BREAKING NEWS
Search

டிசம்பர் 10-ல் ரஜினி – லதா தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம்!

டிசம்பர் 10-ல் ரஜினி – லதா தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.

ரஜினிக்கு வருகிற 12ந் தேதி 60 வயது முடிவடைந்து, 61-வது வயது பிறக்கிறது. இதையொட்டி அவருக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் செய்து வைக்க அவரது மகள்கள் மருமகன்கள் மற்றும் உறவினர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

அதன்படி, ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் தம்பதியின் அறுபதாம் கல்யாணம் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை போயஸ்க கார்டனில் உள்ள அவர்களின் வீட்டில் நடக்கிறது.

அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. புரோகிதர்கள் மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, ரஜினிகாந்துக்கும் லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் நடக்கிறது. இந்த விழாவில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் ரஜினி – லதா தம்பதிகளுக்கு இனிய மணிவிழா வாழ்த்துக்களை என்வழி மற்றும் அதன் வாசக நண்பர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்!

-வினோ

என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *