Breaking News

சென்னை விமான நிலையத்தில் பிரபாகரன் தாயார்… அனுமதிக்க மறுத்த தமிழக அரசு!

Saturday, April 17, 2010 at 3:32 am | 1,337 views

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுத்து அதே விமானத்தில் திருப்பி அனுப்பிய மத்திய – மாநில அரசுகள்!

சென்னை: தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின்  வயதான, உடல் நலிவுற்ற தாயார் பார்வதி அம்மாள் (80) உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

ஆனால் மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே அவர் தடுக்கப்பட்டார். விமானத்திலிருந்து இறங்கக் கூட  அவரை அனுதிக்கவில்லை குடியேற்றத் துறை அதிகாரிகள். பிரபாகரன் தாயாரை அனுமதிப்பதால் உள்நாட்டு அமைதி கெட்டுவிடும் என்று மத்திய -  மாநில அரசுகள் உத்தரவிட்டிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வப்போது மேலிடத்துக்கு நிலைமையைச் சொல்லி, உத்தரவுகள் பெற்ற அந்த அதிகாரிகள், எவ்வளவோ சொல்லியும் கேட்க மறுத்துவிட்டனர்.

குறைந்தபட்சம் அந்த நலிவுற்ற தாயை விமான நிலையத்தில் சில மணிநேரம் ஓய்வெடுக்கக் கூட அனுதிக்க மறுத்த அதிகாரிகள், பிடிவாதமாக  அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்தச் செய்தி பரவியதும் ஏராளமான தமிழுணர்வாளர்கள் சென்னை விமானநிலையத்தில் குவிந்தனர்.

பிரபாகரன் தந்தையார் வேலுப்பிள்ளை மரணத்துக்குப் பின்னர் தனித்து விடப்பட்ட நிலையிலிருந்த தாயார் பார்வதி அம்மாள், கடந்த மாதம்தான் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார். பக்கவாத நோயால் அவதிப்படும் அவரை, பிரபாகரனின் சகோதரி வினோதினி ராஜேந்திரன் கவனித்துக் கொண்டார். இதற்காக அவர் கனடாவிலிருந்து மலேசியா வந்திருந்தார். தன்னுடன் கனடாவுக்கே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டார். ஆனால் பிரபாகரன் தாயாரின் உடல் நிலை மற்றும் வயது காரணமாக அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே, இந்தியாவில் தமிழகத்தில் சிகிச்சைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பிரபாகரன் தாயார் ஏற்கெனவே தமிழகத்தில் இருந்தவர். அவர் இந்தியாவுக்குள் நுழைய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பதால் சென்னைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் இறங்கியதுமே, அவருக்கு மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் அனுமதி மறுப்பதாகவும், உடனே நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்க, திகைத்துப் போய்விட்டனர் பிரபாகரன் உறவினர்கள். எவ்வளவோ கூறியும் அதிகாரிகள் கேட்கவில்லை.

சென்னை புறநகர் காவல் துறை ஆணையர் ஜாங்கிட் நேரடியாக விமான நிலையத்துக்கு வந்திருந்தார். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் தேசிய கட்சித் தலைவர் பழ நெடுமாறன் உள்பட திரளான தமிழ் உணர்வாளர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் விமான நிலைய வாசலிலேயே தடுத்தனர் போலீசார். பின்னர் தீவிர வாக்குவாதத்துக்குப் பிறகு உள்ளே அனுமதித்தனர்.

பிரபாகரன் தாயாரை சென்னைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான முறையில் மத்திய மாநில அரசுகள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்கக் கூட போலீசார் அனுமதிக்கவில்லை.

வேறு வழியின்றி பிரபாகரனின் தாயார் வந்த விமானத்திலேயே மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இத்தனைக்கும் பார்வதி அம்மாவுக்கு இந்திய விசாவும் உள்ளது. தமிழகத்தில் அவரது மகள் வசிக்கிறார்.

வைகோ- நெடுமாறன்

‘மத்திய மாநில அரசுகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு’ வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “80 வயது நிறைந்த பார்வதி அம்மாள் தள்ளாத வயதில், நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக இந்திய அரசின் முறையான விசா அனுமதி பெற்று, சென்னை வந்தார். ஆனால், தமிழக போலீசார் அவரை சென்னைக்குள் நுழைய முடியாதவாறு தடுத்து விட்டனர். தமிழக போலீசாரின் இந்த செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதும் ஆகும்.

ஏற்கெனவே 4 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வந்த பார்வதி அம்மாளை, உடனே திருப்பி அனுப்பியதால், அவரது உயிருக்கு எந்த பாதிப்பாவது ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.

-என்வழி

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

34 Responses to “சென்னை விமான நிலையத்தில் பிரபாகரன் தாயார்… அனுமதிக்க மறுத்த தமிழக அரசு!”
  1. eelam tamilan says:

    where are you all… Dont say ur place as tamil nadu… really sad to see how you all live and talk.. Mr. Karuna (Indian) thinking about his family business and people think about own business..stay at home and watch serials and cry or watch and discuss abt nityanantha/kalki or cinema… good people and good country… i don’t have any hope with you guys… eelam tamls should not ask even water drop at time of last breath…

  2. palPalani says:

    super!
    super!
    Im proud of Indian!
    and im congratulating the police, who not arresting the lady.

  3. anbuselvan says:

    Dear Mr.Eelam,first of all think one thing in mind, there r lot of blind devotees of prabakaran here in our tamilnadu, they don’t know the real history or fact…just follow the fellow devotees just like that….ofcourse the law n order will affect if prabakaran’s mother land in india,and some shit politicians will make publicity on that,Also please note that india is a poor country ,having lot of debts with world bank and others,and 80% of the people living in below average economy…In this status ,why the hell to concentrate “other country people” mean “foreigners”……this shit politicians doesn’t know the poverty,terrorism,robbery,rape,assassinations happenings in India,why they should not raise their voice in india instead for Srilanka…this is my simple question.why ? Indian tamils are fools and srilankan tamils landed from heaven? Can explore your human beings ..that all…but don’t go against Indian integration.

  4. சூர்யா says:

    மனிதாபிமானம் இல்லாத, முதுகெலும்பில்லாத, இந்தியம் என்ற மாயப்போர்வையில் குறுக்கு சிந்தனை கொண்ட *** மகன்கள் நிறைந்துள்ள நாடு… இந்த சொறிநாய்கள் கடிக்கு பயந்து வாழவேண்டிய அவலநிலை நமக்கு…!!!

  5. renga says:

    intha nadum nattu makkalum {india & tamil nadu } nasamai pogattum !

  6. sakthivel says:

    கருணாநிதியின் ஈனபுத்திக்கு, அவனுக்கு நல்ல சாவே வராது. இது என்னுடைய சாபம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களை நேசிக்கும் அனைவரின் சாபம்.

  7. Niranjanah Arulvelan says:

    ஜனநாயகம் பேசிக்கொண்டு திரியும் நாதியற்ற தெரு பொருக்கி நாய்களுகே இங்கு நல்ல காலம்.
    உணர்வுள்ள மனமுள்ள தமிழர்களுக்கு இது கலிகாலம்.

  8. thamizhan says:

    அரசு ஊழியர்கள் குடும்பங்கள் திருந்தும் நாள் வந்து விட்டது. இழி பிறப்புக்கு ஓட்டளிக்காமல் இருக்க , ஊரார் வயித்தில் அடிக்கும் குடும்பங்கள் திருந்த , அரசு ஊழியர்களின் குடும்பங்களும், பிரமான எதிர்ப்பு என்று அறியாமையில் சப்போர்ட் பண்ணும் வேறு சாதியினரும் திருந்தும் நாள் வருமா ?

  9. eelam tamilan says:

    Dear Mr. AnbuSelvan, i don’t have idea how you got this name for you… If your country has security issue with this old women? Which law not allow to get treatment? First of all, use your head than mind with emotions with comments… She was lived in your country earlier.. now praba no longer there as many says,.. what is the security concerns for you all… first you should think before write to public site…
    Why you guys keep praba’s sister family still in your country and those refugees… What i can see basically you want to any interest on other country.. that is good.. then should not involve any thing on our country such as building oil company or sending intelligent teams or army too..
    Old women comes for medical treatment with valid documents and while her daughter still there… what a shame country…..

  10. r.v.saravanan says:

    மனதாபிமானம் ?

  11. Guevara says:

    இவ்வளவு மனித நேயம், அரசியல் நாகரீகம் பற்றிப்பேசும் நாம் தேர்தல் வரும்போது மாத்திரம் வாக்குப்போறுக்கிகளிடம் இலகுவாக ஏலம் போய்விடுகிறோமே என்று என்றாவது ஒரு நாள் சிந்தித்திருந்தால் இந்த நிலமை உண்டகியிருக்குமா ???

    ஏன் நமக்கு அவசியமான சந்தர்பவாதத்தனத்துக்கு அனாவசியமாக மற்றவரை நோகடிப்பான் ???

  12. pirasanna says:

    சொந்தமா ஒரு நாடு இல்லாததால எல்லா நாய்களும் கூடி நின்று குரைக்குதுகள். மனிதம் இல்லாத ஆட்சியாளர்கள் நாடு என்று இந்தியா மீண்டும் ஒரு தடவை ஓங்கி உரக்க சொல்லியிருக்கிறது.

  13. karthik says:

    டாய்.. அன்புசெல்வன்

    ஏன்டா நாங்க எல்லாம் பிரபாகரனை குருட்டு தனமா நேசிக்கிறோம்.. இவரு கருநானதிய ரொம்ப புருஞ்சிகிட்டு நேசிகிரராம…

    மொதல்ல நீ குருட்டு பிரபாகரனை புடிகலைன்னு சொல்லறத நிப்பாட்டு..

  14. siva says:

    வாழ்க இந்திய மனிதாபிமானம்….

  15. Devils advocate says:

    @eelam tamilan

    அமெரிக்கர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள், ஆஸ்திரேலியர்களும் ஆங்கிலம் பேசுகிறார்கள,ஆகவே இவர்கள் இருவரும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

    ஈழத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காக நான் வேதனை படுகிறேன் , ஆனால் இது உங்கள் நாட்டின் பிரச்சினை, இதில் மொழியை இழுப்பது எதற்காக?, இந்தியாவை தூற்றுவது எதற்காக?. இந்தியாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள்?.

    ஊருடன் ஒத்து வாழ், என்ற பழமொழியை இனிமேலாவது பின் பற்றுங்கள்.

  16. பாவம் ஒரு வயதான மூதாட்டியை அதுவும் சிகிச்சைக்காக வந்தவரை போய் இப்படி மனிதாபிமானமே இல்லாமல் துரத்திய இந்திய அரசு கண்டிப்பாக இதற்கான தண்டனையை அனுபவிக்கும் !!

  17. siva says:

    Devils advocate says:
    //////இந்தியாவை தூற்றுவது எதற்காக/////

    இந்தியாதான் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்பதால் தான்…
    தமிழர்களுக்கு தனி நாடு கிடைப்பதில் தடைக்கல்லே இந்திய தான் மூல காரணம

    /////இந்தியாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள்?. ///

    அவர்களை முதலில் நிம்மதியாக வாழ விடுங்கள்…. உதவியை அப்புறம் எதிர்பார்க்கலாம்….
    ஈழ தமிழர்கள் இந்திய அனுதாபிகள் தான்…..

    சரி …..

    அப்படியானால் இந்திய ஈழ தமிழர்களுக்கு என்ன செய்தது….. என்னவோ , ரொம்ப செய்து களைத்தது போல் பேசுகிறீர்கள்….. இந்தியா செய்தது சிறு சிறு உதவிகள் என்ற பெயரில் பெரிய மறைமுக துரோகங்களை மட்டும் தான்…

    ///ஊருடன் ஒத்து வாழ், என்ற பழமொழியை இனிமேலாவது பின் பற்றுங்கள்.////

    இதை ஏன் சொன்னீர்கள் என்று புரியவில்லை…. ஒருவேளை , ஊர் முழுக்க சேர்ந்து நம் உறவினர்களை தாக்கினால் நாமும் கூட சேர்ந்து தாக்க வேண்டும்….அப்படியா!

    ////அமெரிக்கர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள், ஆஸ்திரேலியர்களும் ஆங்கிலம் பேசுகிறார்கள,ஆகவே இவர்கள் இருவரும் ஒன்று என்று சொல்ல முடியுமா?////

    ஒருவேளை , ஈழம் மலர்ந்து அவர்களுக்கு சின்ன பிரச்சினை வருகிறது என்றால் அப்போது நாங்கள் அவர்கள் பிரச்சினையை அவர்களே பார்த்து கொள்ளட்டும் என்று விட்டு விடுவோம்….ஆனால் இது ஒரு இனத்தின் அழிவு பிரச்சினை..

    .ஒரு பேச்சுக்காக , ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பேரழிவு பிரச்சினை என்றால், அமெரிக்க உதவாது வேடிக்கை மட்டும் தான் பார்க்கும் என்று நம்புகிறீர்களா?

  18. Raj Bakadoor says:

    @ Devils Advocate,

    Hey devil’s advocate, your idiotic advocacy is sought only for the devils surround you and not by Thamizha Tamils or Eela Tamils !!!!

  19. eelam tamilan says:

    Devils advocate :

    Really sad to see you.. we did not ask any help now… hurting old women who came for treatment is not normal human being will do… we just expect you all just act as human being… we don’t want any of your money for her treatment or any other benefits.. If you don’t want her to come for treatment, you could reject the visa early than allow her to travel… What you have done is not acceptable by any person.. i don’t know how you guys argue…

  20. Manoharan says:

    அதிகம் அறியப்படாத படுக்கையில் படுத்திருக்கும் ஒரு 80 வயது மூதாட்டியால் தமிழ்நாட்டின் அமைதி கெட்டுப்போய்விடும் என்றால், அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களில் ஆண்பிள்ளை என்று சொல்லிக்கொள்ள எவனுமே இல்லை என்று அர்த்தம்.சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்று இனியும் எவனும் சொல்லக்கூடாது. அதிகாரத்தில் இருக்கும் அனைவரும் போய் சேலை கட்டிக்கொள்ளுங்கள். இப்போதெல்லாம் நமக்கும் மனிதாபிமானம் செத்துப் போய்விட்டது. நக்சலைட்டுகளால் 75 இந்திய ராணுவத்தினர் செத்துப்போய்விட்டனர் என்ற செய்திகூட எந்தவித தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை. நம் தமிழ் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில் மடிந்தபோது எந்த நாயும் கண்டுகொள்ளவில்லை. இப்போது நமக்கும் எந்த நாய்கள் செத்தாலும் கவலையில்லை.சொல்லப்போனால் போலி வீரர்களும் பொட்டை பயல்களும் அதிகாரத்தில் இருக்கும் இந்திய தமிழ்நாட்டில் அந்த மாவீரனின் தாயார் காலடி பட்டால் அது அந்த மாவீரனுக்குத்தான் அவமானம். அவரை இங்கு கொண்டு வந்ததே தவறு. சிங்கங்கள் வாழ்ந்த காட்டில் வாழ்ந்த அவருக்கு குள்ளநரிகளும்,சேற்றில் புரளும் பன்றிகளும் வாழும் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்பது என்ன விதி ? அப்படி இந்த தெரு நாய்கள் போடும் உயிர் பிச்சை அவருக்கு வேண்டவே வேண்டாம். நமக்குத்தான் வேறு வழியில்லை….ஆனால் அவருக்கு ?

  21. Thameez says:

    மனிதாபிமானற்ற செயல். கலைஞர் கண்டிப்பாக பொறுப்பு எடுக்க வேண்டும். உலகத்தின் பல பாகங்களிருந்து சிகிச்சை பெற தமிழ் நாட்டிற்க்கு வருகிறார்கள். அது போலவே இதை செய்து இருக்கலாம். சட்டம் தடையாக இருந்தாலும் ‘மனிதாபிமானத்துடன்’ இதை செய்து இருக்கலாம்.

  22. குமரன் says:

    கொடுங்கோலர்களின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும்.
    விமானத்தில் வந்தது “சொக்கத்தங்கம்” சோனியாவாக இருந்திருந்தால் சிலைஞர் கருணாநிதி கோபாலபுரத்திலிருந்து விமானநிலையம் வரைச் சக்கர நாற்காலியிலேயே வந்து “அன்னையை” வரவேற்று அழைத்துச் சென்றிருப்பார். வந்தது அரசியல் அதிகாரத்தில் இல்லாத வெறும் தமிழ் அன்னைதானே, அதுவும் உடல்நிலை சரியில்லாதவர், அவரால் இந்தக் கருணாநிதிக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லையே, இந்த வெட்கம் கெட்டவனுக்கு வேண்டியது எதுவும் தரும் நிலையில் அந்த அம்மையார் இல்லையே, அப்புறம் எதற்கு அவர்கள் இங்கு வரவேண்டும்? இவனெல்லாம் தமிசன் என்று சொல்லிக்கொள்ளவே அருகதை இல்லாதவன். இவனுக்கு ஊரெல்லாம் குடும்பம், மகன் மகளெல்லாம் மந்திரி, அல்லது பெரிய பதவியில், பேரன் பேத்தி எல்லாம் மந்திரி அல்லது ஆயிரக்கணக்கான் கோடிக்கு அதிபதி, பிரபாகரன் அன்னையிடம் என்ன பணம் இருக்கிறது? இவன் அவர்களை ஊருக்குள் விட? ஊழி வரும் டிசம்பர் 2005 வந்தது போல.

  23. குமரன் says:

    இந்த இழவெடுத்த சண் டி.வி.யும் கருணாநிதி டி.வி.யும் இந்த செய்தியை இதுவரை சொல்லவேயில்லை. சாமியார் படுக்கை அறைக் காட்சியை பத்து நிமிடத்துக்கு ஒருமுறை தனி அறிவிப்புச் செய்து அரை மணிக்கொருமுறை ஒளிபரப்பிய சண் டி.விக்கு இதெல்லாம் நடந்ததே தெரியாது. வெட்கம் மானம் மனசாட்சி எதுவுமில்லாமல் பணம் ஒன்றே குறியாக இருக்கும் கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் அடிக்கும் கொள்ளைக்கும் அளவில்லை, செய்யும் அராஜகத்துக்கும் அளவில்லை.

  24. குமரன் says:

    Devil’s Advocate
    I am an Indian. I am aghast at the way the Indian Government has behaved. After issuing Visa in the morning, and after the visa holder lands in an Indian Airport, how can the Indian Government refuse entry to this lady of 80 years? Does Indian law allow this? Perhaps when the matter goes to Court in the near future, the case will surely be decided agains the Government of India. But will the sick lady survive till then? Are we Indians so cruel to turn away a sick lady of 80 years when she needs medical support? More so, is she an alien? (Alien here means enemy at war with India). India today has no war with any country including Pakistan and China. There is no alien to-day for India. She is a person of Indian origin. (I dont know if Mrs Parvathi herself was born in India) Her parents were born in India. India technically has no right to refuse entry to her, when she needs medical treatment. What has been done is a blatant human rights violation. India being the super power in South Asia does that with impunity. I love my motherland, that is Bharat, that is India. My motherland has certain thousands of years old customs, dharma and nyaya shastras. None of them permit turning away an old lady who comes for medical treatment. All these have been thrown away because we have started aping the western and American methods of governance and administration. What can we expect from an Italian as the head of ruling alliance. Please do not forget that Italy is the birth place of Mafias, known for scheming.

  25. குமரன் says:

    முரசொலி மாறனுக்கு பக்கவாதம் வந்து நினைவில்லாமல் இரண்டு ஆண்டு மரூத்துவமனையில் படுத்திருந்த போதும் பி.ஜே.பி அரசிடம் பிச்சை எடுக்காத குறையாக இந்தக் கருணாநிதி கெஞ்சி அவரை மத்திய அமைச்சராகவே வைத்திருந்து அவர் இறந்தபோது முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்து சில நாட்களில் சோனியாவுடன் கூட்டணி வைக்கப பேசி முடித்து பி.ஜே.பி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற கருணாநிதியின் நயவஞ்சகம் மிண்டும் அரங்கேற்றம். இப்போது சோனியாவின் மன மகிழ்ச்சிக்காக ஒரு அப்பாவி அன்னை வெளியேற்றம். கன்னித் தமிழ்த் தலைவரில்லை இவர். cunning தமிழ்த் தலைவர் என்று எவர் கூடவே இருந்த ப.உ. சண்முகம் ஒருமுறை சொன்னது மிண்டும் மிண்டும் நிரூபணம்.

  26. குமரன் says:

    இலங்கையிலிருந்து வந்தால் விரட்டி அடி.
    இத்தாலியிலிருந்து வந்தால் விழுந்து வணங்கு.

    இதுதான் இந்தியா.

  27. eelam tamilan says:

    just heard that Malaysia given 1 month visa even though these tamil nadu rejected and sent back…..time will change and this karuna(indian) and Italian lady will suffer for these for sure…

  28. tamizhan says:

    தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல்வாதியும் ஈழத்திற்கு துணை போவதில்லை. இங்கே போலி மனிதர்கள் தான் உள்ளனர்.

    அந்த கடவுள் கூட இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியாது.

    i feel sorry for that mother who has suffered a lot during her journey.

    Please Stop trusting these bullshit politicians and the people of this country(India).

    Our people still dont have time to watch mega serials and road side talks… then how they will see this issuess…

    better dont waste your energies by commenting about the people who will never look their neighbours even when they are in some problem.

    Hats off to the ruling party in TN who always looks on their family issues rather then people issues.

    Only 1 MGR was there and no one can take his place.

    We all should pray for that mother and the people who still suffer in Lanka.

  29. Devils Advocate says:

    @eelam tamilan
    “Really sad to see you.. we did not ask any help now… hurting old women who came for treatment
    is not normal human being will do…”

    விவாதத்தை திசை திருப்ப வேண்டாம், நான் கூறியது உங்களுடைய கீழ் கண்ட தூற்றலுக்கு மறு மொழி.

    “..stay at home and watch serials and cry or watch and discuss abt nityanantha/kalki or cinema…
    good people and good country… i don’t have any hope with you guys…”

    @kumarn
    “I am an Indian. I am aghast at the way the Indian Government has behaved.”

    Kumaran, I feel sorry for that old woman too. But I object what eelam tamilian has spit at Tamils at India.

    @Siva
    “ஊருடன் ஒத்து வாழ், என்ற பழமொழியை இனிமேலாவது பின் பற்றுங்கள் இதை ஏன் சொன்னீர்கள் என்று புரியவில்லை…. ”

    சிங்கபூர், மலேசியா, அமெரிக்கா என பல நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் தனி நாடு கேட்டு போராடி கொண்டா இருக்கிறார்கள். அங்குள்ள மக்களுடன், கலாச்சாரத்துடன் இணைந்து வாழவில்லையா?. இது என்ன பதினைந்தாம் நூற்றாண்டா?.

    ஒருவேளை தனி தமிழ் ஈழம் அமைந்த பிறகு, அதில் ஒரு பிரிவினர் தங்களுக்கும் வேறு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் இவர்கள் கொடுத்துவிடுவார்களா?.

    இந்த போராட்டத்தால் இதுவரை அவர்களுக்கு விளைந்த நன்மை என்ன?, இது அவர்கள் முன்னேறத்திற்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று சிந்தித்தார்களா?

    எப்படியோ, அது அவர்கள் அறிவு சார்ந்த முடிவு, அவர்கள் உள்நாட்டு பிரச்சினை இதில் இந்திய தமிழர்களையும், இந்தியாவையும் என் தூற்றவேண்டும் என்பதுதான் என் கேள்வி?.

  30. eelam tamilan says:

    Devils Advocate

    No one hear talked abt tamil eelam or liberation… We all commented for how your so called good government treat old lady after given visa and rejected to landed… And it is not requested your government to fund or do free treatment… what is the risk you see in this lady landing and get treatment in own expenses? And also why you all approved visa and then turned down in middle..?

    Answer for those above questions, than change the topic to some thing else, which need to discuss for longer time…

    Anyhow, some thing for your great head to think abt…
    1. Why MGR/Indra to all government encouraged the tamil eelam struggle those days?
    2. Why Rajeev sent his forces and did agreement, he could blindly stay away from us?
    3. Why you all invite tamil professors from jaffna to come and participate conferences?
    4. Why you all wanted to open visa office in jaffna if you donot want to link with them?
    like i can ask thousands questions…
    understand that Tamil nadu tamils and eelam tamils are never can separated.. I really doubt where you are from…

  31. mariappan says:

    மனிதாபிமானம் இல்லாத கருணாநிதியின் செயல். சென்னை இல் முடியாதென்றால் பெங்களூரு அல்லது மும்பையில் சிகிச்சைக்கு அனுமதித்திருக்கலாம், குள்ள நரி கருணாநிதி இருக்கும் வரை ஈழ மக்கள் மட்டும் அல்ல. தமிழ்நாட்டு மக்கழுக்கும் அம்மாவாசைதான்,

  32. Juu says:

    வரலாற்றில் தமிழர்கள் வெட்க்கி தலை குனியும் தருணத்தை பதிவு செய்துவிட்டனர் சில சந்தர்பவாத அரசியல்வாதிகள்…

  33. thinnu says:

    who can justify this, let probe this, and punish, when whole airport know this is happening, why CM sleep? all sadist

  34. thinnu says:

    if CM is ture call her back to TN now in next flight

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)