BREAKING NEWS
Search

‘தலைவர் வந்தார்…’ – மாறாத பிரமிப்பில் விஜய் வசந்த்!

ரசிகருக்காக எந்திரன் படப் பணியிலிருந்து வந்த ரஜினி!

விஜய் வசந்த் திருமணத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி பங்கேற்று மகிழ்வித்தது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டுள்ளோம்.

இந்த நிலையில், இணைய தளம் ஒன்றில், ரஜினி வருகை குறித்து விஜய் வசந்த் ஒரு ரசிகராக அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதனை இங்கே தருகிறோம்…  தகவல் அனுப்பிய நண்பர் மகேந்திரனுக்கு நன்றி.

ந்த மனிதரிடம் அப்படி என்னதான் வசிய சக்தி இருக்கிறதோ தெரியவில்லையே…’ என்று பிரமிக்கிறார்கள் விஜய் வசந்த் திருமணத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர் உள்ளிட்ட சகல தரப்பினரும்.

ஆம்.. அவர்கள் சொல்வது சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான். சமீபத்தில் நடந்த விஜய் வசந்த் திருமணத்துக்கு யாருமே எதிர்பாராமல் மின்னலாய் வந்து போனார் ரஜினி. அவர் இருந்த 5 நிமிடங்களும் ப்ளாஷ் மழை.. மீண்டும் அவர் காருக்குள் போய் அமரும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.

மணமகன் விஜய் வசந்த் தீவிர ரஜினி ரசிகர். ரஜினியின் பெயரை உரத்துச் சொன்னால் கூட சண்டைக்கு வருவாராம். ‘தலைவர் என்று சொல்லுய்யா’ என்று மல்லுக்கட்டும் அளவு ரஜினி மீது அளவு கடந்த ப்ரியம் இவருக்கு.

சென்னை 28 படம் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதை ஆஸ்கருக்கும் மேலான விருது என பார்ப்போரிடமெல்லாம் சொல்லி வந்தார் விஜய்.

இந்த நிலையில் திருமணத்துக்கு ரஜினிக்கு பத்திரிகை வைத்த போது, அவர் நிச்சயம் வருவார் என்று நம்பவில்லையாம். இதுகுறித்து விஜய் வசந்த் இப்படிச் சொல்கிறார்…

“தலைவர் எந்திரன் பிஸில இருப்பார். வருவாரோ மாட்டாரோ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திருமண வரவேற்பில், பளிச்சின்னு வந்து நின்னுட்டார். அந்த மண்டபமே பிரகாசமாயிட்ட மாதிரி அப்படியொரு சந்தோஷம் போங்க. நான் அவரைப் பார்த்துக்கிட்டே நின்னேன். அவர் பேசினதைக் கூட கவனிக்கலை.

பொதுவா என் வயசு பசங்க, அழகான பொண்ணைத்தான் வெறிச்சிப் பார்ப்பாங்க. ஆனா என்னை மாதிரி ரசிகர்களுக்கு, தலைவருக்கு முன்னால யார் வந்தாலும் பார்க்கத் தோணாது. அப்படியொரு ஈர்ப்பு சக்தி அவர்கிட்ட இருக்கு…

என் திருமணத்தை விட, திருமண வரவேற்புதான் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலாயிடுச்சி. காரணம் தலைவர்தான்… எங்கப்பா அம்மா சொந்தக்காரங்க எல்லாம் என்னை ‘அதிர்ஷ்டக்காரன்டா நீ’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்” என்று மூச்சுக்கு முந்நூறு தடவை ரஜினி பற்றிப் பேசுகிறார் விஜய்.

சரி, திருமண வரவேற்பில் ரஜினி என்ன சொன்னார்?

‘வாழ்க்கையை சந்தோஷமா வாழக் கத்துக்கணும். விஷ் யூ ஹேப்பி மேரிட் லைஃப்’ என்றார். அது மட்டும்தான் என் காதுல விழுந்துச்சி பாஸ்…, என்றார்.

இதையெல்லாம் விட முக்கியமானது, விஜய் வசந்த் தனது தீவிர ரசிகர் என்பது ரஜினிக்கும் தெரியுமாம். அதனால்தான், தன் ரசிகனை மகிழ்விக்க, எந்திரன் பட வேலையிலிருந்து நேராக திருமண மண்டபத்துக்கு வந்து 5 நிமிடங்கள் இருந்துவிட்டு மீண்டும் எந்திரன் பணிகளில் பங்கேற்றாராம்!

அதான் ‘தலைவர்’ மனசு!

நன்றி: புலிகேசி, சிவாஜிடிவி
2 thoughts on “‘தலைவர் வந்தார்…’ – மாறாத பிரமிப்பில் விஜய் வசந்த்!

  1. Alaguraja

    One டே ரஜினி சார் வில் பெகோமே எ சீப் மினிஸ்டர் ஒப் தமிழ் நாடு. தட் டைம் ஆல் தி தமிழ் பெஒப்லே வில் பே வெரி ஹாப்பி லைக் விஜய் வசந்த் பாமிலி……

  2. r.v.saravanan

    ரசிகனை மகிழ்விக்க, எந்திரன் பட வேலையிலிருந்து நேராக திருமண மண்டபத்துக்கு வந்து 5 நிமிடங்கள் இருந்துவிட்டு மீண்டும் எந்திரன் பணிகளில் பங்கேற்றாராம்!

    வாழ்த்துக்கள் விஜய் வசந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *