BREAKING NEWS
Search

தமிழக தொகுதிகளில் காங்கிரஸ் தோற்கும்! – ராய்ட்டர்ஸ்

தமிழக தொகுதிகளில் காங்கிரஸ் தோற்கும்! – ராய்ட்டர்ஸ்

சென்னை: தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என பிரபல  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணித்துள்ளது.

sonia-karu2இந்த இழப்புக்கு மிக முக்கியக் காரணம் ஈழத்தில் நடக்கும் போரில் தமிழக வாக்காளர்களின் உறவுகள் படுகொலை செய்யப்பட்டு வருவதும், அதை ஆளம் காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதுமே ஆகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இழப்பு காரணமாக மத்தியில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படக் கூடும் எனவும் ராய்ட்டர்ஸ் கணித்துள்ளது.

தனது கணிப்பாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளதாவது:

கடந்த 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றது.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சிகள் அனைத்தும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன. மேலும் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இது காங்கிரஸ் அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். அதேபோல விலைவாசி உயர்வு, மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். குறிப்பாக பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் பாதகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திமுக முன்னணி தமிழகத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதால் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என்ற கவலையில் காங்கிரஸ் உள்ளதாம்.

தமிழகத்திற்கு பெருமளவிலான தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டாலும் கூட சாதாரண மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய திமுக அரசு தவறி விட்டதாக மக்கள் மனதில் எண்ணம் உள்ளது.

உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு கடுமையாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாக திமுக மற்றும் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இதில் மின் வெட்டும் சில மாதங்களுக்கு முன்பு மக்களைப் பாடாய்ப் படுத்தி விட்டது.

மின்வெட்டு காரணமாக தொழில்துறை பெரும் நசிவை சந்தித்துள்ளது. பல நூறு தொழிலாளர்கள் இதனால் வேலையை இழந்தனர். இந்தத் துறையினர் எல்லாம் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.

தற்போது இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இலங்கை இனப்படுகொலையை திமுகவும், காங்கிரஸும் தடுக்கத் தவறி விட்டதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். இது காங்கிரஸ் மற்றும் திமுக மீது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.

திமுக அரசு கொடுத்த இலவச கலர் டிவி, காஸ் ஸ்டவ் உள்ளிட்டவை மக்களுக்கு திருப்தியைக் கொடுத்தாலும் கூட இவற்றையெல்லாம் விட பல முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க திமுக அரசு தவறி விட்டதாகவே மக்கள் கருதுகிறார்கள்.

இவையெல்லாம் இந்தத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்கிறது ராய்ட்டர்ஸ்.
6 thoughts on “தமிழக தொகுதிகளில் காங்கிரஸ் தோற்கும்! – ராய்ட்டர்ஸ்

 1. palPalani

  இன்றைய ஜுனியர் விகடனில் 9 மட்டுமே தி.மு.க கூட்டணிக்கு!

 2. ராஜா

  திமுகவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். ஈழ பிரச்ச்னை கிராம மக்களுக்கு உரிய முறையில் கொண்டு செல்லப் படவில்லை.

  ஹ்ம் சனிக்கிழமை பார்ப்போம்.

 3. Rajkumar

  DMK will loose (may get 12-18 seats).. But my feeling is it may not be due to the Ezham issue.. already ppl were not happy due to power cuts etc… and ezham issue also slowed down their campign.. but from my opinion ppl will not vote based on ezham issue.. definitely the message is not taken down to the ppl in right way .. except for same set of ppl doing meetings after meetings , fastings .. I guess ppl are really bored of seeing all the political leaders contradicting their stand on this issue and ppl didn’t right picture about the issue..

 4. SS

  Looks like Cong DMK will more or less similar victory in 2004. It has been proved in the past when MGR allied with Janata, he was wiped out completely. Tamil Nadu people know who should rule in the centre. Since BJP is not stronger in TN, the only choice is Cong alliance and it will sweep the poll completely.

  TN never gave confused mandate for parliament.

 5. natessan

  Dmk-Congress combine is sure to win atleast 35 loksabha seats—there is no history since 1972, congress was defeated in tamilnadu except in 1996 when TMC was formed by moopanar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *