BREAKING NEWS
Search

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… ரஜினி வாக்களித்தார்!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… ரஜினி வாக்களித்தார்!

மிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம் சேம்பர் தியேட்டரில் இன்று விறுவிறுப்பாக நடந்தது. ரஜினி, அவரது மகள் சௌந்தர்யா ஆகியோர் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தேர்தல் அதிகாரியாக இருந்து இத்தேர்தலை நடத்தினார். காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தியேட்டர் முன்னால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர்கள் திரண்டு நின்று தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டினார்கள். மொத்தம் 700 பேர் ஓட்டு போட தகுதியானவர்கள்.

இந்த தேர்தலில் ராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும், கே.ஆர்.ஜி. தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன. ராமநாராயணன் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அவரது அணி சார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆகியோரும், செயலாளர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், முரளிதரன் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு காஜா மைதீனும் போட்டியிடுகின்றனர்.

கே.ஆர்.ஜி. தலைவராக போட்டியிடும் அணியில் ராம கோட்டைகுமார் துணைத் தலைவர் பதவிக்கும், ஆர்.ராதாகிருஷ்ணன், பி.எல். தேனப்பன் ஆகியோர் செயலாளர்கள் பதவிக்கும், பாபுகணேஷ் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 40 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 21 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் 12 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ரஜினி காலை 11 மணிக்கு மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களித்தார். வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மாலை 4.30 க்கு வாக்குப் பதிவு முடிந்தது. பின்னர் ஓட்டுகள் எண்ணப்பட்டு இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *