BREAKING NEWS
Search

தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு பணியாது! – தங்கம் தென்னரசு

தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு பணியாது! – தங்கம் தென்னரசு

சென்னை: தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு பணியாது. திட்டமிட்டபடி இந்தக் கல்வியாண்டு முதல் அரசு நிர்ணயித்த கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

சட்டசபையில் இன்று பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன், பேசும்போது தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. கோர்ட்டும் அதை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

ஆனால் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் இந்த கட்டணம் போதாது பள்ளிகளை ஜூன் மாதம் திறக்கமாட்டோம் என்று கூறி உள்ளனர்.

அரசின் உத்தரவை மதிக்காத இந்த பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் வருமாறு:

தனியார் பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயம் செய்துள்ளது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த பள்ளிகள் அனைத்திலும் பள்ளிகளை நடத்த ஆகும் செலவு, அந்த பள்ளியில் உள்ள வசதிகள் எவ்வளவு கட்டணம் வாங்கலாம் என்ற அவர்களது கருத்து எல்லாவற்றையும் கேட்டு அறிந்த பிறகே ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கோர்ட்டும் ஏற்றுள்ளது. அதாவது, இந்தக் கட்டணங்களை அரசு தன்னிச்சையாக நிர்ணயிக்கவில்லை. தனியார் பள்ளிகளின் தேவைகள், கோரிக்கைகளைக் கேட்ட பிறகே, அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளது.

கலைஞர் அரசின் இந்த நடவடிக்கைக்கு சாதாரண ஏழை எளிய மக்களிடம் பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது. எந்த பள்ளியாவது கட்டணம் குறைவாக உள்ளது என்று கருதினால் சம்பந்தப்பட்ட குழுவிடம் முறையீடு செய்யலாம். அது பரிசீலிக்கப்படும். அதை விடுத்து மிரட்டல் விடுத்தால் அதற்கு இந்த அரசு அதற்கெல்லாம் பணியாது…” என்றார்.

பள்ளியைத் திறப்போம்… முறையீடு செய்வோம்!

இதற்கிடையே, அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் போதாது என்றும், இதை கைவிடாவிட்டால், பள்ளிகளைத் திறக்கமாட்டோம் என்றும் மிரட்டியிருந்தனர்.

அரசு இதற்குப் பணியவில்லை என்றதும், கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியிடம் முறையிடுமாறு அரசு கூறியுள்ளது.

இதனால், பள்ளிகளை வழக்கம் போல திறப்பதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

அரசு பணியக் கூடாது – பெற்றோர்

இந்த விஷயத்தில் தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை எக்காரணம் கொண்டும் அரசு ஏற்கக் கூடாது என்றும், இப்படி மூன்று மடங்கு உயர்த்தினால் பல பள்ளிகளின் அவர்கள் முன்பு வாங்கிய கட்டண அளவு வந்துவிடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர் பெற்றோர்கள்.

அரசுக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவு இருக்கும் போது, அரசு எதற்காக தனியார் பள்ளி நி்ர்வாகிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும். அப்படியே பள்ளியைத் திறக்காவிட்டால், அப்படியே விட்டுவிடலாம். அரசுப் பள்ளிகளுக்கு உரிய முக்கியத்துவமாவது கிடைக்கும் என்றனர்.




5 thoughts on “தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு பணியாது! – தங்கம் தென்னரசு

  1. sakthivel

    சபாஷ் சரியான நடிப்பு,
    ஏமாற பிறந்த மக்களிடம் ஏமாற்ற தெரிந்த அரசியல்வாதிகள். அருவெருக்கத்தக்க அரசியல் புழுக்கள்…….. மக்களின் உழைப்பை சுரண்டியே உயிர் வாழும் அட்டைபூச்சிகள்.

  2. Raj Devar

    ““தேவன் எப்போதும் எவனுக்கும் பணிந்ததில்லை .எமனுக்கும் அஞ்சியதில்லை““.
    என்று சொல்வதற்கு ஏற்றபடி தங்கம் தென்னரசு செயல்படுகிறார்

  3. குமரன்

    இதே மாதிரிதான் சில வருஷங்களுக்கு முன்னர், பொறியியல் கல்லூரி கட்டண விகித நிர்ணயம் என்று ஒரு நாடகத்தை கருணாநிதி அரசு நடத்தியது. உடனே ஜேப்பியார் தலைமையில் தனியார் கல்லூரி சங்கம் அமைத்து கவனிக்க வேண்டியவர்களைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தாரிகள். அப்படி கட்டண விகிதம் நிர்ணயித்தபோது ஒரு ஆண்டுக் கட்டணம் ரூ 40000 தான். தற்போது இதே ஆண்டுக் கட்டணம் ரூ 90000 . எல்லாம் நாடகத் தமிழ். முத்தமிழ் அறிஞர் அல்லவா?

    இப்போது பள்ளிக்கட்டணம் ரூ 5000 என்று அறிவிப்பார்கள். சங்கம் அமைத்து பொன்முடியின் மகன் சிகாமநியைத் தலைவர் ஆக்கி, நன்கு கவனித்தால் அடுத்த வருஷம் கட்டணம் காதும் காதும் வைத்தால் போல் ரூ 15000 .

    அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா

  4. ss

    இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும். ஏன் அவசர பட்டு குறை கூறுகிறீர்கள்.

    எனக்கென்னமோ இந்த அரசு, பள்ளி விஷயத்தில் உறுதியாக இருக்கும் என்று நினைக்கிறன். அரசியல் கணக்கு பார்த்தாலும், பள்ளி நிர்வாகிகளின் குடும்ப ஓட்டுகள், பண மூட்டைகளை விட, இந்த கட்டண குறைவால் சந்தோஷப்படும் குடும்பங்களின் ஒட்டு எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *