BREAKING NEWS
Search

தலைவர் பிறந்த நாளில் ‘ரஜினிவழி’… இணைய வாருங்கள்!

ஜினியின் பெயரில் பல்லாயிரம் நற்பணி மன்றங்கள், மன்றம் சாராத அமைப்புகள், தனிநபர் முயற்சிகளாக பல அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

இவை அனைத்தும் தங்களாலான நற்பணிகளை பல பகுதிகளிலும் செய்து வருகின்றன.

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த 61-வது பிறந்த நாளில் ‘ரஜினிவழி’  என்ற புதிய அமைப்பினை துவங்கியுள்ளனர்.

ரசிகர்கள் என்பதையும் தாண்டி, தலைவர் ரஜினி குறித்த நல்ல புரிதலோடு உள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பைத் துவங்குகின்றனர். கல்வியாளர்கள், கலைத்துறை நண்பர்களின் பங்களிப்போடு இந்த அமைப்பு செயல்பட உள்ளது.

அமைப்பு ரீதியாக இது சிறிய முயற்சி என்றாலும், நோக்கம் பெரியது. மீனைத் தருவதற்குப் பதில் மீன்பிடிக்கத் தூண்டில் தரும் ரஜினியின் எண்ணம் புரிந்து மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி.

தன் பெயரை தவறாகப் பயன்படுத்தி எந்த ரசிகரையும் யாரும் சுரண்டுவதை துளியும் பொறுத்துக் கொள்ளாதவர் ரஜினி. அவரது மனம் புரிந்து, எந்த வித லாப நோக்கமும் அற்ற ஒரு சேவை முயற்சியாக அறிவு – அற வழியாக ஆரம்பமாகிறது ரஜினி வழி. இந்த அமைப்புக்கான அத்தனை செலவுகளையும் அவரவர் சொந்தப் பணத்திலேயே மேற்கொள்கின்றனர். எவரிடமும் சிறு தொகையைக் கூட நன்கொடையாகப் பெறுவதில்லை என்பதே இந்த அமைப்பின் முதன்மை கொள்கையாகும்!

கல்வி, வேலைவாய்ப்பு சேவைதான் இந்த அமைப்பின் பிரதான நோக்கம்.  எந்தெந்த வழிகளில் இந்த பணிகள் ஆரம்பமாகும் என்பதை விரிவாக பின்னர் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர். “நிச்சயம் தலைவர் பெருமைப்படும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும்” என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் கல்வி உதவியுடன் ஆரம்பிக்கிறது ரஜினிவழியின் முதல் நிகழ்வு (செய்தி தனியாக).

ரஜினி வழியில் உறுப்பினராக, இணைந்து பணியாற்ற தலைவரின் ரசிகர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

ரஜினி வழிக்கு என்வழி உறுதுணையாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு…

rajinivazhi@gmail.com

அல்லது 9944209787 மற்றும் 9841752821 எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

நிர்வாகி
என்வழி.காம்
21 thoughts on “தலைவர் பிறந்த நாளில் ‘ரஜினிவழி’… இணைய வாருங்கள்!

 1. karthick

  தலைவா
  உன்ன வாழ்த்த வயது இல்லை தலைவா
  நீ இன்று போல் என்றும் பல்லாண்டோ வாழ வாழ்த்துகிறேன் தலைவா
  என்றும் உன் ரசிகன் கார்த்திக் தலவா
  தலைவர் வாழ்க வாழ்க ……………..

 2. rajadurai

  உங்களுடைய இந்த சின்ன ரசிகனோட பணிவான வணக்கம் தலைவரே!
  உங்க உடம்பு சரியான உடனே ரொம்ப சந்தோஷ பட்டேன் தலைவா,
  உங்கள வாழ்த்த வயது இல்ல, இருந்தாலும் என்னோட ஆசைய சொல்றேன் தலைவரே, நீங்க இன்னும் 152 படங்களுக்கு மேல நடிக்கணும் தலைவா! நானும் என்னோட நண்பர்களும் ரானா படத்துக்காக ரொம்ப வெயிட் பண்றோம் தலைவா, அவ்வளுதான் தலைவா, உடம்ப பத்ரமா பாத்துகோங்க. i know you are always strong . இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன் rajaduai , சின்னசேலம், விழுப்புரம் district .

 3. ruthrayaraj

  எஸ். உலகம் azhiyum . ஆனல் முழுவதும் அழியாது ………….. இப்படிக்கு ருத்ரராஜ் ahambrahmasmi ……..நாம் கடவுள் .

 4. latha

  ரஜினி என்னும் மாமனிதனை வாழ்த்த வயதில்லை வண்ணன்குகிறேன் .
  உதாரனமனவர்,
  அவர் நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *