BREAKING NEWS
Search

தமிழக அரசின் செலவில், கண்காணிப்பில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை! – முதல்வர்

தமிழக அரசின் செலவில், கண்காணிப்பில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை! – முதல்வர்

டெல்லி: பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு சென்னையில் தமிழக அரசின் கண்காணிப்பில், அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார்.

பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதன் விபரம்:

பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பது பற்றி இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்bர் மு.க.ஸ்டாலின் அறிக்கை படித்துள்ளார். அப்போது சில நிபந்தனைகளோடு என்று சொல்லியிருக்கிறார். என்ன நிபந்தனைகள்?

பெரிய நிபந்தனைகள் ஒன்றும் இல்லை. அவர்களின் பாதுகாப்பு கருதி, அரசின் மேற்பார்வையிலே அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து, அரசின் சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு, தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக அந்த அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.

அவருடைய பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் நாங்கள் குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியிருக்கின்ற நிபந்தனை. இது ஒன்றும் கடுமையானது அல்ல.

இலங்கையில் அதிகாரப் பகிர்வு

இலங்கையில் போர் முடிந்த பிறகு அதிகார பங்களிப்பு செய்யப்படும் என்று உறுதியளித்தார்கள். ஆனால் போர் முடிந்த பிறகு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வில்லையே? கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையே?

அது பற்றி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இதற்காக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?

நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். தனியாக வலியுறுத்த முடியாது. மத்திய அரசு மூலமாகத்தான் வலியுறுத்துவோம், என்றார்.




3 thoughts on “தமிழக அரசின் செலவில், கண்காணிப்பில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை! – முதல்வர்

  1. palPalani

    எதோ நல்லது நடந்தா சரி.. அதையும் காலங்கடத்தாம செய்யுங்கப்பா!

    பாவம் நெடுமாறன் அரசியல் செஞ்சார்ந்னு சொல்லுட்டு இப்போ நீங்க நடத்துற இந்த காமடிக்கு பெயர் என்ன? எதோ அந்த அம்மாவுக்க நல்லது நடந்தா சரி!

  2. குமரன்

    அதாவது அவர் கிட்டத்தட்ட சிறையில் இருப்பது போல இருக்கவேண்டும். நெடுமாறன், வைகோ உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் யாரும் அவரைப் பார்க்க வராமல் போலீஸ் காவல் போடவேண்டும்.

    இந்த வயதிலும் எப்படியெல்லாம் சிந்தித்து முடிவெடுக்கிறார் இந்த சிலைன்ஜர்?

  3. mariappan

    பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுது சொட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *