BREAKING NEWS
Search

தி்ருச்சியில் ரஜினியின் அண்ணன்… ரசிகர்கள் உற்சாகம்!

தம்பியின் பெருமையும் அண்ணனின் சிலிர்ப்பும்!

ந்திரன் பெற்றுள்ள வெற்றி இந்திய சினிமாவின் பக்கம் உலகை இன்று ஆச்சர்யமாக திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்றால் மிகையல்ல.

உள்ளூரில் எப்படி ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடினார்களோ… அதற்கு சற்றும் குறைவில்லாத அளவு உலகின் மற்ற பகுதிகளிலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் எந்திரனை வரவேற்று ரசித்து மகிழ்ந்தார்கள்.

படம் வெளியாகி 25 நாட்கள் முடிந்த நிலையிலும், பிரிட்டனில், அமெரிக்காவில்  இன்னும் எந்திரன் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்னும் எந்திரன் பேச்சும் ஓயவில்லை… வீச்சும் குறையவில்லை என்ற நிலை.

சமீபத்தில் திருச்சி, தஞ்சை பகுதியில் உள்ள கோவில்களுக்கு வருகை தந்த ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ராவ், தம்பி ரஜினியும் அவர் படமும் கொண்டாடப்படும் அழகைக் காண திருச்சி ரம்பா திரையரங்கத்துக்கு வந்தார்.  அவருக்கு சிறப்பான முறையில் திருச்சி தலைமை மன்றம் சார்பாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

ரம்பா திரை அரங்கில் ரசிகர்கள் எந்திரனை வரவேற்று அமைத்திருந்த அலங்கார பேனர் மற்றும், தங்கள் தலைவருக்காக செய்திருந்த மற்ற ஏற்பாடுகளையும் பார்த்து சிலிர்ப்புடன் அங்கேயே சிறுது நேரம் நின்றுவிட்டார்.

பிறகு, படம் குறித்து ரசிகர்களிடம் பேசியவர், அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

-என்வழி




3 thoughts on “தி்ருச்சியில் ரஜினியின் அண்ணன்… ரசிகர்கள் உற்சாகம்!

  1. S.Sebastian, Pune

    தம்பியுடையான் படைக்கஞ்சான்
    அதுவும் இந்த மாதிரி தம்பி அமைந்தால் ?

  2. karthik

    உண்மையில் தம்பியை விட மிக எளிமையானவர். தனது தம்பி இவ்ளோ பெரிய ஆள் என்ற மமதை கொஞ்சமும் இல்லாதவர், தம்பியின் பேரை இதுவரை அவர் எதற்காகவும் தவறாக படுத்தியது இல்லை. ( கொஞ்சம் நம்ம விஜய் தந்தை சந்திர சேகருடன் ஒப்பிட்டு பாருங்க புரியும் ).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *