BREAKING NEWS
Search

சௌந்தர்யாவின் திருமணம்… லாரன்ஸின் நெகிழவைக்கும் வாழ்த்து!

சௌந்தர்யாவின் திருமணம்… லாரன்ஸின் நெகிழவைக்கும் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினியால் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடன இயக்குநர், நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ்.

இன்றுவரை ரஜினியையே தனது குருவாகக் கொண்டு செயல்பட்டு வருபவர். ரஜினியால் வாழ்க்கைப் பெற்று, இன்று ரஜினிக்கே டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளவர்.

லாரன்ஸ் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, தான் குடியிருந்த வீட்டிலேயே உடல் ஊனமுற்றோர், அனாதைகளுக்கான இல்லத்தைத் தொடங்கினார்.

லாரன்ஸின் அனாதை இல்லத்தைப் பற்றி கேள்விப்பட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடாமல், லாரன்ஸின் அனாதை இல்லத்துக்கு பதினைந்தாயிரம் நன்கொடை வழங்கினார். அதோடு, கடந்த இரு ஆண்டுகளாக மாதந்தோறும் தொடர்ந்து பதினைந்தாயிரம் நன்கொடை வழங்கி வருகிறார்.

அதுமட்டுமல்ல, லாரன்ஸின் இல்லத்தில் உள்ள பிள்ளைகளின் உணவுப் பொறுப்பை சூப்பர் ஸ்டார் ரஜினி ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கு காரணமும் சௌந்தர்யாதான்.

தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமணத்தை முன்னிட்டு தன் அனாதை இல்லம் சார்பாக அவருக்கு தன் நன்றிக்கடனை தெரிவிக்கும் வகையில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

அவர் கூறுகையில், “‘நான் நடத்தி வரும் அனாதை இல்லத்துக்கு மாதாமாதம் ரூபாய் பதினைந்தாயிரம் வழங்கி உதவியவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

அவரது திருமண நாளை முன்னிட்டு, 03.09.2010 அன்று மதியம், அம்பத்தூரில் நான் கட்டியிருக்கும் ராகவேந்திரா கோவிலில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்க இருக்கிறேன். சௌந்தர்யாவின் நல்ல மனதுக்கும் தயாள குணத்துக்கும் நான் காட்டும் நன்றி இது.

சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வாழ்க்கை சிறக்கவும் என் இல்லத்து குழந்தைகள் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்…,.” என்றார்.

ரஜினி ரசிகனின் வாழ்த்து எப்படியிருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள்!




2 thoughts on “சௌந்தர்யாவின் திருமணம்… லாரன்ஸின் நெகிழவைக்கும் வாழ்த்து!

  1. kicha

    Ippadi aadharavatravangaluku udhavuvadhu deivathirku seiyum sevayai vida periyadhu.

    Ippadi udhavum gunam konda thalaivara rasigargaluku thirumana saappadu poda yosipar?

    Rasigargal avarai purindhu kolla vendum.

    Lawrence in pani negizhchiyanadhu. Hats off to him.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *