BREAKING NEWS
Search

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்…!

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்…!

ன்னன் படத்தில் தங்களுக்கு விருது கொடுக்க யாரோ ஒரு தொழிலதிபர் வருகிறார் என்ற அறிவிப்பு ஒலித்ததும் ரஜினியிடம் கவுண்டமணி இப்படிச் சொல்வார்:convocation_logo

“அட.. இந்த தொழிலதிபருங்க தொல்ல தா…ங்க முடியலப்பா… புண்ணாக்கு விக்கிறவன் குண்டூசி

விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்க…”

-பல மேடைகளில் டாக்டர் ‘எக்ஸ்’ அவர்களே… டாக்டர் ‘ஒய்’ அவர்களே என்று பேச்சாளர்கள் நீட்டி முழக்கும் போது அல்லது காம்பவுண்ட் சுவர்களை அசிங்கப்படுத்தியபடி போஸ்டர்களில் சம்பந்தப்பட்டவர்களின் படங்கள் பல்லைக் காட்டும்போதெல்லாம் எனக்கு கவுண்டரின் இந்த புகழ்பெற்ற நக்கல்தான் ஞாபகத்துக்கு வரும்.

இன்று எங்கும் மலிந்து கிடப்பதும் மலிவாய் கிடைப்பதும பட்டங்கள்தான்… நிஜமாய் சொன்னால் காத்தாடியை விட மலிந்துவிட்டன இந்த பல்கலைக் கழக கவுரவ பட்டங்கள்.

‘கவுரவ டாக்டர்’ பட்டங்கள் ஒரு காலத்தில் மிக உயர்ந்த கவுரவமாக, சமூக அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டன. இவற்றை சந்தையில் கருவாடு விற்பதைப் போல கூவிக் கூவி விற்க ஆரம்பித்துவிட்டன முன்னாள் அரசியல்வாதிகள் துவங்கிய பல்கலைக் கழகங்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது யாரால் தங்களுக்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்குமோ அவர்களுக்கு இந்த விருதுகளை வழங்கி வருகிறார்கள்.

இன்னும் சிலர் தகுதியான நபர்கள் சிலருக்கு இந்தப் பட்டங்களைக் கொடுப்பது போல கொடுத்து, அவர்களுடன் தகுதியில்லாத, ஆனால் விளம்பரப் பிரியர்களுக்கும் கொடுக்கிறார்கள்.

இப்படிக் கொடுப்பதைக் கூட ஏதோ ஒரு விதத்தில் பொறுத்துக் கொள்ளலாம்… ஆனால் கவுரவமாக ‘வாங்கிய’ இந்த பட்டத்தை பொது மேடைகளில், ஏதோ படித்து வாங்கிய பட்டம் மாதிரி போட்டுக் கொள்வதும், அழைத்துக் ‘கொல்வதும்’தான் தாங்க முடியவில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஐந்தாண்டுகளுக்கும் மேல் கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து, தீஸிஸ் சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர்கள்கூட தங்களை டாக்டர் பட்டம் போட்டு டமாரமடித்துக் கொள்வதில்லை.

எனக்குத் தெரிந்த சிலர் பிஎச்டி முடித்த பிறகு கூட, டாக்டர் என்று போட்டுக் கொள்ளாமல் முனைவர் என்று விளித்தாலே போதும் என்று கூறக் கேட்டுள்ளேன்.

புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர் அவர்களின் மனித நேயப் பண்பை பாராட்டி சென்னைப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 3 கல்வி நிறுவனங்கள் கவுரவ டாக்டர் பட்டங்களை அளித்து மகிழந்தன. அந்தப் பட்டத்துக்கு முழுமையான தகுதியுடையவர்தான் அவர். ஆனால் தன்னை அவர் டாக்டர் பட்டம் சூட்டி அழைக்க வேண்டும் என்று யாரிடமும் கூறியதாக சரித்திரமில்லை. புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் என மக்களே சூட்டிய பட்டத்தை விடவா…

ஆனால் கருணாநிதி…? அவர் விவகாரம் கொஞ்சம் காமெடியானது. டாக்டர் என போட்டுக் கொண்டு ஆரம்பத்தில் மகிழ்ந்தவர், பின்னாளில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு சென்டிமெண்டாக இந்த டாக்டர் மேட்டர்தான் காரணம் என யாரோ ஒரு ஜோதிடர் சொன்னதை நம்பிவிட்டார். இதனால்  பதவியிழந்த காலங்களில் டாக்டர் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் கட்சிக்காரர்களுக்கு உத்தரவே போட்டதெல்லாம் நடந்திருக்கிறது.

கடந்த முறை 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்த பிறகு, இப்போது தைரியமாக ‘டாக்டர் கலைஞராகி’விட்டார்.

இன்றைக்கோ ஏகப்பட்ட டாக்டர்கள்… நியாயமாக இவர்களைத்தான் போலி டாக்டர்கள் என்று அழைக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘கொல்’கிறார்களே!

கிண்டல் ஒருபக்கமிருந்தாலும், உண்மையிலேயே படித்த டாக்டர்களுக்கும் இந்த வெத்து வேட்டு டாக்டர்ர்ர்ர்ர்களுக்கும் மக்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போகிறது. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உண்மையிலேயே மருத்துவம் படித்த டாக்டர். தமிழக முதல்வரும் டாக்டர்தான். விஷயம் தெரியாதவர்களுக்கு இந்த இரு டாக்டர்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியப் போகிறது?

(அதற்காக கலைஞர் இந்த பட்டத்துக்கு தகுதியில்லாதவர் என்று நாம் கூறவில்லை. அவர் உண்மையிலேயே தகுதியானவர்தான். அவரைப் போன்ற சாணக்கியத்தனம் தெரிந்த அரசியல்வாதி வெகு குறைவு.)

மெத்தப் படித்து, அந்த விருதுக்கு முற்றிலும் தகுதியுடைய அறிஞர்களே இப்படிப்பட்ட பட்டங்களை போட்டுக் கொள்ள தயங்கும் அல்லது கூச்சப்படும் இந்த நாட்களில், சில அரைகுறைகள் தங்கள் செல்வாக்கையும் பிறரது சிபாரிசுகளையும் பயன்படுத்தி வாங்கிய டாக்டர் பட்டங்களை, தங்களுக்கு தாங்களே சூட்டிக் கொண்டு அலப்பரை செய்வதைத் தடுக்கவே முடியாதா!

அறிஞர்கள் பெரும்பாடுபட்டு டாக்டர் பட்டம் வாங்கும்போது கண்டுகொள்ளாத சமூகம், இந்த மாதிரி போலிகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருவது எத்தனை பெரிய அவமானம்?

பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற பட்டங்களை எப்படி கவுரமாக மட்டும் பார்க்க வேண்டுமோ, அதுபோல இந்த (வறட்டு) கவுரவ டாக்டர் பட்டங்களைப் பயன்படுத்துவதிலும் ஒரு வரைமுறை வைக்க மாட்டார்களா?

இந்த வரைமுறையை வைக்க வேண்டியது அரசா… அல்லது சமூகமா?

குறிப்பு: என்வழி இணையத்தில் இந்தப் புதிய பகுதியைப் பார்த்துவிட்டு நண்பரும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவருமான திரு எஸ். மோகன் நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயத்தை இங்கே தந்திருக்கிறோம். அவர் சொன்னதைத் தொகுத்தது மட்டுமே நமது பங்கு!
11 thoughts on “டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்…!

 1. Tom

  /***பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற பட்டங்களை எப்படி கவுரமாக மட்டும் பார்க்க வேண்டுமோ, அதுபோல இந்த (வறட்டு) கவுரவ டாக்டர் பட்டங்களைப் பயன்படுத்துவதிலும் ஒரு வரைமுறை வைக்க மாட்டார்களா?***/

  How? Why ilayaraja was not awarded till now? some stupid and idiot singers have already received this awards, I am very sure, all awards are given based on politics and not based on the performance,
  என்னை பொருத்த வரை பட்டம் என்பது காற்றில் பறக்க விட மட்டுமே!!!

 2. harisivaji

  சில பல்கலைகழகங்கள் ” நீங்க எங்க பங்ஷன்ல கலந்துகிட்டு சிறைபிசீங்கனா உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் தந்து உங்கள சிறப்போம்” சொல்றாங்கன்னு எனக்கு தோணுது
  இல்ல ….
  இவங்க “நான் உங்க இடத்துக்கு வரவேண்டும் என்றால் எனக்கு ஒரு பட்டம் தாங்க என்று கேட்டு இருப்பார்களோ “…
  என்னை பொறுத்தவரை கலைஞர் முதல்வர் அவருக்கு கொடுத்ததே நீங்க இப்படி சொல்றீங்க …
  சினிமால இருக்குறவங்களுக்கு எதுக்கு கொடுக்குறாங்க …
  50 படம் கூட முடிகாதவனுகெல்லாம் கூட கொடுக்றாங்க (அதுல பாதி பல்பு )
  மொதல இந்த பேரையே உபயோக படுத்த கூடாது தமிழில் வேற வார்த்தையா கிடைக்காது
  நல்லவேளை Engineer பட்டம் யாருக்கும் இது மாத்ரி கொடுக்காம இருக்காங்க
  என்னைக்கு இதுல கைய வைக்க போறாங்களோ …

  ஆண்டவா காப்பாத்து …

 3. r.v.saravanan

  பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற பட்டங்களை எப்படி கவுரமாக மட்டும் பார்க்க வேண்டுமோ, அதுபோல இந்த (வறட்டு) கவுரவ டாக்டர் பட்டங்களைப் பயன்படுத்துவதிலும் ஒரு வரைமுறை வைக்க மாட்டார்களா?
  kandippaga வரைமுறை வைக்க vendum

  illaiendral

  … புண்ணாக்கு விக்கிறவன் குண்டூசி
  விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்க…”

  enpadhu bol doctor pattamum agi vidum

 4. palPalani

  KS Ravikumarukku இந்த பட்டம் எதற்கு? நல்ல மசாலா படம் எடுத்தர்க்கா?

 5. ராஜ்

  காலடி சமஸ்கிருத பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் மோகன்லாலுக்கும், கேரள பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் மம்முட்டிக்கும் டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு பல்கலைக்கழக செனட் அங்கீகாரமும் வழங்கி இருந்தது. இந்நிலையில் கேரள கவர்னர் ஆர்.எஸ். கவாய்க்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், எனவே மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகிய இருவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என்று புகார்கள் வந்ததை அடுத்து டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வு தாமதம் ஆகிறது .
  ஆனால் இங்கு புகார் எழுப்பவே ஆள் இல்லை. அப்படி எழுப்பபட்டாலும் யாரும் கேட்கப்போறது இல்ல. ஏன் என்றால் ஒரு சில பல்கலைகழகங்கள் வியாபார நோக்கத்திற்காகவே சில அரசியல்வாதிகளால் நடத்தபடுகிறது. அவர்களுக்கு தேவை விளம்பரமே ஒழிய சமுகபொறுப்பும் , நேர்மையான செயல்பாடுகளும் அல்ல . அடுத்த வருடமே நடிகர் சிம்பு, நடிகை சினேகா, நமீதா கூட எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் வாங்கலாம். யாரும் ஒன்னும் கேட்கமுடியாது . அது அவங்க இஷ்டம் ஏன்னா அது அவங்க பல்கலைகழகம்.

 6. prakash

  Avanungae kuduthalam, evanungae Eppidi than manasatchi illamal antha Dr. patathae vaangu girargalo? KS Ravikumar, Vijay ennae pannargal to get this award? Dont they feel shame to accept this award? Dr award ku irunthae mariyathai ae poyidichi..Kaasu kuduthu vaangu girargalo? Intha vizhayathil thalaivar great..he doesnt accept these awards…becoz he has conscience.

 7. selva

  adding to what is written in the article: Doctor refers to one who has done some research or thesis which is approved by the University. the others are supposed to be called as physician, in tamil மருத்துவர். But in india even the homeopathy physicians are called doctor.

 8. Manoharan

  தமிழில் மிகவும் மலிந்துவிட்ட வார்த்தைகள் மூன்று. அவை புரட்சி,தளபதி,டாக்டர். இப்போதெல்லாம் அதிகமான கேனப்பயல்கள் இது மூன்றையும்தான் பயன்படுத்துகிறார்கள். அதுவும் நம் நடிகர்கள் தொல்லை இருக்கிறதே… அதை பார்ப்போம்.

  1.)எம்.ஜி.ஆர்_ மக்கள்திலகம்.உண்மையிலேயே அதிக மக்கள் செல்வாக்கு என்றால் அது எம்.ஜி.ஆர்தான்.

  2.)சிவாஜி_ நடிகர்திலகம். நடிப்பு என்றாலே அதன் அர்த்தம் சிவாஜிதான்.

  3.) ரஜினி_சூப்பர்ஸ்டார். இந்தியாவிலேயே அதிக சம்பளம்,அதிக வசூல்,அதிக ரசிகர்கள்.

  4.)கமல்_உலக நாயகன். உலக தரத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் முயற்ச்சியில் கமல் முண்ணணியில் இருக்கிறார்.

  5.)அஜித்_அல்டிமேட் ஸ்டார். அல்டிமேட் என்றால் அதற்க்கு மேல் ஸ்டார்களே இருக்கக்கூடாது.ஆனால் முதல் நான்கு இடங்களில் கூட ‘தல’இல்லையே.

  6.)விஜ‌ய்_இளைய‌ த‌ள‌ப‌தி. இவ‌ர் எந்த‌ நாட்டு போர் ப‌டைக்கு த‌ள‌ப‌தி என்று யாராவ‌து சொன்னால் கொஞ்ச‌ம் புண்ணிய‌மாய் போகும்.(ர‌ஜினி கூட‌ த‌ளப‌தி என்று ப‌ட‌ம் ந‌டித்துள்ளார்.)

  7.)விஜ‌ய‌காந்த்_புர‌ட்சிக‌லைஞ‌ர். இவ‌ர் சினிமாவில் செய்த‌ ஒரே புர‌ட்சி த‌ற்போது எல்லா க‌தாநாய‌கிக‌ளும் இவ‌ரை க‌ண்டாலே ஓடுவ‌து தான்.

  8.)ச‌த்ய‌ராஜ்_புர‌ட்சித‌மிழ‌ன்.என்ன‌ கொடுமை சார் இது. த‌மிழில் அதிக‌ கெட்ட‌ வார்த்தைக‌ள் பேசி புர‌ட்சி ப‌ண்ணிய‌வ‌ர் இவ‌ர்தான்.

  9.)ச‌ர‌த்குமார்_சுப்ரீம்ஸ்டார்.இவ‌ரும் அஜித் கேஸ்தான். இவ‌ர் ந‌டிக்கும் ப‌ட‌ங்க‌ளில் உள்ள‌ ஸ்டார்க‌ளில் வேண்டுமானால் இவ‌ர் சுப்ரீமாக‌ இருக்க‌லாம். அதுவும் ப‌ழ‌ஸிராஜாவில் போச்சு.

  10.)விவேக்_ச‌ன‌ங்க‌ளின் க‌லைஞ‌ன். அப்போ ம‌த்த‌வ‌ன் எல்லாம் என்ன‌ மிருக‌ங்க‌ளின் க‌லைஞ‌னா..?

  11.)சிம்பு_லிட்டில் சூப்ப‌ர்ஸ்டார். இவ‌ர் என்றைக்குமே,எல்லா விஷயத்திலுமே லிட்டில்தான். பெருசாக‌வேமுடியாது என்று இவ‌ரே முடிவு ப‌ண்ணிவிட்டார்.

  இன்னும் சின்ன‌த‌ள‌ப‌தி,புர‌ட்சித‌ள‌ப‌தி,கேன‌த்த‌ள‌ப‌தி என்று நிறைய‌ இருக்கிறது. ஆனால் முடியலை. இதுக்கே கண்ணை கட்டுதே.

  இந்த போட்டியில் சிக்காமலிருக்கும் விக்ரம்,சூர்யா,தனுஷ் மூவரும் தமிழ் சினிமாவுக்கே லாயக்கில்லை.

 9. reader

  //பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற பட்டங்களை //

  அவைகள் பட்டங்கள் அல்ல மைய அரசு வழங்கும் விருதுகள்! Awards not titles.
  பட்டங்களைத்தான் பெயருக்கு முன்னால் போடுவார்கள். விருதுகளை அல்ல.
  ‘பத்மஸ்ரீ’ கமல், ‘பத்மஸ்ரீ’ விவேக் என்பதெல்லாம் முட்டாள்தனமின்றி வேறொன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *