BREAKING NEWS
Search

ஜெயலலிதாவுக்கு கூடுவது கூட்டப்படும் கூட்டம்! – கருணாநிதி பேட்டி

ஜெயலலிதாவுக்கு கூடுவது கூட்டப்படும் கூட்டம்! – கருணாநிதி பேட்டி

சென்னை: ஜெயலலிதாவுக்கு கூடுவது, ‘கூட்டப்படும் கூட்டம்’ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சாலைவரி விதிப்பை அமல்படுத்தினால் இரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று மத்திய நிதிமந்திரி கூறி இருக்கிறாரே?

எல்லா அம்சங்களையும் அறிவிப்புகளையும் ஆழமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு தான் இன்று நாடாளுமன்ற தி.மு.க. குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

இலங்கை பிரச்சினையில் அந்த நாடு இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றவில்லை. இந்த பிரச்சினையில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா?

இதே கருத்தை என்னை சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவிடமும் வலியுறுத்தியுள்ளேன். அவரும் அதை மத்திய அரசிடம் தெரிவித்து நான் கேட்டுக் கொண்டபடி இலங்கை நிலவரங்களை அறியவும், இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். அதற்காக தூதுக்குழு ஒன்றும் விரைவில் அனுப்பப்படும் என்பதையும் உறுதியாக கூறி இருக்கிறார்.

இந்த குழுவில் தமிழக எம்.பி.க்கள் இடம் பெறுவார்களா?

இல்லை.

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்ற கருத்தும் உள்ளதே?

அது தேவை இல்லாதது.

எம்.பி.க்கள் கூடுதல் சம்பளம் கேட்கிறார்களே? அதில் தி.மு.க. நிலைப்பாடு என்ன? இன்றைய கூட்டத்தில் அது பற்றி விவாதிக்கப்பட்டதா?

அதுபற்றி விவாதிக்கவில்லை. நியாயமான அளவுக்கு ஊதியம் கேட்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறாரே?

அது முடிந்து போன விவகாரம்.

மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று காங்கிரசாருக்கு கட்டளையும் பிறப்பித்துள்ளரே?

கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

மூடநம்பிக்கையால் கிடப்பில் போடப்பட்ட சேது சமுத்திரம்…

சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டதே?

சாஸ்திர சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகளின் காரணமாகத்தான் இது போன்ற மக்கள் நல திட்டங்கள் கிடப்பில் போடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. வெற்றிக்காக ‘கவுண்ட்டவுன்’ தொடங்கி விட்டதாக ஜெயலலிதா கூறி இருக்கிறாரே? தி.மு.க. வெற்றிக்கு எப்போது ‘கவுண்ட்டவுன்’ தொடங்கும்?

அதெல்லாம் ‘ரிசல்ட்’ வரும் போது தெரியும்.

தகவல் ஆணையரை தேர்ந்து எடுக்கும் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லையே?

அந்த அம்மா முதல்வராக இருந்த போது, இதே போல் தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க நடந்த கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு தனது கருத்துகக்ளை கூறினார். கூட்டத்தில் முதல்வரும், பொன்னையனும், யாரை தேர்வு செய்தார்களோ அந்த மெஜாரிட்டியை ஏற்றுக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டது.

அன்பழகனும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அரசியல் நாகரீகத்தோடும், பெருந்தன்மையுடனும் ஒத்துழைத்தார்.

கூட்டத்துக்கு ஜெயலலிதா வராததற்கு விளக்கம் அளித்துள்ளாரே?

அனைத்துக் கட்சி எதுவாக இருந்தாலும், நானே கைப்பட கடிதம் எழுதுவது வழக்கம். காவேரி பிரச்சினையாக இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் வர மாட்டார். ஒருவேளை கடிதம் எழுதுவார். அதில் என்னை தரக்குறைவாக தாக்கி எழுதி விட்டு, அவர் ‘வரவில்லை’ என்பார்.

ஜெயலலிதா தி.மு.க.வை கடுமையாக தாக்கி வருகிறாரே?

அவர்கள் கட்சியை வளப்பதற்காகத்தான்.

கோவை, திருச்சியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அதிகரித்து இருப்பது போல் கூறப்படுகிறதே?

பத்திரிகைகள்தான் அப்படி செய்திகள் வெளியிடுகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடம் கூட தி.மு.க.வுக்கு கிடைக்காது என்றார்கள் முடிவு என்ன ஆனது?

எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு வருகிற கூட்டத்தை….

அது கூடுகிற கூட்டமல்ல. கூட்டப்படுகிற கூட்டம்.

புதுவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது போல் தமிழ் நாட்டிலும் நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறுகிறாரே?

ராமதாஸ் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட முடியாது. நல்லதை ஏற்றுக் கொள்வோம். சாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க.வும் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தனியாக நடத்த முடியாது. மத்திய அரசே அகில இந்திய அளவில் நடத்தும் போது, மத்திய அரசே அதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவோம்.

து விலக்கு பற்றி பரிசீலிக்கப்படும் என்கிறீர்களே. எப்போது அமல்படுத்தப்படும்?

பரிசீலனை செய்யப்படும் என்றேன். எத்தனை நாளில் என்று கூறவில்லையே?

சென்னையில் மாற்று திறனாளிகளை போலீசார் ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்து அடித்ததாக கூறப்படுகிறதே?

உடனடியாக விசாரித்து அது உண்மையானால் நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு அவர் கூறினார்.
4 thoughts on “ஜெயலலிதாவுக்கு கூடுவது கூட்டப்படும் கூட்டம்! – கருணாநிதி பேட்டி

 1. Ganthan

  It is a pleasure to comment on your site. Tamil nadu politics has changed from bitter to worst between dravidians and castes. There is no one political party which இஸ் not inciting violence in the name of their caste or creed and yet to be seen to the advancment of the poor..

  Vote rigging has now been changed to vote buying. Thanx to the Election Commission for their rigid vigilence on poll dates.

  I think now Karunanidhi இஸ் scared of Jaya’s crowd and on a spending thrift on freebies to the so called farmrs and poor. But the reach of the Government’ freebies are yet a long way in suburban and village sides.

  Chances or now high for a change of power between the states people which
  they are customary to do systematicall from the past electoral records.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *