BREAKING NEWS
Search

தமிழர் ‘வீழ்ச்சியை’ நோட்டடித்துக் கொண்டாடும் சிங்கள இனவாதம்!

தமிழர் ‘வீழ்ச்சி’யை நோட்டடித்துக் கொண்டாடும் சிங்கள இனவாதம்!

மிழர் பிரதேசங்களை மீண்டும் தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்துவிட்ட வெற்றியை ஆயிரம் ரூபா நோட்டடித்து கொண்டாடுகிறது மகிந்த ராஜபக்சேயின் இலங்கை அரசு.

rupa

பன்னெடுங் காலமாக தமிழர் ஆதிக்கத்தில் இருந்த தாயகபூமி இலங்கைப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு, பல்லாயிரம் உயிர்கள் குடிக்கப்பட்ட பேரவலத்தைக் கொண்டாடுகிறது சிங்கள இனவாதம்.

தமிழர்களின் இறைமை முற்றாக நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த்தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரம் ரூபா புதிய கரன்சியை இலங்கை மத்திய வங்கி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பக்கத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே வெற்றிக் களிப்பில் கையுயர்த்தி மகிழும் படமும், அடுத்த பக்கத்தில் தமிழரை நசுக்கிவிட்ட எக்காளத்துடன் சிங்களக் கொடி உயர்த்தும் ராணுவத்தினரின் படமும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கரன்சி நோட்டை ராஜபக்சே நேற்று வெளியிட்டுள்ளார்.




One thought on “தமிழர் ‘வீழ்ச்சியை’ நோட்டடித்துக் கொண்டாடும் சிங்கள இனவாதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *