BREAKING NEWS
Search

தமிழகம் முழுக்க பிரபாகரன் பிறந்த நாள் போஸ்டர்கள்!


தமிழகம் முழுக்க பிரபாகரன் பிறந்த நாள் போஸ்டர்கள்!

சென்னை: நாளை மறுநாள் 55-வது பிறந்தநாள் காணும் விடுதலைப் புலிகள் தலைவர் வே பிரபாகரனை வாழ்த்தி தமிழகம் முழுக்க பெரிய அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Perabakaran-30x40-1-copy

இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கம் இந்தப் போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டியுள்ளது. ஒவ்வொரு போஸ்டரிலும் ஒட்டியவரின்  அல்லது நாம் தமிழர் கிளையின் மொபைல் நம்பரும் தரப்பட்டுள்ளது. போலீசார் தேவையில்லாத பரபரப்பைக் கிளப்புவார்கள் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

சீமானின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சியிகளில் பிரபாகரன் படங்கள் இடம்பெறுவதற்கு போலீசார் பெரும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இந்த எதிர்ப்பு காரணமாக, சீமானின் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தீக்குளிக்கும் அளவுக்கு போனதெல்லாம் நடந்தது.

பிரபாகரன் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை வைக்க இப்போதும் போலீசார் அனுமதிப்பதில்லை.

இந்த சூழலில் பிரபாகரன் பிறந்த தினமான நவம்பர் 26 (வியாழன்) -ஐ எழுச்சி தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது நாம் தமிழர் இயக்கம்.

Perabakaran-30x40-2-copy

சதி வலைக்குள் தவிக்கிறது ஈழம் – நாளை

வலையறுத்து வாழ்வளிக்கும் வீரம்

மக்களை நெருக்கினாய் மாவீரர் பிறந்தனர்

மண்ணை நெருக்குகிறாய் ஈழம் பிறக்கும்

*****

எம் தலைவர் சாகவில்லை

என்றும் புலி ஓய்வதில்லை

விம்மியழ நேரமில்லை

வீரர் படை தோற்பதில்லை (சமீபத்தில் வெளிவந்து தமிழர் மத்தியில் மிகப் பிரபலமான பாடல் இது)

-என கவிதை வரிகள் மின்னுகின்றன அந்தப் போஸ்டர்களில்… பக்கத்தில் சிரித்தபடி பிரபாகரன்!

-என்வழி




6 thoughts on “தமிழகம் முழுக்க பிரபாகரன் பிறந்த நாள் போஸ்டர்கள்!

  1. arulnithyaj

    உண்மையில் “த‌மிழின‌ த‌லைவ‌ர்” என்ற‌ ப‌ட்ட‌த்திற்கு முழுமையான‌ த‌குதி திரு.பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ளுக்கு பொருந்தும். அவ‌ர் பிற‌ந்த‌ நாள் உண்மையில் “த‌மிழ‌ர் எழுச்சி நாளே”

  2. pjs

    எம் தலைவர் சாகவில்லை

    என்றும் புலி தேற்பதில்லை

  3. BaijuaBalakrishnan/Coimbatore

    “என்றும் புலி தேற்பதில்லை”
    தவறு உள்ளது வினோ என்றும் புலி தோற்பதில்லை திருத்தவும்.

    நன்றி,
    பா.பைஜூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *