BREAKING NEWS
Search

‘அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் நிலை வருமா?’

‘அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் நிலை வருமா?’

ஜனநாயகத்தைக் காக்க எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

rajini-vote

பொதுவாக ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப் பதிவு துவங்கிய சிலமணி நேரங்களுக்குள் வாக்களித்துவிடுவது ரஜினிகாந்த் வழக்கம்.

இன்று காலை வாக்குப் பதிவு துவங்கியதும், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தி்ல் உள்ள வாக்குச் சாவடியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாக்களித்தார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் வந்து ஓட்டுப் போட்டனர்.

வாக்களிக்க வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழந்து கொண்டு அவரது கருத்து குறித்து கேட்டனர்.

ஆரம்பத்தில் ‘பேச ஒண்ணுமில்லியேம்மா…’ என்ற ரஜினி, பின்னர் மீடியாவின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். வெற்றி நமதே,’ என்றார்.

பின்னர் வழக்கம் போல அரசியல் பிரவேசம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். இந்த முறை சற்று வித்தியாசமாக, ‘எதிர்காலத்தில் மக்கள் இது போன்று உங்களுக்கு ஓட்டு போடும் நிலை வருமா? என்று கேட்டனர்.

செய்தியாளர்கள் கில்லாடி என்றால் ரஜினி கில்லாடிக்கு கில்லாடி ஆச்சே….

“ஹா.. ஹா.. ஹா…” சிரித்துக் கொண்டே, பதில் ஏதும் சொல்லாமல், எல்லாம் அவன் செயல் என்பதை உணர்த்தும் விதமாக, வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்திக் காட்டி விட்டுச் சென்று விட்டார்.

rajini-cast

குறிப்பு: பொதுமக்களுடன் வரிசையில் நின்று ரஜினி வாக்களித்தார்!




7 thoughts on “‘அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் நிலை வருமா?’

  1. mangai

    உங்களுக்கு வோட்டு போட உங்க பெயர் வாக்காளார் பதிவுல இருந்திச்சி போட்டுட்டு அறிவுரை அள்ளி விடுறிங்க. எங்களுக்கு இல்லையே. என்ன பண்ண சொல்லரீங்க. ம்…

  2. Neruppu

    சீக்கிரம் அதுக்கான வேலைகள்ல இறங்குங்க ரஜினி அவர்களே…

    இல்லாவிட்டால் உங்களை பார்ட் பார்ட்டாக எழுதியே ஏலம் போட ஒரு கூட்டம் காத்துக்கிட்டிருக்கு… தனி மனித வழிபாடு வரை போய் உண்டியல் வச்சி வசூல் பண்ணாலும் ஆச்சரியமில்லை…

    என்னமோ போங்க… உங்க ரசிகர்கள் கிட்டருந்து நீங்கதான் உஷாரா இருக்கணும். இந்த சைட்டோட எடிட்டர் இந்த கமெண்டை அப்ரூப் பண்ணுவாரான்னுகூட தெரியல… ஆனா சொல்ல வேண்டியது என் கடமை…!

  3. asfar

    சீக்கிரம் அதுக்கான வேலைகள்ல இறங்குங்க ரஜினி அவர்களே…

    இல்லாவிட்டால் உங்களை பார்ட் பார்ட்டாக எழுதியே ஏலம் போட ஒரு கூட்டம் காத்துக்கிட்டிருக்கு… தனி மனித வழிபாடு வரை போய் உண்டியல் வச்சி வசூல் பண்ணாலும் ஆச்சரியமில்லை…

    என்னமோ போங்க… உங்க ரசிகர்கள் கிட்டருந்து நீங்கதான் உஷாரா இருக்கணும். இந்த சைட்டோட எடிட்டர் இந்த கமெண்டை அப்ரூப் பண்ணுவாரான்னுகூட தெரியல… ஆனா சொல்ல வேண்டியது என் கடமை…

    Nice comment, i accept it is true……

  4. Xmen

    Rajni is a good man.so Not suited for POLITICS.

    Rajni sir..i always want to see u as a good man.

  5. Mahesh V

    Everyone is frustrated with all the political parties in tamilnadu .After enthiran release again rajni fever will start , Thats the right time before assembly election. As everyone say’s he can rock in politics as well.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *