BREAKING NEWS
Search

ஞாநியின் கோணல் சிந்தனைகள்!

ஞாநியின் கோணல் சிந்தனைகள்! – விளாசும் தாமரை

ல விஷயங்களில் கருத்து வேறுபட்டு நின்ற தமிழனும் கூட, கைகோர்த்து செயல்பட்டு வெற்றி கண்ட விஷயம், இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவைத் (ஐஃபா) தோற்கடித்ததுதான்.

சர்வதேச அளவில் போர்க்குற்றவாளியாக நிற்கும் இலங்கையின் ரத்தக் கறையைத் துடைக்கும் மன்மோகன் சிங் அரசின் முயற்சிதான் இந்த ஐஃபா விழா.

இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத இந்திய ஆட்சியாளர்கள், அடுத்த கணமே டெல்லியில் ராஜபக்சேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுத்து ‘குளிப்பாட்டி’ அனுப்பியுள்ளனர். ஆனால் என்ன செய்தாலும் கழுவ முடியாத பாவக் கறை அது என்பது குற்றவாளி ராஜபக்சேவுக்கும் அவரது உற்றதுணையான இந்திய ஆட்சியாளர்களுக்கும் போகப் போக புரிந்துவிடும்.

ஐஃபா விழாவை அனைத்துத் தமிழரும் (ஒப்புக்காகவாவது) எதிர்த்து நிற்க, தமிழர்களுள் ஒருவராக, பெரியாரிஸ்டாக, மார்க்சியம் போசுபவராக அவ்வப்போது வேஷம் போடும் ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். சினிமாக்காரர்கள் இலங்கைக்குப் போய், தமிழனைக் கொன்று களைத்துப் போயிருக்கிற சிங்களர்களுக்கு களிப்பூட்டியிருக்க வேண்டும் என்பது அவரது (சொத்தை) வாதம்.

எப்போதுமே, பெரும்பான்மை மக்கள் ஒரு விஷயத்தை ஒன்றுபட்டு செய்தால் அதனை எதிர்த்து கருத்து சொல்வது ஞாநி போன்றவர்களின் மனப்போக்கு. அப்போதுதான் நாம் கவனிக்கப்படுவோம் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடே இது!

சினிமாக்கார்களும், சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களும் ஐஃபா எதிர்ப்புணர்வை போராட்டங்களாக வெளிப்படுத்திய நேரத்தில், ‘இதெல்லாம் வேலைக்காகாது’ என்று கமெண்ட் அடித்தவர்கள்தான் ஞாநி போன்றவர்கள். இந்த அளவு அந்தப் போராட்டம் வெற்றியடையும், இலங்கையின் முகத்தில் இவ்வளவு பலமாக சாணியடிக்கும் என்றெல்லாம் இவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. அதன் விளைவுதான், ஐஃபா விழாவுக்கு எல்லோரும் போயிருக்க வேண்டும் என்று ஞாநியை சொல்ல வைத்திருக்கிறது. சீமான் போன்றவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச வைத்துள்ளது.

ஞாநியின் இந்த கோணல் சிந்தனைகள் பற்றி கவிஞர் தாமரை இப்படிக் கூறுகிறார்:

“சர்வதேச இந்தியத் திரைப்பட விழா பெருத்த தோல்வியில் முடிந்துள்ளது தமிழகத்திலுள்ள சில அறிவு ஜீவிகளுக்கு மாறாத ஜீரணத்தை ஏற்படுத்தியுள்ளது. கலை, காருண்யம், மனசாட்சி என்று அவர்கள் புளித்த கொட்டாவிகளை பத்தரிகைகளிலும் செய்தி ஊடகங்களிலும் உருவாக்கி வருகிறார்கள்.

தன்னை விமர்சகர் என்று சொல்லிக் கொள்ளும் ஞாநி வார இதழ் ஒன்றில் திரைத் துறையினரின் புறக்கணிப்பை கண்டித்து எழுதியிருக்கிறார். போர் மனிதர்களை பிரிக்குமாம், கலைதான் ஒன்றிணைக்குமாம். தமிழ் திரைத் துறையினர் இலங்கை போய் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார்களாம்.

மனசாட்சியை முன்னிறுத்தி இதேபோல் காருண்யத்தின் மடையை ஞாநி அந்தக் கட்டுரையில் எக்கச்சக்கமாக திறந்திருக்கிறார்.

அவை பற்றி மேலும் குறிப்பிடுவதற்குமுன் ஞாநியின் விமர்சன முறை பற்றியும் ஈழப் பிரச்சனையில் அவரது மனநிலை எத்தகையது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இசை விமர்சகர்கள், சினிமா விமர்சகர்கள், அரசியல் விமர்கர்கள் என்று தனித்தனியே இருக்கிறார்கள். இவர்கள் அந்ததந்தத் துறையில் வல்லுனர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஞாநி ஆகாயத்துக்கு கீழ் உள்ள அனைத்தையும் விமர்சிப்பவர். இதன் காரணமாக அவரது விமர்சனத்தில் தனி மனித விருப்பு , வெறுப்பு எப்போதும் துலக்கமாகவே வெளிப்படும். ஈழப் பிரச்சனையே அதற்கு ச‌ரியான உதாரணம். இதே வார இதழில் சென்னையில் சில குடியிருப்புகளை அரசு அகற்றியதைப் பற்றியும் அதன் காரணமாக பள்ளிச் சிறுவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதையும் ஞாநி விரிவாக எழுதியிருந்தார். கட்டுரை அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை. ஈழப் பிரச்சனை பற்றி பேசும் எந்த அரசியல்வாதியும் இது குறித்து கவலைப்படவில்லை என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.

சென்னைக் குழந்தைகளின் படிப்பு விஷயத்தை பேசும் போது எதற்குத் தேவையில்லாமல் ஈழம் குறித்துப் பேசுகிறவர்களை இழுக்க வேண்டும்? உள்ளூர் பிரச்சனைகளை முடித்தப் பிறகுதான் வெளியூர் பிரச்சனைப் பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டும் என்று அவர் கூற விரும்புகிறாரா? அப்படியானால் இங்குள்ள குடிநீர்ப் பிரச்சனையை முன்னிறுத்தி குஜராத் படுகொலைகள் பற்றி பேசுகிறவர்களை முடக்க முடியும். கொசுப் பிரச்சனையை முன்னிறுத்தி காசா பிரச்சனைப் பற்றி பேசுகிற வாய்களை அடைக்க முடியும்.

ஏன்… ஞாநி கூட உள்ளூர் பிரச்சனைகள் எத்தனையோ முடிக்கப்படாமல் இருக்கும் போது வெளிநாட்டு பிரச்சனைக்கு கண்ணீர் சிந்தியிருக்கிறார். ஆக, அவரது நோக்கம் உள்ளூரா வெளியூரா என்பதல்ல. ஈழம், ஞாநிக்கு அலர்ஜி. அது குறித்துப் பேசுகிறவர்களை எப்படியேனும் மட்டம் தட்ட வேண்டும். மேலே குறிப்பிட்ட அவரது கட்டுரையில் வெளிப்பட்டது இந்த மனநிலைதான்.

ஈழம் குறித்து பேசுகிறவர்கள் உள்ளூர் பிரச்சனைகளைக் கண்டு கொள்வதில்லை என்பதானத் தோற்றத்தை மக்களிடையே உருவாக்கி, அவர்கள் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்க வேண்டும் என்பதே ஞாநியின் நோக்கம்.

காரணம், ஈழப் பிரச்சனையில் அவர் தமிழர்கள் சார்பாக நிற்க ஒருபோதும் விரும்பியதில்லை. ஈழப் போராளிகளை முன்னிறுத்தி ராஜபக்சேயின் படுகொலைகளை மறைக்கும் ஒரு படுதாவாகவே அவரது பேச்சும், எழுத்தும் இன்று வரை இருந்து வந்திருக்கிறது.

இதற்காக அவர் தனது உய‌ரிய கொள்கைகள் எனக் கருதுகிறவற்றையே காலில் போட்டு மிதிக்கவும் தயங்கியதில்லை. உதாரணமாக, சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் பாராட்டி எழுதிய ஞாநி, அரசியல் கருத்து வேற்றுமை உள்ள இருவர் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், பரஸ்பரம் நலம் விசரிப்பதும் ஆரோக்கியமான செயல் என்று கூறி, அப்படியில்லாத திராவிட கட்சி தலைவர்களைக் குட்டவும் செய்தார்.

இதற்குப் பெயர்தான் நவீன தீண்டாமை!

அதே ஞாநி, ஜெகத் கஸ்பர் பாதரியாரும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஒரே மேடையில் தோன்றிய போது தனது கட்டுரையில் இப்படி எழுதினார். ஜெகத் கஸ்பர் புலி ஆதரவாளர். காங்கிரஸ்காரரான கார்த்தி சிதம்பரம் எப்படி அவருடன் ஒரே மேடையில் இருக்கலாம்? அப்படியானால் கார்த்தி சிதம்பரம் ஜெகத் கஸ்பரின் புலி ஆதரவு கொள்கையை ஆதரிக்கிறாரா?

சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு கொள்கை காங்கிரஸுக்கு உடன்பாடானதா என்று கேள்வி எழுப்பாமல், அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசரித்ததை கொண்டாடிய ஞாநி, ஜெகத்கஸ்பர் விஷயத்தில் மட்டும் ‘நீ யார் பக்கம்?’ என்று வம்படியாக கேள்வி கேட்பது ஏன்?

ஏனென்றால் ஈழமும், ஈழப் போராளிகளும் ஞாநியால் சகித்துக் கொள்ள முடியாதவை. எத்தனை முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் பரஸ்பரம் பேசிக் கொள்ளலாம், நலம் விசாரிக்கலாம். ஆனால் ஈழத்தை ஆதரிப்பவன் என்றால் மட்டும் அவனுடன் யாரும் பேசக்கூடாது, பழகக் கூடாது, ஒரே மேடையில் தோன்றக் கூடாது. இதற்கு பெயர்தான் நவீனத் தீண்டாமை.

மேலே உள்ள ஞாநியின் இரு கருத்துகளுமே ஈழம் எத்தனை தூரம் அவருக்கு அலர்ஜி என்பதை உணர்த்திவிடுகின்றன. இதன் எதிரொலிதான் திரைப்பட விழாவைப் புறக்கணித்த திரையுலகினரை மனசாட்சியில்லாதவர்கள் என்று ஞாநி சாடியிருப்பதும்.

மனித மனங்களைப் பிரிப்பது அரசியல், ஒன்றிணைப்பது கலை என்று தனது கட்டுரையில் உருகியிருக்கிறார் ஞாநி. இதில் வேடிக்கை என்னவென்றால் ஞாநி வக்காலத்து வாங்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி கலையையே பிரித்து ஒரு அசிங்கத்தை பல வருடங்களாக அரங்கேற்றி வருகிறது. ஞ

சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி என்று பெயர். இருந்தாலும் இந்தித் திரைப்படங்களுக்கு மட்டும்தான் அவர்கள் விருது வழங்குவார்கள். இந்தியாவில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, மராட்டி, கன்னடம், வங்கம் என பிற மொழிகளை அவர்கள் கணக்கிலேயே எடுப்பதில்லை. இந்தியா என்றால் அவர்களுக்கு இந்தி மட்டும்தான்.

இந்திய மொழிகளையே மதிக்கவும், இணைக்கவும் தெரியாத ஒரு திமிர் பிடித்த அகாடமியின் முதுகில் ஏறி சிங்களவனையும், தமிழனையும் ஒன்றிணைக்க வேண்டுமாம். உளறலுக்கு ஒரு அளவில்லையா?

இறுதிக் கட்டப் போரில் ஐம்பதாயிரத்துக்கும மேற்பட்ட ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்ததற்கு என்ன காரணம்? ராஜபக்சே அரசு மற்றும் புலிகளின் தவறான அரசியலே காரணம் என்று எழுதுகிறார் ஞாநி.

புலிகளை முன்னிறுத்தி கொலைகாரன் ராஜபக்சேவை எப்படி காப்பாற்றுகிறார் பாருங்கள்!

திரைப்பட விழாவுக்கு செல்லாதவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று இரண்டு பக்கம் கண்டிப்பவர், ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்தவனை ஒரே வ‌ரியில் தாண்டிச் செல்கிறார். இதுதான் அறிவு ஜீவி ஞாநியின் மனசாட்சி. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோதும் நாம் கிரிக்கெட் விளையாடினோம், இப்போது மட்டும் ஏன் இலங்கையை புறக்கணிக்க வேண்டும் என்று இன்னொரு வக்காலத்து.

ஐயா, நாம் இப்போதும் இலங்கையுடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் சொல்வது போல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோது அமிதாப்பச்சன் பாகிஸ்தானில் டான்ஸ் ஆடினாரா என்பதுதான் எங்கள் கேள்வி? இல்லை, மும்பையில் கசாப் தாக்குதல் நடத்திய ஓராண்டு நிறைவு விழாவை பாகிஸ்தானில் விருது விழா நடத்தி கொண்டாடுவார்களா? அதில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று எந்த விமர்சகனாவது எழுதுவானா?

எத்தனைப் பெரிய யுத்தம் நடந்தாலும் கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும் கலாச்சார பரிவர்த்தனை நடத்திக் கொண்டிருப்பார்கள் என்றும் எழுதுகிறார் ஞாநி.

நிறவெறி காரணமாக பதக்கத்தை ஆற்றில் எறிந்த முகமது அலியும், அதே நிறவெறி காரணமாக விளையாட்டுத் துறையிலிருந்தே விலக்கி வைக்கப்பட்ட தென் ஆப்பரிக்காவும் இந்த அறிவு ஜீவியின் நினைவுகளிலிருந்து மறந்து போனது துரதிர்ஷ்டம்.

சிங்களவனுக்கும், தமிழனுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று மாய்ந்து போய் எழுதுகிறார் ஞாநி. இந்த நல்லுறவு கோஷம் ஒரு கொலைகாரனையும், பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்த ஒரு படுபாதக நிகழ்வையும் சாமர்த்தியமாக மறைக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

போலீஸ்காரர் ஒருவனிடம் நீ பணத்தைத் திருடினாயா என்று கேட்பதற்கும் திருடிய பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவது கேள்வியில் அவன் திருடன் என்பது உறுதி செய்யப்படவில்லை. இரண்டாவது கேள்வியில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதன் மூலம் குற்றம் சாற்றப்பட்டவன் நான் திருடனில்லை என்று மறுப்பதற்கான சாத்தியத்தைப் போலீஸ்காரர் நிராகரித்துவிடுகிறார்.

ஞாநி போன்றவர்களின் சிங்கள, தமிழர் நல்லுறவு கோஷமும் இத்தகையதே. நல்லுறவைப் பற்றி கூக்குரல் இடுவதன் மூலம் , நடத்தப்பட்ட படுகொலைகளுக்கெதிரான நீதி எங்கே என்று கேட்கும் குரல்களைத் தாண்டிச் செல்லப் பார்க்கிறார்கள். கொலைகளைப் பற்றியும், கொலைகாரனைப் பற்றியும் பேச முன்வராதவர்கள் கலை பற்றியும், நல்லுறவு பற்றியும் பேச தகுதியில்லாதவர்கள்.

ஞாநி தனது கட்டுரையில் ஈழத் தமிழர்கள் நல்ல திரைப்படங்களை உருவாக்கவில்லை, அதேநேரம் சிங்களவர்கள் உலகத் தரமான படங்களை இயக்கியிருக்கிறார்கள், கண் தானம் செய்வதில் முதலாவதாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறார். சமீபத்தில் இலங்கைச் சென்று வந்த விமர்சகர் அ.மார்க்ஸ் இதே வார இதழில் எழுதியிருந்த கட்டுரையில், சோழர்களால் இடிக்கப்பட்ட புத்தவிகாரை பார்க்க முடியவில்லை என்று அங்கலாய்த்திருந்தார்.

பிள்ளைக்கறி சாப்பிடுகிற ஒரு கொலைகாரனைப் பற்றி பேசும் போது, இல்லையில்லை அவன் நன்றாகப் பாடக் கூடியவன் என்று சொன்னால் எப்படியிருக்கும்? அதையேதான் இந்த அறிவு ஜீவிகளும் செய்கிறார்கள்.

பல்லாயிரம் உயிர்களைப் பலி வாங்கியதற்கு நாம் நீதி கேட்கிறோம். குற்றவாளிகள் சர்வதேச சமூகத்தின் முன்பாக நிறுத்தக் கூடிய சந்தர்ப்பம் தகைந்து வருகிறது. இந்த நேரத்தில் பிள்ளைக்கறி தின்பவனின் குரல்வளத்தை மெச்சுவதும், உன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் அவனது கோயிலை இடித்தான் என்பதும் எத்தகைய சந்தர்ப்பவாதம்?

ஹிட்லரின் படையால் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாறைப் பற்றி பல நூறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘சிண்ட்லர்ஸ் லிஸ்ட்’. இந்தப் படத்தில் யூதர்களின் படுகொலைகள் கச்சிதமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. வரலாறை ஸ்பீல்பெர்க் மறு உருவாக்கம் செய்திருந்தார் என்றே சொல்லலாம். ஆனால் இந்தப் படம் வெளிவந்த போது பல அறிவு ஜீவிகள் படத்தை எதிர்த்தனர்.

யூதர்கள் அன்று படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் படம் வெளிவரும் போது நிலைமை மாறிவிட்டது. யூதர்கள்தான் இன்று பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தி கொடூரமான ஆக்கிரமிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் யூதர்கள்பால் கருணை ஏற்படுத்தும் சிண்ட்லர்ஸ் லிஸ்டை ஸ்பீல்பெர்க் உருவாக்கியிருக்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுருக்கமாக ஆக்கிரமிப்பு யூதர்களுக்கு ஆன்ம பலம் தராதீர்கள்.

இந்த அறிவு வெளிச்சம் நமது அறிவு ஜீவிகளுக்கு இல்லாது போனது நமது துரதிர்ஷ்டம்தான். எதிரியின் கருணையை நம் மீது பீய்ச்சியடிப்பதன் மூலம், நடந்த படுகொலைக்கான நீதியை இவர்கள் தாமதப்படுத்துகிறார்கள். எதிரியின் நல்ல அம்சங்களைப் பட்டியலிடுவதன் மூலம், பார் நான் எவ்வளவு நடுநிலையான விமர்சகன் என்று மார்த் தட்டிக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் மார்த் தட்ட கொடுக்கப்படும் விலை எத்தகையது என்பதை அறிவு‌‌ ஜீவிகள் உணர வேண்டும்.

தமிழ் அமைப்புகளும், தமிழ்த் திரையுலகமும் மேற்கொண்ட முயற்சிகளும் அதன் பலன்களும் காலத்தின் கட்டாயம். அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் ஒவ்வொரு கலைஞனும், தமிழனும் படுகொலைச் செய்யப்பட்ட அப்பாவி ஈழத் தமிழனுக்கு நேர்மையான அஞ்சலியை செலுத்தியிருக்கிறான். இந்த அஞ்சலிதான் ஒவ்வொரு தமிழனின் சாலச் சிறந்த மனசாட்சியாக இருக்க முடியும்!
19 thoughts on “ஞாநியின் கோணல் சிந்தனைகள்!

 1. Gokul

  All these Eelam Supporters like Vaiko,Nedumaran,Seeman,Thirumavalavan always raise their voice for Eelam issues.They dont care about day-to-day sufferings of people living in tamilnadu.For them people living in srilanka is more important than the people living here.If somebody insults Prabhakaran , they all will protest for that.But is somebody insults Kamaraj/Anna/Rajaji , they will not bother about that.

 2. Ramesh

  @ Gogul

  Have you ever heard any of the Indian people being massacred by their own Indian government ?? So in Eelam it is a fight innocent lives. Have no critisism over the supporting politicians for the down trodden, direct them at the suppressing ones.

 3. Araivekkaadu Gokul

  கோகுல் அவர்களே
  உங்களைபோன்றவர்களின் சொத்தை வாதத்திற்கு கவிஞர் தாமரை இப்படி பதில் எழுதிஇருக்கிறார்..முதலில் அதை நன்கு படியுங்கள்.

  “உள்ளூர் பிரச்சனைகளை முடித்தப் பிறகுதான் வெளியூர் பிரச்சனைப் பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டும் என்று அவர் கூற விரும்புகிறாரா? அப்படியானால் இங்குள்ள குடிநீர்ப் பிரச்சனையை முன்னிறுத்தி குஜராத் படுகொலைகள் பற்றி பேசுகிறவர்களை முடக்க முடியும். கொசுப் பிரச்சனையை முன்னிறுத்தி காசா பிரச்சனைப் பற்றி பேசுகிற வாய்களை அடைக்க முடியும்”

  வைகோ, நெடுமாறன், சீமான், திருமாவளவன் போன்றோர் செய்த உள்ளூர் பிரச்சனை பற்றிய போராட்டங்களை எந்த மீடியாவும் பெரிதாக செய்தி வெளியிடுவதில்லை. உதாரணமாக முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்காக இவர்கள் எல்லோரும் செய்த போராட்டங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஈழம் பற்றிய இவர்கள் போராட்டங்கள் மட்டுமே மீடியாவால் பெரிதுபடுத்தி காட்டபடுகின்றது..ஏனென்றால் மொத்த மீடியாவும் இப்பொழுது கருணாநிதி கையில். இவர்கள் செய்யும் உள்ளூர் பிரச்சனை போராட்டங்கள் மீடியாவில் வந்தால் கருணாநிதியின் ஆட்சி அவலங்கள் வெளிவந்துவிடும் என்ற பயம் ஆனால் ஈழம் பற்றிய போராட்டம் பற்றி செய்தி வெளியிட்டால் உங்களைபோன்ற அரைவேக்காடுகள் பிரச்சனை என்னவென்றே தெரியாமல் இவர்களை தூற்றுவீர்கள் என்ற ஆதாயம்..

 4. Manoharan

  ஞானி எப்போதுமே ஒரு காமெடியன். முரண்பாடுகளின் மூட்டை. தான் கவனிக்கப்படவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக நல்ல விசயங்களுக்கு எதிர்பாட்டு பாடுவது,நல்ல மனிதர்களை விமர்சிப்பது என்று ஒரு சாக்கடையில் புரண்டுகொண்டிருக்கிறார். அவருக்கு தேவை தாமரை போன்றோர் இவரை பற்றி நாலு பக்கம் எழுதவேண்டும். அது நடந்துவிட்டது . வரும் வாரத்துக்கு நாலு பக்கங்களை நிரப்ப அவருக்கு இது போதும். சில முட்டாள்களை நம் கவனிக்க வேண்டியதில்லை. ஆனால் சில பைத்தியங்களை கவனித்துத்தான் ஆகவேண்டும். அப்படிப்பட்ட ஒரு பைத்தியம் ஞானி. அப்துல் கலாம் பற்றி கூட தவறாக எழுதியவர்தான் இந்த ஞானி. நம் வீட்டில் இருப்பவருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. முடியாமல் படுத்திருக்கிறார். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு விபத்து நடந்துவிட்டது என்றால் நாம் முதலில் அவருக்குத்தான் உதவ வேண்டும். அதுதான் மனிதாபிமானம். முதலில் தமிழ்நாட்டு பிரச்சனையை கவனிக்கவேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. இங்கே கொத்து கொத்தாக மனிதர்கள் கொலை செய்யப்படுகிறார்களா ? பல நூறு பெண்கள் கற்பழிக்கப் படுகிறர்களா ? வாழ்வு வசதிகளை இழந்து மண்ணோடு மண்ணாக புதைக்கப் படுகிறார்களா ? எஞ்சியுள்ள மிச்சப்பேரையும் அனுஅனுவாக பட்டினி போட்டு சித்திரவதை செய்கிறார்களா ? இங்கே இது நடக்கிறதா ? சொல்லுங்கள் …போராடலாம். அதைவிட 5 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் வருகிறதே, அதில் அரசாங்கத்தை மாற்றுங்கள் . குவார்டருக்கும் பிரியாணிக்கும் ஓட்டு போடும் ஆட்டு மந்தைகளுக்கு ஈழத்தை பற்றி பேச எந்த யோக்கியதையும் இல்லை. அதே போல் ஓட்டே போடாமல் வீட்டிற்குள் உட்கார்ந்த்துகொண்டு இந்துவுக்கு வாசகர் கடிதம் எழுதும் மேல்தட்டு மடையர்களுக்கும் ஈழத்தை பற்றி பேச அருகதை இல்லை.தமிழ்நாட்டில் வாழ்ந்தால் மட்டும் அவன் தமிழனாகிவிட முடியாது. உலகின் எந்த மூளையில் ஒரு தமிழனுக்கு கெடுதல் நேர்ந்தாலும் நெஞ்சிலும் உணர்விலும் கவலைப்படுபவனே உண்மையான தமிழன். கண்டவனெல்லாம் தமிழன் என்று சொல்லவேண்டாம். ஞானி போன்ற அரைகுறை மடையன்கள் ஏதாவது உளறிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அதற்க்கு திருப்பிக் கொடுக்க எங்களிடமும் தாமரை போன்றவர்கள் உண்டு.

 5. GokulDass

  கவிஞர் தாமரை அரைவேக்காட்டு ஞாநிக்கு அதால் பதில் சொல்லிருக்கிறார் அவன் ஒரு அரைவேக்காட்டு விட்டுத்தள்ளுங்கள் மேடம்

 6. kp

  “இங்கே கொத்து கொத்தாக மனிதர்கள் கொலை செய்யப்படுகிறார்களா ? பல நூறு பெண்கள் கற்பழிக்கப் படுகிறர்களா ? வாழ்வு வசதிகளை இழந்து மண்ணோடு மண்ணாக புதைக்கப் படுகிறார்களா ? எஞ்சியுள்ள மிச்சப்பேரையும் அனுஅனுவாக பட்டினி போட்டு சித்திரவதை செய்கிறார்களா ? இங்கே இது நடக்கிறதா ? சொல்லுங்கள் …போராடலாம். அதைவிட 5 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் வருகிறதே, அதில் அரசாங்கத்தை மாற்றுங்கள் . குவார்டருக்கும் பிரியாணிக்கும் ஓட்டு போடும் ஆட்டு மந்தைகளுக்கு ஈழத்தை பற்றி பேச எந்த யோக்கியதையும் இல்லை. அதே போல் ஓட்டே போடாமல் வீட்டிற்குள் உட்கார்ந்த்துகொண்டு இந்துவுக்கு வாசகர் கடிதம் எழுதும் மேல்தட்டு மடையர்களுக்கும் ஈழத்தை பற்றி பேச அருகதை இல்லை.”…………..மிக சரி மனோகரன் …..அப்படியே மனதில் உள்ளதை எழுதி விட்டீர்கள்……

 7. Ravanan

  ஞானி எவன் வைத்தான் இந்த பெயர்…. இவனுடைய பேட்டியை நிறைய இடத்தில் படித்துள்ளேன்…. இவன் ஒருவன் தான் புத்திசாலி என்பது போல் பேசுவான்…..

  இவன் ஈழத்தில் பிறந்திருந்தால் இப்படி பேசுவானா!

  குவாட்டர் அடித்துவிட்டு எழுதும் இவனுக்கு என்ன தெரியும் நம் சகோதரர்களின் வேதனை….

 8. மா இளங்கண்ணன்

  தன் பெயரையே ஞாநி என எழுதுகிறார், ஏன்? ஞாநி நிறை குடமா? இல்லை அரை குடம். பெயரிலே தெளிவு இல்லையே? தப்பாகக் கருதுகிறாரே?

 9. Kaaakaa

  ஞாநி ஒரு அரை மூளைக்காரன் , குடித்துவிட்டு உலருவதுதன் இவனுக்கு வேலை .

 10. palPalani

  என்ன கோகுல் இவ்வளவு அழகா பொறுமையா ஒரு கமெண்ட் போடுற உங்களால நெடுமாறனை, வைகோவை பற்றி கொஞ்சம்கூட தெரியாதா? உங்களுக்கு தெரியணும்னா புதுசா சானெல் ஆரமிபிச்சு அதுல நாலு குத்தாட்டத்த போட்டு, இடை இடையே சொன்னாதான் புரியுமா? சீமான் இப்போதான் அரசியலுக்கு வுருகிறார், திருமா பொது பிரச்சனைகளை விட அவர் சார்ந்த சமுதாய பிரச்சனைகளைதான் கையாள்வார். ஆனா வைகோ, நெடுமாறன் அப்படியில்லையே? அவர்கள் இருவரும் அரசியலில் தோற்றவர்கள் அதற்காக அவர்கள் போராடவே இல்லை என்பது பகல்ல நம்ம கண்ணை மூடிக்கிட்டு உலகம் இருட்டுன்கிற மாதிரி இருக்கு!

 11. saravanaraj .s.p

  மனோகரன் இந்த துடிப்பும் , கோபமும் அப்படியே இருக்கட்டும் நிச்சயம் நமக்கு வெற்றி தான்

 12. பாலா

  கோகுல் அவர்களே வைகோவும் நெடுமாறன் போன்றோர்கள் இங்குள்ள பிரச்னைகளுக்கு குரல் குடுக்க வில்லை என்று எப்படி நீங்கள் கூற முடியும்.. தமிழகத்தின் வளங்கள் சூறை ஆடப்படுவதையும், உரிமைகள் பரிபோவதையும் அவர்கள் போல் உண்மையாக எந்த அரசியல்வாதியும் மக்களிடம் எடுத்து சென்றதில்லை.. என் கடந்த மாதம் கூட வைகோவும் முல்லை பெரியார் பாதுகாப்பு அமைப்பினரும் ஏறக்குறைய 800 கிராமங்களில் கூட்டங்கள் நடத்தி மிகப்பெரிய மறியல் போராட்டத்தையும் நடத்தி உள்ளனர்.. மீடியாவின் கவனமும் உங்களை போன்றோரின் கவனமும் குஷ்பு மீது இருப்பதினால் நல்ல அரசியல்வாதிகள் உங்களுக்கு தெரிவதில்லை.. அரசியலில் பதவிக்கு வந்தவன் எல்லாம் நல்லவனும் அல்ல, வராதவன் கெட்டவனும் அல்ல.. உங்களை போன்ற அரை வேக்காடு அரசியல் பார்வையாளர்களால் இந்தியாவை இன்றைக்கு உலக அரங்கில் பெரும் தலை குனிவை நோக்கி செலுத்தும் அளவுக்கு ஆட்சியாளர்களுக்கு தைரியமும் மனிதாபிமானம் இல்லாமல் செயல்படும் நிலையும் வந்திருக்கிறது…

 13. Venky

  Gnani is an idiot…I have read few of his writings…அவனுக்கு மனசுல பெரிய *** இவன்-னு நெனப்பு….

 14. Jeyakumar

  முதலில் இதை எழிதியவருக்கு நன்றி. பல வருடங்கலாக ஞானி-யின் எழுத்தை வாசிப்பவன், ஈழத்தமிழர் ப்ரிச்சினையில் அவர் நிலை கண்டிக்கதக்கது. மன்சாட்சி மற்றும் மனிதாபிமானத்தை பற்றி பேசும் அருகதையை அவர் இழந்துவிட்டார். இவர் போன்றவர்களுக்கு வெகுஜன பத்திரிக்கைகள் கொடுத்து வரும் வாய்ப்பு கண்டிக்கதக்கது. இவர்கள் தமிழின துரோகிகள்.

 15. Krish

  ஞானி ஒரு பைத்தியகாரன். அவன் பேச்சை விட்டுத்தள்ளுங்கள் தோழர்களே.

 16. Hari

  “எப்போதுமே, பெரும்பான்மை மக்கள் ஒரு விஷயத்தை ஒன்றுபட்டு செய்தால் அதனை எதிர்த்து கருத்து சொல்வது ஞாநி போன்றவர்களின் மனப்போக்கு. அப்போதுதான் நாம் கவனிக்கப்படுவோம் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடே இது!”

  Even I felt the same about his writings. He tries to take centerstage in trying to portray himself different from the crowd.

 17. Earth Worm

  சிலபேர் தனது அறிவையும் திறமையும் சரியான திசையில் செலுத்தாமல் பேசுவதாலும் செய்வதாலும் தனது சந்ததியற்கே நாம் குழிதோண்டுகிறோம் என்று தெரியம்மல் ஞாநியாக இருந்தாலும் பேமானி மாதிரி பேசிக்கிட்டு இருப்பாங்க

 18. vicky

  தலைவர் ரஜினியை இழிவாக பேசியவன் சீமான் …வைகோவோடு அவனை ஒப்பிட கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *