BREAKING NEWS
Search

தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்! – சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜிகே வாசன் பாராட்டு

பத்மவிபூஷண் ரஜினிக்கு வாசனின் வாழ்த்து!

Rajnikanth-Kabali

சென்னை: தமிழ் கலாச்சாரத்தை தனது சிறந்த நடிப்பால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.

பத்மவிபூஷண் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ஜிகே வாசன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:

பத்ம விபூஷன் விருது பெற இருக்கும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

திரையுலக சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு நம் நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது கிடைக்கப்பெறுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

நல்ல பண்பாளர், மனித நேயர், எளிமையானவர், எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர்.

தமிழ் திரையுலகில் நடிப்பின் மூலம் தனக்கென்று தனி முத்திரை பதித்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர்.vasan

தன் நடிப்புத் திறமையால் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் நடித்த பெருமையும் அவர்களுக்கு உண்டு.

தமிழ் கலாச்சாரத்தை தனது நடிப்புத் திறமையால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கும் பெருமைக்குரியவர்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான் போன்ற பல வெளிநாடுகளிலும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் அவர்.

உலகம் முழுவதும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் குடி கொண்டிருக்கும் சிறந்த நடிகர்.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்ற சாதனையாளர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றின் மூலம் தொடர் சாதனைகள் படைத்து திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் எனது சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தங்களது பணி இனிதே தொடர என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

-என்வழி




4 thoughts on “தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்! – சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜிகே வாசன் பாராட்டு

  1. srikanth1974

    ஜப்பானியரை தமிழ் பேசவைத்த எங்கள் தலைவர்.
    தமிழ் சினிமாவிற்கு உலக அரங்கில் மிகப்பெரிய
    வர்த்தக வாசலை திறந்துவிட்ட பெருமைக்குரியவர்
    எங்கள் யுக நாயகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *