BREAKING NEWS
Search

தளபதி மாதிரி ஒரு கதை அமைந்தால் ரஜினியிடம் கால்ஷீட் கேட்பேன்! – அமீர்

தளபதி மாதிரி ஒரு கதை அமைந்தால் ரஜினியிடம் கால்ஷீட் கேட்பேன்! – அமீர்

மீபத்தில் ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தார் அமீர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மீடியா முழுக்க அவரைப் பற்றிய பேச்சுதான். அந்தப் பேட்டியின் ஒரு பகுதியை ஏற்கெனவே கொடுத்திருந்தோம்.

yogi-movie-stills-017

கிட்டத்தட்ட இரண்டு முழு ஆண்டுகள், தான் முதல் முறையாக நாயகனாக நடிக்கும் யோகி படத்துக்காக தவம் கிடந்தார் அமீர்.  இடையில் ஈழப் பிரச்சினையில் ரொம்பவே ‘டிஸ்டர்ப்’ ஆகியிருந்தாலும், ஒருவழியாக யோகியை தான் விரும்பிய படி நடித்துக் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்துக்கான தனது முதல் பேட்டியின் போது அமீர் நிறைய விஷயங்கள் குறித்துப் பேசினார்.

குறிப்பாக ரஜினி மற்றும் கமலுடன் அவரது சமீபத்திய சந்திப்புகள் குறித்த கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில் மிகச் சிறப்பாக இருந்தது.

ரஜினி பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில், ரஜினி ரசிகர்களை சட்டென்று நிமிர வைக்கும் தன்மை கொண்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினி சாரை வைத்து நீங்கள் படம் பண்ணும் வாய்ப்பு உள்ளதா?

“ரஜினி சாரை நான் சந்தித்தது உண்மைதான். அவரிடம் பல விஷயங்கள் குறித்துப் பேசினேன். அவர் மிகத் தெளிவான மனிதர். சினிமாவின் அத்தனை நுணுக்கங்கள், வியாபார நிலவரம், மக்களின் ரசனை, ரசிகர்கள் விருப்பம் என சகலத்தையும் விரல் நுனியில் வைத்துள்ளவர் அவர்.

அவருடன் படம் பண்ண எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். ஆனால் எனக்காக எந்த நேரத்திலும் கால்ஷீட் கொடுப்பார். அப்படி ஒரு நம்பிக்கை என் மீது.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டாமா… தளபதி மாதிரி ஒரு வலுவான கதை அமைய வேண்டும். அப்படி அமைந்தால் அடுத்த நாளே அவரிடம் போய் உட்கார்ந்துவிடுவேன்”, என்றார் அமீர்.

அவர் வார்த்தைகளில் இருந்த அந்த உரிமை கலந்த அன்பு நமக்கு ரொம்பப் பிடித்திருந்தது!
10 thoughts on “தளபதி மாதிரி ஒரு கதை அமைந்தால் ரஜினியிடம் கால்ஷீட் கேட்பேன்! – அமீர்

 1. கிரி

  //அவர் வார்த்தைகளில் இருந்த அந்த உரிமை கலந்த அன்பு நமக்கு ரொம்பப் பிடித்திருந்தது//

  பட் அந்த அன்பு எனக்கு பிடித்து இருக்கு! ( (நாடோடிகள் ஸ்டைல் ல் படிக்கவும்)

 2. prashanthan

  கண்டிப்பாக ரஜனி அமீருடன் சேர்ந்து ஒரு படம் செய்ய வேண்டும் … அது கண்டிப்பாக ஒரு வித்தியாசமான கதையுடன் அமையும் , அமீர் மேல் எனக்கும் நம்பிக்கை இருக்கு

 3. Srinivas

  //அவர் வார்த்தைகளில் இருந்த அந்த உரிமை கலந்த அன்பு நமக்கு ரொம்பப் பிடித்திருந்தது//

  பட் அந்த அன்பு எனக்கு பிடித்து இருக்கு! ( (நாடோடிகள் ஸ்டைல் ல் படிக்கவும்)

  But, Andha Deeling Yenakku Romba pidichuchu!! ( Giri Vadivelu )

 4. Manikandan

  இவனுங்கள நம்பவே முடியாது… தலைவரோட கால்ஷீட் வேணும்னா அவர் கால கழுவி கூட குடிப்பானுங்க… இல்லாட்டி பப்ளிசிட்டிக்காக தலைவர பத்தி மட்டமா பேசுவானுங்க… நம்ம தலைவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்கிற அடிப்படை உண்மை தெரிந்தும்…

 5. Manoharan

  No more movies thalaiva…Endhiran could be the last one. Come to politics. Here lots of mosquitos are there to wipe out.

 6. r.v.saravanan

  தளபதி மாதிரி ஒரு வலுவான கதை அமைய வேண்டும்.

  viraivil கதை அமைய valthukiren

 7. jawahar.t

  இவனுங்கள நம்பவே முடியாது… தலைவரோட கால்ஷீட் வேணும்னா அவர் கால கழுவி கூட குடிப்பானுங்க… இல்லாட்டி பப்ளிசிட்டிக்காக தலைவர பத்தி மட்டமா பேசுவானுங்க… நம்ம தலைவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்கிற அடிப்படை உண்மை தெரிந்தும்…

 8. arul

  It will be a good movie if both amir and our thalaivar join together.but every fan of thalaivar are eagerly waiting not only for yendhiran but also for the meet regarding politics after that movie.so i think there is only a little possibilty for this to happen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *