BREAKING NEWS
Search

டிஆர் பாலு தமிழரோ… இந்தியரோ அல்ல… சிங்களவர்! – தாமரை

போலீஸ்காரனாக அல்லாமல் கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா? – தாமரை

லங்கை விஷயத்தில் இந்தியா போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் திமுக எம்பி டி ஆர் பாலு.

இதற்கு பதிலடி தந்துள்ள கவிஞர் தாமரை, “இந்தியாவால் போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.

இத்தகைய நிலையில் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையையும் கண்டறிய இந்திய அரசு சிறப்பு தூதரை இலங்கைக்கு அனுப்பி கண்காணிக்க வேண்டும்..”

-இப்படி ஒரு கோரிக்கையை வைத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கலைஞர்.

இதன்பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்…கொழும்பிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,

“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது,” என தனது தலைவர் கருணாநிதிக்கே பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கைக்கு வாரியிறைத்திருக்கும் நிலையில்…, ‘அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சிங்களன் செலவழிக்கட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என்கிற ரீதியில் பாலு சொன்னது ஈழத் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

டிஆர் பாலு தமிழரா… இந்தியரா… சிங்களவரா?


டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி பேசிய கவிஞர் தாமரை, “தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்சேவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே… அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்லத் தயாராக இருக்கிறேன்.

டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா?” என்று காட்டமாகக் கேட்டார்.

‘பசில்தான் கிங்’

அதே பேட்டியில், டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினீர்களா?’ என்ற கேள்விக்கு

“ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று ‘கிங்’ ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது,” என கூறியிருக்கிறார்.

“ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் என்றால், டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்சே குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது,” என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!
4 thoughts on “டிஆர் பாலு தமிழரோ… இந்தியரோ அல்ல… சிங்களவர்! – தாமரை

 1. rajkumar

  ஹி இஸ் நாட் இந்தியன் நாட் தன்மிலன் ஆல் சோ வதோ வில் கிவ் தி மினிஸ்டர் போஸ்ட் இ டூ நோ கன்செல்லேத் தி இந்தியன் citizen ஷீப்

 2. ss

  இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது , கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியும்

 3. பாலாஜி குவைத்

  தி மு க இந்த கட்சி மற்றும் இதன் தலைவர்கள் யாரும் தமிழகர்கள் இல்லை . அங்கு என் இனம் அழிகிறது அதை விட்டிட்டு அங்க கனிமொழிக்கு இலங்கை சுற்றுலா இது தேவையா …………..யார் அனுப்பியது அப்பாவா எதுக்கு . எந்த எதிர்பும் காட்டாமல் சும்மா இருந்தற்கு பரிசு கொடுதார ராஜபக்சே ………………………

 4. Prashanthan

  இவங்களெல்லாம் பெத்த தாயையே வச்சு தொழில் பன்னுரவனுங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *