Breaking News

ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் பத்திரிகை எரிப்பு – அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் தாக்குதல்!

Saturday, January 7, 2012 at 4:12 pm | 2,387 views

ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் பத்திரிகை எரிப்பு – அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் தாக்குதல்!

சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான  நக்கீரன் இதழை தமிழகம் முழுவதும் எரித்த அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

‘மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்’ என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் எரித்து வருகின்றனர். ‘ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது’ என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் எரிப்பு… அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வி.கே.மாரிமுத்து தலைமையில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

சாத்தூரில் அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பஸ்நிலையம் அருகே வாரப்பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி எம்எல்ஏ பரஞ்ஜோதி தலைமையிலும், வேலூரில் அமைச்சர் விஜய் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சியிலும் நக்கீரனை அதிமுகவினர் எரித்தனர்.

குடியாத்தம் டவுன், அரூர், ஈரோடு மற்றும் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினர் அந்த பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குன்னூரில் நகராட்சி சேர்மன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அலுவலகம் முற்றுகை… தாக்குதல்

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினர் கடும் தாக்குதல் நடத்தினர். சோடா பாட்டில், பெரிய பெரிய கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து உடைத்தனர்.

100க்கும் அதிகமான அ.தி.மு.கவினர் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினர்.  பாதுகாப்புக்காக வந்த போலீசார் எதையும் தடுக்க முயற்சிக்காமல் அமைதியாக நின்றதாக நக்கீரன் தரப்பு புகார் கூறியுள்ளது.

மேலும் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போய் அமர்ந்து கொண்டு, நக்கீரன் அலுவலகத்துக்கு எந்த பாதுகாப்பும் தரவேண்டாம் என வற்புறுத்தியதாகவும் பத்திரிகை அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.கவினரின் தாக்குதலைக் கண்டு பயந்து ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தாக்குதல் நடந்த போது நக்கீரன் ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரிகை அலுவலகத்துக்குள் இருந்தனர்.

நக்கீரன் அலுவலகத்துக்குள்  செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களும் தாக்குதலை நேரடியாக எதிர்கொண்டனர். பிற்பகலுக்குப் பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர்.

நக்கீரன் அலுவலகத்தைப் பூட்டிய எம்எல்ஏ

வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.

அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சர்ச்சைக்குள்ளான நக்கீரன் அட்டைப்படம்...

கருணாநிதி கண்டனம்

நக்கீரன் பத்திரிகை எரிப்பு மற்றும் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. கண்டிக்கத்தக்கது. எதிர்ப்பை சட்டப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும், என அவர் கூறியுள்ளார்.

மற்ற தமிழக அரசியல் கட்சிகளும் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

நக்கீரன் இதற்கு முன்பும் பல முறை ஜெயலலிதாவுக்கு எதிராக கட்டுரைகள் வெளியிட்டதால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

‘வரம்பு மீறி செய்திகள் வெளியிடுவது இவர்களின் வழக்கமாகிவிட்டது. குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் நக்கீரன் வெளியிட்ட இந்த செய்திக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்’, என அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் செய்தியாளர் அமைப்புகள் அதிமுகவினரின் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

-என்வழி செய்திகள்
நக்கீரன் வெளியிட்ட கட்டுரை:

 

 

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

29 Responses to “ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் பத்திரிகை எரிப்பு – அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் தாக்குதல்!”
  1. குமரன் says:

    நக்கீரனின் சாத்திய ரீதியிலான அட்டைப் படம் மட்டரகமான சிந்தனையின் அடிப்படியிலானது.

    நக்கீரனின் நாக்கு ஈரம்தான் பளபளக்கிறது.

    இதுபோல சாதீய அடிப்படையில் நக்கீரன் கலைஞரைப் பற்றியோ, வீரமணியைப் பற்றியோ, ராமதாசைப் பற்றியோ, ஈவேராவைப் பற்றியோ எழுதுவாரா?

    அதிமுகவின் இந்தத் தாக்குதலைப் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறுவது சரியல்ல.

  2. Rajkumar.V says:

    what u r talking kumaran. What is the problem of that news? Simply they told Jaya eat Beef.
    If she is not eat then she can go to Court. Why she is sending rowdys.

  3. ilaiyaraja says:

    இப்போது இந்தமாதிரி தாக்குவது அரசியலில் சகஜம் போல் இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எப்படி லஞ்சம் வாங்குவது எப்படி என்று சொல்லிகொடுத்து போல் ரவுடி அரசியல் சொல்லிகொடுத்து தி.மு.க. இப்போதும் அ.தி.மு.கவும் தி.மு.க. பாதையில் சென்றுகொடிருக்கிறதோ என்று என்ன தோன்றுகிறது. அப்படி செய்தால் தி.மு.க. போல் அ.தி.மு.கவும் காணமல் போகும்.

    அ.தி.மு.க. செயல் தவறு. அதே நேரம் தி.மு.க போல் மதுரையில் 3 பேரை கொன்ற மாதிரி யாரையும் எதுவும் செய்யவில்லை.

  4. Ganesh Shankar says:

    /*..நக்கீரனின் சாத்திய ரீதியிலான அட்டைப் படம் மட்டரகமான சிந்தனையின் அடிப்படியிலானது.

    நக்கீரனின் நாக்கு ஈரம்தான் பளபளக்கிறது.

    இதுபோல சாதீய அடிப்படையில் நக்கீரன் கலைஞரைப் பற்றியோ, வீரமணியைப் பற்றியோ, ராமதாசைப் பற்றியோ, ஈவேராவைப் பற்றியோ எழுதுவாரா?

    அதிமுகவின் இந்தத் தாக்குதலைப் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறுவது சரியல்ல. ..*/

    மிக சரியானது,உங்கள் கூற்று.
    சரியான கேள்வி.
    உண்மையான,துணிச்சலான கூற்று மற்றும் கேள்வி.

    மேலும்,நமது நாட்டில்,நீதிமன்றத்திற்கு எல்லா விடயத்துக்கும் செல்ல முடியாது.
    நீதிமன்றத்திற்கு சென்று,நீதி கிடைத்தால் மட்டும் தான் அது நாகரீகம்,அது வரை அது அநாகரீகம் இல்லை என்று எடுத்து கொள்ள ஆரம்பித்தால்,எல்லா விடயத்துக்கும் நாம் நீதிமன்றத்திற்கு தான் போக வேண்டும்.பிறகு வேலையை எவரும் செய்ய முடியாது.

    இதில் என்ன இருக்கிறது,செய்தி தானே என்று,எல்லா வற்றையும் கண்மூடித்தனமாக ஏற்று கொள்ள முடியாது.
    பத்திரிக்கை என்றால் ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டும்,தரம் வேண்டும்,நாகரீகம் வேண்டும்.
    வார்த்தை ஜாலங்களை வைத்து இது ஒரு செய்தி தான் என்று சொன்னாலும்,ஏன் இப்படி ஒரு செய்தியை நக்கீரன் போட வேண்டும்??
    உள்நோக்கம் இல்லாமலா??
    ஏன் தனி நபர் விமர்சனம்?? அதுவும் சாதியை வைத்து??
    தனிப்பட வாழ்கையை பற்றி குறிபிடுவது பத்திரிக்கை தர்மம் அல்ல.

    மேலும் வார்த்தை வைத்து செய்தி தானே என்று சொல்வது போல் சொல்லி, உள்நோக்கமாக,ஒரு கிண்டல் போல பல கருத்துகளை ஒவோவ்ருவாராலும் சொல்ல முடியும்.அதில் பல,அநாகரீகமாக இருக்கும்.
    இந்த நக்கீரன் செய்தியை அநாகரீகம் என்று கருதாமல்,அதற்கு ஒரு ஊன்றுகோல் போல் பேசுவது,அநாகரீகமாக அனைவரும் செய்தி என்று எதோ ஒன்றை போடுவதற்கு வழி வகுத்து விடும்.அது தவறு.

    மேலும்,சட்ட மன்ற தேர்தலிலே,தி.மு.க வென்று விடும் என்று கருது கணிப்பை வெளியிட்டு,அது நடக்க வில்லை என்ற பொழுது,தான் இட்ட கருது கணிப்புக்கு பொறுப்பு ஏற்காமல்,ஒரு காரணத்தை கூறியவர் அனைவரும் அறிந்ததே.

    ஒரு முறை ஒரு சாராருக்கு எதிராக கருத்தை வெளியிட்டால் பரவாஇல்லை .
    எப்போதுமே,எதிலுமே,விடயம் இல்லாத போதும் ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக,தனிப்பட விடயத்தை எல்லாம் எழுதுவதே அவருடைய உள்நோக்கம் என்ன என்று காட்டுகிறது.

    ஒருவருடைய தனிப்பட வாழ்க்கை,
    ஒருவருடைய ஜாதியை பற்றி மறைமுகமாக இகழ்வது(வஞ்ச புகழ்ச்சி),
    ஒருவருடைய மதத்தை பற்றி மறைமுகமாக இகழ்வது(வஞ்ச புகழ்ச்சி),இதெல்லாம் இல்லாமல் இருப்பது தான் மதிக்கத்தக்க பத்திரிக்கை தர்மம்.
    இதற்கெல்லாம் நீதிமன்றம் தேவை இல்லை,சுய சிந்தனை போதும் என்பதை பத்திரிக்கை படிப்பவர்கள் அறிவர்.

  5. S.Vijay says:

    Vino, Was talking about this to a friend of mine. A clear point….. If any of these medias/ news magazines will ever put a news like this ” Imaam eating pork” or similar to this??
    Don’t know why many people always address the brahmin community as “avaal”? Yes, thats the way people talk? Never seen been addressed Islamic community as “vaappa” or “ammy” people? Not here to create any problem between people….but try once to address them like this….
    That doesn’t mean admk’s attack should be justified…. In India/ Tamilnadu these things are quiet normal…. well we didn’t have a choice. So, started taking this as a normal things.
    Sorry, am unable to type in Tamil. Used to have NHM but itsn’t working/ unable to download it again…

  6. Rajkumar.V says:

    Rowdy politics introduced by Admk only 1991-1996 period they attack T.N Sesan, Subramaniyansamy, Chandraleka IAS, Sanmugasundaram IAS, And they fired bus due to jaya goes to Jail, for that 3 Girls are died. DMK introduce rowdyisam after seeing the 1991 jaya government.

  7. Rajkumar.V says:

    Voteku lanjam kudukarathum last 2001-2006 Jaya governmentla than start achu, Gumudipundi,Sathankulam,Vaniyambadi byelectionla all ministers camp adichu makaluku lanjam kuduthu vote vangunaga. Itha pathuthan DMK thirumangalathula copy adichuthu. So ithuvum Jaya plan than.

  8. Rajkumar.V says:

    Juniourvikatan,Reporter la Kanimolizhi,Rajava pathi thapa eluthuntha vidava nakkeeranla eluthitanga? Nakkeeranla jayavoda old job pathi ethum podaliye aparam ethku kothikaranga

  9. Rajkumar.V says:

    karuthukanipula intha oru electionla matum than Nakkeeran oda ganipu thvariduchu. But other papersoda ganipu ipa ore vati than correct achu

  10. Rajkumar.V says:

    Mr. Vino tamil font enoda PC la work agula athalathan englishla type paniruken. Sorry for inconviniance
    ___________

    Try to type in Envazhi comment box directly… It will be worked, I think!
    -Vino

  11. Sivaji Rao Veriyan says:

    //நக்கீரன் பத்திரிகை எரிப்பு மற்றும் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.//
    கள்ளத்தனம் செய்யும் ‘கள்ளன்’ நான் என்று போட்டிருந்தால் ஒத்து கொண்டிருப்பார் போல.

  12. குமரன் says:

    //பத்திரிக்கை என்றால் ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டும்,தரம் வேண்டும்,நாகரீகம் வேண்டும்.
    வார்த்தை ஜாலங்களை வைத்து இது ஒரு செய்தி தான் என்று சொன்னாலும்,ஏன் இப்படி ஒரு செய்தியை நக்கீரன் போட வேண்டும்??///

    உண்மை. நக்கீரன் இச் செய்தியை வெளியிடக் காரணம் உள்ளது.

    1 நக்கீரன் கோபாலுக்குச் சென்ற அதிமுக ஆட்சியின் போது ஜெயா அரசு தொல்லை தந்தது. அவரது “யுத்தம்” என்ற தொடரைப் படித்தால் அன்றைய ஜெயா அரசு செய்த மனித உரிமை மீறல்கள் நம்மை அதிமுக மீதும் ஜெயா மீதும் வெறுப்புக் கொள்ளவைக்கும் அளவு இருப்பதை உணரலாம். நக்கீரனும் அந்தக் கால கட்டத்தில் ஜெயாவை ஹிட்லர் என்று குறிப்பிட்டதோடு அல்லாமல் ஜெயா முகத்தை ஹிட்லர் போல சித்தரித்து அட்டையில் வெளியிட்டு தனது வெறுப்பை வெளிப்படுத்தியது.

    2 . நக்கீரன் கோபால் தேவர், சசிகலா தேவர், எனவே அவர் சாதி அபிமானத்தில் இவ்வாறு செய்கிறார் என என்ன இடம் உள்ளது.

    3 . கடந்த சில மாதங்களாக நக்கீரனது விற்பனை படுத்து விட்டது. காரணம் அவர்கள் தேர்தல் குறித்து வெளியிட்ட உள்நோக்கம் கொண்ட ஒருதலைப்பட்சமான கருத்துக் கணிப்புகள். மக்களிடையே நம்பகத் தன்மை குறைந்து விட்டது. இதைத் தூக்கி நிறுத்த நக்கீரனுக்கு இன்று ஒரு பரபரப்பான விளம்பரம் தேவைப் பட்டது. எனவே அதிமுகவை உசுப்பேற்றி அதில் வரும் தீப்பொறியில் குளிர் காயும் முயற்சியே இது.

    4 . கலைஞர், நடராசன் (சசிகலா), நக்கீரனின் கூட்டு முயற்சி ஒன்றின் ஆரம்பம் இது என்றும் கூடத் தோன்றுகிறது. சசியை நீக்கியதற்கு நடராசன் ஏதாவது செய்யத் துடிப்பார் என்பது யாவரும் அறிந்ததே. திடீரென நக்கீரனுக்கு நடராசன் பேரில் பாசம் வரக் காரணம் கலைஞர் எனும் பாலமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

    /// Rowdy politics introduced by Admk only 1991-1996 period ///

    “அரசியல் ரவுடித் தனத்தை அதிமுகவைப் பார்த்து திமுக கற்றுக் கொண்டது” என்று சொல்வது வேடிக்கை. பெருந்தலைவர் காமராஜர் அன்றே சொன்னார்- “இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று. திமுக அதிமுக இரு தரப்பினரும் வன்முறையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் உதயகுமார் கொள்ளப்படத் திமுக காரணம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் மறந்து விடவில்லை. அந்த நிகழ்வுக்கு அடுத்த ஆண்டே 1972 இல் எம்.ஜி.ஆரைக் கழகத்தில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சி உருவாகும்போதே தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்குக் கலவரங்களை “புத்தம் புதிய அதிமுகவினர்” செய்ததும் மக்கள் மறக்க வில்லை. அந்த 1972 அக்டோபர் மாதம் மூன்று வாரங்கள் தமிழ்நாடெங்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கும் அளவுக்குக் கலவரங்கள் இருந்தன. எதிர்வினையாக அனகாபுத்தூர் ராமலிங்கம் என்கிற அதிமுக தொண்டரைக் கொன்றது திமுக. இதையெல்லாம் வைத்துத்தான் பெருந்தலைவர் “இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று சொன்னார். எனவே அரசியல் ரவுடித் தனம் என்பதில் திமுக அதிமுக இருவரும் சளைத்தவர்கள் இல்லை. இருவரும் ஒரே “பள்ளியில்” பயின்றவர்களே.

  13. குமரன் says:

    அதிமுகவினரின் அராஜகம், போலீசின் மெத்தனப் போக்கு, நக்கீரன் விரித்த வலை, அதில் சிக்கிய ஜெயா அரசு, நக்கீரனின்/ காமராஜின் பிளாக் மெயில் பத்திரிக்கை எழுத்துக்கள், நக்கீரன் காமராஜின் வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டு ஊழல் என்று விலாவாரியாக இந்த விஷயம் குறித்து அலசி சவுக்கு தளத்தில் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது. இந்த விஷயத்தில் தொடர்புடைய எவருமே சரியில்லை.

    நக்கீரன் இருக்கும் ஜானி ஜான் கான் தெரு மக்கள்தான் பாவம். அங்கு வியாபாரம் செய்பவர்கள்தான் பாதிக்கப் பட்டவர்கள்.

  14. raj.s says:

    இது முழுக்க முழுக்க நக்கீரன் நரித்தனம். . . இவர்கள் குள்ள நரித்தனம் தெரிந்து தான் . ,,கலைஞர் செய்திகள் தவிர்த்து வேறு எந்த தொலைகாட்சியும் இது பற்றி ஒளிபரப்ப வில்லை… கேவலமான இவர்களின் வியாபார யுத்தி . . .

  15. S.Vijay says:

    //Try to type in Envazhi comment box directly… It will be worked, I think!
    -Vino//

    - No Vino :(

  16. குமரன் says:

    ராஜ்குமார்

    நான் நேரடியாக எப்பொழுதும் என்வழி கருத்துப் பெட்டியில்தான் தட்டச்சு செய்கிறேன். தமிழில் நன்றாகவே வருகிறது. சில சமயம் தமிழில் வராவிட்டால், control+g அழுத்தினால் சரியாகி விடும். சில சமயம் refresh செய்தால் சரியாகி விடும்.

  17. Ganesh Shankar says:

    /*..Juniourvikatan,Reporter la Kanimolizhi,Rajava pathi thapa eluthuntha vidava nakkeeranla eluthitanga? Nakkeeranla jayavoda old job pathi ethum podaliye aparam ethku கொதிகரங்க */

    மேலே சொன்னது போல,இங்கே இன்றைய வேலை பற்றியோ,இல்லை போன ஜெயா ஆட்சியில் நடந்த நிகழ்வுகளை பற்றியோ சொன்னால் அது ஆட்சியின் குறைபாடு ஆகும்.
    அதை விமர்சிப்பது ஒன்றும் தவறு இல்லை.அதே நேரத்தில்,அதிலும் தரமாக விமர்சனம் செய்ய வேண்டும்,அது இன்றைய சூழலில் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

    அது இருக்கட்டும்.இங்கே சொல்லி இருப்பதே தனி நபர் விமர்சனம்.
    அதை தான் கூறி இருக்கிறோம்.

    ரவுடி தனம்,இதெல்லாம் முதலில் தி.மு.க தான் ஆரம்பித்தது.அதன் வழியே வந்த வழி தோன்றலே அ.தி.மு.க.அதனால் இது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.
    அ.தி.மு.க ஒன்றும் உத்தமபுதிரர்களின் கூடாரம் இல்லை.
    ஏன் நாகரீகம் இல்லாமல் பேசுவது கூட,காமராஜரை பார்த்து அண்டங்ககாகை என்பதிலிருந்து,இந்திரா காந்தியின் நெற்றியில் இருந்து வழிந்த உதிரத்தை விமர்சித்தது உட்பட,விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க கொடுத்த வரவேற்பு எல்லாம் முன்பே நிகழ்ந்து இதற்கு அச்சாரமாக இருக்கிறது.

    இன்னும் சொல்ல போனால்,வாக்குக்கு பணம் கொடுப்பது என்பதை ஆந்திராவிலே காங்கிரஸ் முதலில் மெதுவாக ஆரம்பித்து,மற்றவர்கள் அதை எடுத்துகொன்டனர்.

    இங்கே தனி நபர் விமர்சனம் என்று சொல்லும் போதே,வேறு பத்திரிக்கை தி.மு.க பற்றி குறிப்பிட்டிருந்தாலும்,அதுவும் வெறுக்கத்தக்கது,கூடாதது தான்.
    அதை இங்கே ஆதரிக்க வில்லை.

  18. arulnithya says:

    Kumaran Nakkeeran Gopal Devar illai Pillaimar

  19. Rajkumar.V says:

    2001-2006 la Jaya govt , Nakeeran Gopal mela POTA act la arrest paninaga. Gopal terorista? Atha poi valakunu courtla proof panithan avar veliya vanthar. Jaya govt avaroda familya torcher paninathala avaroda father in law sucide panitaru. intha alavuku kodumapaduthuna jayava pathi epidi nakkeeran nalavithama eluthumnu neneaikaringa?.
    Analum sasikala matterla nenga nakkern last 6 edition vangi padichu parunga, Athula sasikalavoda corruption,aparam jayavuku ethira panina sathi nalathan jaya avangala katichiya vitu neekitanganu potirupanga. Entha edathulaum ithu oru drama nu avanga mention panave illa. Avanga oralavuku pathirikkai tharmathodathan nadanthukitanga. Ana Jaya epavum jananayaka vathiya nadaka matanga nu proof panara mathiri than yesterday attack nadanthiruku. Ithuvara oru ADMK thalaivarum Nakkeeran office attack ku kandanam soli arrikai koda veliyedala. Thondarkala amaithiya iruka solavum ila. Ithula irunthu Jaya voda instruction padithan attack nadanthathunu conform aguthala?
    Dinamalar karan etho yokiyan mathiri athula nerraya peru nakkerranuku ethira comments potrukanga. Natuke therium Dinamalar ADMK jalranu. Evanukelam Nadunilai pathirikaina, Nakkeranum Nadunilai pathirikai than. Dinamalar websitela evalau kevalama Karunanidiyaum, Kanimolizi, Rajathi amma,Raja pathi comments vanthaulum edit pannama podarangale atha ethuthu yarum ean sound kudukala?

  20. Rajkumar.V says:

    Ipa irukara youngsters kita irukara periya problem avangaluku elame therium nu nenaikarathuthan. Yarum history ya propera padikarathala. Athala than Jayalaitha elam ipavum CM a varamudiuthu. Jaya velam tamil makkaluku kaval nu solaranga.Tamil peoples a Patha pavama iruku.
    Who is Jaya?
    How she is known MGR?
    How she is come inside the ADMK?
    why MGR Push out Jaya from ADMK?
    What letter she write to Rajiv gandhi?
    Why she divide the ADMK in 1988?
    How she catch ADMK in 1990?
    How she win 1991 election?
    That time What is her stand about LTTE?
    How is 1991-1996 and 2001-2006 jaya govt?
    How she is hanndle the Nakkeren in 2001-2006 period?
    What is the jaya’s stand of Nalini ‘s karunai manu in 2000?

    search the ans for above questions then all of you know about jaya

  21. அமானுல்லா, துபாய் says:

    புலனாய்வு பத்திரிக்கை என கூறி கொள்ளும் நக்கீரன்
    ஒரு தலைபட்சமாகவே கடந்த பல வருடங்களாக
    செய்திகளை வெளியிட்டு வருவது சிறு குழந்தைகளுக்கு
    கூட தெரியும். தவறு செய்யும் ஒருவரை பற்றி செய்தி
    வெளியிடும் நக்கீரன் அதே நேரத்தில் அவர் செய்த
    நல்ல விஷயங்களை வெளியிடுவதில்லை. அதே போல
    ஒருவர் செய்த நல்ல விஷயங்களை வெளியிடும் அதே
    வேளையில் அவர் மீதுள்ள தவறுகளை மறைப்பதிலும்
    நக்கீரன் கண்ணும் கருத்துமாக இருந்தது தான் வரலாறு.
    ஒரு மாநில முதல்வரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து
    அட்டை படத்தில் செய்தி வெளியிடுவதற்கு பெயர் தான்
    புலனாய்வு தன்மையா இல்லை பத்திரிக்கை தர்மமா?
    அதற்காக நக்கீரன் அலுவலத்தினை தாக்கியவர்களுக்கு
    நான் வக்காலத்து வாங்கவில்லை. தவறு செய்தவர்கள்
    யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன்பு நிறுத்தி
    தண்டிக்கப்பட வேண்டும் தான்….

    - அமானுல்லா, துபாய்

  22. Rajkumar.V says:

    Inaiku Nakeeran gapal maelaum avaroda workers melaum, kolai muyarchi valaku, Vepons vachirunthathagavum, Pothu edathhula kudunathagavum satam olunga siralichathagavum, Casa file panirukanga ithu neyayama Kumaran?

  23. raj.s says:

    தமிழில் மிக எழுதில் பதிய.
    http://www.google.com/transliterate/indic/Tamil

  24. Rajkumar.V says:

    தமிழில் மிக எழுதில் பதிய.
    http://www.google.com/transliterate/indic/தமிழ்

    தேங்க்ஸ் ராஜ் இட் இஸ் வொர்கிங் குட்.

  25. Rajkumar.V says:

    /////இந்த நிலையில் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அதிமுக பிரமுகர் அன்பு ஒரு புகார் கொடுத்தார். அதில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கை மீதும், அதன் ஆசிரியர் கோபால் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
    இந்தப் புகாரை ஏற்று உடனடியாக போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். அதன்படி நக்கீரன் கோபால் மீது கொலை மிரட்டல், மன உளைச்சலை ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துதல், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவது, கையால் தாக்குதல், ஆயுதம் வைத்திருத்தல், சட்ட விரோதமாக கூடுதல் என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.//////

    இது எப்பிடி இருக்கு? இதுதான் ஜெயா அரசு. இப்ப தான ஆரம்பிச்சிருக்கு அராஜகம். இப்ப என்ன சொல்ல போறாங்க ஜெயா ஜால்ராக்கள்

  26. குமரன் says:

    ராஜ்குமார்

    //Casa file panirukanga ithu neyayama Kumaran?//

    ஜெயா எப்போதும் மாறுவதில்லை. அவர் மனித உரிமை மீறல்கள் செய்வதில் முதலிடம் என்று எப்போதும் மாறாமல் நான் கருத்துக்களை வெளியிட்டு வருகிறேன். இன்று நேற்றல்ல, 1989 -இலிருந்து.

    இதே கட்டுரையில் எனது எல்லா மறுமொழிகளையும் படித்தால் அது தெரியும்.

    ஆனால், நீங்கள் சொல்வது போல நக்கீரன் பத்திரிக்கை தர்மத்தைக் கடைப்பிடிப்பவர் அல்லவே அல்ல. அவரும் பத்திரிக்கை என்ற பெயரில் மனித உரிமை மீறல்களை செய்பவர்தான். வெகு அண்மையில் அவர் செய்த மனித உரிமை மீறல்தான் – ஜெயா பற்றி அவர் எழுதிய இந்தக் கட்டுரை. உண்மைக்குப் புறம்பாக மட்டும் அல்ல, அதையும் கொச்சையாக ஒரு பத்திரிக்கை எழுதினால் அதற்குப் பெயர் பத்திரிக்கை தர்மம் அல்ல, அதற்குப் பெயர் மனித உரிமை மீறல்தான்.

    Libel is addressed to eyes, slander to the ears. இரண்டையும் நக்கீரன் கோபால் செய்பவரே.

    பத்திரிக்கை தர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றால் நக்கீரன் தனது அத்துமீறலான எழுத்துக்கு மன்னிப்புக் கேட்டு அடுத்த இதழை வெளியிடுமா? செய்யாது அல்லவா?

    ஜெயா ஒருவித மனித உரிமை மீறல் செய்கிறார் என்றால் நக்கீரன் பத்திரிகையும் தொடர்ந்து வேறு விதத்தில் மனித உரிமை மீறல்களைச் செய்து கொண்டிருக்கிறார்.

    காமராஜின் வீட்டுவசதி வாரிய ஊழல் பற்றி எழுதிய வலைத்தளப் பத்திரிகையாளரான சவுக்கு சங்கருக்கு மிரட்டல் விஐத்த வகையில் நக்கீரனும் ரவுடித் தனத்தில் ஈடுபடுபவர்தான்.

    ஆக நக்கீரனும் ஜெயாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அராஜகத்திலும், மனித உரிமை மீறல்களிலும், ரவுடித்தனத்திலும் யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்ல.

  27. குமரன் says:

    ராஜ்குமார்

    மனித உரிமை மீறல்களில் Demonisation என்று ஒன்று இருக்கிறது. ஒருவரைப் பிடிக்கா விட்டால் அவரைப் பற்றி வெகுவாகத் தவறான தகவல்களைப் பரப்புதல், அவரைப் பற்றித் தொடர்ந்து தவறாகவே சித்தரித்துத் தகவல்களை எழுதுதல், பரப்புரை செய்தல் ஆகியவற்றைச் செய்வதுதான் demonisation அதாவது வேண்டாதவரை ஒரு ராட்சசராகவே மக்கள் மனதில் பதித்தல்.

    இதுபோன்ற ஒரு விஷயத்தைத்தான் நக்கீரன் தனக்குப் பிடிகாதவர்கள், வேண்டாதவர்கள் பற்றிச் செய்து வருகிறார்கள். இது மிக மோசமான மனித உரிமை மீறல் ஆகும். இது குறித்து உலகின் தலைசிறந்த மனித உரிமை ஆர்வலர்களும் வல்லுனர்களும் நிறைய எழுதியிருக்கிறார்கள். நக்கீரனின் எழுத்துக்கள் அத்தகு ஆய்வுகளுக்கு நல்ல தீனியாக இருப்பதை நான் அத்தகு ஆய்வுகளைப் படித்த வகையில் உணர்கிறேன்.

  28. Rajkumar.V says:

    அதுக்காக கொலை முயற்சி வழக்கா?

  29. Prakash says:

    2 G ஊழலே நடக்கவில்லை..
    தி.மு.க. 130 தொகுதியில் வெற்றிபெறும்…

    என்று எழுதிய நக்கீரன்.. ஜெயாவை பற்றி எழுதியதில்.. என்ன உள்நோக்கம் இருக்கும் என்பதை தனியாக சொல்ல வேண்டியது இல்லை.

    ஜெ கட்சி நிர்வாகிகளுடன் பேசியதாக அந்த செய்தி சொல்கிறது..
    அந்த நிர்வாகிகள் யாரென்று சொல்லி இருக்கவேண்டும்

    அதை விடு சினிமா கிசு கிசு மாதிரி ஒரு தரம் கேட்ட செய்தியை பரப்பியது பத்திரிகை தர்மமா?

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)