BREAKING NEWS
Search

‘தமிழகத்தின் ராகுல் காந்தி என்மகன் விஜய்!’ – உணர்ச்சி வசப்படும் எஸ்ஏசி

‘தமிழகத்தின் ராகுல் காந்தி என் மகன் விஜய்!’ – உணர்ச்சி வசப்படும் எஸ்ஏசி

ன் மகன் விஜய் தமிழகத்தின் ராகுல் காந்தி மாதிரி. இளைஞர் முன்னேற்றத்துக்காக அவர் ஏராளமான திட்டங்களை வைத்துள்ளார். sa_chandrasekarஅடுத்த சில மாதங்களில் இளைஞர் மத்தியில் பெரும் புரட்சியை உண்டாக்குவார், என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.

நாளை 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாள். இதையொட்டி எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளதாவது:

விஜய்க்கு உள்ள இளைஞர் பட்டாளம் ஆச்சரியப்படுத்துகிறது. அவரது செல்வாக்கைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.

அகில இந்திய அளவில் இப்போது ராகுல் காந்தி எப்படி இளைஞர்களை ஒன்றிணைக்க பல திட்டங்கள் தீட்டுகிறாரோ, அதைப் போல மாநில அளவில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைக்க விஜய்யிடம் பல திட்டங்கள் உள்ளன. தமிழகத்தின் ராகுல்காந்தி என்று அவரை ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் தமிழக மக்களுக்கு புதிய மாறுதல் கொண்டு, வலுவான ஒரு மக்கள் இயக்கத்தை விஜய் ஆரம்பிப்பார்கள், என்றார்.

அடுத்த ஆண்டு அரசியல் கட்சி! – விஜய் அறிக்கை

இந்நிலையில், எனது ரசிகர்களை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அடுத்த ஆண்டு அரசியலில் கால் பதிக்கிறேன் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான ரசிகர்களே, ரசிகைகளே, அன்புத் தாய்மார்களே, நண்பர்களே, 1992-ம் ஆண்டு என்னுடைய முதல் படம் `நாளைய தீர்ப்பு’ வெளியானபோது எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தீர்கள். அந்த ரசிகர் மன்றங்கள் படிப்படியாக முன்னேறி சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்ந்து சமூக உணர்வோடும், சமுதாயச் சிந்தனையோடும் ஆக்கப்பூர்வமான நற்பணிகளை செய்து எனக்குப் பின்னே ஒரு மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்திருக்கிறீர்கள்.

பெரிய பெரிய நற்பணிகளை சேவை மனப்பான்மையோடு செய்து நல்ல சமூக நலத் தொண்டர்களாக உயர்ந்து இருக்கிறீர்கள். இது எனக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும் பெருமையான விஷயம்.

என் ரசிகர் மன்றங்கள் படிப்படியாக முன்னேறி, சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்ந்து, சமூக உணர்வோடும், சமுதாயச் சிந்தனைகளோடும் ஆக்கபூர்வமான நற்பணிகளை செய்து, எனக்கு பின்னே ஒரு மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்து இருக்கிறீர்கள்.

ஏழைகளுக்கு இலவசமாக வேட்டி, புடவை கொடுத்ததில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, நாளடைவில் இலவச திருமணம், இலவச பள்ளிக்கூடம் கட்டித்தருவது, ஏழை மாணவர்களைப் படிக்க வைப்பது உள்ளிட்ட சேவைப் பணிகளாக விரிவடைந்துள்ளது.

உங்கள் சமூக உணர்வையும், தொண்டு உள்ளத்தையும் பாராட்டி, நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ரசிகர்கள் சாதாரண ரசிகர்களாக மட்டுமில்லாமல், நற்பணி நாயகர்களாகவும், நல்ல சமூக சேவகர்களாகவும் உருவெடுத்திருப்பது பெருமையான விஷயம்.

நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி; கல்விக் கூடங்களில் தான் நாட்டின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால்தான், கல்விப் பணியில் நான் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறேன்.

பல நூறு ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைப்பதும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி வருகிறேன்.

கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி!

இந்த ஆண்டு என் பிறந்த நாளுக்காக சென்னையில் இரு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி துவங்குகிறேன். நான் எந்த நல்ல செயல்களை செய்தாலும், அதை ரசிகர்களாகிய நீங்களும் பின்பற்றி வருகிறீர்கள். எனவே, இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளியை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும். இதை என் பிறந்த நாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.

நேற்றைய தொண்டன் இன்றைய தலைவனாக இருக்கின்றான். அதுபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு என்பதை ஆழமாக மனதில் வைத்து, மேலும் உங்கள் சமூகப் பணியை வளர்க்க வேண்டும்.

இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்கு பாடுபடும், ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, ஒரு வலிமைமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையில், அடுத்த ஆண்டில் கால் பதிக்கிறேன், என அவர் தெரிவித்துள்ளார்.
17 thoughts on “‘தமிழகத்தின் ராகுல் காந்தி என்மகன் விஜய்!’ – உணர்ச்சி வசப்படும் எஸ்ஏசி

 1. R.Gopi

  தமிழ்நாட்டின் ராகுல் காந்தி
  ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா
  தென்னிந்தியாவின் ஒபாமா

  டேய், இதெல்லாம், ஒனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயாடா எஸ்.ஏ.சி.மண்டையா??

 2. டன்மானடமிழன்

  ///தமிழகத்தின் ராகுல் காந்தி என்மகன் விஜய்!’
  – உணர்ச்சி வசப்படும் எஸ்ஏசி///

  பெத்தபையன் மேல கோபம் இருக்கலாம
  ஆனா இப்படி கொலைவெறி இருக்ககூடாது

  எஸ்.ஏ.சி க்கும் விஜ்ய்க்கும் அப்படி
  என்னதான் பகை…சங்கவியை தவிர மத்த எல்லார்கிட்டையும்
  கேட்டுட்டேன் பதில்தான் தெரியலை

  கிணத்துல தள்ளிவிடலாம்
  தண்ணியில்லாத கிணத்துல தள்ளிவிடுறது டுமச்

 3. KADKAT

  விஜய், முதலில் பேச கற்றுகொள்ளுங்கள் & சபை நாகரீகம் அறியுங்கள்.

 4. BaijuBalakrishnan,Coimbatore/Bangalore,

  மிகவும் பெருமையாக உள்ளது…வினோ…..

  மேலும் பல பெருமைகளை உரித்தாக்கிக்கொள்ளவும்….

  பல ப‌டைப்புகளை என்வழி.காம் வழங்கவும் வாழ்த்துக்கள்…

  நன்றி!

  பைஜூபாலகிருஷ்ணன்.

 5. FUTURE DIRECTOR

  நாலு படம் பிளாப் ஆகியும் அடங்க மாதிரியே தம்பி!!!

 6. arul

  hi envazhi guys pls somebody arrange me to go to the space.i dont want to live in this earth by hearing these type of speeches from two comedy pieces(vijay and chandrasekaran).appa always teases somebody and his son always gives explanation or apology statement to those persons.congress have won thats why this guy call his son as raghul gandhi otherwise he call his son as varun gandhi.i really felt sorry for vijay for having this type of father.

 7. தெர்க்குத்தெரு தெறமசாலி

  போங்கடா பொறாமை புடிச்சவங்களா!

  இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க, ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ஆனா கைவிட்டுட மாட்டான்!

  தலைவா யோசிக்காதீங்க! வேகமாக வாங்க!

 8. Sivakumar

  Perum pugalai sampathikka virumpi

  Perul puyalil Vijayiy sikka vaikka pogirar Mr.S.A.C.

  Puyalukku pin yar yar (fans) iruppar endru pavam avarukku theriyavillai.

 9. prabu ramasamy

  thaliva,sivaji,karthik,t.rajendran,sarath kumar evungalukellam tamil nattula enna nelamainu theriyalaya, ne vera puthusava,va thaliva va seekarma vandu mannai kavvu,
  best of luck

 10. askar

  thaliva,sivaji,karthik,t.rajendran,sarath kumar evungalukellam tamil nattula enna nelamainu theriyalaya, ne vera puthusava,va thaliva va seekarma vandu mannai kavvu,
  best of luck

 11. Raja

  //எனக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும் பெருமையான விஷயம்.
  எது மாமியார் குளிக்கும் பொது சோப்பு போடுறதா?

  //ஒரு மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்து இருக்கிறீர்கள்.

  இதுதான் தனக்கு தானே சூனியம் வட்சிகிறதா?

  //அடுத்த ஆண்டில் கால் பதிக்கிறேன்

  அப்ப அதுக்கு அடுத்த ஆண்டுல முழுசா பொதச்சிடுவாங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *