BREAKING NEWS
Search

தமிழக மீனவரை கொடூரமாக தாக்கிக் கொன்ற சிங்கள கடற்படையினர்!

சிங்கள கடற்படையினர் தாக்கி தமிழக வீரர் பலி

சென்னை: வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழக மீனவரை சிங்கள கடற்படை வீரர்கள் கொடூரமாகத் தாக்கிக் கொன்றனர்.

மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள வீரர்கள் நடுக்கடலில் கொடூரமாக தாக்குதல் நடத்துவதும், கொலை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்திய – தமிழக அரசுகள் அவ்வப்போது இதைக் கண்டித்து அறிக்கை விடுவதோடு சரி. ஆனால் இதனை இலங்கை சற்றும் சட்டை செய்வதாகத் தெரியவில்லை. இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்றுள்ளது சிங்கள கடற்படை. இவர்களால் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருட்சேதம் பல கோடிகள்.

நேற்றும் தமிழக மீனவர்கள் 8 பேரை மடக்கிய சிங்கள வீரர்கள் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி நிர்வாணப்படுத்தி சித்திரவதைக்குள்ளாக்கினர். இவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம். ஆகிய 4 பேர் நேற்று ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர்.

மற்றொரு படகில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா, ஆகிய 4 பேரும் சென்றனர்.

இரவு 9 மணியளவில் ஆறுக்காட்டுத் துறை அருகே நடுக்கடலில் 2 படகில் உள்ள மீனவர்களும் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தனர்.

உடனே செல்லப்பனின் படகை வழிமறித்து அதில் ஏறிக்கொண்டனர். ஆத்திரத்தில் படகில் இருந்த மீன்கள், மற்றும் வலைகளை கடலில் கொட்டினார்கள்.

செல்லப்பன் உள்பட 4 மீனவர்களையும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள். பலத்த காயமடைந்த செல்லப்பன், படகிலேயே சுருண்டு விழுந்து இறந்தார். காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் சிங்கள கடற்படையினர் சிறிது தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த முருகேசன் படகை வழிமறித்து அதில் ஏறினார்கள்.

படகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகளை கடலில் கொட்டினார்கள். பின்னர் முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய 4 மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கினார்கள்.

மீனவர்கள் கட்டியிருந்த வேட்டி-சட்டைகளை அவிழ்த்தனர். அவர்களது ஆடைகள் அனைத்தும் கடலில் தூக்கி வீசினார்கள். முழு நிர்வாணத்துடன் 4 மீனவர்களையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இந்த தாக்குதலில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை எச்சரித்த விட்டு இலங்கை கடற்படையினர் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 4 பேரும் நள்ளிரவில் கரை திரும்பினார்கள்.

இன்று காலை உயிர் தப்பிய காளியப்பன் உள்பட 7 மீனவர்களிடமும் மீன்வளத்துறை இணை இயக்குனர் உமாகாந்தன் விசாரணை நடத்தினார்.

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் செல்லப்பன் பலியானதால் வெள்ளம்பள்ளம் , ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.




19 thoughts on “தமிழக மீனவரை கொடூரமாக தாக்கிக் கொன்ற சிங்கள கடற்படையினர்!

  1. Mariappan

    இந்திய கடற்படை என்ன செய்கிறது?

  2. sakthivel

    சிங்களா, சிங்களா… நீ எத்தனை முறை தமிழனை அடித்து கொன்றாலும் நான் நடிகைகளின் குத்தாட்டத்தை ரசித்துகொண்டே இருப்பேன்
    -கருணா(ய்)நிதி.

    சாவது தமிழனாக இருப்பினும், வாழ்வது என் குடும்பமாக இருக்க வேண்டும்.
    – கருணா(ய்)நிதி.

  3. rajnibala

    //மீனவர்கள் கட்டியிருந்த வேட்டி-சட்டைகளை அவிழ்த்தனர். அவர்களது ஆடைகள் அனைத்தும் கடலில் தூக்கி வீசினார்கள். முழு நிர்வாணத்துடன் 4 மீனவர்களையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இந்த தாக்குதலில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர்….//

    அந்தோ..! தமிழனின் நிலை இது தானோ..!

  4. Dinesh

    நம்ம ஆளுங்க என்ன மயிர புடுங்குராணுங்க…

  5. Aaryan

    என்ன சூர்யாவுக்கும் விவேக் ஒபரோய்க்கும் எதிரா போராடுற போராளிகள காணோம், லீவுல போய்டாங்களோ …?
    கண்ணா முதல்ல உங்க நாட்டு மீனவர்களுக்கு ஒரு நல்ல வழிய அமைச்சு கொடுக்க பாருங்க அப்புறம் ஈழ தமிழர்க்கு எதாவது பண்ணலாம், நடிகர்கள் எதாவது சொல்லிட்டா வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவீங்க இப்போ என்ன சத்தமே இல்ல..?

  6. dev

    Rediculous! still TM Chief Minister never opened the mouth, if he say anyting other than appointing a special committee to investigate the incident. Your CM will not hear the voices of fisheries people, he already sold his mind, kindness to Srilankan Goverment with the help of Sonia & CO.

    f***K CM… cannot do anything for tamil people.

    Dev
    malaysia

  7. முற்றம்

    தமிழர்களை பற்றி வடக்கத்தியர்களுக்கு எந்த கவலையும் இல்லை! இங்கிருக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசின் அடுத்த இலவச திட்டம் மூலம் என்ன கிடைக்கும் என்பதிலேயே நாட்கள் ஒடிப்போகிறது. இதில் இதெல்லாம் எம்மாத்திரம்!

  8. Thamilan

    இது போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு கூட தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து போரடதது மிகவம் துரதிர்ஷ்டமானது…. தமிழக அரசியல் கட்சிகளால் யாருக்கும் உபயோகம் இல்லை… இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளை வாக்களித்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய தவறு என்பது திரும்ப திரும்ப நிருபணமாகிறது….

    தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா !!!!

  9. Chozhan

    Mr.Aaryan . இந்த பிரச்சனைக்கு சூர்யாவும்,ஓபராயும் என்ன செய்கிறார்கள் என்று கேட்டு சொல்லுங்கள். நடிகர்களும் மக்களில் ஒருவர் தான். அவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து வரவில்லை. அவர்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள். நன்றாக படத்தை எடுத்து பணத்தை பார்கிறார்கள். ஆனால், இங்கும் ஒரு சில நல்ல உள்ளங்கள் தமிழ் மக்களுகாக போராடுகிறார்கள். அவர்களை குறை சொல்லி உன்னை நீயே அவமானபடுத்தி கொள்ளாதே.

    இலங்கையில் ஈழம் அமைந்தால் இந்த மீனவர்கள் நல்ல வாழ்கை வாழ்வார்கள்.

  10. Aaryan

    சோழா…! எங்க உங்களுக்கு தான் ஒரு போராட்ட குழு இருக்கே, எதாவது பண்ண பாருங்க, அசினுக்கு தடை விதிக்கணும் சூர்யாவுக்கு கடிதம் அனுப்பனும்னு போராடுநீங்க எங்க இதுக்கு சத்தமே இல்ல …?

  11. Aaryan

    சோழா இன்னும் ஒரு கேள்வி,
    ஈழம் அமைந்தால் விடிவு காலம் வரும்னு சொன்னீங்க .., அதுக்காக இங்க வந்து ஆயுதம் ஏந்தி போராட தயாரா ..? இல்ல அதுக்காக இன்னும் இங்க இருக்குற இன்னும் ஒரு பத்து இருவது லட்சம் தமிழர்கள் சாகட்டுமா..?

  12. palPalani

    இவரோட கைகளில் இரண்டு விரல்கள் இல்லையே? என்ன காரணம்?

  13. Chozhan

    இங்க ஒரு குழு இல்ல . மொத்த தமிழகமே இருக்கு. அதை எதிர்ப்பதற்கு தான் சில உன்னை போன்றவர்களை உள்ளடக்கிய குழுக்கள் இருக்கின்றது.

  14. eelam tamilan

    Good to see we have good agent from Suriya and Vivek Obrai as Aaryan… What a hell he wanted to do… ? He may talk for money he gets or earn with those films from Suriya….. I really doubt with his base.. even after seen this news, he was writing like this.. some thing missing form him to say him as tamil (not sure)… we could ignore him than spend our valuable time with this guy…but, as i commented earlier we have task for educate our people to understand what is going on. In meantime ignore people like aaryan if you meet on this way.. they will understand them one day when they get suffer… that is for sure..

  15. cuddalore shanthakumar

    கடிதத் தந்தை திரு கருணா அவர்களே, பேருனுக்கும் உன் பிள்ளைக்கும் மட்டும் பிளைட் ஏரி பொய் சொக்க தங்கம் சோனியாவ சந்திச்சி மந்திரி பதவி பிச்சை எடுக்க தெரியும், தமிழன் செத்தால் மட்டும் கடிதம் எழுதுகிறாயே ! இது தான் நெஞ்சுக்கு நீதியா! போய உன் ……….. நீதி!. தமிழனை நக்கி பிழைத்தது போதும் கொலைஞரே!
    இனியும் கடிதம் எழுதி எங்கள் நெஞ்சில் குத்தாதீர்கள்! எம் தமிழினத்தை காக்க தவறிய கொலைஞரே உங்கள் சண்முகநாதனிடம் சொல்லி குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! ஒவ்வொரு உயிருக்கும் விலைக் கொடுத்தாக வேண்டும் , உன் பிள்ளைகள் நடத்தும் சகோதர உத்தத்தில் தீமுக சமாதி ஆவது உறுதி!
    நாம் தமிழரை ஒன்றினயாத வரை நம் குரல் கொலைஞரின் கத்தத்தால் நசுக்கப்படும்.

  16. prabhu ramaswamy

    நெஞ்சு பொறுக்குதிலையே… இறைவ….

    விடுதலைக்குமுன் மானமுள்ள மனிதனாக வாழ்ந்த இந்தியனை சர்வதேச பொருளாதார மயமாக்கல் என்ற பேரில் வருடம்தோறும் பிச்சைக்கரார்கள் ஆக்கி கை எந்த வைத்து விட்டார்களே.. !

    காசுக்காக எதை வேண்டுமானாலும் விற்க கூடிய நிலையில் இன்று இந்தியன் உள்ளதற்கு காரணம்…. காங்கிரஸ் …. காங்கிரஸ்… காங்கிரஸ்.. மட்டுமே..

    காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும்.. மத்தியில் தமிழன் பிரதமராக அமர வேண்டும்… அப்போது ஒரு வேலை இந்த நிலை மாறலாம்

  17. krishsiv

    2020 la உலகம் அழிய போகுது சொன்னாங்க முன்னாடி
    அதுக்கு காரணம் சுனாமி பூகம்பம் …இது மாத்ரி ஏதும் இல்ல

    தமிழன் அழிவு ….அதன் விளைவு புரட்சி

    ஒன்றுமே இல்லாமல் போகும் காலம் வெகு அருகில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *