BREAKING NEWS
Search

சோனியா, கருணாநிதியிடமும் போர்க்குற்ற விசாரணை! – பினாங்கு துணை முதல்வர் வலியுறுத்தல்

சோனியா, கருணாநிதியிடமும் போர்க்குற்ற விசாரணை! – பினாங்கு துணை முதல்வர் வலியுறுத்தல்

கோலாலம்பூர்: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அதிபர் மற்றும் அவரது தம்பிகள் தவிர, இந்தியத் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரும் சர்வதேச அரங்கில் விசாரிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி வலியுறுத்தினார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி. ராமசாமி கூறியதாவது:

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தனர். சர்வதேச போர் நெறிமுறைகளை காலில் போட்டு நசுக்கிவிட்டு தமிழர்களை இனப் படுகொலை செய்தது இலங்கை ராணுவம். இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தால் அங்கு நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இந்தியாவே உறுதுணையாக இருந்துள்ளது. இந்தியாவின் விரலசைவுக்கு ஏற்பவே இந்தப் போர்க்குற்றங்கள் அரங்கேறியுள்ளன. இதனை ராஜபக்சேவே கூறியுள்ளார்.

எனவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் இதில் இருப்பது உறுதியாகிறது. எனவே இவர்களுக்கு எதிராகவும், போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை, அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஐ.நா. செயலர் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் இந்தியத் தலைவர்கள் மீதான போர்க்குற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்”, என்றார்.
4 thoughts on “சோனியா, கருணாநிதியிடமும் போர்க்குற்ற விசாரணை! – பினாங்கு துணை முதல்வர் வலியுறுத்தல்

 1. PON MANIMEGALAI

  பேராசிரியர் திரு. ராமசாமி அவர்கள் போல் ஒரு சிலரே தமிழ் பற்று காரணமாக , தமிழ் இனத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக மிகவும் வெளிப்படையாக தங்களின் கருத்தை ஆணித்தரமாக குறி வருகிறார்கள். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். தமிழ் நாட்டு தலைவர்கள் 99% பேர் வேடதாரிகள். பணத்திற்காக தமிழ் மக்களையே கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அதை மறைக்க இலவசங்கள், தேர்தல் கூட்டு , ஓட்டுக்கு துட்டு, மது, மாது, டிவி சேனல்கள்.
  நம் நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது?

 2. PON MANIMEGALAI

  பேராசிரியர் திரு. ராமசாமி அவர்கள் போல் ஒரு சிலரே தமிழ் பற்று காரணமாக , தமிழ் இனத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக மிகவும் வெளிப்படையாக தங்களின் கருத்தை ஆணித்தரமாக கூறி வருகிறார்கள். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதனால் திரு. ராமசாமி அவர்களின் பதவி கூட பறி போகலாம். ஆனால் இந்த விசயத்தில் நம்
  தமிழ் நாட்டு தலைவர்கள் 99% பேர் வேடதாரிகள். பணத்திற்காக தமிழ் மக்களையே கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அதை மறைக்க இலவசங்கள், தேர்தல் கூட்டு , ஓட்டுக்கு துட்டு, மது, மாது, டிவி சேனல்கள்.
  வெட்கம் கேட்ட அரசியல் வாதிகள், அவர்களுக்கு துணை போகும் மக்கள்.
  நாளுக்கு ஒரு போராட்டம் நடத்து செல்வியார் , நிற்க கூட வழு இல்லாத முத்தமிழ் முதல்வர், மகனின் பதவி ஆசையில் இருட்டறையில் காலில் விழுந்து கதறும் மருத்துவர், காங்கிரசை அழிக்க கங்கணம் கட்டி -பின்னர்
  அதன் காலிலயே விழுந்து எம்பி ஆகி மந்திரி பதவிக்கு அடி போடும் வி.சி. புலி, பொழுது போக்கிற்காக அரசியல் நடத்தும் கேப்டன் , பத்து மாதமா? பதினெட்டு மாதமா? என்று கேவல அரசியல் வாதி வைகோ .மந்திரி சபையில் பங்கு என்று முழக்கமிடும் தேசிய கட்சி , தேய்ந்து போன காவி , இப்படி தமிழ் நாடே கனவு கலமாக உள்ள போது , இலங்கை மற்றும் இதர நாட்டு தமிழர்களை காப்பாற்ற இவர்களுக்கு எங்கே நேரம் கிடக்க போகிறது. பாவம் தமிழ் மக்கள்.
  இதில் பத்தாயிரம் கோடியில் ஆரம்பித்து எண்பதாயிரம் கோடி வரையில் ஸ்பெக்ட்ரம் கொள்ளை.
  நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது?

 3. குமரன்

  கருணாநிதி, மன்மோகன், சோனியா மட்டும் அல்ல,

  பிரியங்கா, ராகுல், கனிமொழி, T.R. பாலு, நாராயணன்(பிரதமரின் ஆலோசகர்), ஆகியோரையும் விசாரிக்கவேண்டும். இவர்கள் எல்லாருக்கும் என்று வான்வழித் தாக்குதல் நடக்கப் போகிறது என்பது முன்னரே தெரியும்.

 4. Muthu

  பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமி கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானது…

  ஆனால் மேல கமெண்ட்ஸ் பகுதியில் தனது உள்ள கோபத்தினை தமிழக அரசியல்வாதிகள் மீது வெளிபடுத்திய நபர். 99% பட்டியலில் திரு. வைகோவையும் சேர்த்து கொண்டு நாகரீகமற்ற வார்த்தையை திரு.வைகோ மீது கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது…

  இன்றைய சூழ்நிலையில் தமிழர்களுக்க்காகவும், ஈழ தமிழர்களுக்க்காகவும் குரல் கொடுக்கும் ஒன்று இரண்டு தலைவர்களில் திரு.வைகோ முதன்மையானவர். தமிழ் இனத்திற்காக பல போராட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுயநலமற்ற முறையில் நடத்தி கொண்டு இருப்பவர் மற்றும் தனது ஈழ ஆதரவு கருத்துகளை ஓங்கி ஒலித்து கொண்டு இருப்பவர் தமிழகத்தில் அவர் ஒருவர் மட்டுமே. மற்றும் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரே தானே முன் வந்து வேண்டிய மத்திய அமைச்சர் பதவியினை பெற்று கொண்டு மந்திரி சபையில் சேருங்கள் என்று வைகோவினை வற்புறுத்திய பொழுது எனக்கு மந்திரி பதவி வேண்டாம் அதற்கு பதிலாக தென்னக தமிழ் மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்தும் சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்றி தாருங்கள் என்று கூறி அந்த திட்டம் தொடங்க வழிகோலியவர் தன்னலமற்ற வகையில் உலக தமிழர்களுக்கு பணி ஆற்றி கொண்டு இருப்பவர் வைகோ அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *