BREAKING NEWS
Search

சோனியா பிரச்சாரம் திடீர் ரத்து!

சோனியா பிரச்சாரம் திடீர்  ரத்து!

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சென்னை, புதுச்சேரி பிரசார பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. 11732

சோனியாவுக்கு எதிராக சென்னையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் உணர்வாளர்கள் முடிவு செய்திருந்த நிலையில், சோனியா இந்தப் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.

சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்தும் இன்று நடக்கவிருந்த பிரசாரக் கூட்டங்களில் பேச சோனியா திட்டமிட்டிருந்தார்.

ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் சென்னை கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் பழ நெடுமாறனின் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர்.

இந் நிலையில் சோனியா தனது ‌சென்னை, புதுச்சசேரி பிரசாரக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துள்ளார். இத் தகவலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் உறுதி செய்தார்.

முன்னதாக சோனியா காந்தியின் வருகையையொட்டி புதுச்சேரியிலும், சென்னையிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சோனியா பிரச்சாரத்துக்காக தீவுத் திடலில் இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பேச இருந்தனர்.

கருணாநிதி பிரச்சாரமும் ரத்து

இந் நிலையில் முதுகு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி இன்று தான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.

எனவே அவரால் சோனியா காந்தி கூட்டத்திற்கு வர முடியாத நிலை உள்ளதாக காங்கிரசிடம் திமுக தரப்பு தெரிவித்தது.

இந் நிலையில் சோனியா காந்தியே தனது கூட்டத்தையும் ரத்து செய்துவிட்டார்.
4 thoughts on “சோனியா பிரச்சாரம் திடீர் ரத்து!

 1. தோழர்

  http://www.mdmkonline.com/news/latest/sonia-meeting-cancelled-in-chennai.html

  கூட்டுக் கொள்ளை அடித்தோம் ! கூடி (ஈழக்) கொலை செய்தோம் !

  சோனியா :
  கூட்டுக் கொள்ளை அடித்தோம் ! கூடி (ஈழக்) கொலை செய்தோம் !

  மக்களை நாம் சேர்ந்தே சந்திப்போம் ! நான் மட்டும் மக்களை சந்தித்து செருப்படிவாங்கவேண்டும் நீங்க ஆஸ்பத்திரியில் எ சி ரூமில் அதை டி வி ல பாக்கணுமா?

  எந்த ஊரு ஞாயம் இது ?

  —–
  செய்தி இங்கே:

  சென்னை : சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை காங்.., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் , தி.மு.க., அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் தெரிவித்துள்ளனர்.

  -தோழர்
  http://www.mdmkonline.com

 2. Paarvai

  போர் நிறுத்தம், பாதுகாப்புப் பகுதிகளில் தான் தமிழர் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூக்குரலிடும் ராஜபக்சேவின் தமிழ் ஆதரவாளர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய விடியோ இது. சானல் 4 ரகசியமாக எடுத்த விடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *