BREAKING NEWS
Search

தமிழரை வீடிழக்கச் செய்த பொன்சேகாவுக்கு வாடகைக்கு வீடு தர ஆளில்லை!

தமிழரை நாடிழக்கச் செய்ய பொன்சேகாவுக்கு இன்று குடியிருக்க வீடு தர ஆளில்லை!

கொழும்பு: லட்சக்கணக்கான தமிழர்களை நாடிழந்தவர்களாக மாற்றிய ‘பெருமைக்குரிய’ இலங்கையின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இன்று குடியிருக்கவும் வீடில்லையாம்.sarath-fon

அரசின் மிரட்டலுக்கு பயந்து, அவருக்கு வாடகைக்கு வீடு தரக்கூட எவரும் முன்வரவில்லையாம் இலங்கையில்.

தற்போது பொன்சேகா இருப்பது அரசு இல்லம். கொழும்பு புல்லர்ஸ் வீதியில் உள்ள இந்த வீட்டை அதிலுள்ள அத்தனை பொருட்கள் மற்றும் வசதிகளுடனும் அப்படியே வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பொன்சேகா அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டுள்ளாராம். இவ்வளவு குறுகிய காலத்தில் தனது ‘அந்தஸ்துக்கேற்ப’ வீடு பெறுவதில் அவர் பலத்த சிரமத்தை எதிர் கொண்டுள்ளாராம்.

எனவே தனக்கு ஏற்ற வசதியான வீடொன்றை வாடகைக்குப் பெறவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இன்னொருபக்கம் தனக்கு வீட்டை வாடகைக்கு அளிக்க முன்வரும் வீட்டு உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர் என நண்பர்களிடம் பொன்சேகா புலம்பத் துவங்கியுள்ளாராம்.

பொன்சேகா தான் இதுவரை 15 வீடுகளைப் பார்வையிட்டுள்ளதாகவும், இந்த வீடுகளின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் மிரட்டப்படுவதனால் வீடு கிடைப்பது தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மக்கள் குடியிருந்த மண்ணையும் வீட்டையும் இழந்து முள்வேலிக்குள் முடங்கக் காரணமாக இருந்த இந்த மனிதருக்கு ஒருவேளை வீடே கிடைக்காவிட்டால் என்ன செய்வார்… வன்னியின் சிதைந்த வீடுகளில் ஏதேனும் ஒன்றில்கூட தஞ்சம் கோரலாம்… அதைக்கூட அனுமதிக்கும் தமிழன் பெருந்தன்மை!!

-என்வழி




4 thoughts on “தமிழரை வீடிழக்கச் செய்த பொன்சேகாவுக்கு வாடகைக்கு வீடு தர ஆளில்லை!

  1. mslondon

    ” அதைக்கூட அனுமதிக்கும் தமிழன் பெருந்தன்மை ” வழிமொழிகிறேன் வினோ..

  2. r.v.saravanan

    தமிழ் மக்கள் குடியிருந்த மண்ணையும் வீட்டையும் இழந்து முள்வேலிக்குள் முடங்கக் காரணமாக இருந்த இந்த மனிதருக்கு ஒருவேளை வீடே கிடைக்காவிட்டால்

    than vinai thannai sudum……….

  3. r.v.saravanan

    இலங்கையின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா வன்னியின் சிதைந்த வீடுகளில் ஏதேனும் ஒன்றில்கூட தஞ்சம் கோரலாம்… அதைக்கூட அனுமதிக்கும் தமிழன் பெருந்தன்மை!!

    inna seidarai oruthal avar nana nannayam seidhu vidal
    – thiruvalluvar

  4. PJS

    தமிழரை நாடிழக்கச் செய்ய பொன்சேகாவுக்கு இன்று குடியிருக்க வீடு தர ஆளில்லை!

    அரசன் அன்று கொல்வான் கடவுள் நின்று கொள்வார்…. இன்று பொன்சேகா….. நாளை ராஜபக்சே ……..

    ஆனால் தமிழன்…. உலகமெல்லாம் நிறைந்திருப்பான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *