BREAKING NEWS
Search

தமிழக பத்திரிகையாளர்களைச் ‘சரிகட்டும்’ சிங்களர்கள்!

தமிழக பத்திரிகையாளர்களைச் ‘சரிகட்டும்’ சிங்களர்கள்!

சிங்கள இனவாதத்துக்கு எதிராக செய்திகள், கட்டுரைகளை வெளியிடும் மீடியா பிரதிநிதிகளை தேடித் தேடி சரிகட்டி வருகிறது இலங்கை ராணுவம். இதற்கு பெருமளவு உதவிகளைச் செய்து bribe-300x168வருபவர்கள் தலைநகர் சென்னையில் இருந்து கொண்டு சிங்களர்களின் பிரதிநிதிகளாகச் செயல்படும் சில ‘லங்கா ரத்னாக்கள்’தான்.

குறிப்பாக இலங்கை அரசின் சார்பில் இங்குள்ளவர்களைச் சரிகட்டும் பணியைச் செவ்வனே செய்து வருபவர், சந்திரிகாவின் கையால் விருது பெற்று பூரிப்படைந்த அந்த நபர்தான்.

இன்னொரு பக்கம் தமிழக பத்திரிகையாளர்களின் லட்சணத்தை நினைத்தாலே அருவருப்பாக உள்ளது. காரணம், ‘தேசியத் தலைவர் பிரபாகரன்’ என்று வாய் கிழியப் பேசியவர்கள்தான், சிங்கள பிரதிநிதிகளின் அழைப்பு கிடைத்ததும் ஓடோடிப் போய் அந்த விருந்துகளில் கலந்து கொண்டு, தங்க சங்கிலிகள், பிரேஸ்லெட்டுகள், மதுப் புட்டிகளைப் பரிசாக வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

தமிழ் இனத்தின் மானமே தன்மானம் எனக் கருதும் ஓரிருவர் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.

இதுகுறித்து அருட்தந்தை ஜெகத் கஸ்பர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் தனது கட்டுரையொன்றில்:

“சென்னையிலுள்ள ஸ்ரீலங்காவின் தூதரக அதிகாரிகளும் கூட மிகுந்த உணர்வுக் கொந்தளிப்பிலும் அங்கலாய்ப்பிலும் இருப்பதாக பத்திரிகைத்துறை நண்பர் ஒருவர் கவலையுடன் கூறினார். “சற்றேறக்குறைய இங்கு எல்லோரையும் சரிக்கட்டி விட்டோம், நக்கீரனையும் இந்த ஜெகத் கஸ்பரையும் மட்டும் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை”, என்ற கோபமாம். “குறிவைத்து அடித்தால்தான் சரிப்பட்டு வருவார்கள்” என்று சிலுப்பியதாகவும் சொன்னார்.

லீ மெரிடியன் விருந்தில் பத்திரிகையாளர்கள்…

அவர்களது வெற்றிப் பிரகடனம் உண்மைதான். சற்றேறக்குறைய இங்கு முக்கியமான பலரையும் அவர்கள் சரிக்கட்டி விட்டார்கள்தான். லி மெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியில் பத்திரிகை துறை யினருக்காய் ஸ்ரீலங்கா தூதரகம் உல்லாச விருந்து வைத்ததும், 24 பேருக்கு தலா ஐந்து சவரன் தங்கச் சங்கிலி வழங்கியதும், தொடர்ந்து மூன்று நாளிதழ்களுக்கு தலா முப்பது ‘லேப்-டாப்’ கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும், தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும் அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்…

இன்னும் யார் யாருக்கு என்னென்ன ‘சப்ளை அண்ட் சர்வீஸ்’ நடந்ததென்பதும் நமக்குத் தெரியும். இவையும் தெரியும். இதற்கு மேலும் தெரியும்.

‘மன்னவனும், நீயோ, வளநாடும் உனதோ?’ என்று மதர்த்த கம்பனும், ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என நிமிர்ந்து நின்ற நக்கீரனும், ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று உண்மை முழங்கி காற்சிலம்பை வீசிய கண்ணகியும், “நாம் ஆர்க்கும் குடி அல்லோம்’ என்று முழங்கிய நாயன்மார்களும் பெருமையுடன் உலவித் திரிந்த இப்புனித பூமியில் இன அழித்தலுக்குத் துணை நின்று கூலி பெறும் கூட்டமொன்று வாழ்வது காண நெஞ்சு பொறுக்குதில்லைதான்.

அங்கு துடித்துச் சிதறிய தமிழ் உயிர்களின் மரணப் பழியில் இவர்களுக்கும் தூரத்துப் பங்கு உண்டுதான். துரோகிகள், இழிநிலையோர் ஆனாலும் அவர்கள் இந்நிலத்தவர்கள்- நம் தமிழகத்தவர்கள்.

நாடுகளுக்கிடையேயான உறவு ஒழுங்குகளின்படி அவர்கள் இந்திய அரசின் விருந்தினர்களாக இருக்கலாம். ஆனால் தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை இன அழித்தல் செய்த ஒரு கொலைகாரக் கும்பலின் பிரதிநிதிகள். இன்னும் 3 லட்சம் தமிழ் மக்களை திறந்த வெளிச் சிறையில் அடைத்து அணு அணுவாகக் கொன்றுவிடும் இரக்கமற்ற ஓர் கூட்டத்தின் ஊதுகுழல்கள்.

சாமிகளும், ஞானிகளும், ராமர்களும் அவர்களது பந்தியில் அமர்ந்து களிக்கட்டும். தமிழர் களது அழிவில் எப்போதும் களிப்பவர் கள்தான் அவர்கள். ஆனால் மானமுள்ள தமிழர்கள் நிறையபேர் இங்கு மிச்சம் இருக்கிறார்கள் என்பதை மட்டும் அவர்கள் நினைவில் கொள்ளட்டும்…”, என்று குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கான விருந்துகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. முத்துக்குமாரின் தியாகத்தை சிலிர்த்தும், களத்தில் மாவீரன் பிரபாகரன் தியாகத்தை சிலாகித்தும் எழுதிய பேனா மன்னர்கள் நட்சத்திர ஓட்டல்களின் பார்களிலும், ஜிம்கானா க்ளப்களின் புல்வெளிகளிலும் சிங்களம் ஊற்றிக் கொடுத்த போதையில் மல்லாந்து கிடக்கும் கேவலத்தை இன்னொரு செய்தியில் பார்ப்போம்!

-விதுரன்
4 thoughts on “தமிழக பத்திரிகையாளர்களைச் ‘சரிகட்டும்’ சிங்களர்கள்!

 1. makkal kural

  //மூன்று நாளிதழ்களுக்கு தலா முப்பது ‘லேப்-டாப்’ கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும், தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும் அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்…//

  திருப்பி அனுப்பிய அந்த நாளிதழ் தினதந்தி தானே……..

 2. சூர்யா

  @மக்கள் குரல்

  தினமணியாக இருக்க வேண்டும். ஈழப்பிரச்சினையில் தினத்தந்தி எப்போதோ மவுனமாகிவிட்டது. தினமணி இன்றுவரை இடித்துரைக்கிறது.

 3. Manoharan

  //மூன்று நாளிதழ்களுக்கு தலா முப்பது ‘லேப்-டாப்’ கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும், தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும் அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்…//

  DINAMANI…HATS OFF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *