BREAKING NEWS
Search

தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கிறார்: ஏஆர் ரஹ்மானுக்கு ராதாரவி கண்டணம்!

தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கிறார்: ஏஆர் ரஹ்மானுக்கு ராதாரவி கண்டணம்!

ஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்யிருக்கலாம். ஆனால் அவர் radha-raviசினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலம்தானே தவிர ஸ்லம்டாக் மில்லியனேர் மூலமல்ல. ஆனால் அவர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார், அவமதிக்கிறார். இதற்காக அவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றார் ராதாரவி.

‘மண்டபம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட, நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பெற்றுக்கொண்டார்.

விழாவில், ராதாரவி பேசியதாவது:

தமிழ்நாட்டில் சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் படங்களை திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை தரவேண்டும். இந்தி படங்கள் வருகிறது என்று, தமிழ் படம் திரையிடுவதை தவிர்க்கக் கூடாது.

தமிழ் படங்களை திரையிடாத தியேட்டர்களை இழுத்து மூடவேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர் கொடுக்க மனமில்லாவிட்டால் அவற்றை குடோன்களாக ஆக்கிவிடுங்கள். வேறு எங்காவது போய் தியேட்டர் கட்டிக் கொள்ளுங்கள். சின்ன படங்களை திரையிடுவதற்கு பல தியேட்டர்கள் முன் வருவதில்லை. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில சட்ட திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

தமிழ் பெயர்கள்

சில நடிகர்-நடிகைகள், அம்மா, அப்பா சூட்டிய பெயர்களை மாற்றிவிட்டு, ‘நியூமராலஜி’படி பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தாய், தந்தையைவிட ‘நியூமராலஜி’ எந்த வகையில் சிறந்தது என்று தெரியவில்லை. இது ‘சோளி உருட்டுவதை நம்பி அரசியல் நடத்துவது’ போல் உள்ளது.

இப்போதெல்லாம் சில இசை அமைப்பாளர்கள் ‘டியூன்’ போடுவதற்காக வெளிநாடுகளுக்கு போகிறார்கள். கூடுவாஞ்சேரியிலும், மதுரையிலும் கிடைக்காத ‘டியூன்’களா வெளிநாடுகளில் கிடைக்கப் போகிறது. இதுபோல் ஒவ்வொரு ஏரியாவிலும் சினிமாவை கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு கண்டனம்

ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படத்துக்கு இசை அமைத்துதான், இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய முதல் படம் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ அல்ல. கவிதலாயா நிறுவனம் தான் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் பட உலகை அடியோடு புறக்கணிக்கிறார்.

அவர் ஆஸ்கார் விருது பெற்றதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு தேதி தராமல், வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு விழா நடத்த சம்மதித்து இருக்கிறார்.

இத்தனையையும் தாண்டி தமிழ் படத் தயாரிப்பாளர்கள் அவர் பின்னால் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் கண்டுகொள்வதில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் என்னமோ இதை பப்ளிசிட்டிக்காக சொன்னேன் என எடுத்துக் கொள்ளக்கூடாது.

நிறைய பேர் அப்படித்தான் நினைக்கிறாங்க. ஒரு தயாரிப்பாளர், நடிகர் சங்க பொதுச் செயலாளர், பல தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை அருகிலிருந்து பார்த்து தீர்த்து வைப்பன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்” , என்றார்.
8 thoughts on “தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கிறார்: ஏஆர் ரஹ்மானுக்கு ராதாரவி கண்டணம்!

 1. arul

  comment from radharavi is absolutely rubbish.this is a democratic country and everybody have rights to decide which to take and not to take.will he neglect the option if it is given by the famous hollwood production company to act in their movie.can you ask kamal to put tamilnattu nayagane rather than ulaga nayagane as his title.

 2. P. SHANMUGAM

  podaa p……. magane. AR Rahman yaaru, avaru ………… kooda thoda mudiyathu

 3. vazeer Abu Bilal Kuwait

  Radha Ravi should understand that A.R Rehman make all indian proud while he got two oscars. Whether from Tamil films or Hindi films or any other language films… Why r u jalas…..?

 4. Manoharan

  Rahman has composed Music for a small Budget film Sakkarakkatti. All songs were Super hit,but the movie has become an utter flop. Whats the use of it.? Now Rahman has lots n lots of offers and he may think his work should not go waste like Sakkarakkatti. So he may opt for Big Budget films.But Still he is working with Manirathnam and Shankar without any fuss becoz both of them are utilising Rahman to full extent and the movies also becoming Superhits. It is not fair to critisise him. A poor man who goes in Bicycle will go in Mercedez when he develops. Whats wrong in that ?.

 5. singaravel

  i want to ask some questions to radha ravi…
  1)where and which town you and your family nos born ?
  2)did you people studied only in native place ?
  3)your all family actors do not go to foreign countries for shootings ?
  4)is madurai is only the tamilnadu ? any function,any shooting,any flim making
  you are saying madurai madurai…
  5)there are so many villages but u wants only pollachi ?
  6)hai..let u has the talent to speak you answer to these questions..
  im from neyveli nasa district ,ungalaku pesanumuna ethavathu seiunumuna enna vennalum pannuvingala..?…

  remember except my thalaivar all actor & actors came to neyveli for what ??
  appa madurai naduthuna success aagatha ?

  but i not happy to see the actors and not participated in neyveli kaveri problems even all actor & actors came to my home town ?
  because for me only rajini is the human being
  i can’t see ,meet him …but i feels him..you can’t touch air but u feels always…..

  i’m not blamming about madurai town or madurai people ,don’t mistaken my words..

  thanks…

  R.singaravel

 6. kalyan

  i dont understand why vino think this is an important news and posted in his website?…. Atleast we have a tamilian whoz globally acclaimed.. Why we have to bother about this all this nonsense talks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *