BREAKING NEWS
Search

‘தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும்!’

‘தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும்!’

ரொம்ப இறுக்கமான நேரங்களில், நம்மையும் அறியாமல் ரிலாக்ஸ் ஆக சில விஷயங்கள் உதவும்… அப்படி ஒரு சமாச்சாரத்தை ஆனந்த விகடனில் படித்தபோது,  தன்னிலை மறந்து சிரித்துவிட்டேன். அது டிஆர் பேட்டி.

ஆனாலும் மனுசனுக்கு இவ்வளவு… இவ்வளவு தன்னம்பிக்கை ஆகாது. பேட்டியின் சில பகுதிகள்….

குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற ‘ஒரு தலைக் காதல்’ முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் ‘ஒருதலை ராகம்’. 2010-ல் ‘ஒருதலைக் காதல்’. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு நிக்கிறது யாரு… இந்த விஜய டி.ஆரு! அவனவன் காலையில் எழுந்து நீராடவே தயங்குறான். நான் 30 வருஷமாப் போராடுறேன். இது தலைக்கனம் இல்லை… தன்னம்பிக்கை இலக்கணம்!” – டி.ராஜேந்தர் பேசப் பேச, எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வருவதைப்போல் அதிர்கிறது அறை!

“அப்புறம், ‘ஒருதலைக் காதல்’ எப்படி வந்துட்டு இருக்கு?”

“தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும். காதல்தான் கதை. தாராவிதான் கதைக் களம். படத்தில் இசைக் கலைஞனா வர்றேன். படத்தில் ஏ டு இசட் இசை மழை. ஏழு பாடல்களை செலெக்ட் பண்ணி இருக்கேன். அந்த ஏழு பாடல்கள்தான் இனிமே இளைஞர்களோட சொத்து. கேரளா, பெங்களூரு, மும்பைனு ரெண்டு வருஷமா ஹீரோயின் தேடி அலைஞ்சேன். இன்னும் யாரும் சிக்கலை!”

“சிம்புவை வைத்து ஏன் படம் இயக்குவது இல்லை?”

“சிம்புவைச் சின்னக் குழந்தையில் இருந்து உருவாக்கி ‘காதல் அழிவதில்லை’ வரை கொண்டுவந்தேன் சார். உச்சாணிக் கொம்பில் இருக்கும் எந்த நட்சத்திரத்தையும் வெச்சு நான் படம் எடுத்தது இல்லை. புதுமுகங்களைத்தான் அறிமுகப் படுத்துவேன். ‘ஒருதலை ராகம்’, ‘உயிருள்ளவரை உஷா’, ‘மைதிலி என்னைக் காதலி’ எல்லாம் 10 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட படங்கள். ஆனா, பல கோடி வசூல் பண்ணுச்சு. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பாங்க. நான் இறாலைப் போட்டு சுறாவைப் பிடிக்கிறவன். சிம்புவை வெச்சுப் படம் பண்ணாததுக்குக் காரணம் இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே! (நம்மையே குறுகுறுவெனப் பார்க்கிறார்!)

உங்களுக்குப் பிறகு கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த் சரசரன்னு வளர்ந்துட்டாரே?”

“நான் யாரோடும் என்னை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டேன். நான் நடந்து வந்த என் பாதையை மட்டுமே பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதான்னு மூணு முதல்வர்களோடவும் மோதிப் பார்த்தவன் நான். நான் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை ‘நான்தான் நாளைய முதல்வர்’னு ஒரு நாள்கூடச் சொன்னது இல்லை. ஒரே சமயத்தில் அ.தி.மு.க-கிட்டேயும், காங்கிரஸ்கிட்டேயும் பேச்சுவார்த்தை நடத்துற தந்திரம் எனக்குத் தெரியாது. நான் பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி சார்!”

“என்றும் கலைஞர்தான் என் தலைவர்’னு சொன்னீங்களே?”

“அது அப்போ! கலைஞர்தான் தலைவர்னு முடிவெடுத்தேன். அதனால, என்னோட தாயக மறுமலர்ச்சிக் கழகத்தில் தலைவர் பதவியை ஏற்படுத்தாமல், பொதுச் செயலாளரா மட்டும் இருந்தேன்.

அப்போ, ‘எனக்கு நீயும் ஸ்டாலினும் ஒண்ணு’னு கலைஞர் சொன்னார். நானும் அவர் பேச்சை நம்பி என் கட்சியைக் கலைச் சுட்டு தி.மு.க-வில் சேர்ந்தேன். ஆனா, கலைஞர் தன்னோட வாக்குறுதியைக் காப்பாத்தலை. அதனால, மீண்டும் தி.மு.க-வில் இருந்து விலகி, லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தினேன். இந்த முறை உஷாராநானே தலைவர் ஆகிட்டேன்!”

“சமீபத்தில் தி.மு.க-வில் சேர்ந்த குஷ்புவுக்கு மேலவையில் பதவி கிடைக்கும்னு பேசிக்கிறாங்களே?”

“இதைப் பத்தி நான் கருத்துச் சொல்ல விரும்பலை. வேணும்னா, ‘இதைவிட வேற கஷ்ட காலம் தி.மு.க-வுக்கு வராது’ன்னு எழுதிக்குங்க சார்!”

“சிம்புவுக்கு எப்போ கல்யாணம்?”

“பார்க்கிறோம் சார். சிம்புவை மகனாகப் பெற்றதை நான் பெருமையா நினைக்கிறேன். என் பொண்ணு இலக்கியா எம்.பி.ஏ., முடிச்சிருக்காங்க. அவங்களுக்குத்தான் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம். ‘அப்பா, இந்தப் பொண்ணை நான் விரும்புறேன்’ன்னு சிம்பு சொன்னா, நான் தடுக்க மாட்டேன். ஆனா, ‘நீங்க யாரைச் சொல்றீங்களோ… அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு சொல்லிட்டார் சிம்பு. சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன் சார்!”

நன்றி: விகடன்
22 thoughts on “‘தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும்!’

 1. balu

  கொடுமைடா சாமி ! குறளரசன் ஜிம்க்கு போனாலும் குரங்கிலிருந்து வந்தவன் என்று மூஞ்சி சொல்லுமே. … அதை மாத்த முடியுமா ? இவன் எப்போதுமே தரை டிக்கெட் ஆட்களை நம்பியே படம் எடுப்பவன். நல்ல வாட்ட சட்டமான குட்டிகளை அரைகுறை ஆடையில் ஆடவிட்டு தரை டிக்கெட்டுகளை விசில் அடிக்கவிட்டு படத்தை பத்து நாட்கள் ஓட விடுவான். இந்த லட்சணத்தில் அடுத்த குரங்கு வருதாமா ? தமிழனுக்கு அடிக்கடி சோதனை வரக்கூடாது.

 2. SS

  ஏன் பாலு தரை டிக்கெட்ல படம் பார்கிரவங்கனா உங்களுக்கு கேவலமா?
  சீட்ல உட்கார்ந்து பார்க்கிறவங்க விசிலே ஊத மாட்டங்களோ?
  ஊர்ல நாகரீகம்னு பேர்ல சுத்திட்டு இருக்கிறவங்கள பாதி பேரு வக்கிரமான எண்ணங்களை உடைய கேவலமனவங்கலத்தான் இருப்பிங்க? சீட்ல உட்கார்ந்து பார்க்கிற மக்களுள எதனை பேர் இறங்கி வந்து போராடுறீங்க மக்களோட நலனுக்காக?
  போங்கடா நீங்களும் உங்க எண்ணமும் ?

 3. SS

  நீங்க டி.ஆர். பற்றி பேசுறதுக்கு மற்றவர்களை கேவலமாக நினைக்காதீர்கள்?

 4. Dinesh

  வா தல… வந்து எல்லார் மூஞ்சியிளையும் கரிய பூசு…

 5. basheer

  இந்த மாதிரி நேரங்கள்ல தான் ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கானான்னு சந்தேகமே வருது.இவரு மகன் உச்சாணி கொம்புல இருக்காராமாம்.பாத்து!பத்திரம்!!கீழ விழுந்து புட்டுக்க போறாரு.ங்கொய்யால.ஆனந்த விகடனுக்கு வேற வேலையில்ல.அரசியல்னா காமெடிக்கு அப்பப்ப சு.சாமி ,சினிமான்னா காமெடிக்கு இந்த கரடி. மூதேவி! மூணு பேரோட பெருந்தன்மை நீ உசுரோட இருக்கறது.இதுக்கு பேரு
  தன்னம்பிக்கை இல்ல.கிறுக்குத்தனம்.

 6. sureshkumar

  //மூதேவி! மூணு பேரோட பெருந்தன்மை நீ உசுரோட இருக்கறது//

  -100 சதவீதம் உண்மையைச் சொன்னீர்கள் பஷீர். அதிலும் எம்ஜிஆர், தனது எதிரியை ஒரு பொருட்டாகவே காட்டிக் கொண்டதில்லை. இந்த ஆளெல்லாம் அவருக்கு முன் ஒரு கொசு.

 7. kalingar

  நீயும் ஸ்டாலினும் ஒன்னு ,அப்படி சொன்னதுக்காக சொத்துல பங்கு கேட்டாஎப்பிடி ?

 8. Juu

  தல!!! நீ வா தல???
  வர்ற படம் எல்லாம் மொக்கையா இருக்கு,
  வீராசாமிக்கு அப்புறம்,நல்லா ஆரோக்கியமா சிரிச்சி படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு..

 9. Juu

  ‘தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும்!’

  அய்யாலே!!! ங்கொய்யலே!!!
  கண்ணு கலங்குது சாமி!!!
  அடுத்த தலைவர் படத்துக்கு நீதாம்பா வசனம்..

 10. K. Jayadeva Das

  //நல்ல வாட்ட சட்டமான குட்டிகளை அரைகுறை ஆடையில் ஆடவிட்டு தரை டிக்கெட்டுகளை விசில் அடிக்கவிட்டு படத்தை பத்து நாட்கள் ஓட விடுவான். // உண்மை.

 11. Krishna

  ** T R ஒனக்கும் ஒன்னோட பையனுக்கும் வெக்கமே இருக்காதா*!…. இந்த லட்சணத்துல நீ ஹிந்தி படம் வேற பண்ண போறயா*.. ஏற்கனவே இங்க நாம தமிழ் படாத எல்லாம் ஒற்றாணுக இதுல நீ வேறயா? ப்ளீஸ் படம்லாம் வேணாம்… எல்லா தமிழனும் சேர்ந்து உனக்கு காசுகூட மணி ஆர்டர் பண்றோம்..

  –Krishna
  –Delhi

 12. madhumidha

  அவன் கிறுக்கன் மாதிரி பேசினாலும் பணத்தை சேர்த்து வச்சு இருக்கான். அவன் குடும்பத்தை நல்ல கவனிக்கிறான்.

  அவனை குறை சொல்லி காமெடி பண்றவங்களுக்கு ஏதாவது உருப்படியா பணம் சேர்த்து குடும்பத்தை கவனிக்கிற தகுதி இருக்கா என்று யோசிச்சு பாக்குறது நல்லது

  உண்மை எப்பவும் கசக்கும். வேப்பங்காய் போல.

  மதுமிதா
  madhumidha1@yahoo.com

 13. Ramanan

  பாலு,

  நீங்க உங்க கருத்தை சொல்லுங்க, ஆனால், தவறான முறையில் சொல்ல வேண்டாம்.

  இவர் ஒருத்தர் தமிழருக்காக குரல் கொடுக்கிறார், மத்தவங்க எல்லாம் என்ன செய்யறாங்க?

  யாருக்கும் அநியாயம் செய்ய வில்லை, அவர் குடும்பம், தமிழினம் வாழ வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

  அதை பார்க்க வேண்டும்!
  aramanan@yahoo.com

 14. pandiyan

  பாலு நீ முதல்ல ஒரு தலை ராகம் , ரயில்பயணங்களில் , உறவை காத்த கிளி, உயிர் உள்ளவரை உஷா என்தங்கை கல்யாணி மைதிலி என்னை காதலி ஒரு தாயின் சபதம் போன்ற படங்களோட பாட்டை பொறுமையா கேட்டுட்டு அப்புறம் உன்னோட கமெண்ட் சொல்லு. டார்வின் தத்துவப்படி பார்த்தா நீயும் குரங்கிலிருந்து வந்தவன்தான்

 15. wayne

  பாலு வாழ்க …. பாலு கொள்கை வாழ்க… பாலுவை எதிர்பவர்கள் உள்ளே வரவும்…. மதுமிதாவிற்கு எனது அன்பு வாழ்த்துகள்…

 16. Thamzlan

  பாலு, நீங்கள் சொல்லுகிற கருத்தை பார்த்த நீங்கள் எதோ பிராமணிய இசை வாசிக்கிறது மாதிரி இருக்குது.
  ஒருவரின் உடல் , உருவம், மற்றும் வயதை வைத்து நீங்கள் பேசுவது உங்களை ஒரு குரங்கிலும் விட கேவலமாக
  நீங்களே கட்டுவது நகைப்புக்கு உடைய விடயம்.

 17. narathar

  டி .ஆர் ஐ நாம் மறந்துவிட முடியாது ? அவரது பழைய பாடல் வரிகள் அவரது இசையாலே செதுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம்..
  அன்றைய காலகட்டத்தில் அவரது கவிதை வரிகள் அனைத்தும் மணிகள்,மற்றும் முத்துக்கள் …….

  இன்றைய சூழலில் அவரால் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற படி முயற்சித்து பார்க்கிறார் ஆனால் பாவம் அவரது முயற்சிகலனைத்தும் காமெடி ஆகத்தான் மாறிக்கொண்டிருக்கிறது ?

  ஒருவேளை சரக்கு தீர்ந்து போயிருக்குமோ என்னவோ…..???????

  நாராயணா ? நாராயணா….???????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *