BREAKING NEWS
Search

‘ஜெயலலிதாவை வணங்குகிறேன்!’ – சீமான்

தமிழீழத்தை ஆதரிக்கும் ஜெயலலிதாவை வணங்குகிறேன்! – சீமான்

ஈரோடு: ‘யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அவரை வணங்குகிறேன்’ என்று இயக்குநரும், திரையுலக தமிழீழ ஆதரவு இயக்க ஆதரவாளருமான இயக்குநர் சீமான் கூறியுள்ளார். seeman-9

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக சீமான் பிரச்சாரம் தொடங்கினார்.

அவரது பேச்சிலிருந்து:

தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன். இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன்.

இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை, ஒருமைப்பாடு இல்லையா?

யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அவரை வணங்குகிறேன். அவரது ஆதரவு தமிழ் ஈழத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

நான் இப்போது இந்தியா உள்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம், நீங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதமோ எந்த உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களுக்கான தடையை மட்டும் நீக்கிவிடுங்கள். தனி ஈழம் மலர பிரபாகரன் நடவடிக்கை எடுப்பார்.

இந்தியாவில் மட்டும் விடுதலைப் புலிகளுக்கான தடை நீக்கப்பட்டு, எங்களை இலங்கைக்கு செல்ல அனுமதித்தால் 15 லட்சம் பேர் இலங்கை செல்ல தயாராக இருக்கிறார்கள். 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும், என்றார் சீமான்.

இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன், பாடலாசிரியர் அறிவுமதி, எழுத்தாளர் தேவிசந்திரா, தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் சிவா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு பேசினர்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விருது நகரில் 11 இயக்குநர்கள் பிரச்சாரம்:

விருது நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மே 7-ம் தேதி 11 இயக்குநர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்த பிரசாரத்தில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் டைரக்டர்கள் பாரதிராஜா, செல்வமணி, சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீன்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் ‘பாவலர்’ அறிவுமதி, கவிஞர் சிநேகன் பேசுகின்றனர். இங்கு மதிமுக வேட்பாளர் வைகோவை ஆதரித்துக் குரல் கொடுக்கின்றனர் திரையுலகினர்.




One thought on “‘ஜெயலலிதாவை வணங்குகிறேன்!’ – சீமான்

  1. selva

    I accept this cinema director perasaram. never win cong party in all over india.cong party finish this election. K.V.Thangabalu never win this election. Direcetor Seeman, selvamani Bharathiraja,cheran my best regards.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *