தனக்காக போக்குவரத்தை நிறுத்திய போலீசாரைக் கண்டித்த அழகிரி!
மதுரை: “மதுரை மக்களில் நானும் ஒருவன். எனக்காக போக்குவரத்தை நிறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். எப்போதும் போல மக்களுடன் ஒருவனாகவே நான் பயணம் செய்ய விரும்புகிறேன்…” என்று, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, போலீசாரிடம் கண்டிப்புடன் தெரிவித்தார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, கடந்த 6-ந் தேதி மதுரை வந்தார். அன்று முதல் அவர் தொடர்ந்து வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
அவரைக் காணும் பொதுமக்கள் அவரிடம் மனுக்களைக் கொடுத்து வருகின்றனர். அவற்றைப் பெறும் மு.க.அழகிரி, அவர்களது குறைகளை கேட்டறிகிறார். முடிந்தவரை அதே இடத்தில் தீர்த்து வைத்துவிடுகிரார். அல்லது கவனமாக மனுக்களை வாங்கிக் கொண்டு ஓரிரு நாளில் முடித்துத் தருவதாக உறுதி கூறுகிறார்.
நேற்று அவர் செல்லூரில் நடந்து வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்வதற்காக காலை 9 மணி அளவில் தனது வீட்டிலிருந்து கார் மூலம் புறப்பட்டார். அவரது வருகை குறித்து தெரிந்து கொண்ட போக்குவரத்து போலீசார் அவரது வீடு முதல் செல்லூர் மேம்பாலம் வரை வழிநெடுகிலும் வரிசையாக நின்று போக்குவரத்து சீர் செய்யும் பணியை மேற்கொண்டனர்.
காரில் வந்த அழகிரி, போலீசார் சாலைகளின் இருபுறமும் நிற்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். தனது உதவியாளரிடம், “ஏதாவது முக்கிய நிகழ்ச்சி உள்ளதா? யாராவது வி.ஐ.பி. வருகிறார்களா? இல்லை ஏதாவது இங்கு பிரச்சினையா?” என்று கேட்டாராம்.
அதற்கு உதவியாளர், “அப்படி ஒன்றுமில்லையே…” என்று கூறினார்.
இதனால் மு.க.அழகிரி தனது காரை நிறுத்தி விட்டு அங்கிருந்த போக்குவரத்து உயர் அதிகாரியை அழைத்து “ஏன் இங்கு நிற்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரி “மத்திய அமைச்சரான நீங்கள் வருவதால்தான் இந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டு இருக்கிறோம்” என்றார்.
இதனை கேட்ட மு.க.அழகிரி, கடும் கோபம் அடைந்தார்.
அந்த அதிகாரியிடம், “நான் என்ன மதுரைக்குப் புதுசா… 30 ஆண்டுகளாக நான் இந்த மக்களோடு மக்களாக மதுரையில் வாழ்ந்து வருகிறேன். மதுரை மக்களில் நானும் ஒருவன். மத்திய மந்திரி பதவி எனக்கு நிரந்தரமல்ல. எனக்காக போக்குவரத்தை சீர் செய்கிறோம் என்று கூறி பொதுமக்களுக்கு மிகுந்த போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி விட்டீர்கள். எனது வாகனம் மற்ற வாகனங்களை போல்தான் சாலையில் செல்லும். அதைதான் நான் விரும்புகிறேன். எனது வாகனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற வாகனங்களை நிறுத்த வேண்டாம். எனக்காக இங்கு நீங்கள் பணியாற்றுவதற்கு பதில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று போக்குவரத்தை சீர் செய்யுங்கள். முதலில் மக்களுக்கு நீங்கள் சேவை செய்யுங்கள், மக்களுக்கு சேவை செய்வதுதான் என்னுடைய கடமையும், ஆசையும்” என்றார்.
மேலும் மு.க.அழகிரி, “நான் திரும்பி வரும்போது, இந்த வழியில் ஒரு போலீஸ்காரர் கூட எனக்காக நிற்கக் கூடாது…” என்று அந்த அதிகாரியிடம் மிகவும் கண்டிப்புடன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மு.க.அழகிரி அங்கிருந்து பாலப் பணிகளை ஆய்வு செய்ய அங்கிருந்து புறப்பட்டார்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் அனைவரும் திரும்ப அழைக்கப்பட்டனர். மு.க.அழகிரி பாலப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு திரும்பும் போது மற்ற வாகனங்களைப் போலவே அவரது வாகனமும் வந்தது.
Kalakkureenga Mr. Azhagiri.
very good keep it up alagiri
super anna ungaletam erunthu enum niraya ather parkerom
பாராட்ட தக்க விஷயம். மிக்க நன்றி திரு அழகிரி!
Alagiri seems to be faaaaaaaaaaaa……….r better than his dad Stunt Master Kalaignar.
Enna ithu chipu chipaa varuthu
// முதலில் மக்களுக்கு நீங்கள் சேவை செய்யுங்கள், மக்களுக்கு சேவை செய்வதுதான் என்னுடைய கடமையும், ஆசையும்//
ரொம்ப நல்ல விசயமா ஒருக்கே… ஒரு நல்ல அரசியல்வாதி உருவாகிறாரோ..
better he keep up like this, do work for people, if he dont relise now, then he cont, all the best to him
அண்ணேன் சூப்பர்! இதே மாதிரி அந்த ரவுடிகளுக்கும் சொல்லிடுங்க!
ஐயோ மன்னிச்சிடுங்க, அப்படி சொலமுடியாதே….
ஆமாம் அவுன்கேள்ளம்தான் இப்ப MLA, வட்டம் மாவட்டம், மேயர் ஆகியச்சே!
—
Hello editor, I’m recently experiencing the following error in your website:
concurrent hits exceeded
Vetti Scence..Madurai people like me know his real faces.
அழகிரி உண்மையான நல்ல எண்ணத்துடன் கூறி இருந்தால்.. பாராட்டுக்கள் அழகிரி
//அண்ணேன் சூப்பர்! இதே மாதிரி அந்த ரவுடிகளுக்கும் சொல்லிடுங்க!//
annan padam kaamikkaraaru ithellaam aaramba image building scene! pulikku piranthathu maan aakathu enbathu mattum unmai!