Breaking News

ஜப்பான் செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Monday, March 28, 2011 at 10:03 am | 1,861 views

ஜப்பான் செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜப்பான் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

இத்தகவலை தொழிலதிபரும் இந்தோ ஜப்பான் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவருமான ஜெம் ஆர். வீரமணி நேற்று தெரிவித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான கூட்டம் மார்ச் 21-ம் தேதி சென்னையில் நடந்தது நினைவிருக்கலாம். ஜெம் குழும நிறுவனங்களின் தலைவர் ஜெம் ஆர். வீரமணிதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சென்னைக்கான ஜப்பான் தூதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஜப்பான் மக்களுக்கு உதவுவது தொடர்பாக ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஜெம் வீரமணி ஆலோசனை நடத்தினார்.

ஜப்பான் மக்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யவும் விரைவில் அந்நாட்டுக்கு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தமிழ் நடிகர்கள் சிலரும் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் பயணம் மற்றும் அவர் செய்யவிருக்கும் உதவிகள் குறித்த முழு விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று நம்மிடம் தெரிவித்தார் வீரமணி.

-என்வழி

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

24 Responses to “ஜப்பான் செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி!”
 1. raj.s says:

  வியாபாரி அவர் வியாபாரத்தை கவனிக்க செல்கிறார். . .

 2. kabilan says:

  ராஜ்.ச உங்க வய கொஞ்சம் மூடுங்க .உங்களகுகு தலைவர பிடிக்கலேன்னா ஏன் அவர பத்தி எழுதுற வலைதளத்த பகுரிங்க?வேற வேலை இல்லையா என்ன?

 3. kabilan says:

  ராஜ்.ச உங்க வாய கொஞ்சம் மூடுங்க.உங்களுக்கு thalaivara பிடிகலான ஏன் அவர பத்தி எழுதுற வலைதளத்த படிகுறிங்க ?வேற வேலை இல்லையா என்ன?

 4. raj.s says:

  ஐயா மன்னிக்கவும் , இங்கு ரஜினிக்காக மட்டும் நான் வரவில்லை, ரஜினி தவிர்த்து மற்ற விசயங்களில் இங்கு நடுநிலை உள்ளது . ரஜினி செயல் பாட்டால் மனம் வெறுத்து போன ஒரு ரசிகன் நான்.
  ஜப்பான் போல அதிகம் இயற்கை சீற்றடல் பாதிக்கும் நாடு இந்தோனேசியா , ஏன் ஐயா , அங்கு அவர் செல்லவில்லை.
  ரஜினி ஒவொரு முறையும் வியாபார நோக்குடன் தான் செயல்படுகிறார். அரசியல் வருவதாக கூறி தனது வியாபாரத்தை பெருக்கி கொண்டார். கண்ணை மூடி ஒருவர் மீது இனியும் நம்பிக்கை வைக்காதீர் ஐயா.

 5. Ganesan says:

  Dear Mr.Raj,

  Dont tell you were Superstar fan….he never told that will come to politics…real fans know the meaning of whatever he is doing…

  You are negative approach person…go to some stars fan site and put some negative comments…then somebody will reply…then satisfy with this kind replies…actually i m also wasting my time to reply like you psycho problem person.

  Good luck

  M.Ganesan

 6. ROBO VENKATESH says:

  RAJ IS MENTAL PLS DONT TAKE HIS COMMENTS SERIOUS. RAJ BETTER CONSULT A DOCTOR BEFORE POSTING COMMENTS

 7. Prasad-California says:

  There is nothing wrong in standing up for people who are showering love on you.In this case the since the people of Japan have always showed love on Rajini he wants to do something in their troubled times.He is not an international ambassador to go to all countries and help them.We need to see the good in this and stop analyzing too much and writing crap.

  Note : Whether Rajini goes to japan or not the fact is he is the only actor whose movies are being enjoyed by those people…

 8. venkatesan says:

  மெண்டல் ராஜ் அவர்களே

  இந்தோனேசியா பாதிக்க பட்ட பொது இந்தியாவும் பாதிக்க பட்டு இருந்தது. இப்போது கவனம் முழுவதும் ஜப்பான் மேல் உள்ளது. மேலும் பாதிப்பு மிக அதிகம்.

  நீ வாழ்கையில் யாருக்காவது உதவி செய்து இருக்கியா.

  இப்போ ரஜினி என்ன ஜப்பானில் ரிலீஸ் செய்து லாபத்தை அடிக்க போகிறார். என்திரன் ரிலீஸ் ஆனாலும் அது சன் டிவிக்கு தானே லாபம். உங்களால் ரஜினி பெற்ற வெற்றியை தாங்கி கொள்ள முடியாது. உங்கள் வயிறு மேலும் எரிய வாழ்த்துக்கள்

 9. Dinesh says:

  ராஜ் நான் ஒன்று கேட்குறேன் பதில் சொல்லுங்கள். நீங்க ஏன் சம்பாதித்த பணத்தை உங்கள் குடும்பத்திக்கு மட்டும் கொடுக்கிறீர்கள் , ஊரில் உள்ள எல்லா குடும்பத்திற்கும் கொடுக்க வேண்டியது தானே?. நீங்கள் ஏன் உங்கள் சொந்த காரர் , நண்பர்கள் வீடிற்கு மட்டும் போகிறீர்கள் , ஊரில் உள்ள எல்லா வீட்டிற்க்கும் போவீர்களா? ஏன் தெரிந்தவர்க்கு மட்டும் உதவுறீங்க , எல்லாருக்கும் உதவ வேண்டியது தானே? அப்படியே மற்ற்றவருக்கு உதவி இருந்தாலும் , சமீபத்தில் போராடிய எகிப்த தேச மக்களுக்கு உதவுநீர்களா? சீனா நிலநடுக்கத்தில் பாதிக்க பட்டவருக்கு உதவுநீர்களா? பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுநீர்களா?……………….இப்படி கேட்டால் எப்புடி இருக்கும் உங்களுக்கு ?அதற்காக நீங்கள் யாருக்கும் உதவ இல்லை என்றாகிவிடுமா?……அப்புடித்தான் இருக்கிறது உங்கள் கேள்வி.
  உதவ மனம் இல்லை என்றாலும் பரவாஇல்லை , உதவுபவர்களை கேலி செய்யாதீர்கள்.
  தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆகா இருப்பதனால் நம் தமிழ் நாட்டிற்க்கும் , தேசத்திற்கும் எண்ணற்ற உதவிகளை சத்தம் இன்றி செய்தார் , செய்து வருகிறார் . அதுபோல இந்திய அல்லாத பிற நாடான ஜப்பானிலும் அவருக்கு எண்ணத்ற்ற ரசிகர்கள் இருப்பதனால் அவர்களுக்கும் உதவ முன் வந்துருகிறார்.
  “படத்தை படமாக பார்த்து ரசித்து , தலைவரை மனிதனாக பார்த்து வணங்கிய ரசிகர்கள் யாரும் அவரின் அரசியல் நிலையை நினைத்து வருந்தியது இல்லை” அப்படி வருந்தியவர்கள் யாரும் ரசிகர்கள் இல்லை.

 10. Mahesh says:

  1 Rajini goes to japan.
  Comment : “வியாபார நோகிரகாக ஜப்பான் செல்கிறார் ரஜினி”
  2. Rajini Stays calm. Does not go to Japan.
  Comment : “எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறாகள் , ரஜினி கண்டுகொள்ளவே இல்லை ” விகடன் : “ஜப்பான் ரசிகரின் கடிதம் – cover story “இது நியமா தலைவா?”
  3.Rajini goes to Indonesia
  Comment : “ரானா படத்திற்கு புதிய மார்க்கெட் பிடிக்க ரஜினி இந்தோனேசியா செல்கிறார் . விகடன் : “ரஜினி இந்தோனேசியா பயணம் – மர்மம் என்ன ?”
  4. Rajini does not go to Indonesia.
  Comment : “இந்தோனேசியாவில் ரசிகர்கள் இல்லாததால் ரஜினி அங்கு செல்லவில்லை ! அவர் வியாபாரி !
  Raj Sir ! போய் உங்க புள்ள குட்டிகள படிக்க வைங்க சார் !!

 11. Prasanna Kumar says:

  அந்த (****) ராஜ்கு செரியன பதிலடி கொடுத்த Venkatesan ,Dinesh & Mahesh அவர்களுக்கு நன்றி …………!!!!!!!

 12. ashok says:

  வாழ்க உலக சூப்பர் ஸ்டார் .

 13. ஒரு போல்டுக்கு இவ்வளவு நட்டுக்களா?

 14. Gobinath says:

  ஹாய் தினேஷ்
  அப்படி உங்க தலைவர் என்ன பன்னுனார்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.

  தெரியாமல் தலைவராய் ஏற்று ஏமாந்த ரசிகன்

 15. NARENDRA KUMAR says:

  ரஜினியை சினிமா நடிகனாக மட்டும் பார்க்காமல் நிஜ ஹீரோவாக பார்க்கும் ரசிகர் கூட்டம் இருக்கும் வரை தமிழ்நாட்டை உண்மையிலேயே ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

 16. Baba says:

  Well said NARENDRA KUMAR, you are 100% correct.

 17. rakki says:

  hello brothers our thalaivar always real hero.Taan seivadai veliyil solli vilambaram thedum cheapanavar illai enga thalaivar.
  sila panneenga arasiyal saakadaila vizhundu ularudungaley anda panneenga kitta poi unga questiona kelunga.
  adayum kettu anda panneegalukku aadaravu tareengaley neenga irukura varaikumtaan tamilnaata kaapatra mudiyadhu.

 18. NARENDRA KUMAR says:

  ஐயா ராக்கி அவர்களே, நாங்க யாரையும் ஆதரவு தரலை. ஊழல் செய்தவன்களோட ஒரே மேடையில உட்கார்ந்து சிரிச்சு பேசிகிட்டு இருக்கறது உங்க தலைவர்தான் என்பதை மறந்துடாதீங்க. இப்போ தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாதுன்னு சொல்லுற தைரியம் உங்க தலைவருக்கு இருக்கா? இருந்தா சொல்லுங்க அவர் காலை தொட்டு கும்பிடுறேன்.

 19. kabilan says:

  நரேந்திர குமார் மற்றும் சில நண்பர்களிடம் நான் கேட்கிறேன் என்வழி வலைத்தளம் தலைவர் ரசிகர்களுகாக இருக்கிறது என்று தெரிந்த பின்பும் ஏன் அந்த வலைதளத்திற்கு வருகிறிர்கள் ,சரி நீங்கள் மற்ற விஷயங்களை படிக்கச் வருகிறவர்கள் என்றால் அதை மட்டும் படித்து விட்டு எங்கள் தலைவரை பற்றிய விஷயங்களை படிகாதிர்கள்.படித்துவிட்டு எங்களை மாதிரி ரசிகர்களை புண் படுத்துகிற மாதிரி கருத்துகளை ஏன் பதிவு செய்ய வேண்டும்,அந்த அளவுக்கு ஏன் மற்றவர்களை புண் படுத்த வேண்டும்.இதை நிறுத்தி கொள்ளுங்கள் தயவு செய்து.நாங்கள் அவரை நடிகரா தான் பாக்குறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .

 20. NARENDRA KUMAR says:

  அன்பான தோழர்களுக்கு நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்களை விட அதிகமாக ரஜினிகாந்தை ரசிக்கும் ரசிகன் நான், “படையப்பா” ரஜினிகாந்தை அல்ல “ஜானி” ரஜினிகாந்தை. ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டோம். அவர் எடுத்த அரசியல் நிலைபாடுகள் என் போன்ற பல ரசிகர்களுக்கு உடன்பாடில்லை. “நான் முன்பு ரஜினி ரசிகன் இப்போது இல்லை” என்று சொல்லும் பலரை நான் அறிவேன். பாராட்டுகளும் விமர்சனங்களும் ஒரே இடத்தில் இடம் பெறுவதுதான் நல்ல ஜனநாயகம். ரஜினி ரசிகர்கள் என் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில்தான் இப்படி பின்னுட்டம் இடுகிறேன். ஆனால் இங்கே வராதே இதை படிக்காதே என்று சொல்வது முறையல்ல என்பது என் தாழ்மையான கருத்து. மீண்டும் நான் சொல்லி கொள்ள விரும்புவது என் போன்ற மற்ற ரசிகர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளுங்கள் என்பது தான்.

 21. kabilan says:

  நீங்கள் உங்கள் கருத்தை கூறுவது தப்பு என்று கூற வில்லை நரேந்திர குமார் அவர்களே ,அதை யார் மனமும் புண் படாமல் இருக்கட்டுமே .உங்கள் பின்னூட்டத்தை பாருங்கள் அடுத்த முறை உங்கள் ஆதரவோ எதிர்பு எதுவாக இருந்தாலும் உங்கள் வார்த்தைகளில் அன்பு இருக்க வேண்டும் எனபது எனது வேண்டுகோள் .நன்றி நண்பரே

 22. tanisha devi says:

  நான் ஒரு சுபெர்ச்டார் ரசிகே, நான் அவரே விட சிறயவள், இருந்தாலும் அவர் அரிசியல் போஹ்னால் என்ன தப்பு? அவர் எப்படி நடிப்பிலும் சிறந்து இருக்கிறாரோ, ஆதேபோல் அரசியலிலும் இருப்பர். நாம் என்னவேனாலும் யோசிக்கலாம், அனால் அவர், அரசியால் போகமாட்டார் என்று சொல்கிறார். ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை,
  என் அரிசியல் போனால் கேட்டர்வர்கள் என்று சிலர் குரிகிரர்கள்? எப்படி இருந்தாலும் ரஜினி அவர்கள் அரிசியல் போனாலும் போகாவிட்டாலும் நான் அவரது அன்பான ரசிகே, என்னோடைய வாழ்த்துகள், இறைவனிடம் அவருக்கும் வேண்டுகிறேன்.

 23. tanisha devi says:

  ஹலோ மிஸ்டர் ராஜ்
  பிளஸ் மின்ட் யுவர் ஓவன் பிசினஸ் , உங்களமாறி வேஸ்ட் பெஒப்லே வை கமிங் டு திஸ் வெப்சைட். டோன்ட் டாக் பத அபௌட் ஒஉர் சுபெர்ச்டார். அவருக்கு செய்யனும்னு மனுசுருகு செய்றாரு, நீகள செயமாடிங்க அதனால்த அவரு செய்றாரு., முதலே அவர் படாத பார்க்காமல் இருக்கமுடியுமா, முடியாதுல அப்பே அவர் செய்றத பத்தி பேசாதிங்க

 24. Tanisha says:

  அல்வய்ஸ் ஓனே அண்ட் only சூப்பர் ஸ்டார் நோ ஹீரோ can sit இன் his chair

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)