BREAKING NEWS
Search

சோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம்! – பாரதிராஜா

சோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம்! – பாரதிராஜா

சிவகாசி: ஈழத் தமிழரின் இன்னல் தீர்க்காமல், தமிழகத்தில் வாக்கு கேட்க சோனியா காந்தி எப்போது வந்தாலும் அதை மிகக் கடுமையாக எதிர்ப்போம், எந்தச் சட்டம் குறித்தும் கவலையில்லை, என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.bharathiraja09

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் சிவகாசியில் நேற்று காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரம் நடந்தது.

இதில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர். சுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினர்.

பாரதிராஜா பேசியதாவது:

அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.

இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன்சிங் வாய் அசைப்பார். இலங்கை ராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது.

அதனால் தான் அவரை சார்ந்தவர்களை லட்சக்கணக்கில் இலங்கை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.

ரத்தினக் கம்பளம் போட்டு…

போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.

1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம் என்றார் பாரதிராஜா.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில்,

தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம்.

நமது ராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான். இரண்டரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றார்.

இந்தக் ‘கைக்கு ஆயுள் ரேகை’ இல்லை!

கூட்டத்தில் பேசிய ஆர்.சுந்தர்ராஜன் இப்படிக் கூறினார்:

“நாங்கள் பல போராட்டங்கள் மூலம் எங்கள் ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சனையை கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 16 தொகுதிகளிலும் டெபாசிட் கிடைக்காது.

காங்கிரஸ் சின்னமான கையில் ஆயுள் ரேகை இல்லாமல் இருக்கிறது,” என்றார்.
7 thoughts on “சோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம்! – பாரதிராஜா

 1. no

  சொன்னதை செய்யும் துணிச்சல் ….
  சொல்லாததை எதிர் கொள்ளும் தைரியம்…..அதுதான் ஜெயலலிதா…
  எடுத்துக்காட்டுகள் :

  தமிழக அரசு ஊழியர்களின் கொட்டத்தை அடக்கிய திறமையை யாரும் மறக்க இயலாது
  .
  கருணாநிதி தொடுத்த பல நூறு வழக்குகளை தனி ஒருத்தியாய் சமாளித்த /சமாளிக்கும் ஒரு பெண்மணி.

  மணல் மற்றும் சாராய கடை வருமானத்தை அரசாங்க நலனுக்காக அரசுடமை செய்த ஒரு மாவீரம்.

  கருணாநிதி இலவசங்களை அளித்து எம் தமிழனை சோம்பேறி அல்லது பிச்சை எடுக்க பழக்குகிறார்.

  கருணாநிதியை விட ஜெயலலிதா பன்மடங்கு நம்ப தகுந்தவர்.

 2. Tamil Selvan

  எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இவர் எதுக்கு காங்கிரசை மட்டும் எதிர்க்கிறார், ஏன் திமுகவை எதிர்க்கவில்லை , தன்னுடைய “தெற்கத்தி பொண்ணுக்கு” கலைஞர் TV இல் இடம் கிடைக்காதோ

 3. Venkat

  no. said is 100% correct. Especially the first point is very very good. She had proved to all politician that how she has stopped the govt. staffs strike.If she come our PM, India will get good future.

 4. palZ

  மயிறு போற மாதிரி அங்க உயிரு போயிட்டு இருக்கு, அத கவனிக்காம, சோனியா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *