BREAKING NEWS
Search

சௌந்தர்யா பட செய்தியை வெளியிடாமல் தடுத்தாரா ரஜினி?

அடடா… புருடா விட ஒரு அளவே இல்லையா!

rajini-latha

நேற்று ஒரே பொய்யை திரும்பத் திரும்ப முதல் செய்தியாக போட்டுக் கொண்டிருந்தது ஒரு இணையதளம்.

தன் மகள் சௌந்தர்யா தயாரிக்கும் கோவா பற்றிய செய்தியை வெளியிட வேண்டாம் என ரஜினி கேட்டுக் கொண்டதாகவும், அதனால் முன்னணி பத்திரிகைகள் எல்லாம் அதை வெளியிடாமல் நிறுத்திவிட்டதாகவும் உளறியிருந்தார்கள்.

ரஜினி என்றைக்காவது யாருக்காவது போன் செய்து ‘செய்தியை போட வேண்டாம், அந்தச் செய்தியைப் போடுங்க’ என்று சொல்லியிருக்கிறாரா?

இந்தத் துறையில், எனக்குத் தெரிந்து இப்படியொரு விஷயத்தைக் கேள்விப்பட்டதே இல்லை.

ஏதேனும் ஒரு விவகாரம் குறித்து ரஜினியிடம் கருத்து / விளக்கம் கேட்கப் போனால், அவசியமிருந்தால் கருத்து சொல்வார், இல்லாவிட்டால் ‘எதற்கு? வேண்டாமே..!’ என்று நாசூக்காக மறுப்பார். இத்தனை ஆண்டுகளில் ஒரு பத்திரிகையாளராக நாம் பார்த்த ரஜினியின் இயல்பு இதுதான்.

யாருக்கும் போன்போட்டு ‘இதை இப்படி வெளியிடுங்கள்’ என்று சூப்பர் எடிட்டர் வேலையெல்லாம் அவர் செய்தது கிடையாது.

அட குசேலன் விவகாரத்தை விடவா… அவர் விளக்கம்தான் சொன்னார். வருந்துகிறேன் என்றார். அதுகூட இருமாநில மக்களுக்கும் ஒரு சுமூக நிலை வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காக. வருத்தத்துக்கும் மன்னிப்புக்கும் அந்த தருணத்தில் மட்டும் தமிழகத்திலிருந்த சிலருக்கு வித்தியாசமே தெரியாமல் போய்விட்டது.

இன்று ரஜினியை வைத்து ஆதாயம் பார்க்கும், அதே நேரம் அவரது பெயரை இன்றும் டேமேஜ் செய்யப் பார்க்கும் ஒரு குழுமத்தின் பத்திரிகை, அன்றைக்கு அதன் செய்தி ஆசியரை, ‘அவர் வருத்தம் தெரிவித்ததாகச் சொன்னது எங்களுக்கும் தெரியும்… ஆனால் மன்னிப்புக் கேட்டார்னு நியூஸ்ல படிங்க. ஜெயமாலா லெட்டர்லயும் அப்படி இருப்பதாகவே (கன்னடத்தில் ரஜினி எழுதியது) சொல்லுங்க’ என வற்புறுத்தி சொல்லச் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும் நாடறியும்.

அப்போது கூட எந்தப் பத்திரிகைக்கும், சேனலுக்கும் போன் செய்து, ‘ஏங்க இப்படி தப்பா சொல்றீங்க… நான் லெட்டர்ல இப்படியா எழுதியிருக்கேன்’ என்று கேட்காத மனிதர்தான் ரஜினி.

இன்னொன்று, சௌந்தர்யா ரஜினியின் கோவா பட விவகாரத்தை எந்தப் பத்திரிகைதான் வெளியிடாமல் இருந்தது?

எல்லோருமே வெளியிட்டார்கள், முன்னணி நாளிதழ்கள், இணைய தளங்கள், தொலைக்காட்சிகள்.. நேற்றுதான் வலையுலகுக்கு அறிமுகமானோர் வரை ஒருத்தரும் பாக்கி வைக்காமல் திரும்பத் திரும்ப எழுதினார்கள் / செய்தி சொன்னார்கள். அதில் ஒரு தவறும் இல்லை. நீதிமன்ற செய்தி. தாராளமாக உள்ளதை உள்ளவாறு யாரும் எழுதலாம்.

இதில் ரஜினி எங்கே வந்தார்!

வெளியுலகம் தெரியாமல் அல்லது வெளியில் என்ன நடக்கிறதென்ற உணர்வே இல்லாமல் டெஸ்க் ஒர்க்கில் தீவிரம் காட்டினால் செய்திகள் இப்படித்தான் பல்லிளிக்கும்!

-விதுரன்
6 thoughts on “சௌந்தர்யா பட செய்தியை வெளியிடாமல் தடுத்தாரா ரஜினி?

 1. r.v.saravanan

  வெளியுலகம் தெரியாமல் அல்லது வெளியில் என்ன நடக்கிறதென்ற உணர்வே இல்லாமல் டெஸ்க் ஒர்க்கில் தீவிரம் காட்டினால் செய்திகள் இப்படித்தான் பல்லிளிக்கும்

  ha…ha…nethi adi

 2. கிரி

  இதை போல பொறுப்பில்லாமல் எழுதும் இவர்களை ரஜினி கண்டுகொள்ளாமல் இருப்பதினால் தான் இன்னும் உச்சத்தில் இருக்கிறார்..

  அவதூறு எழுதும் அனைவரையும் ஒருநாள் ஆண்டவன் “கவனிப்பார்”

 3. Prasanth

  சுந்தர் சூப்பர் அனிமேஷன் அண்ட் கிளாச்சிக் . தலைவா உன்னை நினைத்தாலே உள்ளங்களில் உள்ள திறமை ஊற்றெடுக்கும் படைக்கும் ஆற்றல் வெளிவரும் என்பதற்கு இதோ மற்றொரு சான்று வாழ்ந்தால் மட்டும் போதாது வாழவும் வைக்கணும் அது உன்னால் தானே முடியும் நீ கலியுக கர்ணன் மட்டும் இல்லை ஆதி சக்தியே நீதான் அம்முள் இருக்கும் ப்ரம்மாக்களை, விஷ்ணுகள் ஆம் காக்கும் பணியில் பல்வேறு ரசிக நண்பர்கள் தீவிரமாய் இப்போது அனைத்தும் பார்த்தாலும் தன்னுள் அடங்கி இருக்கும் ஆதி சிவனே எம் அனைவரையும் வாழ்த்துவாயாக . உனக்கு வாழ்த்துக்கள் எந்நாளும் இந்த சமூகத்தின் ஊக்க சக்தியாய் நீ நிறைந்திருக்க வேண்டும் . .

 4. saranya

  உண்மையிலேயே தலைவரை நெனச்சா கஷ்டமா இருக்கு… birthday samayathula ivvalavu prechana. ivvalavu avamaanam….. romba kashtama irukku….

 5. எப்பூடி

  இவனுங்கெல்லாம் காமடிபீஸ், ஏன் நாம இவனுங்களபத்தி பேசி நம்ம டயித்த வேஸ்ட் பண்ணனும், வேற ஏதாச்சும் சோலிய பாப்பம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *