ளப் போய்விட்டான். ஆனால் எந்திரன் படத்துக்குப் போகலாம் என்பதில்தான் பிரச்சினை துவங்கியதாகச் சொல்கிறார்கள்…,” என்றனர்.

ஆனால் எந்திரன் படத்துக்குப் போக முடியவில்லையே என்பதால் தற்கொலை செய்ய முயன்றார் என்று இங்கே செய்தி. அப்போதுதானே படிப்பார்கள்!

காக்காய் உட்காரப் பணம்பழம் விழுந்தமாதிரி, பெரிய நிகழ்வுக்கு ஒரு சாதாரணமான சமாச்சாரம் உடனடிக் காரணமாகிவிடுவதுண்டு. ஆனால் பிரச்சினை அந்த தீவிர நிலைக்கு வர வேறு பல காரணங்கள் நிச்சயம் இருக்கும். மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வகுப்புக்கு வரும் ஆசிரியர் மாணவர்கள் மீது பாய்ந்து பிறாண்டுவதில்லையா?

இதே கோவையில், பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவனை (அவர் ஒரு ஆசிரியர்), ‘எப்போதும் இந்த வெட்டிப் பேப்பரையே கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே’ என்று மனைவி நக்கலாக இடிக்க, உடனே கடுமையான சண்டை. விரக்தியில் அந்த கணவன் சாணிப் பவுடரை எடுத்துக் கரைத்துக் குடித்துவிட்டார். பயந்துபோன மனைவி இரு குழந்தைகளுடன் கிணற்றில் விழ, அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை கொண்டுவந்தார்கள். பிழைத்து எழுந்தவர்களிடம் ‘என்னய்யா தகராறு?’ என ஆத்துப்பாலம் போலீசார் விசாரிக்க, ‘பேப்பர் படித்ததால் வந்த தகராறு’ என்றார்கள். ஆங்… முக்கியமானது, அந்த கணவன் படித்தது தினமணி பேப்பர்தான். அன்றைக்கு, ‘தினமணி படித்தால் மனநலத்துக்கு பாதிப்பு, அதைத் தடை பண்ண வேண்டும்’ என யாராவது எழுதியிருந்தால் ஒப்புக் கொள்வார்களா?

அட அவ்வளவு ஏன்… சில ஆண்டுகளுக்கு இதே தினமணியில் பணியாற்றிய ஒரு செய்தியாளர், ‘எனது மரணத்துக்கு தினமணி ஆசிரியர் மற்றும் நிர்வாகம் எனக்குச் செய்த கொடுமைதான் காரணம்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு நங்கநல்லூரில் தூக்கு மாட்டிக் கொண்டு செத்தே போனான். என்ன செய்தது தினமணி? ‘அடடா, தினமணி என்பதே சைக்கோ சமாச்சாரமாயிருக்கிறதே’ என்று பேப்பரை நிறுத்திவிட்டார்களா… ஓடிப் போய் ஜெயலலிதா காலில் கையில் விழுந்து போலீஸின் கைகளைக் கட்டிப் போடவில்லையா… பத்திரிகை அமைப்புகளிடமெல்லாம் சமரசம் பேசிக் கொண்டு நிற்கவில்லையா…

இதுதான் தினமணியின் உண்மையான முகம். வந்துவிட்டார்கள் உபதேசம் சொல்ல!

பரபரப்பாக ஒரு விஷயம் நடந்தால், அதனோடு ஒப்புமைப்படுத்தி சில செய்திகளை வெளியிடுவது ஆதித்தனார் குழும பத்திரிகைகள் ஏற்படுத்திய வழக்கம். இன்று அதை எல்லோருமே கடைப்பிடிக்கிறார்கள், தினமணி உள்பட. எண்பதுகளில் மணிவண்ணன் வெளியிட்ட ‘நூறாவது நாள்’ படம் பார்த்துவிட்டுத்தான் நான் 14 கொலைகளைச் செய்து, உடல்களை வீட்டுக்குள் புதைத்தேன் என்று ஜெயப்பிரகாஷ் சொன்னதாக தினத்தந்தியும், இதே தினமணியும் செய்தி வெளியிட்டன. அப்படியென்றால் சினிமா தொழிலையே முடக்கியிருக்க வேண்டுமே!

வாய்வழித் தகவலாகப் பரவும் வெற்றுப் பரபரப்பை மையமாக வைத்து, ஒரு சிறந்த கலைஞனையும் அவரது படத்தையும் தூற்றுவது எத்தனை பெரிய முட்டாள்தனம்?

அந்த முட்டாள்தனத்தைத்தான் தினமணி கடந்த 10 தினங்களாகச் செய்து வருகிறது. இந்த பத்து தினங்களில் ரஜினி மற்றும் அவரது எந்திரனுக்கு எதிராக மூன்று செய்திகள், இரண்டு தலையங்கங்கள், ஒரு கட்டுரை, 5 கார்ட்டூன்களை வரைந்து தள்ளியிருக்கிறது தினமணி.

ரஜினி படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிவிட்டதையும் குறை கூறி கார்ட்டூன். ரஜினி படம் பார்க்கப்போய் மொட்டையடிக்கப்பட்டதாய் ஒரு கார்ட்டூன்… தினமணி ஆசிரியர் குழுவுக்கு அல்லது சம்பந்தப்பட்ட கார்ட்டூனிஸ்டுக்கு மூளை மழுங்கிப் போய்விட்டதா… இத்தனை திரையரங்குகளில் போட்டே தீர வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லையே. இந்தப் படத்தை வந்து பாருங்கள் என்று யாரையும் கையைப் பிடித்து இழுக்கவில்லை அல்லது பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு. பாருங்கள் பாருங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். விருப்பப்பட்டோரெல்லாம் வாங்கிச்சென்று திரையிடுகிறார்கள். இதில் இவர்களுக்கு ஏன் எரிகிறது.

அடுத்து திருட்டுவிசிடி விற்கிற நாதாரியை ஆதரித்து ஒரு கார்ட்டூன். ஹ்ம்ம்… ரஜினி மீதான வயிற்றெரிச்சல் திருட்டு விசிடி எனும் குற்றத்தைக் கூட ஆதரிக்க வைத்துள்ளது தினமணியை. குற்றத்தை ஆதரிப்பவனும் குற்றவாளிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரஜினி படம் பார்த்தால் மனநலத்துக்குக் கேடா… அடப்பாவிகளா… சினிமாவிலும் நிஜத்திலும் சைக்கோத்தனமாகவே பேசித்திரியும் சிலரது படங்களில் ஒரு காட்சியைக் கூட குடும்பத்துடன் பார்க்கக் கூட முடியாதே… அந்தப் படங்களை என்ன செய்வீர்கள்? தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவீர்களா… எம்ஜிஆர் படங்களுக்குப் பிறகு, ரஜினியின் படங்களைத்தான் குடும்பத்துடன் தைரியமாக அமர்ந்து பார்க்க முடியும் என்பது சின்ன குழந்தைக்குக் கூட தெரிந்த உண்மையாயிற்றே. இந்த மனிதர் ஒருவர்தானே நாளைய தலைமுறை கூட நம்மை குறை சொல்லக் கூடாது என்ற கவனத்துடன் காட்சிகளை அமைக்கச் சொல்பவர் (முடிந்தால் அவரை வைத்து இயக்கிய இயக்குநர்களைக் கேட்டுப் பாருங்கள்). இந்த உண்மை தினமணிக்குத் தெரியவில்லையா?

தினமணியின் இந்த திடீர் மிரட்சியை, தமிழ்ப்படம் ஒன்று சர்வதேச சாதனைகள் செய்து வருவதைச் சகித்துக் கொள்ள முடியாத, ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பொறாமைக்காரனின் செயல் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியெனில் தினமணியை தடை பண்ணச் சொல்லி குரல் எழுப்பலாமா?

-வினோ
45 thoughts on “தினமணி படிப்பது மனநலத்துக்குக் கேடு!

 1. vasanth

  தலைவரை யார் கிண்டல் பண்ணி எழுதினாலும் உடனுக்குடன் பதில் அடி கொடுக்கும் வினோவிற்கு நன்றி சொல்ல வர்த்த இல்ல

 2. kicha

  Thanks Vino.

  Ovvoru rasiganin manadhayum velipaduthi irukeenga. Sun meladhan ivangaluku kovamnu sonnavanga, ippo purinchitangala?

  Ithanaikum thalaivar yarukum kedudhal ninaikadhavar. Avar mela ivangaluku ean ippadi oru vanjam.

 3. ramesh

  கரெக்ட்////….

  தலைவர்தான் எங்க உயிர்……..மற்றவனெல்லாம் எண்கள் ம***…….

 4. D. Soundararajan

  சபாஷ்…வினோ..தினமணிக்கி சரியான நேரத்துல சாட்டையடி..குடுதுடிங்க..
  எந்திரன் ரிலீஸ் டைதுல இருந்து அவுங்களோட பொலம்பல் தாங்கமுடில..

  அன்புடன்
  சௌந்தர்

 5. Devraj

  தேங்க்ஸ் வினோ, once again for your thought provoking write up.
  Only one actors movie you can go with the entire family and enjoy and that is Rajinis movie.
  It is a shame that dinamani is doing this.
  Rajini will again emerge victorious in this media war.
  cheers
  dev.

 6. venkatesh

  vino
  vino correct me if iam wrong. I am seeing thalivar first day show since priya. I am 42. We had seen worst of comments about thalivar. I feel it is better for us to ignore this type of blogs and headlines like thalivar. Thalivar success is silence. It is better we can share good information about thalivar rather giving cheap publicity to these magazines

  Thanks for your reply..
  ____________

  யாரையும் தேடிப்போய் தாக்குவது நமது நோக்கமோ இயல்போ அல்ல. ரஜினியைப் பற்றி வேண்டுமென்றே தவறான கருத்தைச் சொல்கிறார்கள். அவரது வெற்றியை ஜீரணிக்க முடியாதமல், அந்த தப்பான கருத்தைப் பரப்ப சில வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் அலைகிறார்கள். அதனால்தான் நாமும் களமிறங்க வேண்டியுள்ளது. நாம் நல்லவர்களுக்கு நல்லவர்களே!
  -வினோ

 7. Sathish

  Well Done Vino. Many (including me) now know the detail news. You have lot of respect and love on Thalaivar.
  God will be with good people always. Just to tell “படையப்பா வசனம்”.
  “அண்ணே ஆட்சி அவங்க பக்கம் இருக்கு”
  “அட போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்”.

  Thanks, Sathish
  ________________

  எந்திரன் இமாலய வெற்றி அதைத்தானே நிரூபித்திருக்கிறது!
  -வினோ

 8. cardoza

  கெட்டவன் ரொம்ப நாள் வாழ்ந்ததா சரித்திரம் இல்ல ,தினமணி அழிந்துபோகனுன்னு விதி இருந்தா அந்த ஆண்டவனாலே கூட காப்பாற்ற முடியாது

 9. endhiraa

  உண்மை வினோ ஜி ! தினமணி மினி என்றதை படித்ததும் தான் நான் தினமணி போய் பார்த்தேன்.படு கேவலம் ! உண்மையிலேயே அந்த கார்டூன்ஸ் எல்லாம் பார்த்த பிறகு படு எரிச்சலாய் இருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் சரியான பதிலடி உங்களிடமிருந்து !! வாழ்த்துக்கள் !!

 10. kicha

  @ Mr. Venkatesh.

  Idhu avangalai edhirka mattum illai. Indha madhiri pathirikaigalin unmayana mugam ennavendru (ennai pola) theriyadhavargaluku theria paduthavum udhavume.

 11. முத்துசிவா

  வினோ சார்…. சூப்பர்…. இவனுங்களையெல்லாம் இது மாதிரி செருப்பால அடிக்கிற மாதிரி கேட்டாதான் புத்தி வரும்……

  தலைவரை பத்தி தவறாக விமர்சித்தி சில நாளிதழ்களுக்கு பதில் அளிக்குமாறு நான் எழுதிய ஒரு சிறிய பதிப்பு “எந்திரனை சீண்டாதே”

  http://muthusiva.blogspot.com/2010/09/blog-post.html

  நேரமிருந்தால் வாசித்து பார்க்கவும்….

 12. LAx

  Thanks a Ton Vino – I was feeling furious and fuming about it – when I posted the link – This is the way to express / Vent our feelings

 13. thinnu-kuwait

  express and ntdv, are right hand for north and all politicans, always wait for TN to go down

 14. thinnu-kuwait

  note, karkil war is india’s pride, how can private TV (NDTV) goto war front and shoot a movie, why the CBCID not bother, and other party not bother, dont india have its won TV group or the army not have any camaraman, this will lead to send all information to other country for Terror, with this TV group express guy will go with mouth watering, what a country!@!

 15. mubarak kuwait

  ரஜினி காந்த பிராமன் இல்லை இதுதான் தின மணியின் குமரளுக்கு காரணம் , பாரபணன் இல்லாத எந்த இயக்கமோ தனி மனிதனோ அவர்களால் ஏற்று கொள்ள முடியாது. தமிழர்கள் அனைவரும் தினமணியை புறக்கணிக்க வேண்டும் வெறும் பார்பனன் மட்டும் வாங்கினால் அவர்கள் கடையை மூடி விட்டு போக வேண்டியதுதான்

 16. Appavi

  தினமணியை பற்றி பேசி ஏன்பா பாப்புலர் ஆக்கிவிடுறிங்க . ஊருக்கு பத்து பேப்பர் கூட விற்காது. உங்க சென்னையில் வேணுமுன்னா விற்குமா இருக்கும் வேறு எங்கும் அதற்கு circulation கிடையாது.

 17. anand

  தல வினோஜி

  சூப்பர்.

  இந்த பிணமினி(எழுத்து பிழை இல்லை. பிணம் திங்கும் புத்தி உள்ளவர்கள்) அழியும் நாள் மிக விரைவில்.

  என்னைய கேட்டா , நம் சென்னை ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் , இந்த கட்டுரையை போஸ்டராக அடித்து நகரெங்கும் ஓட்ட வேண்டும்.

  வினோஜி, நீங்க இவங்கள விடாதீங்க. அப்பப்ப போட்டு தாக்குங்க.

  தலைவா என்றும் உனக்காக மட்டும்

  ஆனந்த்
  பமாகோ,மாலி

 18. ரஜினிபாபு

  என் தலைவர எதுத்த திணமனி நாசமா போயிடும்

 19. Manoharan

  தமிழ்நாட்டில் உள்ள செய்திதாள்களிலேயே விற்பனையில் கடைசியாக உள்ள நாளிதழ் தினமணி. அவர்களுக்கு விளம்பரம் வேண்டும் . தசாவதாரத்தையோ, ஆளவந்தானையோ இழுத்தால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். ரஜினி என்கிற ஒரு சொல் இருந்தால் குப்பையும் விற்கும். தினமணி குப்பையை விற்க இது ஒரு தந்திரம். ஆனால் உங்கள் தளத்தில் செய்தி வந்திருக்காவிட்டால் முக்கால்வாசி பேருக்கு இதை பற்றியே தெரிந்திருக்காது.

 20. sudhaharan

  நண்பர் வினோ வுக்கு ,
  தின மணி என்கிற பத்திரிக்கை தமிழகத்தில் வெளிவருவது ஒருசிலர்தான் தெரிந்திருப்பார்கள் ..ஆயிரம் பிரதிகளை வெளிவிடும் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் ..நம்முடைய பலத்தைப் பாவம் ஒரு நலிந்து நசுங்கிப்போகும் பத்திரிக்கையிடம் காட்டவேண்டாம்..அவர்களுக்கு எதாவது உதவி தேவைப்பட்டால் மன்றத்தை வந்து பார்க்க சொல்லுங்கள்.,தினம் ஒரு பிரதி போடச்சொல்லலாம் ..,பாவம் கஷ்டத்தில் புலம்புகிறார்கள் என்று நினைக்கிறேன் ……அகில உலக சூப்பர் ஸ்டாரை ஒரு குப்பை காகிதம் விமர்சிப்பதா …….???

 21. Santhosh

  வினோ தினமணி போன்றவர்களுக்கு நன் கேட்கும் கேள்விக்கு பதில் முதலில் பதில் சொல்லட்டும்……

  * கோடான கோடி மனதர்களின் மனதில் சிமசொப்பனமாய் வியற்று இருப்பது தவறா
  * முன்று, நான்கு தலைமுறை தன் வசம் இற்று இருப்பது தவறா…..
  * எம்ஜிஆர் பிறகு தலைவரால் தான் தமிழ் சினிமா வியாபாரம் வெற்றி பெற்றது தவறா
  * எந்திரன் படத்தால் இன்று நம்மை உலகம இந்திய படத்தின் தரம் பற்றி தெரிந்துகொண்டது தவறா ……..

  இவர்கள் தலைவரின் வெற்றி பார்த்து பொறாமை. தலைவருக்கு நிறைய கண் தீஷ்ற்றி…… தலைவருக்கு ஒரு பெரிய பூசனிக்காய் உடைக்க வேண்டும்……………….

 22. m.balamurukun

  விடுங்க சார், காய்ச்ச மரம் கல்லடி படும் ….. என்பது பழமொழி …. தன் பத்திரிக்கை நன்றாக விற்க பண்ணிய உத்தியாக இருக்கும்… மன்னித்து விட்ருவோம் ……

 23. Aravindan

  Never worried about the comments on my thalaivar. If a man reach the top, it is usual that some comments will rise against the same. Hats off to the entire Enthiran team for the India’s ever best movie. Really enjoyed the superb acting and his style from our STYLE SAAMRAT in this movie. SUPER STAR RAJNIKANTH ROCKS.

 24. Kumaresan

  தினமணி ஜெயலலிதா கட்சி பத்திரிகை என்பது ஊருக்கே தெரியும். கலாநிதி மாறனை அவர்கலேதிர்ப்பதர்காக ரஜினியுடன் மோதுகிறார்கள். பாவம் அப்பாவிகள். இந்த படத்தின் வச்சொல் சாதனை அனைவரையும் வயிறு எரிய வைக்கிறது. நாம் இதனைப்பற்றி கவலைப்பட்டு நமது நேரத்தி வீணடிக்க வேண்டாம். தினமணி இப்பொழுதே அழியும் நிலையில் இருக்கிறது. தினமணியை தினகரன் வந்து அளித்து விட்டதால் தான் இந்த வயிதெரிச்சல். விடுங்கள் வினோ.

 25. khalifa

  வினோ
  தினமணி அப்படி ஒரு பத்திரிக்கை இருக்கா?

 26. Anand

  நானும் அந்த கஸ்மாலம் புடிச்ச பேப்பர படிச்சேன் வினோ சார்.
  இத பாத்தா என்னக்கு வடிவேல் காமெடி தான் நியாபகம் வருது.

  ”உங்களலாம்(தினமணிய)பாத்தா என்னக்கு பாவமா இருக்கு”
  பாவம் யார் பெத்த புள்ளையோ(தினமணி ஆசிரியர்) இப்படி பொலம்புது.

  இன்னும் காத்து இருப்பவர் எத்தனை பேரோ தலைவரிடம் தோற்பதற்கு…………

 27. sella

  ஏந்திரன் நிஜமாலுமே சிறந்த படம் தனா? குப்பையை கூட ரஜனி என்றால் போற்றி வணங்க தயாராகவுள்ள ரஜனி ரசிகர்கள் வேண்டுமானால் சொல்லட்டும். இன்னும் பத்து வருஷம் கழிச்சு இந்த படத்தையோ, பாடல்களையோ யாரும் நினைவில் வைக்க மாட்டார்கள். வெறும் விளம்பரம் தவிர வேறு ஒன்றும் இல்லை. டெக்னாலஜி நாளைக்கு இதை விட சூப்பர் ஆக வரும். வெறும் டெக்னாலஜி நம்பி எடுக்கப்படும் படங்கள் பின்னர் மறக்கப்பட்டு விடும். இந்த படத்தில் அப்படி என்ன இசையில் பிரமாதம் இருக்கிறது? வெறும் இரைச்சல். உதரணத்துக்கு ரஹ்மான் இசையில் வந்த சங்கமம் பாடல்கள் எப்போதும் மறக்க முடியாதவை.
  யார் விமர்சனம் எழுதுகிறார்கள் என்பதல்ல முக்கியம் . உண்மையில் ரஜனிகாந்த் அற்புத நடிகர் தான். ஆனா இப்படியான படங்களால் ரஜனிக்கு பெருமை என்றால் நிச்சயமஹா இல்லை. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், முரட்டு காளை, புவன ஒரு கேள்விக்குறி, மூன்றுமுகம் ,.இவைகள் ரஜனியின் பெருமைக்குரிய படங்கள். சன் குழுமத்தின் வியாபார வெற்றி தான் இது.

 28. Akramulla

  My foot dinamani..These kind of news are politically motivated by our local politician to spoil the image of Superstar. This will not work here. Cheers to Superstar.

 29. கடலூர் எழில்

  ஒரு கூத்தாடிக்காக ஒரு கேடி சகோதரனுக்காக ஒரு நல்ல நாளேட்டை இழிவுப் படுத்தாதீர்கள்.
  பத்திரிக்கைகள் அவர்கள் வேலையை தான் செய்கிறார்கள்!
  ஏன் தினகரனில் தூக்கிப்பிடித்து எழுதுகிறார்களே ! அப்பா அது நல்ல நாளேடா !
  போங்கய நீங்களும் உங்க என்வழியும் !

 30. aathirai

  ஒரு கூத்தாடியை தலைவர் என்றால்!!!!
  There is noway to develop Tamil and Tamilans.

 31. saran

  வினோ நீ ரொம்ப நல்ல தினமணி யா அழ வைத்தை தேங்க்ஸ்

 32. ilavarasan

  வணக்கம் தலைவா.
  உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை

 33. senthil

  தமிழில் வெளிவரும் செய்திதாள்களில் தரமானது தினமணி அதில் கூறியுள்ள செய்திகள் ஒன்றும் தப்புஅள்ள உண்மயில் என்திரன் படத்தில் ஒரு லாஜிக்கும் இல்லை தயாரிப்பாளர் ,இயக்குனர் ,நடிகர், இசைஅமைப்பாளர்
  முதலியோர் பெரியாளு என்பதினாலும் மீடியாவும் ஓவரா ஹ்ய்ப்ப் குடுத்து
  படத்தை ஓடவிட்டுட்டாங்க இதுல தினமணிய குறை கூறுவதினால் அதன் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடாது இதை ரஜினி ரசிகர்கள் புரிந்துகொள்ளவேண்டும்

 34. daniel

  எல்லா பக்கமும் விளம்பர வியாபாரம். பாவம் தமிழன் தான் இளிச்சவாயன்.

 35. Shriram

  I really feel pity for the comment made by the gentlemen from kuwait, by dragging a community and a sweeping statement which is quite fashion now a days. For his kind information, Mr.Rajnikanth has married that community girl and all his close friends, advisors belong to that community. With regard to that newspaper, well, it has lost its balance,otherwise, it will not take pride in publishing about the world’s most,dreaded, now, non extinct terrorist, Prabaharan.. Instead of attacking on personal grounds,it is better to put effective counter arguments in a very dignified way. Otherwise there will not be any difference between them and us..

 36. சூரியா

  தினமணிதான் முதன்முதலில் எந்திரன் படம் முழுமையாக இணையத்தில் வெளியாகி உள்ளது ன்று கூறி அதன் முழு முகவரியையும் தந்து விளம்பரப்படுத்தியது. படத்தை தோல்வியடைய செய்ய தினமணி செய்த தந்திரம் அது. பாவம் எல்லா விமர்சனத்தையும் மீறி படம் வெற்றிகரமாக நூறாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது, மலம் துடைக்க மட்டுமே பயன்படும் தினமணிக்கு வயிற்றெரிச்சல்.

 37. செந்தமிழன்

  வெறும் தொழில் நுட்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சினிமா ரசிகர்களின் காசைப் பிடுங்குவதில் சினிமா வியாபாரிகள் முனைந்து நிற்கிறார்கள். இன்று டாஸ்மாக் கடைகளைவிட திரைத்துறையே மக்களைச் சீரழிப்பதில் முனைந்து நிற்கிறது. போதாக் குறைக்கு அதில் ஊழல் மகாதேவனின் வாரிசுகளும் களம் இறங்கி விட்டதால் சொல்லவே வேண்டியதே இல்லை! தூள் தூள்தான். எதோ தினமணி, பொதுமக்கள்மேல் பரிதாபப் பட்டுக் கொஞ்சம் நிதானப் படுத்த முயன்றிருக்கலாம். அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ரஜினி ரசிகர்கள் அதற்காக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *