BREAKING NEWS
Search

தாக்குப் பிடிக்க முடியாத புதிய படங்கள்: போட்டியின்றி தொடரும் எந்திரனின் ஓட்டம்!!

போட்டியின்றி தொடரும் எந்திரனின் ஓட்டம்!!


ஜினியின் எந்திரன் படம் வெளியாகி இது மூன்றாவது வாரம். தமிழகத்தின் பெரும்பான்மை திரையரங்குகளில் இந்தப் படமே இன்னும் ஓடிக் கொண்டுள்ளது. பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் தாங்கள் கொடுத்த மினிமம் கியாரண்டி தொகைக்கும் மேலேயே சம்பாதித்து விட்டனர்.

இப்போது வருவதெல்லாம் லாபம்தான் அவர்களுக்கு. வரும் 22-ம் தேதி வரை வேறு புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று முதலில் விநியோகஸ்தர்கள் தீர்மானித்திருந்தனர்.

ஆனால், ரிலீசுக்குத் தயாராக இருந்த சிறிய படங்களின் தயாரிப்பாளர்களின் தொல்லை பொறுக்காமல், கடந்த 15-ம் தேதி 6 படங்களை வெளியிட்டனர். ஒச்சாயி, தொட்டுப்பார் என சில படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களைத் தவிர வேறு படங்களின் பெயர்கள் கூட மக்களுக்கு தெரியவில்லை.

இன்றைய தேதிக்கு இந்தப் படங்கள் வெளியானதும் தெரியவில்லை, தியேட்டரை விட்டுப் போனதும் தெரியவில்லை.

இப்போதைக்கு ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே தொடர்ந்து திருப்தியான அளவு பார்வையாளர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தீபாவளிக்குப் பிறகும் தொடரும், என்கிறார் திரையரங்க உரிமையாளர் ஒருவர்.

தீபாவளிக்கும் எந்திரன்தான்!

தீபாவளிக்கு 6 புதிய படங்கள் வெளிவரவிருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றில் தனுஷின் உத்தம புத்திரன், தயாநிதி அழகிரி தயாரிப்பில் வா குவாட்டர் கட்டிங், உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் மைனா ஆகியவை அடங்கும்.

ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் பலரும், இந்தப் படங்களுக்கு திரையரங்குள் தர தயக்கம் காட்டுகின்றனர்.

“இந்தப் படங்கள் ரிலீஸாகும். ஆனால் நான்கைந்து நாள்களிலோ ஒரு வாரத்திலோ காணாமல் போய்விடும். ஆனால் எந்திரனை தீபாவளிக்கும் திரையிட்டால் ரிப்பீட் ஆடியன்ஸ் ஏராளமாக வருவார்கள். அதனால் ஓரிரு காட்சிகளை மட்டும் மற்ற படங்களுக்குத் தரத் திட்டமிட்டுள்ளோம்”, என்கிறார் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர்.

ராம் கோபால் வர்மாவின் படமும் கூட நவம்பர் இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிறுபடத் தயாரிப்பாளர்களை பாதிக்காதா?

ஜினி படம் என்பதற்காகச் சொல்லவில்லை… உண்மையிலேயே கொஞ்சம் கூட முன்திட்டமிடலின்றி செயல்படுபவர்கள் இந்த சிறுபட தயாரிப்பாளர்களே. சினிமா என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் அரசு உதவி, தயாரிப்பாளர் சங்க உதவி, ரிலீஸில் முன்னுரிமை, நஷ்டமடைந்தால் நஷ்டஈடு இப்படி முக்கியத்துவம் இந்த சின்ன பட்ஜெட் படங்களுத்தான். ஆனால் இவற்றை அவர்கள் கொஞ்சமும் சரியாக பயன்படுத்துவதில்லை.

உண்மையில் இவர்கள்தான் சரியாகத் திட்டமிட்டு, பெரிய படங்கள் வெளியாகும் முன்பு கிடைக்கும் இடைவெளியில் வெளியிட்டுக் கொள்ள வேண்டும். எந்திரன் போன்ற படங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகின்றன. இடைப்பட்ட காலம் முழுவதும் சின்ன பட்ஜெட் படங்களின் ராஜ்ஜியம்தானே… அதில் அவர்கள் தங்கள் படங்களை ஓஹோவென்று ஓட்டிக் கொள்ளலாமே! ஆனால் இவர்கள் செய்யவே மாட்டார்கள். தங்கள் நஷ்டம் எதனால், படம் ஓடாமல் போனது ஏன்? என்றெல்லாம் யோசிக்காமல், நஷ்டத்துக்கு பழிபோட யாரையாவது தேடுவார்கள்.  இதுதான் அவர்களின் பிரச்சினை.

ரூ 90 லட்சத்தில் படமெடுத்துவிட்டு, அதை மூன்று வருடங்கள் வெளியிடாமல் வைத்திருந்து வட்டிக் கணக்கு எகிறிய நிலையில், எந்திரன் வெளியாகும் நேரத்தில் தியேட்டர் கேட்டு நின்றால் யார்தான் என்ன செய்ய முடியும்?

எந்திரன்… அரங்கம் நிறைகிறதா? நிலவரம் என்ன?

ந்திரன் வெளியாகியுள்ள சென்னை நகர திரையரங்குகளில் இன்றளவும் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டுள்ளது. திங்கள்கிழமை இரவுக் காட்சி கூட கமலாவின் இரு திரைகளிலும் அவுஸ் புல் என அறிவிக்கப்பட்டது. காசியில் 90 சதவீத பார்வையாளர்கள் வந்திருந்தனர், இரவுக் காட்சிக்கு.

ஆனால் அனைத்து திரையரங்குகளிலுமே மாலை நேரக் காட்சிக்கு மட்டும் டிக்கெட்டுகள் இல்லை என்றே பதில் வருகிறது. கூட்டம் குறைந்து நிதானமாகப் பார்க்க விரும்பும் பெரும்பாலானோர் அலுவலகம் முடிந்து மாலை நேரத்தில் படம் பார்ப்பதையே விரும்புவதாலஸ் இந்த நிலை. ஆனால் காலை காட்சிகளுக்கு ஓரளவு டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.

மல்டிப்ளெக்ஸ்களில் பெரும்பாலான காட்சிகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக முக்கிய மால்களையெல்லாம் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மொத்தமாக ஒப்பந்தம் செய்து தந்துள்ளன. அபிராமி, மாயாஜால், ஐநாக்ஸ், பிவிஆர், எஸ்கேப் மற்றும் சத்யம் சினிமாஸில் டிக்கெட் வாங்குவது இப்போதும் சிரமமே.

புறநகர்ப் பகுதிகளில், அடுத்தடுத்த திரையரங்குகளில் திரையிடப்பட்டதால், இப்போது அரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பகவதி -விக்னேஸ்வராவில் வெளியானது எந்திரன். இப்போது பகவதியில் மட்டும் நல்ல கூட்டத்துடன் ஓடுகிறது. ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி, நங்கநல்லூர் வேலன்- வெற்றிவேலனில் வெளியாகியிருந்தது. இப்போது நங்கநல்லூர் வேலன்-வெற்றிவேலனில் தொடர்கிறது. குரோம்பேட்டை வெற்றியில் எந்திரன் ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களில் இப்போதும் ராகேஷிலும் சேர்த்து படத்தை ஓட்டிக் கொள்கிறார்கள்.

மாயாஜாலில் இந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 50 காட்சிகளும், மற்ற நாள்களில் 36 காட்சிகளும் எந்திரன்தான்!

பல ஒற்றைத் திரை அரங்குகளில் மூன்றாவது வாரத்திலும் சனி, ஞாயிறுகளில் எந்திரனுக்கு மட்டும் 5 காட்சிகள்!

-என்வழி
3 thoughts on “தாக்குப் பிடிக்க முடியாத புதிய படங்கள்: போட்டியின்றி தொடரும் எந்திரனின் ஓட்டம்!!

  1. karthik

    @மாரியப்பன்.. எந்த நாட்டு தெருவில்?
    தமிழ் நாட்டில் போட்டால் திரையை கல்லால் அடிப்போம். வேண்டுமானால் சல்மான் கான் வீட்டில் பொய் போடட்டும் அசின், விஜய், சல்மான் கான் எல்லோரும் போடட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *