BREAKING NEWS
Search

தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்!!

தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்!!

தொடர்ந்து எந்திரன் படம் குறித்த தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி, தினமணி மற்றும் டெக்கன் கிரானிக்கிள் நாளிதழ்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்ஸர்ஸ்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எந்திரன் படம் தொடர்பான செய்திகளை வெளியிடக் கோரியோ, புகைப்படங்களை வெளியிடுமாறோ அல்லது சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றோ எந்த பத்திரிகைகளுக்கும் சன் குழுமம் கோரிக்கை விடுக்கவில்லை.

எந்திரன் தொடர்பான அனைத்துச் செய்திகளும் படங்களும் சன் குழும பத்திரிகைகள் அல்லது அவர்களின் அனுமதி பெற்ற தளங்களிலிருந்தே அனைவராலும் எடுத்தாளப்பட்டு வந்தன. சம்பந்தப்பட்ட இரு நாளிதழ்களும் கூட இதே வேலையைத்தான் செய்து வந்தனர்.

ஆனால் படம் வெளியான பிறகு, அந்தப் படத்தின் உள்ளடக்கத்தை விமர்சிக்காமல், படம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தப் பத்திரிகைகள் முனைப்பு காட்டின.

எந்திரன் ஏகாதிபத்தியம் என்றும், எந்திரன் படத்துக்கு கூட்டமில்லை என்கிற ரீதியிலும் இந்த இரு பத்திரிகைகளும் எழுதின.

உண்மையில் சென்னை நகரில் 42 அரங்குகளில் திரையிடப்பட்டுள்ள எந்திரனைக் காண இப்போதும் கூட்டத்துக்குக் குறைவில்லை. சத்யம், அபிராமி, எஸ்கேப், ஐநாக்ஸ் போன்ற அரங்குகளில் இப்போதும் டிக்கெட் கிடைப்பது கடினமான ஒன்றாகவே உள்ளது. ஆனால் டெக்கான் கிரானிக்கிள் நாளிதழ், படம் வெளியான மூன்றாவது நாளே (அதாவது ஞாயிறு!) கூட்டம் குறைந்தது என்றும், திரையரங்குகளில் காட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் பொய்ச் செய்தி வெளியிட்டது.

தினமணியோ, இன்னொரு படி மேலே போய் திரையுலகையே எந்திரன் ஆக்கிரமித்துவிட்டதாக வெறும் வயிற்றெரிச்சல் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. “இதில் அவர்கள் தெரிவித்திருந்த எந்த கருத்துமே திரையுலக நன்மைக்காக கூறப்பட்டதில்லை, சொந்த வெறுப்பை உமிழும் நோக்கிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது,” என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தினமணி மற்றும் டெக்கன் கிரானிக்கிள் நாளிதழ்களுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்சர்ஸ். குறிப்பிட்ட நாளிதழ்கள் வெளியிட்ட எந்திரன் தொடர்பான செய்திகள் பொய்யே என்றும், இந்தச் செய்திகள் மற்றும் வரம்பு மீறிய தாக்குதல் கட்டுரைக்கு உரிய மறுப்பு வெளியிட்டு, மன்னிப்பு கோராவிட்டால் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: குறித்த கட்டுரைகள் குறித்த நமது பார்வை, விரைவில்!

-என்வழி
12 thoughts on “தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்!!

 1. kicha

  Vayitherichal pudichavanga thollai thaanga mudila.

  Unmaya ‘sun’ kuzhumam romba correct nu sollalai.

  Aana, avanga pala varudangalave TV channels vizhayathil indha manapaanmaiyodathan nadandhukaranga.

  Appo ellam ‘eee’nu sun tv ya parthuttu, ippo endhiran vandhadhum pudhusa gnanam vandha maathiri polambaranga.

 2. noushadh

  எனக்கு தினமணி நல்ல அபிப்ராயம் இருந்தது. இந்த மாதிரி தவறான தகவல்களை கொடுத்ததின் மூலமாகவும் அதன் மேல் அபிப்ராயம் மேரி விட்டது. சன்னுடன் பிரச்சனை என்றாலும் இப்படி நடந்து கொள்வது மிகத்தவறே!

 3. Tiger

  ///****தினமணியோ, இன்னொரு படி மேலே போய் திரையுலகையே எந்திரன் ஆக்கிரமித்துவிட்டதாக வெறும் வயிற்றெரிச்சல் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. “இதில் அவர்கள் தெரிவித்திருந்த எந்த கருத்துமே திரையுலக நன்மைக்காக கூறப்பட்டதில்லை, சொந்த வெறுப்பை உமிழும் நோக்கிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது,” என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.****/

  What was the wrong with the Dinamani’s article??? Rajini padamna udaney sun pictureskku sombu thookkureengaley vino, ungalukku mana saatchiye kidaiaathaa???
  _____________

  எனக்கு மனசாட்சி பற்றியும் தெரியும்… இந்தக் கட்டுரையின் பின்னணியும் தெரியும். அதனால் இப்போதும் உறுதியாக சொல்கிறேன். அது உள்நோக்கம் கொண்ட, தவறான கட்டுரையே. மற்றபடி சன்பிக்சர்ஸுக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எது சரி என்று தோன்றுகிறதோ அதை எந்த சூழலிலும் எழுதத் தயங்கியதில்லை. ரஜினியின் படம் என்பதால் மட்டுமே இன்று தினமணி போன்ற சில பத்திரிகைகள் இப்படி கூப்பாடு போடுகின்றன என்பதுதான் உங்களைப் போன்றவர்களுக்குத் தெரிய வேண்டிய உண்மை!

  -வினோ

 4. DEEN_UK

  வினோ,
  எந்திரன் படத்தை சன் நிர்வாகதுக்கே சவால் விட்டு இந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்..இதை உரியவர்களிடம் தெரியபடுத்தி ,இதை தடுக்குமாறு வேண்டி கொள்கிறேன்..
  அந்த லிங்க் கீழே கொடுத்துள்ளேன்..
  http://********.com/2010/10/blog-post_558.html
  இப்படிக்கு
  ஒரு ரஜினி ரசிகன்

 5. DEEN_UK

  US பாக்ஸ் ஆபிசில் No:1 எந்திரன்-சரித்திர சாதனை!
  October 8, 2010 | no comments

  அதிரடியாக வசூலினை வாரி குவித்துக் கொண்டிருக்கிறது சூப்பர்ஸ்டாரின் “எந்திரன்”. எப்பொழுதாவது அரிதாக மட்டுமே இவர் நாயகனாக நடிக்கும் படங்கள் லாபத்தினை ஈட்டாமல் போகும். “எந்திரன்” இந்தியாவில் வரலாறு காணாத வெற்றியினை அடைந்து பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

  அதுமட்டுமல்லாமல் அமெரிக்க “பாக்ஸ் ஆபிசிஸிலும்” முதல் இடத்தைப் பெற்று மொத்த உலகையும் “எந்திரன்” தன் வசப்படுத்தியுள்ளது. ஆங்கிலப் படங்களைத் தவிர வேறு எந்த மொழிப் படங்களும் இதுவரை அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்ததில்லை. “எந்திரன்” முதன்முறையாக அந்த சாதனையை புரிந்து தமிழ் மற்றும் இந்தியத் திரைப்படத்துறையின் பெருமையை உலகறிய வைத்துள்ளது.

  அமெரிக்காவில் 64 இடங்களில் வெளியான “எந்திரன்” இதுவரை $15,20,108 குவித்துள்ளது. எந்திரனுக்கு அடுத்த இடத்தில் “அஞ்சானா அஞ்சானி” உள்ள போதிலும் “எந்திரன்” குவித்துள்ள வசூலுக்கும், “அஞ்சானா அஞ்சானிக்கும்” இடையேயான வேறுபாடு மிக அதிகமாகும். மூன்றாம் இடத்திலும் எந்திரனின் ஹிந்திப் பதிப்பான “ரோபோட்டே” உள்ளது. “அஞ்சானா அஞ்சானியுடன்” ஒப்பிடும் போது “ரோபோ” மிகக்குறைந்த திரையரங்குகளிலே வெளியாகி உள்ளது. இருப்பினும் வசூலில் அஞ்சானா அஞ்சானியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  அஞ்சானா அஞ்சானி 91 இடங்களில் வெளியாகி $517,608 வசூல் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில் “ரோபோ” 36 இடங்களில் மட்டுமே வெளியாகி $481,680 குவித்துள்ளது. எந்திரனின் வசூலில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே அஞ்சானா அஞ்சானி ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  எந்திரனும், ரோபோட்டும் இணைந்து அஞ்சானா அஞ்சானியை போல நான்கு மடங்கு வசூலினை, அதாவது ரூ.8.6 கோடியை ($19,28,981) குவித்துள்ளது. அமெரிக்க ரசிகர்களும் எந்திரனை பார்க்க திரும்ப திரும்ப திரையரங்கிற்கு வருவதால், எந்திரனின் வசூல் தொடர்ந்து இதே நிலையில் இருக்கும் என நம்பப்படுகிறது. படத்தின் முதல் வாரத்தை விட, அடுத்தடுத்த வாரங்களில் அனுமதி சீட்டின் விலை குறைவாக இருக்கும் என்பதால், முதல் வாரத்தில் பார்த்த ரசிகர்கள் கூட அடுத்தடுத்த வாரங்களில் மீண்டும் மீண்டும் எந்திரனை காண விரும்புகின்றனர்.

  எந்திரன் ராக்ஸ்!

  எந்திரன் பாக்ஸ் ஆபீஸ் ஆதார அட்டவணை காண கீழே உள்ள லின்க்கை கிளிக்கவும்..

  http://narumugai.com/?p=14584

  நன்றி : நறுமுகை டாட் காம்

 6. Kiri

  this film robot is copy of bicentennial man(1999)this is not shankar story.dont give over buildup. அப்படியே Irobot & Terminator copied.

 7. Suryakumar

  If people talking about Bicentennial man, be damn sure that they didn’t watch both BM or Endhiran. A PG student doing project on Robotics have all robot related films’ history and challenging those Gelusil parties who want to prove that Endhiran is a copy. இந்த மாதிரி யாரவது சவால் விட்டா பார்ட்டிங்க உடனே பம்மிடுவானுங்க… Waste land fellows..

 8. Dinesh

  Mr.கிரி , கமெண்ட் அடிங்க …….ஆனா தெரிஞ்சு கமெண்ட் பண்ணுங்க….சும்மா உளறாதீங்க. தயவு செய்ஞ்சு அந்த ரெண்டு ஆங்கில படத்தையும் பார்த்துட்டு வாங்க…. போங்க…..

 9. tamilan raja

  இந்த விஷயம் கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம்தான். மும்பைக்கு போன ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்துவிட்டு திரும்பியிருந்தால் கூட பிரச்சனை இல்லை. “அவர் எனக்கு கடவுள் போன்றவர்” என்றொரு முத்தை உதிர்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினி குறித்து மீண்டும் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறது உணர்வாளர்கள் வட்டாரம்

  பால்தாக்கரே தாராவியில் தமிழர்களை விரட்டியது இருக்கட்டும். அவரால் தமிழ்சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ரஜினிக்கு தெரியுமா? 1969 ல் பி.எஸ்.வீரப்பா தமிழில் எடுத்த ஆலயமணி படத்தை இந்தியில் திலீப்குமாரை வைத்தும் எடுத்தார். அந்த படத்தை திரையிடுவதற்கு பால்தாக்ரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார், வாசன், நாகிரெட்டி ஆகியோர் மும்பை சென்று எப்படியாவது வீரப்பாவை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினர். அப்போது தமிழ்நாட்டில் இந்தி படத்தை திரையிட்டால்தான் வீரப்பாவின் படம் மஹாராஷ்டிராவில் வெளியிடப்படும் என்று அவர்களை மிரட்டினார் தாக்கரே.
  தனது படம் ஒடவேண்டும் என்பதற்காக என்ற சுயநலத்திற்காக பால்தாக்கரேவை கடவுள் என்று சொன்ன ரஜினி, இலங்கையில் படம் ஓட வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை ‘மகா கடவுள் என்று சொல்வாரா

 10. Ragavendra

  raja don’t write story from your own imagination ,some years back rajini not even went to receive a award to honour his achievement , He met him for courtesy for a senior man, as rajini always shares his happiness with every one

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *