BREAKING NEWS
Search

‘டைரக்டர்’ கருணாநிதி!

ஆடம்பரம் வேண்டாம்! – அஜீத்

மே 1-ம் தேதி அஜீத்துக்கு பிறந்தநாள். ஆர்வத்தில் தாங்களாகவே செலவு செய்து பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட ஆரம்பித்த ரசிகர்களை அப்படியே அமைதியாக்கியிருக்கிறது அவரது அறிக்கை.

“ஸ்பெயினில் பார்முலா 2 சாம்பியன் போட்டிகளில் நான் பிஸியாக உள்ளதால், மே 1ந் தேதி என்னுடைய பிறந்த நாளின்போது நான் சென்னையில் இருக்க வாய்ப்பில்லை.

ஆகையால் ரசிகர்கள் பிறந்த நாளின்போது என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆடம்பரமான முறையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ரசிகர்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டால் மகிழ்ச்சியடைவேன்” என்று அந்த அரிக்கையில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே தலைமை மன்றத்தின் அனுமதி இல்லாமல் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் அஜீத் ரசிகர்கள் ஈடுபடக் கூடாது என்று அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா எச்சரித்திருந்தது நினைவிருக்கலாம்.

காவல்காரனில் விஜய் மகன்!

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றிய விஜய்யின் மகன் சஞ்சய், அடுத்து காவல்காரன் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறாராம்.

சித்திக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், விஜய்யின் மகனாகவே வரும் சஞ்சய், பாடல் காட்சியிலும், சில முக்கியமான காட்சிகளிலும் நடிக்கிறாராம்.

இந்தப் படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது கும்பகோணத்தில் ஷூட்டிங் நடக்கிறது. அடுத்த சில தினங்களில் சஞ்சய் – விஜய-அசின் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

‘டைரக்டர்’ கருணாநிதி!

பா.விஜய் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை ஒன்று திரட்டி முதலாளிக்கு எதிரான போராட்டத்துக்கு தயாராகும் காட்சி. படத்தின் முதல் காட்சி இதுதான்.

இடம்: பெரம்பூர் பின்னி மில்ஸ்.

‘ஆக்ஷன்’ சொல்லி காட்சியை இயக்கி ஓகே செய்தவர்… தமிழக முதல்வர் கருணாநிதி.

அவர் கதை வசனம் எழுதியுள்ள ‘இளைஞன்’ படத்துக்குத்தான் இந்தப் படமாக்கம்.

மக்கள் எழுத்தாளர் மக்ஸீம் கார்க்கி எழுதிய ‘தாய்’ என்ற உலகப் புகழ் நாவலைத் தழுவி, கருணாநிதி எழுதிய தொடரான தாய்க் காவியமே ‘இளைஞனாக’ உருவாகிறது!

ஏற்கெனவே இந்தப் படம் தாய்க்காவியம் எனும் பெயரில் முதல்வரால் தொடங்கப்பட்டு, சில பிரச்சினைகளால் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.




4 thoughts on “‘டைரக்டர்’ கருணாநிதி!

  1. யூர்கன்

    ஒரு விஜய் தொல்லையே தாங்க முடியல இதுல இன்னொருத்தன் வேறயா ??
    பா.(வம்) விஜய்

  2. குமரன்

    விஜய் முதல்வராகும்போது துணை முதல்வர் ரெடி

    மத்திய அமைச்சர் கவிஞர் m.p. துணைவியார் எல்லாம் ரெடி பண்ணுங்கப்பா.

  3. rabeek

    முதலில் இவன் ஒழுங்காக நடிக்க கற்று கொண்ட பிறகு இவன் மகனை நடிக்க வைக்க வேண்டும்,ஏற்கனவே இவனோட கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை இன்னும் இவன் மகனோட தொல்லை வேற?என்ன கொடுமை சார் இது?

  4. Siva

    கருணாநிதிக்கு கூத்தடிகிறதும் கூத்தாடிகளும் ரொம்ப பிடித்தமான விஷயம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *