BREAKING NEWS
Search

சொல்வதெல்லாம் உண்மை!

சொல்வதெல்லாம் உண்மை!

ரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் இந்தியாவில் நிலவும் முரண்கள் கொஞ்சமல்ல.

சில சாம்பிள்கள் பார்க்கலாமா…

*அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

*பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

*வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

*பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

*ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

*நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

*நாம் குடிக்கும் லெமன் ஜூஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

*மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

*கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

*கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

*பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

*குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

*அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!

இந்த நிலை மாறுவது எப்போது? தூங்கும் பாரதமாதாவைதான் எழுப்பிக் கேட்க வேண்டுமோ!

அனுப்பியவர்: பால்பழனி
12 thoughts on “சொல்வதெல்லாம் உண்மை!

 1. Guevara

  எக்ஸ்செல்லேன்ட் பால்பழனி, சும்மா சொல்லப்படாது நிஜம்மாவே கலக்கிடீங்க !!!

  வாழ்த்துக்கள் !!!

 2. palPalani

  பெரும்பாலான பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கிறார்கள், முடிந்தால் இதைப்பற்றியும் ஒரு பதிவு போடவும்! அல்லது அரசுக்கு(குமுதம் கோமாளி அல்ல) கடித எழுதவும்!

 3. kiri

  இந்த நிலை மாறுவது எப்போது? தூங்கும் பாரதமாதாவைதான் எழுப்பிக் கேட்க வேண்டுமோ///

  பர்மா பஜார் ல Gun ஒன்னு வங்கி கருணா(ய்)நித்திய போட்டு தள்ளுங்க!!

  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

 4. M.S.Vasan

  ல‌ஞ்ச‌ம் தான் நாட்டின் சாப‌க் கேடு என்பார் பிர‌த‌ம‌ர்.
  ல‌ஞ்ச‌ குற்ற‌ச்சாட்டு பெரும்பாண்மை அவ‌ர‌து அமைச்ச‌ர்க‌ள் மீதுதான்.

 5. alagan.rajkumar

  சார் உங்கள் உண்மை சுடுகிறது .நிறைய யோசிக்க வைக்கிறது

 6. Venky

  Yeah its true…We never care abt child labours…Education should be there for evryone..

 7. r.v.saravanan

  வெரி குட் பால் பழனி சும்மா நச் னு இருக்கு எல்லாம்

  ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

  இந்த ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு

 8. RAMAN/

  அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!

  இந்த நிலை மாறுவது எப்போது? தூங்கும் பாரதமாதாவைதான் எழுப்பிக் கேட்க வேண்டுமோ!

  சூப்பர் பால்பழனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *