BREAKING NEWS
Search

சௌந்தர்யா – அஸ்வின் திருமணம்… தலைவர்கள் வாழ்த்து… எஸ்க்ளூசிவ் படங்கள்!

சௌந்தர்யா – அஸ்வின் திருமணம்… தலைவர்கள் வாழ்த்து!

ஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமணம் இனிதே நடந்தது.

காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. சௌந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார்.

மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓதினர். அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்திருந்தார். தனது மடியில் சௌந்தர்யாவை உட்கார வைத்திருந்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க சரியாக 8 மணிக்கு மணமகள் சௌந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார்.

திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.

தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் முகூர்த்த மந்திரம் ஓதப்பட்டது. ரஜினி- லதா காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அக்னியைச் சுற்றியும் வலம் வந்தனர். பின்னர் மணமக்களை ரஜினி மேடையில் இருந்து இறக்கி பார்வையாளர் வரிசைக்கு அழைத்து வந்தார்.

அங்கு உட்கார்ந்திருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர் பாலசந்தர், தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரராவ் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெறச்செய்தார்.

திருமணத்தில் சம்பிரதாய முறைப்படி ரஜினி சிறிது நேரம் தலைப்பாகை அணிந்திருந்தார். அம்மிமிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டி அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தா.பாண்டியன், நல்ல கண்ணு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் சிவகுமார், பிரபு, பாக்யராஜ் – பூர்ணிமா பாக்யராஜ், பாண்டியராஜன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு, சுமன், வெங்கடேஷ் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூருடனும், நடிகை மீனா கணவர் வித்யா சாகருடனும் வந்து வாழ்த்தினார்கள்.

திருமணத்துக்கு வந்தவர்கள் விவரம்:

கார்த்தி சிதம்பரம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர், இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு, ராம்குமார், நடிகர்கள் சுமன், சின்னிஜெயந்த், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், நடிகை சுஹாசினி, இயக்குநர் பி.வாசு, ரஜினி ரசிகர் மன்ற பிரமுகர்கள் சத்ய நாராயணா, பினோரா அசோக் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்தினார்கள்.

ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணப் பரிசு

மணமக்களுக்கு திருமணப் பரிசாக சென்னை சேத்பட்டில் ஒரு சொகுசு ப்ளாட்டை பரிசளித்துள்ளார் ரஜினி. திருமணத்துக்குப் பிறகு இங்குதான் புதுமணத் தம்பதிகள் குடியிருக்கப் போகிறார்களாம்.

முதல்வர் கருணாநிதி

இன்று மாலை இதே மண்டபத்தில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். மாலை 8 மணிக்கு அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார்.

திருமண சிறப்புப் படங்கள்:

மேலும் படங்கள் தனிப் பதிவாக…

-என்வழி ஸ்பெஷல்
14 thoughts on “சௌந்தர்யா – அஸ்வின் திருமணம்… தலைவர்கள் வாழ்த்து… எஸ்க்ளூசிவ் படங்கள்!

 1. balaji

  திருமணத்தை நேரில் பார்த்த திருப்தி. சிக்கிரம் விருந்து போடுங்க சார் ( அதுதான் மேலும் படங்கள் தனிப் பதிவாக…)

 2. balaji

  புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறோம்.

 3. BABU Z.MELUR JAYANKONDAM

  எங்கள் தலைவரின் மகள் நல்லவிதமாக திருமணம் முடிந்து சீரும் சிறப்புமாக எங்கள் தலைவர் அவரது மனைவிபோல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் .

 4. ss

  மூத்த மருமகன் எங்கும் தெரியவில்லையே ? பார்த்து நெறைய படங்கள் கொடுங்க.

  மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

 5. கணபதி

  தலைவர் சிறந்த தந்தையாக இன்று தனது மகள் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் மணமக்கள் பல்லாண்டு வாழ எனது நல்வாழ்த்துக்கள்

 6. Muthu

  ரஜினி சௌந்தர்யாவிற்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்…மணமக்கள் அன்னையின் ஆசிகளோடு பல்லாண்டு நீடுழி வாழ வாழ்த்துகள்…

 7. Mugil Bala

  புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறோம்.

 8. தமிழீழதோன்

  பார்ப்பனர்களாலும், எதிரிகளாலும் நாம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும்,
  நம்ம சூப்பஸ்டார் இன் வீட்டு கல்யாணத்தை நாமும் வாழ்த்துவதில் பின் நிற்கமாட்டோம்.
  வாழ்க வளமுடன்.

  யாழ்ப்பாணதிலிருந்து…

 9. Manoharan

  புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறோம்.

 10. M.Rajamanickam

  புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறோம்.
  அஜித் ஷாலினி போட்டோ ப்ளீஸ்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *